ஒரு தொலைபேசி அழைப்பினால் உங்கள் வாழ்க்கை நீங்கள் விரும்பிய வகையில் அமையும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்? அதே போல் அதே தொலைபேசி அழைப்பு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டுமென தீர்மானிக்கும்போதும், தலைகீழாய் புரட்டிப் போடும்போதும் எப்படி இருக்கும்? அப்படி ஒருவனுக்கு நடக்கும் சம்பவங்கள் தான் கார்த்திக் காலிங் கார்த்திக் படத்தின் கதை.
கண்ஸ்டரக்ஷ்ன் கம்பெனி ஒன்றில் வேலை செய்யும் கார்த்திக் (ஃபர்ஹான் அக்தர்) ரொம்பவே கூச்ச சுபாவமும், தாழ்வு மனப்பான்மையும் உடையவன். பாஸிடம் செமத்தியாக பாட்டு வாங்குகிறான். அவன் ஒருதலையாக காதலிக்கும் ஷோனாலியும் (தீபிகா படுகோன்) வேறு ஒருவரைக் காதலிக்கிறாள். கார்த்திக்கின் சிறுவயதில் நடந்த ஒரு சம்பவமும் அவனை குற்ற உணர்ச்சியில் வதைக்கிறது. ஒரு நாள் அளவுக்கதிகமான தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயலும்போது போன் அடிக்கிறது. மறுமுமையில் பேசுபவர் தன்னையும் கார்த்திக் என சொல்லி கார்த்திக்கிற்கு அட்வைஸ் செய்கிறார். கார்த்திக்கைப் பற்றிய அத்தனை விஷயங்களும் டெலிபோன் ஆசாமிக்குத் தெரிந்திருக்கிறது. இருப்பிடம், தோற்றம் உட்பட அனைத்தும். சிறுவயதில் நடந்த அந்த சம்பவமும் கூட. தன் ஒருவனால் மட்டுமே கார்த்திக்கின் வாழ்க்கையை சரி செய்ய முடியும் என சொல்லும் டெலிபோன் ஆசாமி கார்த்திக்கிடம் ஒரு நிபந்தனை விதிக்கிறார். எக்காரணத்தைக் கொண்டும் தன்னைப் பற்றியோ தன் உதவியைப் பற்றியோ யாரிடமும் சொல்லக்கூடாது என்பது.
அதன் பிறகு கார்த்திக்கின் லைஃப் ஸ்டைலே மாறுகிறது. பாஸ் பணிவாக நடந்துக்கொள்கிறார். ஷோனாலியின் காதல் கிடைக்கப்பெறுகிறது. எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும்போது டெலிபோன் ஆசாமியைப் பற்றி ஷோனாலியிடம் சொல்லப் போக, அவர் அப்படி ஒருவன் இருக்க வாய்ப்பே இல்லை. டாக்டரைப் பார்க்கச் சொல்கிறார். அதன் பின் தொடர்ச்சியாய் நிகழும் சம்பவங்கள், அந்த மர்ம ஆசாமி யார், அவன் பிடியிலிருந்து கார்த்திக் மீண்டானா என்பது மிச்சக் கதை.
சிம்பிள் ஆனால் இண்டரஸ்டிங்கான ஸ்டோரி லைன். இந்த மனோதத்துவ டைப் கதைகளில் ஹீரோ மக்களுக்காக போராடுவார். நல்லவேளையாக அப்படியில்லாமல் வேறு மாதிரி எடுத்திருக்கிறார்கள். ஃபர்ஹான் அக்தரை தவிர வேறு யாராவது இந்தக் கேரக்டருக்கு பொருந்திப் போவார்களா என்பது சந்தேகமே. கன கச்சிதம். போன் காலிற்கு முந்தின அப்பாவி/அய்யோ பாவம் முகபாவமாகட்டும், காலிற்கு பிந்தைய தெனாவட்டான/தன்னம்பிக்கை மிளிரும் நடிப்பாகட்டும், பிரச்சனையில் சிக்கித் தவித்து புழுங்குவதாகட்டும் கலக்கியெடுத்திருக்கிறார். தீபிகா படுகோன். ஹூம்ம்ம். என்னா ஸ்டரக்ச்சர். க்யூட் ஸ்மைல். இசை ஷங்கர் அண்ட் கோ. ஊஃப்ஸ் தேரி அதா, தும் தோ மேரி சாத் ஹோ இரண்டும் அட்டகாசம். ட்ராப்டில் சேர்த்து வைத்திருக்கும் மெயில்களை காட்டி ஷோனாலியிடம் தன் நெடுநாள் காதலை சொல்லுவது அழகு. பர்ஹான், தீபிகா மற்றும் ஷங்கரை இன்னமும் பிடிக்க வைத்த படம்.
கார்த்திக் காலிங் கார்த்திக் - கண்டிப்பாய் பார்க்கலாம்.
பி.கு : அங்காடித் தெருவிற்கு அடுத்து பார்த்த படம். ரியலிஸ்டிக்/யதார்த்தம்/வாட்சோஎவர் என்ற வகையில் பெஸ்ட் என்று சொல்லலாம்.
June 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
சுருக்கமான நல்ல விமர்சனம். தமிழில் இந்த மாதிரி வித்தியாச படங்கள் எப்போ வரும்?
பார்க்க ஆவலை தூண்டுகிறது உங்கள் விமர்சனம்...பார்த்துடலாம்..
sounds like a good movie. :-)
படத்தை பார்த்துட வேண்டியதுதான்
பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்குல்ல. அதுவும், climax-சில் மறுபடி தொலைபேசி ஒலிக்குமே, அப்போது என்னையும் அறியாமல் திடுக்கிட்டுப் போனேன்.
ஏர்டெல் டிஷ் டிவி யில் பார்த்தது. :) //வாட்சோஎவர் /// :))
நன்றி மோகன்குமார்.
நன்றி சித்ரா.
நன்றி அமுதா கிருஷ்ணா.
நன்றி டிவிஆர் சார்,
நன்றி விதூஷ்(ஹி ஹி நான் டாடா ஸ்கைல)
Niraya per nalla padamnu sollraanga.
English sub-titloda DVD kedachchaaa paakkalaam
நீங்க நல்லா இருக்குங்கறீங்க. ஒரு சிலர் சுமார்னு சொல்றாங்க. எப்படியும் பாக்கத்தான போறோம்
நல்ல கதைதான்..!!!
விமர்சனம் அருமை.
சூப்பர் படம் கூடவே அருமையான விமர்சனம் நன்றி
முதலில் டைட்டிலே படம் பார்க்க ஆர்வத்தை தூண்டியது. ஆனா நிறைய பேர் படம் சுமார்னு சொன்னதால விட்டுட்டேன்.
ஜென்ரலா விமர்சனத்துல வறுத்தெடுத்துடுவீங்க...நீங்களே இந்த படத்தை பார்க்கச்சொல்லி பரிந்துரைக்கறது ஆச்சரியமாயிருக்கு. டிவிடிதான் ட்ரை பண்ணணும்...ஓவர் டூ பர்மா பஜார்
நன்றி கார்த்திக் (சப் டைட்டில் இல்லாமலேயே என் தோடா தோடா ஹிந்திக்குப் புரிஞ்சிது).
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி ஜெய்லானி.
நன்றி விஜயஷங்கர்.
நன்றி அருண்.
நன்றி ரகு.
போன் பூத் படத்தை உல்டா அடிச்சுட்டாங்களோ?
தஞ்சை போகும் போது வாங்கிடுறேன் வித்யா ...
நல்லாயில்லேன்னா பரவாயில்லை ...
ATM no தர்றேன் ...
முப்பது ரூபா அனுப்பிடுங்க ...
நான் அடுத்தப் பதிவுல இந்தப் படம் பத்தி எழுத இருந்தேன். என் தாட் உங்களுக்கு ஆப்போஸிட். படம் பார்த்து மண்டை காஞ்சு போய்ட்டேன்.
yes i too 100% agree the review i too watched the movie at alone in home with a headphone its really interesting.
and my one more suggestion if u wish/like [hope fully you might watched this] "perfume"
just feel the movie.
disky: you blog some what interesting yar!
Post a Comment