October 20, 2010

நவராத்திரி - ஃபோட்டோ ரவுண்ட் அப்

மைலாப்பூர் வடக்கு மாட வீதி முழுவதும் பொம்மைகளின் அணிவகுப்பு. ஜூனியரைக் கூட்டிக்கொண்டு போனேன். பொம்மைகள் எல்லாம் அம்மாடியோவ் விலையில். 30 ரூபாயில் ஆரம்பித்து 8,000 ரூபாய் வரை பொம்மைகள் இருந்தன. தெருவின் இருபுறமும் பொம்மைகளின் அணிவகுப்பு அவ்வளவு அழகாக இருந்தது. ஜூனியர் கண்ணில் படுவதையெல்லாம் வாங்கனும்னு சொல்லிக்கொண்டிருந்தார். அவர்கள் சொல்லும் விலையில் பாதியைக் குறைத்து பேரம் பேசவேண்டியிருக்கிறது:((
அதே வடக்கு மாட வீதியில் ஒரு பாட்டி கோல அச்சுகள் விற்றுக்கொண்டிருந்தார். எனக்கு சுட்டுப் போட்டாலும் கோலம் போடவராது. அதனால் நானும் சில அச்சுகள் வாங்கிக்கொண்டேன். நான் கேட்ட மயில் டிசைன் அவுட் ஆஃப் ஸ்டாக். நாளை வா தாரேன் என்றார். ஜூனியரைக் கூட்டிக்கிட்டு இரண்டு நாள் வந்ததுக்கே நாக்கு வெளில தள்ளிருச்சு. இதுல மூணாவது நாள் வேறயா என மனதில் நினைத்துக்கொண்டேன்.
மூன்று படிகளோடு ஆரம்பித்திருக்கிறேன். வியாழனன்று மாலை ஒரே ஒரு பிள்ளையார் பொம்மை மட்டும் வைத்துவிட்டு மறுநாள் மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டேன்.
பைனாப்பிள் கேசரி
பீங்கான் பிள்ளையார்
மாமியார் வீட்டு கொலு
இது நான் வைத்தது. கம்ப்ளீட். DOT:)
கிருஷ்ணன் - கோபியர் கோலாட்டம். தாண்டியா ஆட்டமும் ஆட தசரா கூட்டமும் கூட
சமயபுரம் மாரியம்மன். பாண்டிச்சேரியில் வாங்கினது. மைலாப்பூரை விட பாண்டியில் பொம்மைகள் மலிவாக இருக்கின்றன. அரசே கண்காட்சி நடத்தி சிறப்புத் தள்ளுபடியும் கொடுக்கிறார்கள். பண்ரூட்டியிலிருந்து வரும் பொம்மைகள் தத்ரூபமாக இருக்கின்றன.
அர்த்தநாரீஸ்வரர். பார்த்ததும் பிடித்ததால் வாங்கினேன்.
இது எதுக்கு வாங்கின?
ஆணும் பெண்ணும் சமம். பெண்ணீயம். அதெல்லாம் உனக்குத் தெரியாது. புரியாது.
முதல்ல நெட் கனெக்‌ஷன புடுங்கனும்.
இதுவும் ஆணாதிக்கம்தான்.
ஙே!!
டெரக்கோட்டா பிள்ளையார்
இந்த டெரக்கோட்டா பவுல் தோழி பரிசளித்தது.
இந்த தசாவதார பொம்மைகள் அம்மாவுடையது. 25 வருஷத்திற்கு முன்னர் பெரியம்மா அம்மாவிற்கு வாங்கிக்கொடுத்ததாம். விருத்தாச்சலம் பீங்கான் ஃபேக்டரியிலிருந்து வாங்கியிது. அம்மா காஞ்சிபுரத்தோடு கொலு வைக்கும் பழக்கத்தை விட்டுவிட்டார் (தொடர்ந்து மூன்று வருடங்கள் வீட்டில் துக்க நிகழ்வு. செண்டிமெண்டாக அம்மா அப்செட்). இந்த முறை நான் அம்மாவிடமிருந்து லவட்டிக்கொண்டு வந்துவிட்டேன்.
இதை எந்த ஆர்டரில் அடுக்க வேண்டும் என்பது தெரியவில்லை. வழக்கம்போல் அம்மாவிடம் கேட்க அம்மா பெரியம்மாவிடம் கேட்டு அவங்களுக்கும் சரியா ஞாபகமில்லையென சொன்னார். அப்புறம் நெட்ல தேடிப்பாரேன் என்றார்;) பின்னர் வைசாகிலிருந்து அக்கா ஃபோன் பண்ணி வரிசை சொன்னார்.
“எப்படிக்கா?”
“ஹி ஹி. ரெண்டு வருஷத்துக்கு முன்னால மைலாப்பூர்ல செட் வாங்கும்போதே பின்னால நம்பர் போட்டுக் கொடுத்துருக்காண்டி”
“அதானே பார்த்தேன்.”
“அது சரி. நீ என்ன கொலுவெல்லாம் ஆரம்பிச்சிருக்க. நம்பவே முடியல”
“போரடிக்குதுக்கா. ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலி, அக்கம் பக்கமென நிறைய பேர் வந்து போய்கிட்டிருக்காங்க. ரிலாக்ஸ்டா இருக்குக்கா.”

இந்த பிள்ளையார் என்னோட பிறந்தநாள் பரிசாக வந்தது:)
மேலும் சில படங்கள்

36 comments:

சிட்டுக்குருவி said...

கொலு பொம்மைகள் அருமை அக்கா :))

கவிதா | Kavitha said...

//அர்த்தநாரீஸ்வரர்.//

இது பிடிச்சி இருக்கு...இது எல்லா வீடுகளிலும் இருக்காது.. நல்லா இருக்கு.. Nice Collections.. thanks..for recalling my memories..

Gopi Ramamoorthy said...

நல்லா போட்டோ புடிக்கிறீங்க

முரளிகண்ணன் said...

கேசரி போட்டோ சூப்பர். சாப்பிட தூண்டுகிறது.

ராமலக்ஷ்மி said...

அழகான கொலு. ரசித்தேன்.

//“ரெண்டு வருஷத்துக்கு முன்னால மைலாப்பூர்ல செட் வாங்கும்போதே பின்னால நம்பர் போட்டுக் கொடுத்துருக்காண்டி”
“அதானே பார்த்தேன்.”
“அது சரி. நீ என்ன கொலுவெல்லாம் ஆரம்பிச்சிருக்க. நம்பவே முடியல”//

நல்ல அக்கா. நல்ல தங்கை:))!

துளசி கோபால் said...

எல்லா பொம்மைகளுமே ஒன்னுக்கொன்னு வாங்குது!!!!!1

சூப்பர் கொலு. வித்தியாசமான கலெக்ஷன்ஸ்.

நல்ல தரமான படங்கள்ப்பா.

ரசித்தேன் பலமுறை!!!!

KVR said...

டெரக்கோட்டா பிள்ளையார் - சூப்பர்

Rajalakshmi Pakkirisamy said...

Awesome :) Nice COllections too.. Had good time

ambi said...

பைனாப்பிள் கேசரி படத்துக்கு அப்புறம் நான் ஸ்க்ரோல் பண்ணவேயில்லை. :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வித்தியாசமான பொம்மைகள்ப்பா.. பீங்கானில் தசாவதாரம் பாத்ததில்லை..
வரிசைய நீங்களாவது பதிவில் போட்டிருக்கலாமே இனி தேடுபவர்களுக்கு
பயன்படுமே ..:)


என்னிடம் ஒரேஅட்டையில் சின்ன சின்ன அவதாரங்களாக ஒட்டியே இருக்கிறது கவலையே இல்லை.:)

sakthi said...

அழகான கொலு பொம்மைகள்
நல்ல ரசனை

துளசி கோபால் said...

இதுதான் வரிசை.

* மச்சம் - மீன் வடிவம்
* கூர்மம் - ஆமை வடிவம்
* வராகம் - பன்றி வடிவம்
* நரசிம்மர் - மனித உடலும் சிங்கத் தலையும் கொண்ட உருவம்
* வாமனர் - குட்டையான மனித வடிவம்
* பரசுராமர்
* ராமர்
* பலராமர்
* கிருஷ்ணர்
* கல்கி (அவதாரம்)

வித்யா said...

நன்றி சிட்டுக்குருவி.
நன்றி கவிதா.
நன்றி கோபி.
நன்றி முரளிகண்ணன்.
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி துளசி மேடம்.

வித்யா said...

நன்றி கேவிஆர் (கிஃப்ட்).

நன்றி ராஜி.

நன்றி அம்பி (அண்ணனுக்கு ரவா கேசரி பார்சல்ல்ல்ல்ல்ல்ல்).

நன்றி முத்துலெட்சுமி. (அட ஆமால்ல. இதான் ஆர்டர். மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி. மைலாப்பூரில் பீங்கான் செட்டில் தசாவதாரம் கிடைக்கிறது. கொஞ்சம் பெரிய சைஸ். கலர் காம்பினேஷன் இல்லை. லைட் ப்ரவுன் மட்டுமே).

நன்றி சக்தி.

Mrs.Menagasathia said...

பொம்மைகள் எல்லாமே மிக அழகு...அடுத்தமுறை கொலு முடியும் அன்று பாண்டிச்சேரியின் சிவன் கோயிலில் பொம்மைகள் வாங்குங்க..மலிவா இருக்கும்..அங்கு கொலு பார்க்க ரொமப் அழகா இருக்கும்.பொம்மைகலும் நிறைய இருக்கும்..எதை வாங்குவதுன்னு ஒரே குழப்பமா இருக்கும்...

LK said...

soppparrr

அமுதா கிருஷ்ணா said...

என் வீட்டில் இருக்கும் பொம்மைகளுக்கு 50, 60 வயது இருக்கும்.பாட்டி வைத்து,அம்மா வைத்து..இப்பொழுது என்னிடம்..பிள்ளையார் நல்லாயிருக்கு...
ஆணாதிக்கம் ஒழிக...

அமுதா கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
அமுதா கிருஷ்ணா said...

பாண்டிச்சேரியில் பொம்மைகள் மலிவு என்பது எனக்கு புது செய்தி..சிம்பிளாய் அழகாய் இருக்கு கொலு..

Simulation said...

நன்றாக இருந்தது. அப்புறம் எங்க வீட்டு கொலுவையும் பார்க்கவும்.

http://simulationpadaippugal.blogspot.com/2010/10/blog-post.html

http://chennaionline.com/specials/Navratri-2010/Videos/Jayanthi-Sundar---Alwarpet/20100612070641.col


- சிமுலேஷன்

Chitra said...

Very nice. :-)

சந்திர வம்சம் said...

கொலு மிக அருமை. கூப்பிட்டால் நானும் வந்திருப்பேன்

லதா said...

பொம்மை எல்லாம் சூப்பரா இருக்கு. நா அடுத்த வருஷம் கொலு வெக்கலாம்னு இருக்கேன். பாண்டி வந்து பொம்மை வாங்கலாம் போலருக்கே :) Thanks!

தக்குடுபாண்டி said...

//“ஹி ஹி. ரெண்டு வருஷத்துக்கு முன்னால மைலாப்பூர்ல செட் வாங்கும்போதே பின்னால நம்பர் போட்டுக் கொடுத்துருக்காண்டி// suuper comedy vidya akka!!..:)

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அழகு........பொம்மைகளுக்கு நடுவே பைனாப்பிள் கேசரி வேறு.......சூப்பர்......

விஜி said...

ரொம்ப அழகா இருக்கு கொலு.. பாண்டுரங்கனா அந்த ஜோடி பொம்மை?

சே.குமார் said...

கேசரி.......... சூப்பர்

கொலு பொம்மைகள் போட்டோ அருமை அக்கா.

விக்னேஷ்வரி said...

ஹேய் வித்யா, எங்க வீட்டு ஞாபகமா வருது. :(
கேசரி சூப்பர். நீங்க பண்ணினதில்லையே?

மனோ சாமிநாதன் said...

கொலு பொம்மைகள் எல்லாம் அழகு.
உங்கள் கட்டுரை, அடுத்த வருடம் நவராத்திரி சமயத்தில் மயிலை மாட வீதிகளில் உலா வந்து அனைத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைக் கிளப்பி விட்டு விட்டது!!

மங்குனி அமைசர் said...

எச்சூஸ் மி அந்த கேசரி எடுத்துகிட்டேன் , சுண்டல் எங்க ?

மணிகண்டன் said...

கொலு ரொம்ப அழகா ரசனையோட இருக்குங்க. பையன் விளையாட பார்க் பண்ணலையா ? :)-

விக்னேஸ்வரி ரொம்பவே பயப்படறாங்க !

vinu said...

nallaaaakeeethupaaaaaaaaaa

Viji said...

அழகான கொலு. அடுத்து ஸ்வீட் ஸ்பெஷலுக்கா வெயிட்டிங்.

வித்யா said...

நன்றி Mrs.Menagasathia (ஈஸ்வரன் கோவில் கண்காட்சிதான் நானும் சொல்வது).

நன்றி LK.
நன்றி அமுதா கிருஷ்ணா.
நன்றி Simulation.
நன்றி சித்ரா.
நன்றி சந்திர வம்சம்.
நன்றி லதா.
நன்றி தக்குடுபாண்டி.
நன்றி சங்கரி மேடம்.

வித்யா said...

நன்றி விஜி (ஆமாம் பாண்டுரங்கனே தான்).

நன்றி குமார்.

நன்றி விக்னேஷ்வரி (நான் பண்ணினதுதான். யோகி மாதிரி என் ரங்க்ஸ்க்கு சமைக்கத் தெரியாது).

நன்றி மனோ சாமிநாதன்.

நன்றி மங்குனி அமைச்சர் (சுண்டல் அடுத்த வருஷம்).

நன்றி மணிகண்டன் (முதல் தடவைங்கறதால பண்ணல. பொம்மையே ரொம்ப கஷ்டப்பட்டு காப்பாத்திருக்கேன்).

நன்றி vinu.
நன்றி Viji.

ஆதிமூலகிருஷ்ணன் said...

கொலுவின் நோக்கம் அழகு. நிறைய போட்டோஸ். ஆஃபீஸ் என்பதால் பார்க்கமுடியவில்லை. வீட்டுக்கு சென்று பார்க்கிறேன். :-))