இதோ அதோ என தமிழகத்திற்குப் போக்கு காட்டிக்கொண்டிருக்கிறது தென் மேற்கு பருவ மழை. அப்பப்ப மேகங்கள் மீட்டிங் போடுவதைப் பார்த்து பிச்சிகிட்டு கொட்டப்போகுதுன்னு அவசர அவசரமா கொடியில கிடக்கிற துணியெல்லாம் எடுத்துட்டு வந்தா அடுத்த நிமிஷமே வெயில் சுள்ளுன்னு அடிக்குது. ஆனாலும் எப்பவாச்சும் போடற தூறலுக்கே தண்ணி தேங்கிடுது. இந்த லட்சணத்துல சீசன் களை கட்டிச்சுன்னா. வெளங்கிரும். மறுபடியும் தெர்மாகோல் படகு, சப்வேயில் சிக்கி மூழ்கும் டைட்டானிக் சாரி MTC என நிதம் நியூஸ் தான்.
தென் மேற்கு சீசன் பொதுவாக கேரளாவில் மே மாதத்தின் கடைசி வாரத்திலோ, ஜூன் முதலோ தொடங்கும். ஜூலை மாதம் 15 தேதிவாக்கில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விசிட் அடித்திருக்கும். நமக்கு ஜூன் இரண்டு அல்லது மூன்றாம் வாரம் பிக் அப் ஆகும் சீசன் கொஞ்சம் தாமதமாகிறது. இந்த வருடம் நார்மலான அளவு தான் மழையிருக்கும் என வானிலைத் துறை கணித்திருக்கிறார்கள். வருண பகவான் இப்ப கொஞ்சம் ஹைபர்நேட்டிங் ப்ரீயட்ல இருக்காராம். ரெஸ்ட் முடிச்சு இன்னும் பத்து நாள்ல வந்துடுவார்ன்னு தூதர்களான மெட்ராலாஜிகல் டிபார்ட்மெண்ட் ஆளுங்க சொல்றாங்க. போன வாரம் வறட்சில தவித்த வட இந்தியாவுக்கு இந்த தடவை ஆறுதலளிக்கும் வகையில் மழை இருக்கும்கறாங்க. பார்ப்போம்.
சூடான டீயுடன் மழைக்காலத்தை வரவேற்க தயாராகும் அதே நேரம் நம்மால் முடிந்த சில காரியங்களை செய்வதன் மூலம் மழைக்காலத்தை சபிக்காமல் ரசிக்க முயற்சிக்கலாம். அதுக்கு இந்த பதிவ ஒரு தடவ படிச்சிடுங்க. நான் எழுதனதிலேயே உருப்படியான பதிவு இதுதான்னு நிறைய பேர் சொல்வாங்க.
ஈரமான பாட்டு ரெண்டு.
June 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
மெட்ராஸ்ல மழை பெய்யுதுன்னு ரொம்ப தான் ஃபிலிம் காட்டறீங்க. :)) நடத்துங்க நடத்துங்க
மழை வந்தா சரிங்க !
பக்கோடா கண்டிப்பா சாப்டுங்க... என்னைய பேப்பர்ல துடைக்கும் போது, எங்கயாவது என் கவிதை கிடைச்சா குப்பேல போட்ராதீங்க. பொறுமையா மடிச்சு boat விடுங்க.. :P
ஒவ்வொருத்தருக்கும் மனசுக்குள்ள ஒரு குழந்தை இருக்கும்னு சொன்னாங்க.. மழை நம் மனக்குழந்தையை வெளிக் கொணரும் ஒரு மாயாஜாலம்.
Both are very nice songs.... :-)
:))))
நன்றி கலா அக்கா (நீங்க வேற. சரியா கண்ணாமூச்சி ஆடுது).
நன்றி கார்த்திக் (வரும். ஆனா வராது).
நன்றி கேபிள் சங்கர்.
நன்றி விதூஷ் (என்னங்க இப்படி சொல்லிட்டிங்க. கண்டிப்பா ப்ரேம் போட்டு ஹாலில் மாட்டுவேன்).
நன்றி சித்ரா.
நன்றி டிவிஆர் சார்.
மழை கிளைமேக்ஸ் ஏதாவதும் போட்டு இருக்கலாம் :)
முதல் பாட்டு இப்பத் தான் முதல் முதல கேட்கிறேன். இரண்டாவது என்னோட ஆல் டைம் ஃபேவரிட். அப்புறம், மழையை பழைய ஒரு பதிவில சபிச்சிட்டு, இப்போ மழையில் கெட்ட ஆட்டம் போடற பாட்டை போட்டு பிரயாசித்தம் பண்ணினாலும் எங்கள் "மழையில் கெட்ட ஆட்டம் போடுவோர்" சங்கத்தில உங்கள சேர்க்க மாட்டோம். மாட்டோம். மாட்டோம் =))
என்னைக் கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே கேட்டுப்பாருங்க. நல்ல பாட்டு. ஒரே ஒரு கொடுமை விஜய் நடிச்சிருக்கறது. அவ்வ்வ்வ்வ்.
இப்போ கொஞ்ச நாள் முன்னாடி வந்த மழைக்கே வேளச்சேரியில் முட்டி அளவுக்கு தண்ணி. அவஸ்தை...
ஆஃபிஸ்ல பார்த்தா ரெண்டு வீடியோவும் வெள்ளையா தெரியுது..என்னென்ன பாட்டுங்க
மழைன்னா வெயிலையும், வெயில்னா மழையையும் தேடுது மனது. :-))
நல்ல பகிர்வுங்க.
முதல் வீடியோ பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு. தலைப்பும்.
நன்றி தாரணிபிரியா.
நன்றி அனாமிகா (ஹா ஹா. நினைச்சேன். இப்பவும் எனக்கு மழைல நனையப் பிடிக்காது மேடம்).
நன்றி ரகு.
நன்றி ஆதி.
நன்றி பா.ரா சார்.
ம்.. மழையை வரவேற்போம்
ஹலோ, இங்கே நாங்க 46 டிகிரில வெந்துக்கிட்டிருக்கோம். மழைப்பாட்டா போடறீங்க...
நன்றி ஜெய்லானி.
நன்றி உழவன்.
நன்றி விக்கி (ஹி ஹி. நல்லா வயிறு எரியுதா?)
Post a Comment