பெண் குழந்தைகளென்றாலே அப்பாவிடம் பாசமாக இருக்கும் விஷயம் தெரிந்த ஒன்று தான். அப்பாவைப் பற்றி பேசும்போது இந்த டயலாக்கையும் மீறி "எங்கப்பா தான் தி பெஸ்ட்" என்ற கர்வம் எல்லாப் பெண்களுக்குமே இருக்கும். நானும் விதிவிலக்கல்ல. தந்தை என்பவர் குழந்தைகளிடம் கண்டிப்போடுதான் இருக்க வேண்டும் என்ற விதிகளுக்கு மாறாக அப்பா ரொம்பவே பிரெண்ட்லி. எனக்கு நினைவு தெரிந்து அப்பா (அம்மாவும்) என்னை அடித்ததோ, திட்டியதோ இல்லை. இத்தனைக்கும் அப்பா ரொம்ப கோவக்காரர். அவர் உத்யோகம் அப்படி.
அடிக்கடி தான் சிறுவயதில் கஷ்டப்பட்டதை கூறுவார். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பப் பிண்ணனியில் M.A வரை அவர் படித்ததை நினைத்து இன்றளவும் நான் வியப்பதுண்டு. இதெல்லாம் சொல்லி வளர்த்தனாலேயோ என்னவோ எது தேவை எது தேவையில்லை என்று யோசிக்கும் பக்குவம் அப்பவே இருந்தது. தான் பட்ட கஷ்டங்களைப் பிள்ளைகள் படக்கூடாதென்பதில் ரொம்பவே உறுதியா இருந்தார். We were also not demanding kids though:) படிப்பு சம்பந்தமாக எது கேட்டாலும் உடனே கிடைக்கும். அப்பாவின் வாசிப்பு பழக்கம் ஒரளவுக்கு எனக்கும் இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆங்கிலப் பேப்பர்களை வாசிக்க சொல்வது, அதில் வரும் கிராஸ்வோர்ட்க்கு விடை கண்டுபிடிக்க டிக்ஷ்னரியை புரட்டுவது என அப்பா சூப்பரா ஆங்கிலம் கற்றுத் தருவார். என்னோட ஒரளவுக்கு சுமாரான ஆங்கிலத்துக்கு அவரே குரு.
அப்பாவிடம் ரொம்ப பிடித்த விஷயம் அவர் எனக்கு அளித்த சுதந்திரம். எங்க போய்ட்டு வந்த? ஏன் லேட்டு? யாரது போன்ற எந்த கேள்விகளும் இதுவரை என்னிடம் கேட்டதில்லை. இந்த சுதந்திரம் என் எல்லைகள் எதுவென்பதை எனக்கு உணர்த்தியது. என் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமையை எனக்கே தந்திருந்தார். +2 முடித்தபின் டீச்சர் ட்ரெய்னிங் தான் என வற்புறுத்திய உறவுகளிடம் "என் பொண்ணை என்ன விட அதிகமாத்தான் படிக்க வைப்பேன்" என சொல்லி பொறியியல் படிக்க வைத்தார். படிப்பு முடித்தவுடன் கல்யாணம் என வற்புறுத்திய அம்மாவை அப்பா மூலம் தான் சமாளிக்க முடிந்தது. ஆனால் நான் கேட்ட மூன்று வருடங்களை அப்பாவால் சாங்ஷன் பண்ண முடியவில்லை. ஒரு வருடத்துக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டது. இப்போது மொத்த பாசத்தையும் அன்பையும் ஜூனியரிடம் கொட்டும்போதும் ரொம்ப பொறாமையா இருக்கு. அவனுக்கு சமமாக இவரும் உட்கார்ந்துகொண்டு ப்ளாக்ஸ் அடுக்குகையில் ஒரு குழந்தையாகவே தெரிகிறார்.
எல்லாவற்றையும் தாண்டி அவர் என் மீது வைத்திருக்கும் அன்பையோ, நான் அவர் மீது வைத்திருக்கும் பாசத்தையோ ஜஸ்ட் லைக் தட் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. ம்ம்ம் திரும்பவும் சின்னப்பொண்ணா மாறி உன் அரவணைப்பிலேயே இருக்கனும்ன்னு தோணுதுப்பா. Happy Birthday Appa.
டிஸ்கி : முதன்முதலாக மீள் பதிவு.
June 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
ம்.என் அப்பா நினைவுக்கு வருகிறார். அவர் இருந்து இருந்தால் என் பையன்களை எப்படி எல்லாம் பார்த்துக் கொண்டு இருப்பார் என ஏக்கமாய் இருக்கிறது.
Convey our birthday wishes to your father....!!!
right on time for Father's Day (June 20th). :-)
என் வாழ்த்துக்களையும் அப்பாவுக்கு சொல்லிடுங்க வித்யா
Happy Birthday to your dad!!
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் (கடந்த பதிவுக்கும்)
என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க.
20த் தந்தையர் தினம்.
நன்றி அமுதா:(
நன்றி சித்ரா (சென்ற வருடம் தந்தையர் தின ஸ்பெஷலாய் போட்ட பதிவு).
நன்றி தாரணி.
நன்றி மோகன்.
நன்றி சிவா.
நன்றி கலா அக்கா.
நெகிழ்வான பதிவு
வாழ்த்துக்கள்
நல்ல பகிர்வு.
இன்னொண்ணு ஃபிரெஷ்ஷா எழுதினாத்தான் என்னவாம்?
அப்பாவுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....!!!
I miss my Dad!
//நல்ல பகிர்வு.
இன்னொண்ணு ஃபிரெஷ்ஷா எழுதினாத்தான் என்னவாம்?
//
repeatuuuuuuuuu
அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!:)
//ஆதிமூலகிருஷ்ணன் said...
நல்ல பகிர்வு.
இன்னொண்ணு ஃபிரெஷ்ஷா எழுதினாத்தான் என்னவாம்?//
ம்ம்...எழுதியிருக்கலாம்ங்க
உலகமே வாழ்த்தினாலும் நாம வளர்த்தியவர்கள் நம்மை வாழ்த்துவது..அனுபவித்து பாருங்கள் அப்பத்தான் புரியும். வாழ்த்துக்கள்..
நன்றி வேலு.
நன்றி ஆதி (இதுக்கு மேல முடியாது).
நன்றி ஜெய்லானி.
நன்றி ரங்கன்.
நன்றி ராஜி.
நன்றி ரகு (நன்றி ஆதி:x).
நன்றி தாரபுரத்தான்.
உங்கள் தந்தைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவியுங்கள், எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நிறைய மகிழ்ச்சியினையும், உற்சாகத்தையும் கொடுக்க பாண்டிச்சேரி அன்னையை மனதார பிரார்த்தித்துக் கொள்கிறேன்
அன்புடன்
ராகவேந்திரன்,தம்மம்பட்டி
ரொம்ப உணர்வா எழுதியிருக்கிங்க...
வாழ்த்துக்கள்.
நன்றி ராகவேந்திரன்.
நன்றி கருணாகரசு.
Post a Comment