சிட்டி செண்டர் - ஐநாக்ஸ் தியேட்டரில் “டெக்சாஸ் ஃபியெஸ்டா’ என்ற எக்ஸ்பிரஸ் கவுண்டர் பார்த்ததிலிருந்து இந்த ரெஸ்டாரெண்டுக்குப் போக வேண்டுமென்ற ஆசை இருந்துக்கொண்டே இருந்தது. பலவித தடைகளைக் கடந்து ஒரு சனிக்கிழமை மதியம் சென்றோம். ரொம்ப சிரமப்படவில்லை இடத்தைக் கண்டுபிடிக்க. கஃபே காஃபி டேயின் மாடியில் அமைந்திருக்கும் ரெஸ்டாரெண்டின் வாசலில் “Welcom cowboys and yankees" என்ற வாசகம் உள்ளே என்ன எதிர்பார்க்கவேண்டுமென சொல்கிறது. ஹேங்கரில் தொங்கும் கௌபாய் உடைகள், தொப்பி, வால்பேப்பர்கள், உட்டன் ப்ளோரிங், ரெஸ்டாரெண்ட் சிம்பலான ரேஜிங் புல் என மெக்சிகன் ஆம்பியன்ஸ் சிம்ப்ளி சூப்பர்.
Veg Mixed Bean Tortilla Soup, Potato Wedges, Nachos with chilli beans, Garlic Bread இவையனைத்தும் ஸ்டார்டருக்கு ஆர்டர் செய்தது. Potato wedges உடன் சர்வ் செய்யப்பட்ட டிப் அட்டகாசம். Nachos உடன் ரேஜிங் பஃபெல்லோ என்ற டிப் ஆர்டர் செய்தோம். எல்லாமே நன்றாக இருந்தது. அளவும் அதிகம். பனியில்லாத மார்கழியா போல மார்கரிட்டா இல்லாத மெக்சிகனா என நான் Naranja என்ற ஆரஞ்சு ஃப்ளேவர்ட் மார்கரிட்டாவும், அவர் லெமன் ஃப்ளேவர்டும் சாப்பிட்டோம். Slurrppp;)
கலர் கலராய் மார்கரிட்டா பார்க்கும்போதே மனதைக் கொள்ளை கொள்கிறது. மெயின் கோர்ஸிற்கு நாங்கள் ஆர்டர் செய்தது Vegetable enchilada மற்றும் vegetable chimichangas. இதுல் என்சிலாடா ஆவரேஜாகவும், சிமிசாங்காஸ் சூப்பராகவும் இருந்தது. சிமிசாங்காஸோட பரிமாறப்பட்ட மெக்சிகன் ரைஸ் நல்ல காரமாகவும் புளிப்பாகவும் இருந்தது.
இதுவே ரொம்ப ஃபில்லிங் ஆகிவிட்டதால் டெசர்ட் எதுவும் சாப்பிடவில்லை. Fruit Quesadilla ட்ரை பண்ண சொல்லி ரெகமெண்ட் செய்தார்கள். கண்டிப்பாக அடுத்த முறை என சொல்லிவிட்டு வந்தோம்:)
மேலதிக தகவல்கள்
உணவகம் - Texas Fiesta
உணவு - Mexican
இடம் - Shafee Mohamed Road, Nungambakkam. அப்போல்லோ ஹாஸ்பிட்டல் செல்லும் வழியில் அபூர்வா சங்கீதா ரெஸ்டாரெண்ட் அருகில் இருக்கிறது.
டப்பு - 800 + taxes இருவருக்கு (காஸ்ட்லி தான். ஆனால் உணவிற்கு கொடுக்கலாம் போலிருக்கிறது. டான் பெப்பேவைக் கம்பேர் செய்யும்போது இந்த இடம் நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது).
பரிந்துரை : மெக்சிகன் உணவிற்குப் பழக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக போகலாம். புது முயற்சியெனில் பிடிக்காமலும் போகலாம்.
October 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
இதே வேலையா இருங்க.. :))
(உள்ளுக்குள்ள ஓவர் புகை- தண்ணிய குடிச்சிட்டு வரேன் இருங்க..)
என்னென்னமோ புதுப்புதுப் பேரா இருக்கே?
ட்ரை பண்ணிடுவோம் சென்னை புத்தகத் திருவிழாவிற்கு வரும்போது.
அப்புறம் இந்த வருஷம் படிச்ச புக்கு லிஸ்டில் மூணு புக்கு புதுசா ஏறி இருக்கு. நிறைய படிக்கிறீங்க. அப்படியே படிச்சதுக்கு ஒரு விமர்சனம் போட்டீங்கன்னா நாங்களும் தெரிஞ்சுப்போம்ல
நல்லா விசாரிச்சீங்களா? எனக்கென்னமோ பொறிச்ச அப்பளமும் புளியாஞ்சோறும், சமோசாவும், வெங்காயப் பச்சடியும் கொடுத்து ஏமாத்திட்டா மாதிரி தெரியிது (படத்தச்சொன்னேன்) :)
Patharththam pidikkutho illaiyo ungal pakirvil PHOTO's Avalaith thundukirathu...
Grrrrrrrrrrrrrrrr
@ ஷங்கர்..
Superb Comments :) :) :) Super Super...
@ Vidhya, He he he
ம்ம்ம் நல்லாருக்கு.. நல்லாருங்க :)))
நானும் இங்கே போயிருக்கேன். ஒரு வாய் தான் காயத்ரி சாப்பிட்டாள். அதற்கு முடியவில்லை. அவ்வளவு காரம். அவளுடையதும் நானே ருசித்துச் சாப்பிட்டேன். ஆனால், சைவப் பிரியர்களுக்கு அவ்வளவு ஆப்ஷன்ஸ் இல்லை.
பார்க்கவே டேஸ்டா இருக்கு! :-)
Isn't Margarita an Alcoholic Drink? Maybe they are serving it as a virgin one. mmm... interesting.....
Texas area - நம்ம பேட்டை....
ha,ha,ha,ha,ha....
அடுத்த முறை சென்னை வரும் போது, ட்ரை பண்ணி பார்க்கணும்.
புதுஇடத்துக்கு போனால் அங்கு உள்ள புதுமைகள் பற்றி சொல்லாமல் சதா தீனி தானா! ம்.ம்.ம்.
பால் பேணி கிடைக்குமா அங்குன?
நன்றி கவிதா.
நன்றி கோபி (விமர்சனம் போடற அளவிற்கு நாலெட்ஜ் லேது).
நன்றி ஷங்கர் (பொறாமை).
நன்றி குமார்.
நன்றி ராஜி.
நன்றி விஜி.
நன்றி விஜய் (டான் பெப்பேக்கு இங்கு பரவாயில்லை).
நன்றி எஸ்.கே/
நன்றி சித்ரா (Non-alcoholic தான்).
நன்றி chandrasekar.
நன்றி மரா (கண்டிப்பாக அனுமதி இல்லை).
ரொம்ப தைரியமான பெண் தான் நீங்க..புதுசு புதுசா சாப்பாடு ட்ரை செய்றீங்க வித்யா....
அடடா கலக்குறீங்க போங்க மேடம்.......
Post a Comment