August 30, 2010

நான் மகான் அல்ல

தகப்பனை கொடூரமாக கொன்றவர்களை மன்னிக்க முடியாமல் கொடூரமாக (அவர்கள் கொன்றதை விட ஒரு படி மேல்) கொல்லும் பையன். இந்த ஒரு வரிக் கதைக்கு 2.30 மணி நேர விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் சுசீந்தரன். வேலைக்காக காத்திருக்கும் கார்த்திக் (இவர் கார்த்திக்கா இல்லை கார்த்தியா??) தன் தோழியின் கல்யாணத்தில் காஜல் அகர்வாலை காண்கிறார். காதல் கொள்கிறார். காஜலுக்கும் அவ்வண்ணமே லவ்வு பொங்குகிறது (எத்தனை நாளைக்குத்தான் இப்படி பார்த்தவுடனே லவ்வடிக்க ஆரம்பிச்சிடுவாங்களோ என்றதுக்கு “கேப்டன், டி.ஆரேயே ஈரோயினிங்க வளைச்சு வளைச்சு காதலிக்கறாங்க. கார்த்திக்கு என்ன குறைச்சல்” என்ற பதில் வந்தது). வில்லனாக முயலும் காஜலின் அப்பா, அவருக்காக கார்த்திக் பார்க்கும் தற்காலிக வேலை, தாதாவுடன் ஏற்படும் நெருக்கம் என முதல் பாதி கலகலப்பு. இதற்கிடையில் நான்கு இளைஞர்கள் மூலம் கார்த்தியின் அப்பாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஒருமுறை உயிர்பிழைப்பவர் அடுத்த முறை பக்கா ப்ளானிங்கினால் இறந்துவிடுகிறார். அப்பாவின் சாவிற்கு பழிவாங்கும் கார்த்திக் என இரண்டாம் பாதி விறுவிறுப்பு.

படத்தில் ஹீரோவின் இண்ட்ரோக்கு முன்னரே வில்லன்களாக வரும் அந்தப் பையன்களின் இண்ட்ரோ. ஒவ்வொருத்தரும் பாடி லேங்வேஜில் மிரட்டுகிறார்கள். அந்தப் பரட்டைத் தலையோடு கருப்பாக வரும் ஆளும், பெரிய கண்களுடன் வரும் எல்லாவற்றிற்கும் உடனே கோவப்படும் ஆளும் அருமையான தேர்வு. அதிலும் பின்னவர் குரூரப் புன்னகை புரியும்போது அவ்வளவு வில்லத்தனம். ஒரு மிடில் க்ளாஸ், ஈசி கோயிங், டோண்ட் கேர் ஆட்டிடியூட் கேரக்டருக்கு கார்த்தி கனக்கச்சிதமாய் பொருந்துகிறார். ஹேப்பி நியூர் ஆரம்பித்து, காஜலை காதல் வலையில் விழவைப்பது, நண்பர்களை கலாய்ப்பது, கலெக்‌ஷன் வேலையில் ரவுசு பண்ணுவது, அப்பாவை நினைத்து உருகுவது என நன்றாக நடித்திருக்கிறார். காஜல் அகர்வால் முதல் பாதி அழகாக வந்து போவதோடு சரி. அவரின் பாதி வேலையை கண்களும் உதடுகளுமே பார்த்துக்கொள்கின்றன. அப்பாவாக ஜெயப்பிரகாஷ். கொஞ்ச நேரமே வந்தாலும் அழுத்தமாக மனதில் பதிகிறார் (வில்லன் மற்றும் கேரக்டர் ரோலிற்கு இப்போதைக்கு இவர்தான் பெஸ்ட் சாய்ஸ்). கார்த்தியின் நண்பராக வரும் வெண்ணிலா கபடிக்குழுவில் பரோட்டா தின்பவர் நன்றாக நடித்திருக்கிறார்.

முதல் பாதியின் முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்கள் காமெடியும், வில்லன்களின் கேரக்டரை க்ளியராக சொல்வதும் தான். அதிலும் முதல் பாதி முழுவதும் நகைச்சுவை துருத்திக் கொண்டு தெரியாமல் கதையோடு பயணிப்பது இயல்பாய் இருக்கிறது. கல்யாண வீட்டு மாடியில் விக்ரமன் பட வசனத்தைப் பேசி மியூசிக்கிற்கு இடம் விடுவது கலக்கல். அதே போல் அபிராமி மெகா மால் காட்சிகள், போனில் பேசியே மானேஜரையும் அவர் மனைவியையும் டைவர்ஸ் வரை கொண்டு விடுவது, குடும்பஸ்தன்களப் பார்த்தாலே மரியாதைப் பொங்குது என நிறைய ஹார்ட்டி லாஃப்ஸ்.

பிற்பாதியில் ஆக்ரோஷமும் வன்முறையும் அதிகம். ஒரு ப்ரொபெஷனல் ரவுடியையே ஈசியாக வெட்டிச் சாய்க்கும் நால்வர் அணியை கார்த்தி ஒற்றை ஆளாக ஆயுதமேதுமில்லாமல் எதிர்கொள்வது வந்துட்டான்யா வீராதி வீரன் என்றே எண்ணத் தோன்றுகிறது. படத்தின் மிகப்பெரிய பலம் பிண்ணனி இசை. அதுவும் இடைவேளைக்குப் பிறகு bgm நல்ல டெம்போ ஏற்றுகிறது. யுவன் கலக்கியிருக்கிறார். பாடல்கள் பெரிதாக சொல்லும்படி இல்லை. இறகைப் போல பாடல் நன்றாக இருக்கிறது. தெய்வம் இல்லை பாடலில் மதுபாலகிருஷ்ணனின் குரல் மனதைக் கிழிக்கிறது. தொய்வில்லாத திரைக்கதை, பொருத்தமான பாத்திரத் தேர்வு என இயக்குனர் கமர்ஷியல் பெஸ்ட் கொடுத்திருக்கிறார்.

நான் மகான் இல்லை - மோசமில்லை.

19 comments:

Thenral said...

Naan inimethaanga paakanum!Kaajal appa "Love mariiage-lam othuvaraathu"nu sollumpothu karthi "Adan uncle arrange marriage aaka vanden"nu solra idam top!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)

CS. Mohan Kumar said...

Good review. Hero name is Karthi. Vikatan has given 44 marks !! Not many films released this year have scored this much of marks.

நர்சிம் said...

பகிற்விற்கு நன்றி

priyamudanprabu said...

நான் மகான் இல்லை - மோசமில்லை. .
?"//

MMMMMM

Anonymous said...

எங்கியாச்சும் டவுன்லோட் பண்ண முடியுமான்னு பாக்கறேன். கார்த்தி தான் இப்ப என்னோட பேவரைட் ஹீரோ.

'பரிவை' சே.குமார் said...

நான் மகான் இல்லை - மோசமில்லை.

:(

ஜெய்லானி said...

பாதி படம் தூங்கிட்டு பாத்தீங்க போலிருக்கு ஹி..ஹி..

Vidhya Chandrasekaran said...

நன்றி தென்றல்.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி மோகன் குமார்.
நன்றி நர்சிம்.
நன்றி பிரியமுடன் பிரபு.

நன்றி சின்ன அம்மிணி (ஹி ஹி. அம்மிணி அதே அதே).

நன்றி குமார்.

நன்றி ஜெய்லானி (இல்லீங்க. ஏன்??).

Rajalakshmi Pakkirisamy said...

padam parkirappo avvalvu super nu thonala.. but ippo yosikum pothu nalla thaan irukku.. .

மரா said...

உங்கள் விமர்சனம் படம் பார்க்கத் தூண்டுகிறது....

மரா said...

பட அறிமுகத்துக்கு நன்றி.

R. Gopi said...

\\தன் தோழியின் கல்யாணத்தில் காஜல் அகர்வாலை காண்கிறார். காதல் கொள்கிறார். காஜலுக்கும் அவ்வண்ணமே லவ்வு பொங்குகிறது (எத்தனை நாளைக்குத்தான் இப்படி பார்த்தவுடனே லவ்வடிக்க ஆரம்பிச்சிடுவாங்களோ\\

என்னங்க இப்படி சொல்லீட்டீங்க. காஜல் அகர்வாலுக்கு லவ்வர் யாரும் இல்லை என்பதைக் கன்பர்ம் செய்து, குழந்தைகளுக்கு ஐஸ் கிரீம் கொடுத்து, ஒரு பாட்டு பாடி, நீலிமா கிட்ட இருந்து போன் நம்பர் வாங்கி, பேசி, மறுபடியும் அபிராமி மாலில் இம்ப்ரெஸ் செய்து,

இருங்க மூச்சு வாங்குது, தண்ணி குடிச்சுக்கறேன்.

இவ்ளோ செய்ததுக்கப்புறம்தான் காஜல் அகர்வால் ஓகே சொல்கிறார்.

Cable சங்கர் said...

m.. விமர்சனம் நல்லாருக்கு..:)

எறும்பு said...

//நிறைய ஹார்ட்டி லாஃப்ஸ்//

இதுக்கு எனக்கு அர்த்தம் புரியலை. உங்கள் ப்ளாகை என்னை போன்ற பாமரர்கள் படிப்பதால் முடிந்தவரை தமிழில் விமர்சனம் எழுதவும்.

:)

Thamira said...

ஒரு நல்ல சினிமாவுக்கு உங்கள் பாராட்டு குறைவே.!

vinu said...

welcome backkkkkkkkkkkkkk

Ahamed irshad said...

விமர்சனம் நலம்..

விக்னேஷ்வரி said...

Inox இல் பார்த்தேன். தியேட்டரா அது. :(