July 13, 2010

களவாணி

யதார்த்தமான கதை என்ற பெயரில் பிழிய பிழிய அழவில்லை. பத்து பேரின் ஊனத்தை உறையச்செய்யும் விதமாய் காமிக்கவில்லை. யாரும் பெருங்குரலெடுத்து அழவில்லை. வெட்டருவா வேல்கம்புகளுடன் டாய்ய்ய்ய்ய்ய் எனக் கத்திக்கொண்டு யாரும் யாரையும் துரத்தவில்லை. சந்துக்குள் நடக்கும் ஹீரோயினை வழிமறித்து மீசையை முறுக்கிக்கொண்டு கேணத்தனமாய் சிரிக்கவில்லை. முக்கியமாய் நேட்டிவிட்டியை காமிக்கிறேன் பேர்வழி என அண்டராயரை காமித்துக்கொண்டு அழுக்காய் நிக்கவில்லை. இருந்து படம் முழுக்க ரசித்து சிரிக்குமாறு ஒரு “யதார்த்தமான” படத்தை தந்திருக்கும் இயக்குனர் சற்குணத்தை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.

சின்ன சின்ன களவாணித்தனம் பண்ணிக்கொண்டு, துபாயிலிருந்து அப்பா அனுப்பும் காசை சூரைவிட்டுக்கொண்டுத் திரியும் சண்டியனுக்கு தீராப் பகையிலிருக்கும் அடுத்த ஊர் பெண்னிடம் காதல் அரும்புகிறது. அப்பாவை சமாளித்து, பகையாளியான பெண்ணின் அண்ணனை எதிர்த்து எப்படி அவளை கைப்பிடிக்கிறான் என்பது கதை.

சண்டை போடாம ஜாலியா விளையாடுங்கடா என சொல்பவரிடம் “சண்டை போடறதுதான் எங்களுக்கு ஜாலி” என சிறுவன் சொல்லுமிடத்தில் புன்னகைக்க ஆரம்பித்தால் படம் முடியும் வரை அதை தக்க வைக்கிறார்கள். மிஸ்டர் வொயிட்டாக வலம் வரும் கதையின்நாயகன் விமல் அறிக்கி @ அறிவழகனாகவே அட போட வைக்கிறார். பார்க்கிற பொண்ணையெல்லாம் மாமன கட்டிகறேன்னு சொல்லு என அதட்டுவதும், உர முட்டை திருடுவது என மைனர் மாப்பிள்ளையாக கலக்குகிறார். அறிமுக ஹீரோயினான ஓவியா கேரளத்து வரவு. கண்கள் கவிபாடுகின்றன. வில்லனாக வரும் இளங்கோ அறிமுகமாம். சுத்தமாய் தெரியவில்லை. சுத்தமாய் வில்லத்தனத்தை கத்தாமல் செய்திருக்கிறார். கண்களாலேயே பயத்தை விதைக்கிறார். க்ளைமேக்ஸில் தொபுக்கடீர் என நல்லவராய் மாறும்போது தான் கொஞ்சூண்டு உதைக்கிறது. பொருத்தமான கதாபாத்திரங்கள். எல்லாரையும் தூக்கி சாப்பிடுவது விமலின் அம்மாவாக நடித்திருக்கு சரண்யா தான். குருட்டுத்தனமாய் பையனுக்கு சப்போர்ட் பண்ணுவதும், கோவக்கார கணவருக்கு பயப்படுவதும், அவரை சமாளிக்க ப்ளான் செய்வதும் சூப்பராய் செய்திருக்கிறார். “ஆவணி வந்தா டாப்பா வருவான்” என ஒவ்வொரு முறை சொல்லும்போதும் தியேட்டரே அதிர்கிறது.

பஞ்சாயத்தாக வரும் கஞ்சா கருப்பு ஒவ்வொரு முறையும் விமல் அண்ட் கோவிடம் சிக்கும்போதும் கலக்கியெடுக்கிறார். பாலிடால் குடிப்பது, ரெக்கார்ட் டான்சாடும் பெண்ணிற்கு அன்பளிப்பு கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்வது, ஹாஸ்பிட்டல் காமெடி என ரகளை. மகனைக் கரித்துக்கொட்டிக்கொண்டே இருக்கும் துபாய் அப்பாவாக இளவரசு. நிறைவாக செய்திருக்கிறார். அதே போல் அறிக்கி LC112, பாலிடால் குடித்து தப்புவது, மாப்பிள்ளையௌ தூக்குவது என சின்ன சின்ன சீன்கள் சிரிப்பை சிதறிடிக்கின்றன. தஞ்சாவூரின் மொத்த அழகை அள்ளித் தருகிறது கேமரா. இசை. பேஞ்ச மழை பாடல் நன்றாக இருக்கிறது. பிண்ணனிக்கு கிராமிய மெட்டில் வரும் சினிமாப் பாடல்களை பயன்படுத்தியிருப்பது நன்றாக இருக்கிறது. பிண்ணனி இசையும் ஒகே.

களவாணி - உள்ளம் கவர் கள்வன்.

15 comments:

Vijay said...

படம் நன்றாக இருக்கிறது என்று நானும் கேள்விப்பட்டேன். போன ஞாயிற்றுக்கிழமை போகலாம் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. இந்த வாரம் பார்ட்துட வேண்டியது தான் :)

மங்குனி அமைச்சர் said...

பார்த்திடுவோம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

பார்த்திடுவோம்

அமுதா கிருஷ்ணா said...

இந்த வாரம் பார்க்கணும்..நல்ல விமர்சனம்..

எறும்பு said...

:)

மோகன் குமார் said...

எங்க தஞ்சாவூர் & அதன் சுற்றுபுறம் ஒட்டி எடுக்கப்பட்ட படம் நல்லா இருப்பதில் மிக மகிழ்ச்சி

ர‌கு said...

ப‌திவின் முத‌ல் ப‌த்தி அருமை..ப‌ருத்தி வீர‌ன் ஹாங் ஓவ‌ரிலிருந்து கோட‌ம்பாக்க‌ம் இன்னும் மீள‌வில்லை

VELU.G said...

நல்ல விமர்சனம் நன்றி

Anonymous said...

பாக்கவேண்டிய லிஸ்ட்ல இருக்குங்க இந்தப்படம்

Anonymous said...

ம்ம்ம் யாரு இ.வா சிக்கும்னு தெரியலையே,இந்த படத்துக்கு துணைக்கு :))

வித்யா said...

நன்றி விஜய்.
நன்றி மங்குனி அமைச்சர்.
நன்றி அமுதா.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி எறும்பு.

வித்யா said...

நன்றி மோகன்குமார் (அவருக்கும் தஞ்சாவூர் பக்கம் தான். பாபநாசம்).

நன்றி ர‌கு.
நன்றி வேலு.

நன்றி அம்மிணி (கட்டாயம் பாருங்க).

நன்றி மயில் (தா.பி ட்ரை பண்ணி பாருங்களேன்:)))

புதுகைத் தென்றல் said...

படத்தை பாக்கணும்ங்கற ஆசையை தூண்டிவிட்டிருக்கு விமர்சனம்.

ஜெய்லானி said...

ஓசி டிவிடி கிடைக்குதான்னு பாக்கனும். ஹி..ஹி..

வித்யா said...

நன்றி அக்கா.

நன்றி ஜெய்லானி (தியேட்டரில் பாருங்கள். வொர்த் வாட்சிங்).