பிக்சார் மற்றும் டிஸ்னி தயாரிப்பில் வந்திருக்கும் 3D அனிமேட்டட் படம் டாய் ஸ்டோரி 3. பொதுவாக ஹாலிவுட்டில் sequel 100 சதவிகிதம் திருப்தியளிப்பது குறைவே. ஆனால் டாய் ஸ்டோரி 3 அற்புதமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. படம் ஆரம்பிக்கும் முன் காட்டப்படும் Day & Night குறும்படம் விஷுவலைசேஷன் மூலம் மனதை கொள்ளை அடிக்கிறது.
கதையின் நாயகர்களான பொம்மைகளுக்கு சொந்தக்காரனான andy காலேஜ் செல்லவிருக்கிறான். காலேஜுக்கு செல்லும் முன் வேண்டாத பொருட்களை எல்லாம் க்ளீன் செய்யும்படி சொல்கிறார் andy அம்மா (இந்த அம்மாக்களே இப்படித்தான் போல). அவ்வாறே செய்யும் andy தான் இத்தனை வருடங்கள் வைத்து விளையாடிய பொம்மைகளில் வுட்டியை (woody) மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற பொம்மைகளை பரணில் போட முடிவு செய்கிறான். ஒரு சிறு குழப்பத்தால் மற்ற பொம்மைகள் குப்பை என ஒதுக்கப்படுகின்றன. andy தங்களை குப்பையில் கொட்டியதாக நினைத்துக்கொள்ளும் பொம்மைகள் அங்கிருந்து தப்பி சன்னிசைட் என்ற டே கேர் செண்டர்க்கு செல்கின்றன. அங்கே lotso தலைமையில் வார்மிங் வெல்கம் கொடுக்கப்படுகிறது. டே கேரில் எப்போதுமே குழந்தைகளால் கொஞ்சப்படுவோம்/விளையாட்டுக்குட்படுத்தப்படுவோம் என்ற உத்தரவாதத்துடன் கேட்டர்பில்லர் ரூமிற்கு அனுப்பப்படுகிறார்கள். வீட்டில் நடந்த சம்பவங்களை woody சொல்ல யாருமே நம்ப மறுக்கிறார்கள். கனத்த மனதுடம் woody மட்டும் அங்கிருந்து தப்பி செல்கிறான்.
கேட்டர்பில்லர் ரூமில் எதிர்மறையாக நடக்க, இவர்களுக்கு lotsoவின் சுயரூபம் தெரியவருகிறது. இதன் தொடர்ச்சியாக betty (மிசஸ் பொட்டேட்டோ) மூலமாக நடந்த உண்மைகள் தெரிய வர சன்னிசைடிலிருந்து தப்பித்தார்களா? Woody என்னவானான்? அனைவரும் andyயை சென்றடைந்தார்களா என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து வெளிவந்திருக்கும் sequel. காத்திருப்பின் முழுபலனையும் தந்திருக்கிறார்கள். படத்தில் நகைச்சுவை, ஆக்ஷன், செண்டிமெண்ட், ட்ராமா, சஸ்பென்ஸ் என அனைத்து அம்சங்களையும் ரசிக்கும்படி கொடுத்திருப்பது பாராட்டப்படவேண்டியது. படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அனிமேடட் படம் என்பது மறந்து போகிறது. படத்தில் வரும் பொம்மைகளோடு நாமும் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறோம். கண்களில் நீர் தளும்ப சிரிக்க வைப்பதோடில்லாமல் அன்பு மற்றும் நிராகரிக்கப்படுதலின் வலியை அழகாக சொல்லியிருக்கிறார்கள். பார்பி மற்றும் கென்னின் ரொமாண்டிக் காமெடிகள், டைனோ ரெக்சின் புலம்பல், மிஸ்டர் பொட்டேட்டோ ஹெட்டின் உருவமாற்றமும் அதைத் தொடர்ந்த சில சீன்களும் அசத்தல் வகையறா. அதைவிட அல்டிமேட்டாக பஸ்ஸின் ஸ்பானிஷ் வெர்ஷன் ROTFL. சிரித்து மாளவில்லை. அதே சமயம் டேகேரிலிருந்து தப்பிப்பது, வேஸ்ட்யார்டிலிருந்து எஸ்கேப்பாவது, கடைசியில் எங்கு சென்று சேர்கிறார்கள் என நிறைய இடங்களில் ஆவென பார்க்க வைக்கிறார்கள்.
3D எபெக்ட்ஸ் சுமார்தான் என்றாலும் அதுவொரு குறையாகத் தெரியவில்லை. விறுவிறுப்பான கதையோட்டத்தில் குறைகளே இல்லாததுபோலிருக்கிறது. அதுதான் உண்மையும் கூட. கண்டிப்பாக சிறுவர்களுக்கான படம் என கேட்டகரைஸ் செய்துவிட முடியாது. பெரியவர்களும் ஈக்வலி எஞ்சாய் செய்யக்கூடிய படம்.
Toy Story 3 - Full of life.
July 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
தியேட்டரில் பாக்கணும்னும்னு டிவிடி இருந்தும் பாக்காம இருக்கேன்..
ஸுப்பர். நான் ரொம்ப எதிர்பார்த்த படம். இன்னும் பார்க்கவில்லை, இந்த வாரம் எப்படியும் பார்க்கணும்.
ஆபீஸ்ல எல்லாரும் பாத்துட்டு நல்லா இருக்குன்னு சொல்லியிருக்காங்க.
"I almost cried" ஏதோ ஒரு சீன் ரொம்ப டச்சிங்கா இருந்ததாம். :)
Very good family entertainer! :-)
நான் வளர்கிறேனே மம்மி ..:)
அப்ப காசு குடுத்து டிவிடி ( 2 திர்ஹம் ) வாங்கிட வேண்டியதுதான்
:-)
குழந்தைகள் படம். பெரியவங்களும் பார்க்கலாம்.
நன்றி கேபிள்.
நன்றி ஆதி.
நன்றி சின்ன அம்மிணி (அந்த குழந்தை பொம்மையின் சில எக்ஸ்பிரஷன்கள் சோ டச்சிங். ஆனா அழுகையெல்லாம் வரல).
நன்றி சித்ரா.
நன்றி விதூஷ் (எனக்கு குழந்தை மனசுங்கறத இப்பவாச்சும் ஒத்துக்கறீங்களா யக்கா).
நன்றி ஜெய்லானி (தியேட்டரில் பாருங்கள். மிகவும் நன்றாக இருக்கும்).
நன்றி ரங்கன்.
நான் இன்னும் பார்ட் 1 & 2வே பார்க்காத பச்சிளங்குழந்தைங்க!
ரைட்டு பாத்துருவோம்
ஓ... வந்தாச்சா... பாத்துடுவோம்... தேங்க்ஸ்
நன்றி ரகு.
நன்றி மங்குனி அமைச்சர்.
நன்றி அப்பாவி தங்கமணி.
Post a Comment