September 15, 2010

எந்திரன் விமர்சனம் எழுதுவது எப்படி?

எந்திரன் ரிலீஸ் தேதி தெரிந்துவிட்டது. சன் டிவி ஒரு பக்கம் போட்டுத் தாக்கிக் கொண்டு இருக்கிறது. நம்மைப் போல சாதரணமான மக்களுக்கு டிக்கெட் கிடைக்க எப்படியும் 2 வாரத்திற்கு மேலாகிவிடும். அதுக்குள் எண்ணிலடங்கா விமர்சனப் பதிவு வந்துவிடும். இரண்டு வாரங்கள் கழித்து விமர்சனப் பதிவு போட்டால் “கல்யாணத்திற்கு வரச்சொன்னால் காது குத்திற்கு வர்றியே” என சகப் பதிவர்கள் எள்ளி நகையாடுவார்கள். பிறரின் சிரிப்புக்கு ஆளாகாமல் விமர்சனப் பதிவு எழுதுவது எப்படி? சில ஐடியாக்களை இங்கே குடுத்திருக்கிறேன்.

#முதலில் தியேட்டருக்கு சென்றதைப் பற்றி ஒரு பத்தி எழுதனும். ட்ராபிக்கில் மாட்டியதைப் பற்றி, கிளம்பும்போது காலில் இடித்துக்கொண்டதைப் பற்றி, சீட் சரியில்லாததைப் பற்றி என எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். முக்கியமாய் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் கண்டிப்பாக அது படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் இருக்க வேண்டும்.

#ஹீரோவின் எண்ட்ரியை பாராட்டியோ, எதிர்த்தோ ஒரிரு வரிகள் எழுதலாம். என்ன எண்ட்ரி என்று சிலாகித்தோ, என்ன எண்ட்ரி இது (என்ன எழவு இது) என்ற பாணியிலோ எழுதலாம்.

#படம் ஆரம்பித்து முடியும் வரை வரும் சீன்களைத் தான் விமர்சிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நாம் படம் பார்க்காமல் விமர்சனம் எழுதப் போவதால் கொஞ்சம் பின்நவீனத்துவ முயற்சியாக நடிகர்களையும், இசையையும், மற்றவற்றையும் விமர்சித்தே எழுதலாம். இங்கு பின்நவீனத்துவ முயற்சி என்பது யாருக்கும் புரியாத மாதிரியும், எழுதப்போகும் நமக்கு (மட்டுமே) எல்லாம் தெரியும் என்கிற மாதிரியுமான முயற்சி என்பதை நினைவில் உட்கார வைத்துக்கொள்ளுங்கள்.

#இந்தியர்களை திருடர்களாக சித்தரித்த ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக ஆஸ்கார் விருது வாங்கிய பின் ரஹ்மான் இசையில் அதீத மேற்கத்திய பாணி தெரிகிறது (அ) ரஹ்மான் இந்தியர்களுக்காக குரிப்பாகத் தமிழர்களுக்காக இசையமைக்காமல் ஏகாதிபத்தியம் பக்கம் சாய்ந்தது துரதிருஷ்டவசமானது. காதல் அணுக்கள் பாடலில் 3ஆவது நிமிடம் 45ஆவது நொடியில் வரும் அந்த கித்தார் ஒலிக்காகவே ரஹ்மானிற்கு ஆஸ்கார் குடுக்கலாம். பிண்ணனி இசை அருமை.

#காதல் காட்சிகளில் இளமை கொப்பளிக்கிறது (அ) ரஜினி தாத்தாக்கு இதெல்லாம் தேவையா என ஆண் பதிவர்களும், ஐஸ் பாட்டியைப் பார்க்க சகிக்கவில்லை என பெண் பதிவர்களும் எழுதிக்கொள்ளலாம்.

#ரஜினியின் உதவியாளர்களாய் வரும் சந்தானமும் கருணாஸும் பட்டையைக் கிளப்புகிறார்கள். கதையோடு ஒன்றி வரும் காமெடி ட்ராக் படத்தின் மிகப்பெரிய பலம் (அ) ஒரு மெத்தப் படித்த சயிண்டிஸ்ட் இப்படிப்பட்ட உதவியாளர்களையா வைத்துக்கொள்வார். ரோபோ உதவியாளர்களை ஏய்க்கிறதாம். கருமம்.

#படத்தில் வரும் CG காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இருக்கிறது. பிரம்மாண்டம் படம் முழுவதும் மிரட்டுகிறது (அ) இத்தனைப் பொருட்செலவில் இப்படி ஒரு குப்பை தேவையா? கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளைப் பார்க்கும்போது புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்டது நினைவுக்கு வருகிறது (காசும் செலவு செய்யக் கூடாது. படமும் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கனும்ன்னு எதிர்பார்க்கிறது நியாயமா என கேள்விகள் யாரும் கேட்டால் அவர்களைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்).

#கூகிள் சர்ச்சில் ரோபாடிக்ஸ் எனத் தேடுங்கள். வந்து விழும் முதல் இரண்டு லிங்கைப் படிக்காதீர்கள். முதல் பக்கத்தில் தெரியும் கடைசி இரண்டு லிங்கைப் படித்து வைத்துக்கொள்ளுங்கள். முழுவதும் படிக்க முடியவில்லையெனில் நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத சயிண்டிபிக் வார்த்தைகள் நான்கை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். CG பற்றி எழுதும்போது இந்த வார்த்தைகளைப் பரவலாக உபயோகிப்பதன் மூலம் நீங்கள் ரோபோடிக்ஸில் மிகப் பெரிய ஜாம்பவான் என அறியப்படுவீர்கள்.

#எந்திரன் - மந்திரன்
எந்திரன் - தந்திரன்
எந்திரன் - முழு சந்திரன்

(அ)
எந்திரன் - காயலான் கடைக்கு
எந்திரன் - உயிரில்லை
எந்திரன் - துருப்பிடித்த இரும்பு

பி.கு : ஆதரவாகவும், எதிர்த்து எழுதவும் சில குறிப்புகளும், இரண்டித்திற்குமே பொதுவாக சில குறிப்புகளும் இருக்கின்றன. உபயோகித்து பயன் பெறுக.

33 comments:

கவிதா | Kavitha said...

ஆரம்பிச்சாச்சா...? ஏன்ன்ன்ன்?

Anonymous said...

தியேட்டரில் பாப்கார்ன், ஐஸ்க்ரீம் சரியில்லைன்னு எழுதலாமா ஆபிசர்,, எங்க ஊரில ஒரு தியேட்டரில் பேல் பூரி, பானி பூரி, மாசாலா பூரி தருவான், படத்தை விட அது எப்பவும் நல்லாருக்கும் ரேட் தான் நல்லாருக்காது, எந்திரனை முன்னிட்டு அவனுன் விலை ஏத்திடுவானோ?

Thenral said...

Ahaa!Vimarsanam ezhudha ungakitadhanga tuition padikkanum.Super!!!

Anonymous said...

இதுக்கப்பறமும் யாரும் விமர்சனம் எழுதுவாங்க :)

Vidhoosh said...

dear! what is CG?

and, so early, so soon... :))

Chitra said...

Boom Boom Robo da!!!! :-)

சென்ஷி said...

http://penathal.blogspot.com/2010/08/blog-post.html

Rajalakshmi Pakkirisamy said...

padichitu sirichutu irukken

☀நான் ஆதவன்☀ said...

:))

பினாத்தலார் பெரிய ப்ளாஷ் பதிவே போட்டிருக்காரே. பார்க்கலயா வித்யா?

Raju said...

நாங்கள்ளாம் செம்ம ஷார்ப்பு. எழுதிப்புட்டோம்ல!

http://tucklasssu.blogspot.com/2010/09/190.html

பின்னோக்கி said...

ரிலீஸ் அக்டோபர்க்கு தள்ளிட்டாங்கன்னு படிச்சேன்...

திருநாவுக்கரசு பழனிசாமி said...

எந்திரன் - மந்திரன்
எந்திரன் - தந்திரன்
எந்திரன் - முழு சந்திரன்..அருமையான "முன்" நவீனத்துவ விமர்சனம்.

கோவி.கண்ணன் said...

//எந்திரன் - காயலான் கடைக்கு
எந்திரன் - உயிரில்லை
எந்திரன் - துருப்பிடித்த இரும்பு//

:)

மொத்ததில் ஹாலிவுட் பாணியிலான ஒரு சீனத் தயாரிப்பு

தமிழ் அமுதன் said...

//படம் பார்க்க ஆவலை தூண்டுது உங்க விமர்சனம்..!//

///கண்டிப்பா பார்க்கனும்...!//

//மிகவும் நேர்த்தியாக சொல்லபட்ட விமர்சனம்..!///

///அருமையான பார்வை..!//

//சங்கர் சங்கர் தான்..!//

//ரஜினி ரஜினி தான்...!//

//ஐஸ்வர்யா பற்றி அதிகம் சொல்லாதது ஏன்..?///


இப்ப்டியெல்லாம் கமெண்டுகளையும்
ரெடி பண்ணி வைச்சுகனும்

R. Gopi said...

அட்வான்ஸ் புக்கிங் கேள்விப்பட்டிருக்கேன். அட்வான்ஸ் விமர்சனம் இப்பத்தான் பாக்குறேன்.

இந்த டெம்ப்லேட்டுக்குகுக் காபி ரைட் உண்டா? இல்லன்னா நான் பயன்படுத்திக் கொள்கிறேன். என்திரன் மட்டுமில்லை. எல்லாப் படத்திற்கும் இது பயன்படும்:)

Vidhya Chandrasekaran said...

நன்றி கவிதா (நாங்களும் ரவுடிதான் எப்ப ப்ரூவ் பண்றது)

நன்றி மயில் (ஆஹா. தாராளமா. நாம எழுதறதுதான் விமர்சனம்)

நன்றி தென்றல்.
நன்றி சின்ன அம்மிணி.

நன்றி விதூஷ் (அது கிடக்குது கழுதை. டிக்கெட் கிடைச்சுதுன்னா சொல்லுங்க).

நன்றி சித்ரா
நன்றி சென்ஷி
நன்றி ராஜி.

Vidhya Chandrasekaran said...

நன்றி ஆதவன் (பினாத்தலார் லெவலுக்கு எல்லாம் முடியுமா)

நன்றி ராஜு (கற்பூர புத்தி).

நன்றி பின்னோக்கி (எப்ப வந்தாலும் இத யூஸ் பண்ணிக்கலாமே).

நன்றி திருநாவுக்கரசு பழனிசாமி.
நன்றி கோவி.கண்ணன்.
நன்றி தமிழ் அமுதன்.

நன்றி கோபி (ஒரு கப் காஃபி வாங்கி கொடுத்திட்டு பயன்படுத்திக்கோங்க).

Thamira said...

பின் பாதியில் ஐஸ்வர்யாவை காணவில்லை.

முன் பாதியில் ரஜினியின் தாத்தாவைக் காணவில்லை.

பின் பாதியில் ஸ்பீடு குறைவு.

முன் பாதியில் காமெடியைக் காணவில்லை.

--இப்படி முன்பாதி, பின்பாதின்னு கண்டிப்பா நாலு கமெண்டு இருக்கணும்.

Kesavan Markkandan said...

ரஜினி, சன் பிச்சர்ஸ் என்பதை விட, ஷங்கர் என்ற ஒரு மனிதனுக்காக படத்தை பார்க்கலாம். நமது வலை நண்பர்களின் கோபம் சன் பிச்சர்ஸ் மேலா இல்லை படத்தின் மேலா என்று புரியவில்லை. எது எப்படி இருந்தாலும் தங்களின் முன்னூட்ட விமர்சனம் மிகவும் அருமை.

வாழ்த்துக்கள் தோழி.

விக்னேஷ்வரி said...

இது உங்க ஏரியா. அடிச்சுக் கிளப்பிட்டீங்க. சூப்பர்.

பவள சங்கரி said...

அட இதுக்கூட நல்லாயிருக்கே.......அட்வான்ஸ் விமரிசனமா .........சூப்பருங்க.......ஜமாய்ங்க.....

அமுதா கிருஷ்ணா said...

super..this is like a endiran trailor.....

தாரணி பிரியா said...

டிரைலர் பார்த்தே விமர்சனம் எழுத யோசிச்சுக்கிட்டு இருந்தேன். கூடவே உங்க கருத்துகளையும் சேர்த்துக்கிறேன் நன்றி :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

அபி அப்பா said...

@ஆதவா! பெனாத்தலார் சிவாஜி படத்துக்கு 1000க்கும் மேல ப்ராப்பேபிளிட்டில விமர்சம் போட்டாரே அந்த ஃபிளாஷ் சூப்பரா ரொம்ப ஈசியா இருந்துச்சு. அதனால பலரை போய் சேர்ந்தது. ஆனா இந்த தடவை 15000 என்று அந்த பதிவை காம்ப்ளிகேட் செய்ததால் பலருக்கும் ஓப்பன் ஆகலை. எனக்கு தான் ஆகலை என நினைத்து பலரையும் கேட்டேன். பலருக்கும் ஆகலை. அதனால் அது மிக சிலரை மிக மிக சிலரை மட்டுமே சென்றடைந்தது.

அந்த 15000ல் இதுவும் ஒன்று மாதிரி தெரிவதால் பெனாத்தலரை பார்க்கலையா என நாம் கேட்கிறோம். நிச்சயமா பெனாத்தலார் பதிவு ஓப்பன் ஆகியிருந்தா வித்யாவுக்கு இந்த பதிவு போட்டிருக்க மாட்டாங்க என நினைக்கிறேன். ஆக குற்றம் நடந்தது என்னான்னு பார்த்தா நம்ம பெனாத்தல்ஸ் மேலத்தான்:-))

எது எப்படியோ இந்த பதிவு நல்லா இருக்கு.

நேசமித்ரன் said...

ம்ம் ரசித்து சிரித்தேன் :))

Vidhya Chandrasekaran said...

நன்றி ஆதி (இது படம் பார்க்காம எழுதற விமர்சனம். அதனால முன்ன பின்ன அப்படித்தான் இருக்கும்).

நன்றி கேசவன்.
நன்றி விக்னேஷ்வரி.
நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து.

Vidhya Chandrasekaran said...

நன்றி அமுதா.
நன்றி தாரணி.
நன்றி டிவிஆர் சார்.

நன்றி அபி அப்பா (சென்ஷியும் ஆதவனும் கொடுத்துதான் பினாத்தலார் பதிவைப் பார்த்தேன். அதுல 1% கூட என்னுது கிடையாது).

நன்றி நேசமித்ரன்.

சகாதேவன் said...

படம் ஓடினால் காரணம்
"என் திறன்" என்று யாரும் சொல்லிக்கொள்ள முடியாது
சகாதேவன்

'பரிவை' சே.குமார் said...

அட்வான்ஸ் புக்கிங் கேள்விப்பட்டிருக்கேன். அட்வான்ஸ் விமர்சனம் இப்பத்தான் பாக்குறேன்.

ஆரம்பிச்சாச்சா...?

Boom Boom Robo da..!

goma said...

படம் வந்தாச்சா......நான்தான் தூங்கிட்டேனா....
அருமையா விமரிசனம் எழுதிட்டீங்க....

goma said...

படம் வந்தாச்சா......நான்தான் தூங்கிட்டேனா....
அருமையா விமரிசனம் எழுதிட்டீங்க....

Vidhya Chandrasekaran said...

நன்றி சகாதேவன்.
நன்றி குமார்.
நன்றி goma.
நன்றி Tech Shankar.