கண்டிப்பாக எந்திரன் பார்க்க வேண்டும். ரங்ஸின் ஆபிசில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் டிக்கெட் இஷ்யூ பண்றாங்களாம். அடுத்த வாரம் பார்த்துவிடுவேன் என நினைக்கிறேன். எப்போ பார்த்தாலும் என் பார்வையில், அடிதட்டு/மேல்தட்டு/எவர்சில்வர் தட்டு மக்களின் பார்வையில், பின்/முன்/சைடு நவீனத்துவ பார்வையில், உள்குத்து/வெளிகுத்து/ஊமைகுத்து கண்டுபிடித்து, ஈயம்/இசம் சாயம் பூசி, குப்பை/சப்பை என பஞ்சடித்து, ஆல் அவுட் காப்பி (அதாங்க ஈயடிச்சான் காப்பி) என ஆராய்ச்சி பண்ணி விமர்சனப் பதிவெழுத மாட்டேன் என கூகிளாண்டவர் மேல் சத்தியம் செய்கிறேன்.
************
சமீபத்தில் மாஸ்டர் ஹெல்த் செக்கப்பிற்காக அப்பல்லோ சென்றிருந்தோம். எல்லா டெஸ்ட்டும் முடித்து கார்டியாலிஜிஸ்ட் கன்சல்டேஷன்க்காக சென்றபோது பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. கார்டியாலிஜ்ஸ்ட் ஈசிஜி, CST ஆகிய ரிப்போர்டுகளைப் பார்க்கவில்லை. BP செக் செய்துவிட்டு போகலாம் என்றார். ரிப்போர்ட் பார்க்கவில்லையா என கேட்டதற்கு “Do u hav any complaints?" என்றார். இல்லையென்றதுக்கு அப்படின்னா ரிப்போர்ட் பார்க்கதேவையில்லை என்கிறார். எந்த சிம்ப்டம்ஸும் காட்டாமல் ஆரம்பநிலை பிரச்சனைகள் ஏதாவதிருந்தால்? Hardly 2 mins/patient. ஹூம்ம்ம்.
*************
அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்றிருந்தோம். பளிச்சென்றிருக்கிறது. தகவல் மையத்திலிருந்தவர் கேட்ட கேள்விக்கெல்லாம் பொறுமையாக பதிலளித்தார். ஜனவரி 2011லிருந்து நூலகம் முழுமையாக செயல்பட ஆரம்பிக்கும். 8 தளங்களில் மொத்தம் 12 லட்சம் புத்தகங்கள் இடம்பெறப்போகின்றன. குழந்தைகளுக்கென்றே ஒரு தளம் முழுவதும் புத்தகங்களும் சிடிக்களும் இருக்கின்றன. குழந்தைகளுக்கான உறுப்பினர் விவரங்கள் நவம்பர் மாதம் அறிவிக்கப்படும். பின்னர் மருத்துவ துறை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் தயாராகும். ஒவ்வொரு புத்தகத்தின் விவரத்தையும் கம்ப்யூட்டரில் சேர்த்து தயார்படுத்த அரைமணிநேரம் பிடிக்கிறதாம். வெயிட்டிங் ஃபார் ஜனவரி 2011.
***************
ஜூனியரின் ஹேர்கட்டிற்காக பார்லர் சென்றிருந்தேன். ஐந்து நிமிடம் வெயிட் பண்ண சொன்னார்கள். பக்கத்தில் ஒரு ஆள் செவிட்டு மெஷின் மாட்டிக்கொண்டு அலப்பறை பண்ணிக்கொண்டிருந்தார்.
“Yes babe. No probs. I'll arrange it."
"Wat the f***"
"My goodness."
"Holy s***" என வாயைத் தொறந்தாலே பீட்டர் மழை பொழிஞ்சிட்டிருந்தது. முன்னமெல்லாம் பொண்ணுங்க தான் இப்படி சீன் போடுவாங்க. இப்ப பசங்களும் ஆரம்பிச்சிட்டாங்களான்னு நெனச்சிக்கிட்டிருக்கும்போதே பார்லர் இன்சார்ஜ் வந்து “How can i help u sir?" அப்படின்னார். இதுவும் ரொம்ப பந்தாவா “Well need to hair spa. Think i've dandruff. Can i have ur menu card" அப்படின்னுது. என்னால சிரிப்ப கண்ட்ரோல் பண்ண முடியல. அந்த இன்சார்ஜ் கஷ்டப்பட்டு சிரிப்ப அடக்கிக்கிட்டு “Yes sir. I'll get u the service card" அப்படின்னார். சலூன்ல வந்து மெனு கார்ட் கேட்ட ஒரே ஆளு நீயாதாண்டா இருப்பன்னு நினைச்சுகிட்டு வந்த வேலையப் பார்க்க போனேன்.
*****************
Astra
Calypso
Valentino
Sunshine
Brimstone
மேலிருப்பவை எல்லாம் உலகப் படங்களின் பேரா எனக் கேட்காதீங்க. Fruit Shop on Greams Road ஜூஸ் கடையில் கிடைக்கும் ஜூஸ்களின் பெயர்கள். அட்டகாசமான ப்ளேவர்களில் ஜூஸ் குடிக்க இங்கு போகலாம். கொஞ்சம் காஸ்ட்லி. இருந்தும் டேஸ்ட் இஸ் குட். ஜூஸ் ஆர்டர் கொடுக்கும்போதே பாதி சர்க்கரை சேர்க்கச் சொல்லுவது உத்தமம். ரெகுலர் டோஸ் சுகர் ஓவர் தித்திப்பாக எனக்குத் தெரிகிறது. ஜூஸோடு மில்க் ஷேக்கும் டெஸர்ட்ஸும் கிடைக்கும். Date Milk shake, Tender coconut pudding, caramel custard எல்லாம் கட்டாயம் ட்ரை செய்யவேண்டியவை.
***************
பதிவுலக நண்பர்களுக்கு வரும் திங்கள் முதல் (அக்டோபர் 4) ஒரு வாரத்திற்கு வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பினை ஏற்கவுள்ளேன். இத்தளத்தில் அளித்து வரும் ஆதரவைப் போல் வரும் வாரம் வலைச்சரத்திலும் தொடர்ந்து ஊக்கம் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அடுத்த வாரத்தினை எதிர்கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.
October 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
வித்யா,
வலைச்சர ஆசிரியர் பதவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். (எந்திரன் டிக்கெட் ஒண்ணே ஒண்ணு கிடைக்குமா? ஏகப்பட்ட முயற்சி செய்தும் இன்னும் கிடைக்கவில்லை!)
ஸ்ரீ....
//
பதிவுலக நண்பர்களுக்கு வரும் திங்கள் முதல் (அக்டோபர் 4) ஒரு வாரத்திற்கு வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பினை ஏற்கவுள்ளேன்.//
வாழ்த்துக்கள் ! :)
//விமர்சனப் பதிவெழுத மாட்டேன் என கூகிளாண்டவர் மேல் சத்தியம் செய்கிறேன்.//
யப்பா..இதுக்கு மட்டும் ஸ்பெஷல் தாங்ஸ். .ஏன்னா படம் நல்லாயிருக்காம் தாயீ... :))))
//சலூன்ல வந்து மெனு கார்ட் கேட்ட ஒரே ஆளு நீயாதாண்டா இருப்பன்னு நினைச்சுகிட்டு வந்த வேலையப் பார்க்க போனேன்.//
இதுக்கு பேர் தான் அக்மார்க் பொறாமை :)))))))
***
அப்புறம் நாங்கூட இப்பத்தான் அப்போல்லோ விமன் ல மாஸ்டர் செக்கப் செய்துகிட்டேன்.. ரிசல்ட் ஐ பார்க்கமுன்ன, என்ன பேக்கேஜ் எடுத்து இருக்கேன் னு பார்த்த டாக்டர், 40 வயசு கூட ஆகல ஏன் மாஸ்டர் செக்கப் ஏதாச்ச்ம் பிரச்சனையான்னு கேட்டாரு.. ம்ம்..எனக்கு பிபி எகிறி அப்பவே ஹார்ட் அட்டாக் வந்துடும் போல இருந்துச்சி. ஏன் பிரச்சனை இருந்தாத்தான் மாஸ்டர் செக்கப் செய்யனுமா? ஒரு அவர்நெஸ்சோட செய்துக்குகூடாதா? ஆபிஸ் ல ஓசியில கொடுக்கறாகன்னு செய்துக்க கூடாதா? அப்படின்னு கேக்க நினைச்சி பக்கத்துல இருந்த வூட்டுக்காருக்கு பயந்து "டாக்டர் டாக்டர் 1994 ல் நான் சின்ன புள்ளையா தவழ்ந்துக்கிட்டு இருக்கும் போதே மாஸ்டர் செக்கப் செய்ய ஆரம்பிச்சேன்.. 2 வருஷத்துக்கு ஒரு தரம் செய்வேன்.. உங்களுக்கு அதுல எதாச்சும் பிரச்சனை இருக்குங்களா..? ன்னு கேட்க நினைச்சி அதையும் கேக்கல..
கடைசியா - ரொம்ப கடுப்பா. "ரிசல்ட் பாக்கலாமா டாக்டர்" ன்னு மட்டும் சொன்னேன். !! :(
என்னம்மா நம்மள டென்ஜன் பண்ணறாங்கப்பா. எல்லாரும்.. !!
எந்திரன் பாருங்க. சத்தியத்தை எல்லாம் தூக்கி போட்டுட்டு விமர்சனம் எழுதுங்க மேடம் :)
வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள்
இத்தளத்தில் அளித்து வரும் ஆதரவைப் போல் வரும் வாரம் வலைச்சரத்திலும் தொடர்ந்து ஊக்கம் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அடுத்த வாரத்தினை எதிர்கொள்ள ஆவலாய் இருக்கிறேன்...//
He he he :) :)
வாழ்த்துகள் ஆசிரியருக்கு ...
Rajini Villan vanntha படம் hit than 100%,
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். நானும் ஆவலாக இருக்கிறேன், ஆசிரியரின் படைப்புக்கள் தேனைப் பருக.........ம்ம்...எந்திரன் எல்லோரையும் பாடாய்ப் படுத்துகிறதோ? அப்போலோ போன்ற பெரிய மருத்துவ மனைகள் கூட இப்படி பொறுப்பற்ற் இருந்தால் என்ன சொல்வது.......எல்லாம் காலக் கொடுமை....
\\மொத்தம் 12 லட்சம் புத்தகங்கள் இடம்பெறப்போகின்றன.\\
அம்மாடியோவ்.
\\வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பினை ஏற்கவுள்ளேன்.\\
எனக்குப் புரியலயே. எதாவது மின்னிதழா?
கூகிளில் எல்லாம் போய்ப் பார்க்க முடியாது. நீங்கதான் இப்போ டீச்சர் ஆச்சே. புரியிற மாதிரி நல்லா சொல்லிக் குடுங்க. பெஞ்ச் மேல எல்லாம் ஏற சொல்லாதீங்க:)))))
wow..congrats வலைச்சர ஆசிரியர் பதவிக்கு
ஜுஸ்....'கொட்டிக்கலாம் வாங்க'வோட சிஸ்டர் வெர்ஷன்?
வலைச்சர ஆசிரியராவதற்கு வாழ்த்துகள்
வலைச்சர ஆசிரியர் பதவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அடுத்த வாரம் நீங்கள்தான் ஸ்க்ரிப்ளப் போறீங்களா?
கட்டாயாம் படிப்பேன்.
பத்மா
வலைச்சர ஆசிரியர் பதவிக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி
//எந்த சிம்ப்டம்ஸும் காட்டாமல் ஆரம்பநிலை பிரச்சனைகள் ஏதாவதிருந்தால்?//
ம்.. இந்தப் பெரிய பெரிய மருத்துவமனைகள் பெரிசுபெரிசா மாஸ்டர் செக்-அப்னு விளம்பரம் செய்றாங்களே தவிர, அதைச் சரியா நடைமுறைப்படுத்துறதில்ல!!
அப்புறம் பாத்தீங்கன்னா, இந்த மாஸ்டர் செக்-அப் ரிஸல்டுகளை ரிவ்யூ செய்றது ஜூனியர் டாக்டர்ஸாத்தான் பெரும்பாலும் இருப்பாங்க (no offence pls.)
வலைச்சர பொறுப்பிற்கு வாழ்த்துகள்!
//எந்த சிம்ப்டம்ஸும் காட்டாமல் ஆரம்பநிலை பிரச்சனைகள் ஏதாவதிருந்தால்? Hardly 2 mins/patient. ஹூம்ம்ம்.//
ஏம்மா, நான் தெரியாமத்தான் கேக்கறேன், சீக்கு வருவதற்கு முன்பே சரி பண்ணீட்டா, ஆஸ்பத்திரி எப்படி நடத்துறது? எத்தனை பணம் போட்டு ஆஸ்பத்திரி கட்டீருக்கோம். அது எதுக்கு, ஈ ஓட்டறதுக்கா?
antha juice shop good aanaa costlythan
வலைச்சரமா? வாழ்த்துக்கள் அங்கன வந்து கவனிச்சுக்கறேன்..
எந்திரன் 2வது நாளே பார்த்தாச்சே :)))தியேட்டரில் திருவிழாதான்
ஹாஹா அந்த சலூன் பார்ட்டி சுப்பர்..கண்டிப்பா இந்திரன் பாருங்க நல்ல இருக்கு..
//
பதிவுலக நண்பர்களுக்கு வரும் திங்கள் முதல் (அக்டோபர் 4) ஒரு வாரத்திற்கு வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பினை ஏற்கவுள்ளேன்.//
வலைச்சர ஆசிரியர் பதவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ! :)
Post a Comment