ஆணோ பெண்ணோ கல்யாணமானதிலிருந்து நிறைய அல்லது கொஞ்சமே நிறைய விஷயங்களில் விட்டுக்கொடுத்தல்/அட்ஜெஸ்ட்/வேறுவழியில்லாமல்/தலையெழுத்தே என பல விஷயங்களை கடக்கவேண்டியிருக்கிறது. இருவருக்குமே காமனான டயலாக். அடிக்கடி கேட்கும் டயலாக். ”கல்யாணத்துக்கு முன்னால நான் எப்படியிருந்தேன் தெரியுமா?” கொஞ்சம் மாற்றி எள்ளலோடு மற்றவர்கள் முன் கலாய்க்க ”எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன்”.
இந்த நொந்தல்ஸ் நூடுல்ஸை பெண்கள் வாய்விட்டு சொல்லிவிடுகிறார்கள். ரங்கமணிகள் வழக்கம்போல் ஊமைக்கோட்டான்களாய் கமுக்கமாய் மனதிற்குள்ளே கறுவிக்கொண்டிருந்து சமயம் பார்த்து எடுத்துவிட்டு அப்செட் ஆக்குவார்கள். என்னோட சில க.மு க.பி கம்பேரிஷன்கள்.
# மணி பத்தாகப்போதுடி. இன்னுமா தூங்கறே - அம்மா
விடியற்காலைல எழுப்பாதேன்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன். சூரியன் உச்சிக்குப் போறதுக்குள்ள நான் எழுந்தா உலகத்துக்கு ஆகாதுன்னு உடுமலைபேட்டை உலகநாதன் சொன்னது மறந்திருச்சா??
@ மணி 6.30 தானேம்மா ஆறது. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கேம்மா - மாமியார்
தூக்கம் வரலம்மா. சீக்கிரம் எழுந்து பழக்கமாயிடுச்சு (டமார். எங்கோ ட்ரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறும் சத்தம். என் மனசாட்சியாகவும் இருக்கலாம்).
*******************
# குளிச்சிட்டு தான் சாப்பிடேண்டி - அம்மா
சட்னில இன்னும் கொஞ்சம் உப்பு போடுமா.
@ சூடா இருக்கும்போதே நீயும் சாப்பிடேன்மா - மாமியார்
ஒரே கசகசன்னு இருக்குமா. குளிச்சிட்டு சாப்பிடறேனே.
*********************
# வெள்ளிக்கிழமையதுவுமா நகம் வெட்டிக்கிறியேடி. கிளம்பு கோயிலுக்கு போய்ட்டு வரலாம் - அம்மா
நீ போய்ட்டு வா. பிள்ளையார் கோவிலுக்கு போம்மா. சுண்டல் கொடுப்பாங்க.
@ மணி ஆறாகப் போகுது விளக்கேத்திடவாம்மா
*********************
# இந்தக் கனகாம்பரத்த வச்சிக்கோயேண்டி - அம்மா
நானென்ன கரகாட்டமா ஆடப்போறேன். போய்டு.
@ கதம்பம் வச்சுக்கோம்மா - மாமியார்
(மனதுக்குள்) பச்சை மஞ்ச சிவப்பு தமிழன் நான்:(
******************
#ஏண்டி சுரேஷ் கல்யாணத்துக்கு பட்டுப் புடவை கட்டிக்கோயேண்டி.
ஏன் சல்வார் போட்டுகிட்டு வந்தா உன் அக்கா பையன் பொண்ணுக்கு தாலி கட்டமாட்டானா?
என் நாத்தனாரின் மாமியாரின் தங்கை பேரன் காதுகுத்துக்கு அகல பார்டர் வச்ச பட்டுப் புடவையை ஆறுமணிநேரம் கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தேன்.
******************
#சாப்பிட்ட தட்டிலேயே கைகழுவறியேடி. ஆம்பிள புள்ளமாதிரி வளத்திருக்கீங்க பொண்ண - அத்தை.
@என்னம்மா சாப்பிட்ட தட்ட கொண்டுபோய் சிங்க்ல போடற. எச்சத் தட்ட கழுவி கவுக்கனும். தெரியுதா??
டிஸ்கி : இந்தப் பதிவை ஹஸ்பெண்டாலஜி ப்ரொபசர் டாக்டர் புதுகை தென்றலக்காவுக்கும், எப்படியெல்லாம் சந்தேகப்படனும்னு பதிவு போட்டு சொல்லிக் கொடுக்கும் விதூஷக்காவுக்கும் டெடிகேட் பண்ணிக்கிறேன்.
மு. டிஸ்கி : எதுக்கு காம்ப்ரமைஸ் பண்ணிக்கனும், ஏன் ஆக்டிங் விடனும்ன்னு அதிபுத்திசாலித்தனமான கேள்விகளை கேக்கற கல்யாணமானவங்களுக்கு பூரிக்கட்டை/அதிகம் சேதம் விளைவிக்கக்கூடிய ஆயுதத்தால் சரி மொத்து வாங்குவீர்கள் என்றும், கல்யாணம் ஆகாதவர்கள் சீக்கிரமே கல்யாணம் ஆகி மேற்கூறிய வரத்தை அனுபவிக்கப் பெறுவார்கள் என பணிவுடன் எச்சரிக்கப்படுகிறார்கள்.
August 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
நமக்கு இந்த கடலின் ஆழம் புரியவே மாட்டேங்குதுங்க
:)) வித்யா இன்னும் இருக்கு.. அப்படியே பக்தி பழமாவும், மணாளனே மங்கையின் பாக்யமாகவும் செம ஆக்டு கொடுக்கனும் :))
:) Interesting.
நம்ம புழைப்பு இப்படி நடிப்பிலேயே போணுமா???
//மணி 6.30 தானேம்மா ஆறது. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கேம்மா - மாமியார்//
கொடுத்து வைச்சவங்க. இங்க ரங்க்ஸே அலாரம் வைச்சு அஞ்சு மணிக்கு எழுப்பி விட்டுடறார் :(
///கல்யாணம் ஆகாதவர்கள் சீக்கிரமே கல்யாணம் ஆகி மேற்கூறிய வரத்தை அனுபவிக்கப் பெறுவார்கள் என பணிவுடன் எச்சரிக்கப்படுகிறார்கள்./// அய்யோ!!!
என்ன கொலைவெறி.
//கதம்பம் வச்சுக்கோம்மா - மாமியார்
(மனதுக்குள்) பச்சை மஞ்ச சிவப்பு தமிழன் நான்:(//
ஹூம்.. இப்படித்தான் முற்பகல் - பிற்பகல் வினை நமக்கு மட்டும் கரெக்டா வொர்க் அவுட் ஆகும்!!
:)))))))
ரொம்ப டெடிகேட்டட்...:)))
உலகம் உருண்டை , ஒரு நாள் மேல உள்ளது கீழ வரும் (பச் ..... வேற என்னத்த சொல்ல )
இப்படிக்கு
மண்டை காஞ்சு மதி இழந்தோர் சங்கம்
ஆஹா.. அருமையான ஆராய்ச்சியா இருக்குதுங்களே வித்யா.
டிஸ்கி வேற பயமுறுத்துது.
நீங்க வேற
நான் எவ்ளோ விட்டுக் கொடுத்திருக்கிறேன் என்று சொல்ல ஆரம்பித்தால் ஒரு ப்ளாகே (எத்தனை நாள்தான் புக்குன்னு சொல்றது) போடலாம்.
நானே தட்டு கழுவ ஆரம்பிச்சேன்
வாரா வாரம் அவங்க கிராமத்துல இருக்க நேத்து பொறந்த குழந்த முதற் கொண்டு பேசியாகணும். மேடம் அப்பறம் போன் பண்ணினேனா இல்லையான்னு அவங்களுக்கெல்லாம் போன் பண்ணி உறுதிப்படுத்திப்பாங்க.
எங்க வீட்ல என்ன மெனுங்கிறது அவ அவங்கம்மாட்டப் பேசினதுக்கப்புறம்தான் முடிவாகும்.
எல்ல வீக் எண்டுக்கும் அங்கேர்ந்து பிளான் வந்துடும்.
இன்னும் நெறைய இருக்கு. மூச்சு முட்டுது எனக்கு. உங்களுக்கெல்லாம் கண்ணக் கட்டணுமே?
//கல்யாணம் ஆகாதவர்கள் சீக்கிரமே கல்யாணம் ஆகி மேற்கூறிய வரத்தை அனுபவிக்கப் பெறுவார்கள் என பணிவுடன் எச்சரிக்கப்படுகிறார்கள்.///
சோ, நானும் future ல இது எல்லாம் expect பண்ணனுமா ?
பில்ட் அப் கொடுக்கறத பொண்ணுங்க கிட்டேர்ந்து தான் கத்துக்கணும் :)
கல்யாணமாகாத எல்லா ஆண்களுக்கும் சாக்ரடீஸ் சொன்னதை உங்களுக்குச் சொல்கிறேன்.
If your wife is good, your life will be happy.
Otherwise you will atleast become a philosopher.
Hence By All Means MARRY
By All means, MARRY.
haa..haa..haa
அதுசரி... இம்புட்டு இருக்கா...?
#ஏண்டி சுரேஷ் கல்யாணத்துக்கு பட்டுப் புடவை கட்டிக்கோயேண்டி.
ஏன் சல்வார் போட்டுகிட்டு வந்தா உன் அக்கா பையன் பொண்ணுக்கு தாலி கட்டமாட்டானா?
என் நாத்தனாரின் மாமியாரின் தங்கை பேரன் காதுகுத்துக்கு அகல பார்டர் வச்ச பட்டுப் புடவையை ஆறுமணிநேரம் கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தேன்.
******************
......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...... சத்தம் போட்டு சிரிச்சிட்டேன்.
மணி 6.30 தானேம்மா ஆறது. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கேம்மா - மாமியார்
தூக்கம் வரலம்மா. சீக்கிரம் எழுந்து பழக்கமாயிடுச்சு (டமார். எங்கோ ட்ரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறும் சத்தம். என் மனசாட்சியாகவும் இருக்கலாம்).
இது கல்யாணம் ஆன புதுசில தானே ?
நாடகமே வாழ்க்கை ..எனக்கு இன்னும் என்னென்னவோ தத்துவமெல்லாம் தோணுது .இந்த இடுகைய படிச்சப்புறம்
ithu namma area illa pola..... me the escape :) :) :) :
நன்றி வேலு.
நன்றி மயில் (இந்த ஒரு வாரமா நான் ஆக்டிங்கில் டபுள் டாக்டரேட் பட்டம் வாங்கற அளவுக்கு பெர்பார்ம் பண்ணிக்கிட்டிருக்கேம்).
நன்றி மோகன்குமார்.
நன்றி அமுதா.
நன்றி சின்ன அம்மிணி (ஹி ஹி. என் ரங்ஸ் தெய்வம்).
நன்றி பாலகுமாரன்.
நன்றி ஹுஸைனம்மா.
நன்றி விதூஷ்.
நன்றி மங்குனி அமைச்சர்.
நன்றி சரவணக்குமார்.
நன்றி கோபி.
நன்றி மணிகண்டன்.
நன்றி விஜய்.
நன்றி கேபிள்.
நன்றி குமார்.
நன்றி சித்ரா.
நன்றி பூங்குழலி (இப்பவும் அப்படித்தான்).
நன்றி ராஜி (ஓடமும் ஒரு நாள் கரையில் ஏறும்).
"/ஏன் சல்வார் போட்டுகிட்டு வந்தா உன் அக்கா பையன் பொண்ணுக்கு தாலி கட்டமாட்டானா?
"/...
Excellent counter Vidhya....Neenga oru chudithar potta Tamizh padam..:)
என்னங்க......என்னங்க..... எல்லாமே காலம் மாத்திடுமே......ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்.... வண்டியும் ஒரு நாள் ஓடம் ஏறும்.......
excellent!
:-)))
ரைட்ட்ட்டு.
super :))
:)
நன்றி எழினி.
நன்றி நித்திலம்.
நன்றி பா.ரா சார்.
நன்றி நர்சிம்.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி மணிநரேன்.
pooooooooooongappa ungalaimaaathiri kalyaanam aaanvangalukku veara veallaaiyea illai eppa paarthaaalum ippaadithaan kaduppadikkirathu
நடைமுறை நகைச்சுவை. அந்த பூ மேட்டர் :)
ஹாஹாஹா... சூப்பரு. அப்படியே இதோட பாகம் 2ம் எழுதலாம்ல.
Post a Comment