தெருவின் ஆரம்பத்தில் திரும்பும்போதே அப்பாவின் வரவை அறிவித்துவிடும் வண்டி. ராயல் என்பீல்ட். அங்கங்கே கருப்பு பெயிண்டை உதிர்த்திருந்த கடோத்கஜன் செகண்ட் ஹாண்டாக வந்து சேர்ந்தான். அழகான கண்ணை உறுத்தாத, க்ளிட்டரிங் ப்ளூ கலருக்கு மாறியது. விடுமுறைக்கு அண்ணன்கள் வந்தால் நான்கு பேர் சேர்ந்து நகர்த்தினாலும் அசையாமல் மலை மாதிரி இருக்கும். அப்பா அதிலமர்ந்து வருவது கொள்ளை அழகாக இருக்கும். தினமும் ராமு மாமா துடைத்தாலும் வாரயிறுதியில் கட்டாயமாக அப்பா பார்த்து பார்த்து துடைத்து வைப்பார். தினமும் காலை தவறாமல் எங்களை ஒரு ரவுண்ட் அடிப்பார். வேலை மாற்றங்களும் பதவி உயர்வும் அரசாங்க வண்டிகளை உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அப்பாவைத் தள்ளினாலும் வண்டியை கூடவே வைத்திருந்தார். மதுராந்தகம் வந்து இனிமேல் வண்டி ஒத்துவராது என்றதால் விற்கவே மனமில்லாமல் விற்றார். சமீபத்தில் அண்ணா தன் நண்பர் வண்டியை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். அப்பாவை ஒரு ரவுண்ட் கூட்டி போகச் சொல்லி வற்புறுத்தி அழைத்துச் சென்றேன். இம்முறை ஜூனியர் முன்னால் அமர்ந்து கொண்டான். மாமனிடத்தில் மாப்பிள்ளை. Felt very happy.
*********
பிவிஆரில் டாய் ஸ்டோரி பார்க்க போயிருந்தோம். 3D கண்ணாடிகளை ஸ்நாக்ஸ் கவுண்டரில் விநியோகித்தனர். பாப்கார்ன் பெப்சி வாங்குபவர்களை மீறி கண்ணாடியைப் பெறுவதற்குள் முழி பிதுங்கிவிட்டது. கண்ணாடிகளை டிக்கட் கொடுக்கும்போதே இஷ்யூ செய்யலாமே என கேட்டதற்கு சரியான பதிலே இல்லை. அதில்லாமல் கண்ணாடி 25 ரூபாய். நோ ரீபண்ட் என்றார்கள். இந்தக் கண்ணாடியை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்றதற்கு வேணும்னா வாங்கிக்கோங்க என்ற திமிரான பதில் வேறு. இம்மாதிரியான பெரிய நிறுவனங்களுக்கு கஸ்டமர் கேர், கஸ்டமரிடம் எப்படி பிஹேவ் செய்வது எப்படி என வகுப்பெடுக்கனும் போல.
**********
I've been on a calendar, but i've never been on time - Marlyn Manroe
லேண்ட் மார்க் பையில் பார்த்த இந்த ஸ்டேட்மெண்டை பகிர்ந்து கொள்ள வேண்டும் என தோன்றியது.
***********
இந்த சனி ஞாயிறு எந்த சேனலைத் திருப்பினாலும் விருது வழங்கும் விழாவாகவே இருந்தது. கலைஞர், விஜய், கே டிவி என ஏதாவது ஒரு சேனலில் யாராவது ஒருவர் யாருக்காவது நன்றி சொல்லிக்கொண்டிருந்தார்கள். இதன் நடுவில் விஜயில் மிர்ச்சு மியூசிக் அவார்ட்ஸ் வேற ஒளிபரப்பப்போகிறார்களாம். இப்படியே எல்லா சேனல்களும் விருதுகளைத் தர ஆரம்பித்தால் என்னவாகும். விஜய் வருடம் தவறாமல் ஏதாவது ஒரு பெயரில் கமல், சூர்யா மற்றும் விஜய்க்கு அவார்ட் கொடுத்துவிடுகிறார்கள். அதே போல் ஒவ்வொரு சேனலும் அவர்களுக்கு வேண்டிய/பிடித்த நடிகர்/நடிகைகள் என ஆரம்பித்தால் யார்தான் உண்மையிலே தகுதியுடையவர்கள் எனத் தெரிந்து கொள்வது?
************
சென்னை சாலைகளில் ஸ்கூல் யூனிபார்மில் நிறைய குட்டிப் பையன்கள் பதற வைக்கும் வேகத்தில் வண்டி ஓட்டுகிறார்கள். அதிலும் நிறைய அபாச்சியும், யமஹாவும் தான். எருமை மாடு மாதிரி பிரமாண்டமாய் இருக்கும் வண்டியில் அநாயசமாக அசுர வேகத்தில் பறக்கிறார்கள். வண்டியை சாய்க்கறதை பார்த்தால் விட்டால் படுத்துக்கொண்டே ஒட்டுவான்கள் போலிருக்கு:( போன தடவை அப்படி யமஹாவில் பறந்த பையனால் நிலை தடுமாறி விழப் பார்த்தோம். ஒரு நொடியில் சுதாரித்ததால் உயிர் பிழைத்தோம் (க்றீச்சிட்டு நின்ற லாரியை நினைத்தால் இப்போதும் நடுங்குகிறது). பெற்றோர்கள் வண்டி வாங்கி கொடுக்காமல் இருக்கலாம். ஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் ஆபத்தையும் பார்த்தால் நன்றாக இருக்கும்.
July 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
நாம் வண்டி ஒழுங்கா ஓட்டினாலும், நடந்தாலும் எதிரில் வருபவர்கள் ஒழுங்கா வந்தாத்தான் வீடு போய்சேருவோம் :(
புல்லட் ராயல் என்ஃபீல்ட் அழகே அழகு தான். அதை ஓட்டுவதே ஒரு சுகானுபவம். எங்கப்பாவின் புல்லட்டை 9 வருடங்கள் ஓட்டி விட்டு வேறு சின்ன வண்டி வாங்குவதற்காக மனதே இல்லாமல் விற்றேன். 10’ஆம் வகுப்பிலிருந்தே நான் புல்லட் தான். டியூஷனுக்கு மற்ற பசங்க சைக்கிளில் வரும்போது, நான் மட்டும் புல்லட்டில் :)
\\அப்பாவின் வரவை அறிவித்துவிடும் வண்டி\\
அடுத்த தெருவில் அப்பா வரும் போதே நான் போய் கதவைத் திறந்துடுவேன்.
// ஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் ஆபத்தையும் பார்த்தால் நன்றாக இருக்கும்.//
ஆபத்து அவர்களுக்கு மட்டுமல்ல.. மற்றவர்களுக்கும்தான் என்பதை உணர மறுக்கின்றனர்.
மர்லின் மன்றோ காலண்டர் காப்ஷன் அருமை..
// இம்மாதிரியான பெரிய நிறுவனங்களுக்கு கஸ்டமர் கேர், கஸ்டமரிடம் எப்படி பிஹேவ் செய்வது எப்படி என வகுப்பெடுக்கனும் போல. //
அதெல்லாம் நடக்காதுங்க... அவங்க அப்படித்தான்..
Last message is very true.
// ஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் ஆபத்தையும் பார்த்தால் நன்றாக இருக்கும்.//
ஆபத்து அவர்களுக்கு மட்டுமல்ல.. மற்றவர்களுக்கும்தான் என்பதை உணர மறுக்கின்றனர்.
scribblings r superb .landmarks bag ல் நிறைய நல்ல விடயங்கள் இருக்கும் பதிவில் போடத் தோன்றியது அருமை
தலைப்பு அருமை....
என்னுடைய ராயல் என்பீல்ட்யை ஞாபக படுத்துகிற பதிவு...
ஊருக்கு வரும்போது என்னுடைய முதல் தோழன் அவன்தான்...
scribblings! interesting .
நன்றி மயில்.
நன்றி விஜய்.
நன்றி இராகவன்.
நன்றி கேபிள் சங்கர்.
நன்றி மோகன் குமார்.
நன்றி குமார்.
நன்றி Mahi_Granny.
நன்றி வழிப்போக்கன்.
இனிமே PVRஐ அவாய்ட் பண்ணிடுங்க. இது மாதிரி 100 பேர் பண்ணாதான் அவங்களுக்கு புத்தி வரும்
பெற்றோர் சின்ன பசங்க கேட்ட உடனே வண்டி வாங்கி கொடுத்து நம்ம உயிரை வாங்குகிறார்கள்..
ஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் ஆபத்தையும் பார்த்தால் நன்றாக இருக்கும்.
..... correct! பணம் விளையாடுது.... உயிரோடு விளையாடுது....
நமக்கும் கனவு வண்டிங்க என்பீல்ட் :)))))
பாசத்திலும், பிடிவாதத்தாலும் வண்டி வாங்கி கொடுத்து விடுகிறார்கள் பெற்றோர்கள். அப்படிப்பட்டவர்களை தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறை அவர்களிடம் இருந்து பிச்சை தான் எடுக்கிறது.
இதயேந்திரன் :"((
வேறென்ன சொல்ல.
இந்த 3டி கண்ணாடி இங்கேயும் விலைக்குதான் வாங்கணும். ஆனா அடுத்த 3ட் படம் போடும்போது எடுத்துகிட்டு போகலாம். இப்ப 3ட் டிவியே வரப்போகுது. அதனால இப்ப சீப்பா கிடைக்கும்போதே வாங்கி வையுங்க
என் பையன் கேட்டு கேட்டு நொந்து நூடுலஸ் ஆனாது தான் மிச்சம் வாங்கி தரல.. ஆனா பழைய ஸ்பெலெண்டர் வண்டிய கொடுத்து இருக்கோம்.. :) அதை வைத்து ட்ரை பண்றான்... பயம்மா தான் இருக்கு... என்ன செய்யறது !! :)
//கஸ்டமரிடம் எப்படி பிஹேவ் செய்வது எப்படி என வகுப்பெடுக்கனும் போல.//
என்னாதிது சின்ன புள்ளதனமா?
எடுத்தா மட்டும் ?
முதல் பாரா ரொம்ப பிடிச்சிருந்தது. (கண்கள் கலங்கியது)
எவ்வளவு எளிதாக, அழகாக( வேறு வழி இல்லாமல்) கடக்கிறோம் வித்யா?
நன்றி ரகு.
நன்றி அமுதா.
நன்றி சித்ரா.
நன்றி சிவா.
நன்றி விதூஷ்.
நன்றி சின்ன அம்மிணி (அடுத்த படம் வரைக்கும் அத ஜூனியர் விட்டு வைக்கனுமே. இங்கயும் 3டி டிவி வந்துடுச்சு. இப்பதான் தோணி துலங்கி எல்சிடி வாங்கிருக்கோம்).
நன்றி கவிதா (ஒரு லெவலுக்கு மேல் மறுக்க முடியாதுதான். ஆனால் கண்காணிப்பும் அவசியம்தானே).
நன்றி எறும்பு (எல்லாம் ஒரு நப்பாசைதான்).
நன்றி பா.ரா சார்.
/*
யார்தான் உண்மையிலே தகுதியுடையவர்கள் எனத் தெரிந்து கொள்வது?
*/
தெரிஞ்சிகிட்டு விருது கொடுக்க போறீங்களா ? :)-
கேப்ஷன் புரியலை.
சின்னப்பசங்களுக்கு வண்டி வாங்கிக்கொடுப்பதைப் பத்தி தனிப்பதிவே போட்டிருந்தேன். ரொம்ப கஷ்டம். எங்க வீதில ஒருத்தர் 15 வயசே ஆன தன் பொண்ணுக்கு ஐ10 கார் வாங்கிக்கொடுத்து என் மக அழகா ஓட்டுறான்னு பெருமை படுக்கறாரு!!! என்னத்த சொல்ல. பெத்தவங்க திருந்தணும்.
நானும் யமஹாதகந்தான்.. ஆனா ஒழுங்க ஓட்டுவேன் :)
சூப்பர் டிம் பிட்ஸ்... எனக்கும் அப்பாவோட ராஜ்தூத் ஞாபகம் வர வெச்சுடீங்க...
புல்லட் அந்த சவுண்ட் ஆஹா
இப்ப எல்லாம் ஸ்கூல் பசங்க கூட பெரிய வண்டிதான். அவங்க பறக்கிற வேகத்தை பார்த்தா எனக்கு வண்டி ஒட்ட பயமா இருக்கு
நன்றி மணிகண்டன் (குழம்பாம இருக்கலாம்).
நன்றி கலா அக்கா.
நன்றி கார்க்கி.
நன்றி தங்கமணி.
நன்றி தாரணி பிரியா.
Post a Comment