June 9, 2010

போச்சுடா...

கல்யாணத்த பண்ணிப் பார். வீட்டக் கட்டிப் பார்னு சொல்லுவாங்க. இதோட வீட்டை மாத்திப் பார்ன்னுங்கறதையும் சேர்த்துக்கனும். புது வீடு வந்தாச்சு. மே மாதத்தின் ஒரு பெரிய வேலை முடிந்தது. இந்த முறை பேக்கர்ஸ் & மூவர்ஸ்க்கு ரொம்ப வேலை இல்லை. பின்னர் வேளச்சேரி வந்து பத்தே மாதங்களில் அடுத்த ஷிப்டிங். பரணில் இருந்த எந்த பெட்டியையும் பிரிக்கவேயில்லை. அப்படியே அலாக்காகத் தூக்கி வைத்தாகிவிட்டது. நானும் ஒவ்வொரு வீடு மாறுகையில் வேண்டாமென நிறைய பொருட்களை விட்டுவிட்டு வருகிறேன். இருந்தும் அட்டைப்பெட்டிகளின் எண்ணிக்கை குறையமாட்டேன் என்கிறது. இன்னும் நான்கைந்து அட்டைப்பெட்டிகள் பாக்கி இருக்கின்றன ஒழுங்குப்படுத்த. அடுத்தது ஜூனியர் ஸ்கூல் வேலைகள்.
***************

பப்ளிக் செக்டாரும், ப்ரைவேட் செக்டாரும் அடிக்கும் கூத்துகள் தாங்கவில்லை. டெலிபோன் இணைப்பை மாற்ற BSNLல் 20 நாட்கள் ஆகுமென்றனர். ரகு பாதி ஆபிஸ் வேலைகளை வீட்டிலிருந்தே முடித்துவிட்டு சாவகாசமாக கிளம்புவார். நெட் கனெக்ஷ்ன் இல்லையெனில் கையுடைந்தாற்போலாகிவிடும் அவருக்கு. ஏர்டெல்லை அனுகினோம். ரெண்டே நாட்களில் 512kbps இணைப்பை தந்து விட்டனர். ஆஹா என தலைமேல் தூக்கி வைத்துப் பாராட்டிக்கொண்டிருக்கும்போதே க(ஷ்)ஸ்டமர் கேரிலிருந்து அழைப்பு. உங்களுக்கு 1mbps ஸ்பீட் அலாகேட் பண்ணிருக்கோம். 20GB லிமிட். அதற்கு மேல் போனால் 256kbps ஸ்பீட் வருமென்றார்கள். யாரைக் கேட்டு ப்ளான் மாத்தினீங்க என எகிறியதும் செக் செய்துவிட்டு சொல்கிறேன் என வைத்துவிட்டார்கள். ப்ரொஷரில் இருப்பது ஒன்று இவர்கள் செய்வது
ஒன்று. ஹூம்.
***************

சில மாதங்களுக்கு முன் அப்பாவை வற்புறுத்தி சினிமா அழைத்துக்கொண்டு போனோம். முதன்முறையாக சென்னையில் படம் பார்க்கிறார். அப்பாவிற்கு சீட்டிங் ரொம்ப பிடித்திருந்தது. படத்தையும் கொஞ்சம் ரசித்தார். படம் முடிந்து வந்தபோது எல்லாத்தையும் ஓட்னாங்களே. முக்கியமா இரண்டு க்ளீஷேசை மறந்துட்டாங்க என்றார். என்ன என கேட்டதற்கு
1. ஹீரோ குங்குமம் வெச்சாலே ஹீரோயின் அவருடைய மனைவியாயிடறது.
2. சென்சார்ட்:)
************

சென்ற வருட நிதியாண்டில் தமிழக போக்குவரத்துக் கழகம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக எங்கேயோ படித்தேன். ஏன் ஆவாது. சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்றேன். ட்ரைவர், கண்டக்டரோடு சேர்த்து மொத்தம் 12 பேர். எங்கள் வண்டியை ஓவர்டேக் செய்து போன மற்ற இரண்டு விரைவுப் பேருந்துகளில் நான்கைந்து தலைகள் கூட காணோம். கோடிக்கணக்கில் நஷ்டமாகம லாபம் கூரையப் பிச்சிகிட்டு கொட்டுமாக்கும்.
************

நாசிக் கந்தார்
பெல் சியோ
டெக்சாஸ் பியஸ்டா
தோசா காலிங்
வெஜ் நேஷன்

இவை அடுத்தடுத்து பதியப் போகும் உணவகங்கள்.

இதற்கிடையே ஒரு கதை(தொடர்) வேறு எழுதிவைத்திருக்கிறேன். அப்புறம் இன்னும் நிறைய மொக்கைகள் என பதிவு போட்டே டயர்டாகிவிடுவேன் போல:)
அடுத்த மாதத்தில் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகும் இந்த மொக்கை தளத்தை விடாம படிக்கும் (ஹுக்கும்) 152 பேருக்கும் நன்னி (ஒருவழியா 152 followers ஆச்சு. ஆனா இந்த ஹிட் கவுண்டர் 34,000த்திலேயே முக்குது. கமெண்டு கேக்கவே வேணாம். சரி விடு அதுக்காகவா எழுதறேன்:))).
*****************

தலைப்புக்கு ஏற்றதாய்...



எங்கம்மாவோட லீவ் முடிஞ்சு போச்சு:)

30 comments:

அமுதா கிருஷ்ணா said...

ஓ பத்து மாதத்தில் இரண்டாவது வீடா..நான் பத்து வருடத்தில் 5ஆவது வீடு.அடுத்து சொந்த வீடு கட்டி தான் வீடு மாற்றணும் என்று சபதம் செய்து உள்ளோம்..இந்த வ்ருடமாவது சபதத்தை நிறைவேத்தனும்..

பருப்பு (a) Phantom Mohan said...

குட்டிப் பையன் போட்டோ சூப்பரா இருக்கு! பிற்க்காலத்தில பெரிய ஞானியா வருவான்!

பையன் தீர்க்கதரிசி, பதிவோட எபக்ட்ட ஒரே ஒரு போஸ் ல காட்டிட்டான் :)

ஜெய்லானி said...

காக்டெய்ல் குடிச்ச திருப்தி எனக்கு..!!

Karthik's Thought Applied said...

Welcome Back !!! Waiting for ur restaurant post !!!

Vijay said...

கூடிய சீக்கிரமே புது வீடு கட்டி க்ருஹப்பிரவேசம் செய்ய வாழ்த்துக்கள். அப்புறம் சொல்வீர்கள், சொந்த வீடு கட்டுவது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்று.

\\டெக்சாஸ் பியஸ்டா\\
க்ரீ்ம்ஸ் ரோட்டிலுள்ள இந்த ஹோட்டலுக்கு காயத்ரியை அழைத்துச் சென்றேன். பயங்கர காரம். அவளால் ஒரு வாய் கூட சாப்பிடமுடியவில்லை. கண்களில் நீர் தளும்ப, அவளது சாப்பாட்டையும் சேர்த்துச் சாப்பிட்டதோ என்னவோ, வயிற்றுப் போக்கு, ,மூன்று நாட்கள் காய்ச்சல் :)

Chitra said...

சில மாதங்களுக்கு முன் அப்பாவை வற்புறுத்தி சினிமா அழைத்துக்கொண்டு போனோம். முதன்முறையாக சென்னையில் படம் பார்க்கிறார். அப்பாவிற்கு சீட்டிங் ரொம்ப பிடித்திருந்தது. படத்தையும் கொஞ்சம் ரசித்தார். படம் முடிந்து வந்தபோது எல்லாத்தையும் ஓட்னாங்களே. முக்கியமா இரண்டு க்ளீஷேசை மறந்துட்டாங்க என்றார். என்ன என கேட்டதற்கு
1. ஹீரோ குங்குமம் வெச்சாலே ஹீரோயின் அவருடைய மனைவியாயிடறது.
2. சென்சார்ட்:)


......ha,ha,ha,ha,ha..... அசத்தல் கமென்ட்ஸ்.

......போட்டோவுல சூப்பர் pose - cute!

Anonymous said...

:)) வெல்கம் பேக் :)

நாகை சிவா said...

கடைசி பத்தியை ரசித்தேன் ;)

Guna said...

Nice :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வேளச்சேரிலேயிருந்து எங்கே..அதைச் சொல்லலியே?

karishna said...

welcome back :)

Cable சங்கர் said...

புது வீட்டுக்கு வாழ்த்துக்கள். நிஜமாவே வீடு மாத்துறது..ஒரு இம்சையே.. சமீபத்தில் தான் நான் மாற்றினேன்.

Vidhoosh said...

வருக வருகவென வரவேற்கிறேன். நலமா, செட்டில் ஆயாச்சா?

Vidhya Chandrasekaran said...

நன்றி அமுதா.
நன்றி மோகன்.
நன்றி ஜெய்லானி.
நன்றி கார்த்திக்.

நன்றி விஜய் (காரம் ஜாஸ்தின்னு நண்பர்கள் சொன்னதால தான் கண்டிப்பா போகனும்ன்னு முடிவு பண்ணி வச்சிருக்கேன்)

Vidhya Chandrasekaran said...

நன்றி சித்ரா.
நன்றி மயில்.
நன்றி குணா.
நன்றி சிவா.

நன்றி டிவிஆர் சார் (தனிப் பதிவே வருது)

நன்றி கரிஷ்னா.
நன்றி கேபிள்.
நன்றி விதூஷ்.

தாரணி பிரியா said...

சேம் பிளட் போன வாரம் வீடு மாத்திட்டு இன்னும் சாமான் அடுக்கி வெச்சுக்கிட்டெ இருக்கேன் :(

நெட்கனெக்சனும் சேம் பிளட். ரிலையன்ஸ் டேட்டா கார்டு வெச்சு இப்ப நெட்டிங்க :)


அஞ்சு வருச சீனியரா வாழ்த்துகள் மேடம் :)

CS. Mohan Kumar said...

சுவாரஸ்யமா எழுதிருக்கீங்க

Ganesan said...

முதல் முறையாக உங்கள் பதிவு படிக்கிறேன் , நல்ல எழுத்து நடை, வாழ்த்துக்கள்:

மணிகண்டன் said...

பையன் கலக்கலா இருக்கான் ! உங்களுக்கு பதிவு எழுத கன்டென்ட் கிடைக்கனம்ன்னு வீடு மாற்றமா ? :)-நல்லவேளையா கொஞ்ச நாள் பிரேக்ல போயிருந்தீங்க :)-

துளசி கோபால் said...

வெற்றிகரமா வீடு மாத்துனதுக்கு வாழ்த்து(க்)கள்.

நானும் நாடு மாத்தி, மாநிலம் மாத்தின்னு அல்லாடிக்கிட்டு இருக்கேன்.

பையன் படம் சூப்பர்!

நல்ல பள்ளிக்கூடம் கிடைக்கணுமுன்னு ஆசிகள்.

விக்னேஷ்வரி said...

புது வீடு எப்படி இருக்கு வித்யா... வெல்கம் பேக்.

இங்கே சர்வீஸில் பெஸ்ட் என சொல்லப்படும் ஒரே ப்ராட்பேண்ட் ஏர்டெல். ஆனா பில்லு எக்குத் தப்பா வருது. பார்த்துக்கோங்க.

அப்பாவைக் கேட்டதாச் சொல்லுங்க.

வாவ், கொட்டிக்குற பதிவாப் போட்டு நிறைய பேர் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கப் போறீங்க..

பாவம் சஞ்சய், ரொம்ப பயமுறுத்தி வெச்சிருக்கீங்க. :)

லீவ் முடிஞ்ச பையனுக்கும், அம்மாவுக்கும் வாழ்த்துகள். இனியாவது பையன் சமத்தா ஸ்கூல் போற மாதிரி அம்மாவும் பதிவெழுத வரணும். இல்லைன்னா சஞ்சய் ஹோம் வொர்க் எழுதாம ஸ்ட்ரைக்கில் இறங்குவார் என அவரது ரசிகர் மன்றம் தெரிவிக்கிறது.

Vidhya Chandrasekaran said...

நன்றி தாரணி பிரியா.
நன்றி மோகன் குமார்.
நன்றி காவேரி கணேஷ்.
நன்றி மணிகண்டன்.
நன்றி டீச்சர்.
நன்றி விக்கி.

Anonymous said...

அடிக்கடி வீடு மாறுவது ரொம்ப கஷ்டம்ங்க. சொந்த வீடு ஒண்ணு வேலைக்கு பக்கத்துல வாங்குங்க :)

ஹுஸைனம்மா said...

ஆமாங்க, வீடு மாத்துற மாதிரி பேஜார் எதுவும் இல்லீங்க!!

ஆனா, பத்தே மாசத்துல அடுத்த வீடு மாறுற அளவு பொறுமையா உங்களுக்கு??!!

தராசு said...

வெல்கம் பேக்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

பொலம்பலை கூட சுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க....சூப்பர்...

Vidhya Chandrasekaran said...

நன்றி சின்ன அம்மிணி.
நன்றி ஹுஸைனம்மா.
நன்றி தராசு.
நன்றி தங்கமணி.

நவீன் said...

//ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகும்.. //

வாழ்த்துக்கள் வித்யா.

அருமையான கதம்பம்,சுவாரஸ்யமா எழுதுறீங்க.

நவீன் said...

Vidya, I could recognise you after reading your post on college.. Im Naveen from CSE dept.

Nice to meet you in Blog world!

Paleo God said...

வீடு மாத்தற கொடுமை இருக்கே.. ஹும்ம்!

அப்பதான் நாம விரும்பி சேர்த்த குப்பைகள் தெரியும். :)