ஏதோ எழுதுனம்னு வந்து உட்கார்ந்துட்டேன். ஆனா கமல் சொல்ற மாதிரி வார்த்தையே வரலை. என்னத்த சொல்ல. கடந்த ஒன்றரை வருஷமா அவன பிரிஞ்சு ஒரு நாள் கூட இருந்ததே இல்லை. வீட்டுக்கு வந்து எங்க பார்த்தாலும் அவன்தான் தெரியுறான். நீ இல்லாம வீடே வெறிச்சுன்னு இருக்குடா செல்லம். இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருந்தேன்னா அழுதுடுவேன்னு நினைக்கிறேன். கலைக்க நீயில்லாமல் மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகள், உன் உச்சாவின் ஈரம் படாமல் காய்ந்த தரைகள், நீ இல்லாத தைரியத்தில் தரையில் கிடக்கும் கேபிள் வயர்கள், உன்னால் கிழிக்கப்படாத நாளிதழ்கள், மேலேறி குதிக்க நீ இல்லாததால் தூசி படர்ந்திருக்கும் சோபா திண்டுக்கள் என வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளும் உன்னைத்தான் தேடுகின்றன.
எல்லாம் எங்கம்மாவால் வந்த வினை. குழந்தை நான் இல்லாமல் இருந்து பழகனுமாம். ரெண்டு நாள் என்கிட்டயே இருக்கட்டும்னு என்னை மட்டும் தாம்பரத்திற்கு துரத்திட்டாங்க. குழந்தை ஞாயிறு காலைதான் வருவான். அய்யோ ஒரு மணி நேரமே ஒரு யுகம் மாதிரி போச்சே. இன்னும் ஒரு முழுநாளை எப்படி ஓட்டப்போரேனோ?
நீ இல்லாம கஷ்டமா இருக்குடா:(
November 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
how sweet u r
என்ன சொல்றதுன்னு தெரியல செல்வம்:)
:(
என்ன சொல்வதன்று தெரியவில்லை ..
வாரணம் ஆயிரம் உங்களுக்கு பிடித்து இருந்ததா? இன்னும் சில மணி நேரங்கள் தானே உங்கள் செல்லம் திரும்ப வந்து விடுவாரே
வாரணம் ஆயிரம் ஒகேவா இருந்தது அருண். குட்டிப்பையன் நாளை காலை தான் வரான்:(
:)
Post a Comment