August 9, 2010

பத்துக்கு பத்து...

எல்லாரும் ஆளாளுக்கு குத்துறாங்களே நாமலும் குத்துவோமான்னு யோசிச்சா குத்த வேண்டிய பட்டியல் அனுமார் வால் மாதிரி நீண்ண்ண்ண்ண்டுகிட்டே போகுது. சரி அப்படி இப்படி பைனலைஸ் பண்றதுக்குள்ள சீசன் தள்ளிப் போயிருச்சு. அதனால என்ன வெயில்ல பெய்யுற மழை மாதிரி இது இருந்துட்டுப் போகட்டுமேன்னு வலையேத்தியாச்சு.

ஹோட்டலில் சர்வரை குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்

1. கொலைப் பசியில் போய் உட்கார்ந்து புதுசா எதுவும் ட்ரை பண்ணவேண்டாம்னு நினைச்சு இட்லி ஆர்டர் பண்ணா காலியாயிடுச்சுன்னு சொல்லும்போது.

2. தொடர்ந்து நாம் கேட்கும் நாலைந்து ஐட்டங்களை இல்லையென சொல்லும்போது.

3. திங்க ஆரம்பிக்கும்போது கேட்ட தண்ணியை கை கழுவ கொண்டு வந்து வைக்கும்போது.

4. சிக்னேச்சர் டிஷ், எங்க ஹோட்டலின் ஸ்பெஷல் ஐட்டம் என வாயில் வைக்க வழங்காத வஸ்துவை நம்மிடம் தள்ளிவிடும்போது.

5. அ)130 ரூபாய் விலையுள்ள சைட் டிஷ்ஷை சொப்பில் கொண்டு வரும்போது.
ஆ) அதையும் கூட இருக்கற எல்லாருக்கும் சர்வ் பண்ணிட்டு நமக்கு க்ரேவி ரெண்டு சொட்டு வுடும்போது.

6. சூப் ரொம்ப ஆறிபோயிருக்கு என கம்ப்ளையெண்ட் செய்யும்போது இத இப்படி குடிச்சாதான் நல்லாருக்கும்ன்னு சமாளிக்கும்போது.

7. எப்பவுமே நல்லாயிருக்கும் சில ஐட்டங்களை நண்பர்களுக்கு பரிந்துரைக்கும் நேரத்தில் சொதப்பலாய் செய்யும்போது.

8. நாம் தமிழில் பேசினாலும் விடாது உடைந்த ஆங்கிலத்திலேயே பேசி சாவடிக்கும்போது.

9. மெனுவில் இருக்கும் புரியாத ஐட்டம் பெயரை பார்த்து இதென்ன என கேட்கும்போது “இதுகூடவா தெரியாது” என்கிற மாதிரி கேவலமாய் பார்க்கும்போது.

10. நொடியில் வரக்கூடிய இட்லியைக் கூட அரைமணி நேரம் கழித்து கொண்டு வந்துவிட்டு பில்லை மட்டும் அரை நொடியில் கொண்டுவரும்போது.

உறவினர்களுக்கு குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்

1. கல்யாணமாகி வந்த மறுநாளே யார்யார் என்ன உறவுமுறைங்கறத மறக்காம சொல்லனும்னு எதிர்ப்பார்க்கும்போது.

2. கல்யாணமான அடுத்த மாசத்திலிருந்தே “விசேஷம் எதுவுமில்லையா?”ன்னு கேணத்தனமா கேக்கும்போது.

3. அப்படியே உண்டாகியிருக்கும்போது MD.DGO பட்டம் வாங்கின மாதிரி கரெக்டா டாக்டர் நம்மள என்னல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்காரோ அதெல்லாம் சாப்பிட்டே ஆகனும்னு கட்டாயப்படுத்தும்போது.

4. நான் புள்ள பெத்து வளர்க்கலயான்னு கேட்டு ஆறு மாசக் குழந்தை வாயில உருளைமசாலாவத் திணிச்சி அதுக்கு வயித்தால போகும்போது குழந்தைய சரியாவே வளர்க்கல நீன்னு சொல்லும்போது.

5. வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிருப்பாங்க. சரி அதிதி தேவோ பவன்னு நாமளும் மெனக்கெட்டு பார்த்து பார்த்து சமைச்சு வச்சிருப்போம். சாப்பிட வந்துருங்கன்னு இன்வைட் பண்ணிருப்போம். என்னிக்கும் இல்லாத அதிசயமா தடபுடலா ரெடி பண்ணி, முதுகெலும்பு கலகலத்து போயிருக்கும். வர்றவங்க “அடடே. சொல்ல மறந்துட்டேன். நாங்க சாப்பிட்டோம்”ன்னு சொல்லும்போது.

6. கண்டிப்பா வெளியூர்லருந்து வர்றவங்க சின்ன பர்சேஸ் இருக்கு வாங்கன்னு தி.நகர் கூட்டிகிட்டு போய் ரங்கநாதன் தெருவுல சில்லறை பொறுக்கவுடும்போது. நம்ம முகூர்த்தப் புடவை செலக்ட் செய்யக்கூட அவ்வளவு நேரம் ஆகிருக்காது. கர்ச்சீப் வாங்க ஒரு மணி நேரம் ஆக்கும்போதும்.

7. யார் வீட்டு விசேஷத்துக்கோ மொட்டை வெயிலில் பட்டுப் புடவை கட்ட சொல்லி கொடுமைபடுத்தும்போது.

8. 200 ரூபாய்க்கு வாங்கின சுடிதார் கூட அவர்களுக்கு இவ்ளோ காஸ்ட்லியா எனத் தெரியும்போது.

9. ரெண்டாவது குழந்தை எப்ப பெத்துக்கப்போறன்னு நச்சரிக்கும்போது.

10. பெற்றோர் சைடோ, கணவர் சைடோ கரெக்டாய் நம் வெகேஷன் ப்ளான் பண்ணும் சமயத்தில் காது குத்து, கிடா வெட்டுன்னு வச்சு வரலன்னா ”எங்க வீட்டு விசேஷத்துக்கெல்லாம் வருவீங்களா?”ன்னு கடுப்படிக்கும்போது.

24 comments:

எறும்பு said...

nice :)

நட்புடன் ஜமால் said...

இரண்டுலையும் 9ஆவது குத்து செம குத்து

ஸ்ரீ.... said...

ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள் என்பது இடுகையின் மூலம் நீங்கள் விட்ட குத்துக்களில் தெரிகிறது. :)

ஸ்ரீ....

a said...

//
கண்டிப்பா வெளியூர்லருந்து வர்றவங்க சின்ன பர்சேஸ் இருக்கு வாங்கன்னு தி.நகர் கூட்டிகிட்டு போய் ரங்கநாதன் தெருவுல சில்லறை பொறுக்கவுடும்போது
//

அட்டகாசம். நானும் பலதடவை மாட்டிருக்கேன்..

தராசு said...

ஹோட்டல் - 8 வது குத்து.

சொந்தம் - 6 வது குத்து.

சேம்பிளட்.....

'பரிவை' சே.குமார் said...

இரண்டும் செம குத்து.

ஜெய்லானி said...

செம குத்தால்ல இருக்கு ஒவ்வொன்னும்

நாகை சிவா said...

உறவினர் குத்துக்கு தான் வீரியம் அதிகம் :)

Vidhoosh said...

super super super super super super super super super super

Anonymous said...

சூப்பர்ங்க. உறவினர் குத்து அமோகம்

விக்னேஷ்வரி said...

ரெண்டாவது பத்துகள் - ரொம்ப ரசனையா இருக்கு. :)

Cable சங்கர் said...

yaar yaarukku யாரை குத்துவிடணும்னு தோணுதோ.. அவங்களை தானே குத்துவிட முடியும்.:)

Cable சங்கர் said...

yaar yaarukku யாரை குத்துவிடணும்னு தோணுதோ.. அவங்களை தானே குத்துவிட முடியும்.:)

Vidhya Chandrasekaran said...

நன்றி எறும்பு.
நன்றி நட்புடன் ஜமால்.
நன்றி ஸ்ரீ.
நன்றி யோகேஷ்.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி தராசு.

Vidhya Chandrasekaran said...

நன்றி குமார்.
நன்றி ஜெய்லானி.
நன்றி சிவா.
நன்றி விதூஷ்.
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி விக்னேஷ்வரி.

செ.சரவணக்குமார் said...

அசத்தல்.

CS. Mohan Kumar said...

நல்லா யோசிக்கிறீங்க மேடம்

Raghu said...

//இத இப்படி குடிச்சாதான் நல்லாருக்கும்ன்னு சமாளிக்கும்போது//

இப்ப‌டி கூட‌வா சொல்றாங்க‌?!

//நாம் தமிழில் பேசினாலும் விடாது உடைந்த ஆங்கிலத்திலேயே பேசி சாவடிக்கும்போது//

அவ‌ங்க‌ளுக்கு வேற‌ வ‌ழி இல்ல‌ங்க‌..இப்ப‌டி எல்லார்கிட்டேயும் பேசி பேசித்தானே இம்ப்ரூவ் ப‌ண்ண‌ முடியும்

//“இதுகூடவா தெரியாது” என்கிற மாதிரி கேவலமாய் பார்க்கும்போது//

என‌க்கும் ந‌ட‌ந்திருக்கு :(

Vidhya Chandrasekaran said...

நன்றி கேபிள் சங்கர்.
நன்றி சரவணக்குமார்.
நன்றி ரகு.
நன்றி மோகன்குமார்.

பா.ராஜாராம் said...

//இட்லி ஆர்டர் பண்ணா காலியாயிடுச்சுன்னு சொல்லும்போது.

//தொடர்ந்து நாம் கேட்கும் நாலைந்து ஐட்டங்களை இல்லையென சொல்லும்போது.//

//அ)130 ரூபாய் விலையுள்ள சைட் டிஷ்ஷை சொப்பில் கொண்டு வரும்போது.
ஆ) அதையும் கூட இருக்கற எல்லாருக்கும் சர்வ் பண்ணிட்டு நமக்கு க்ரேவி ரெண்டு சொட்டு வுடும்போது.//

//சூப் ரொம்ப ஆறிபோயிருக்கு என கம்ப்ளையெண்ட் செய்யும்போது//

திண்ணிப் பண்டாரம் பாஸ். :-)

// நான் புள்ள பெத்து வளர்க்கலயான்னு கேட்டு ஆறு மாசக் குழந்தை வாயில உருளைமசாலாவத் திணிச்சி அதுக்கு வயித்தால போகும்போது குழந்தைய சரியாவே வளர்க்கல நீன்னு சொல்லும்போது//

urs trade mark பாஸ்! :-)))

Thamira said...

ரெண்டாவது குத்துகளுக்கு 'உறவினர்களுக்கு' என்பதற்குப் பதிலாக மாமியார் என்று இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ.?? ஹிஹி..

முதல் லிஸ்டில் 7வது பாயிண்டுக்கு சர்வர் என்ன பண்ணுவார் பாவம்? ஆனால் இன்னொரு பாயிண்டை விட்டுட்டீங்க.. கொலப் பட்டினியோடு வருவதை சரியாக கண்டுபிடித்து பொறுமைத்திலகமாய் அன்னநடை நடந்து ஆறிப்போன தோசையை கொண்டுவரும்போது..

Vidhya Chandrasekaran said...

நன்றி பாரா சார் (எல்லாமே வயித்துக்குதானே).

நன்றி ஆதி (டு பி சீரியஸ் என் மாமியார் ரொம்ப நல்லவங்க.)

Unknown said...
This comment has been removed by the author.
Vidhya Chandrasekaran said...

கல்யாணத்துக்கு முன்னாடியும் தோணும் சார். அப்புறம் நெகடிவ் feedback வந்தா பப்ளிஷ் பண்ணிட்டுப் போறேன். இப்ப உங்க கமெண்டையும் பப்ளிஷ் பண்ணல அது மாதிரி.