November 20, 2008

ம்மா

இரவு எட்டு மணி இருக்கும். ஜுனியரோடு விளையாடிக்கொண்டிருந்தேன். வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டதும், பாஸ் குடுகுடுவென வாசக்கதவருகே ஓடிப்போய் ப்பா என்றார். ரகுவைப் பார்த்ததும் கைகள் ரெண்டையும் விரித்து தூக்கிக்கோ என்பதுபோல் சைகை செய்தார். அப்பாவைப் பார்த்ததும் அப்படி ஒரு குஷி. "அடப்பாவி நாள் முழுக்கப் பார்த்துக்கறது நான். அப்பாவைப் பார்த்தவுடனே என்னை விட்டுட்டா ஓட்ற" என்று முதுகில் (செல்லமாக) ஒன்று வைத்தேன். அந்தத் தருணம் சட்டென்று அம்மா நினைவுக்கு வந்தாள்.


பொதுவாகவே பெண் குழந்தைகள் அப்பாவிடமும், ஆண் குழந்தைகள் அம்மாவிடமும் அட்டாச்டாக இருக்கும் என்று சொல்வார்கள். நானும் இந்த விதிக்கு விதிவிலக்கல்ல. அம்மாவை வைத்துக்கொண்டே நான் அப்பா செல்லம் என்று சொல்லிருக்கேன். கூடவே அம்மா தப்பா எடுத்துக்கமாட்டாங்க என்ற பிட்டையும் போட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தான் உரைத்தது நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்று. பிறந்து ஒன்றரை வருடமே ஆன என் பையன் அப்பாவைப் பார்த்து ஓடும்போதே எனக்கு என்னமோ மாதிரி இருக்கே. 24 வருஷமா நான் அப்பாவைப் பிடிக்கும் என்று சொல்லும்போது (அந்தத்தருணத்திலாவது) அம்மா எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பாள். ஸாரிம்மா. இனிமே (நீ இருக்கும்போது) அப்பாவைத்தான் பிடிக்கும்னு சொல்லவேமாட்டேன். உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல்ல ஜூனியருக்கும் இதை சொல்லிக்கொடுக்கணும்.


டிஸ்கி : எழுதி முடிச்சதுக்கப்புறமா தான் கவனிச்சேன். இது என்னோட 25வது பதிவு. நானும் என் பதிவும் வெள்ளி விழா கொண்டாடுறோம். ஆகையால் அன்பு பெரியோர்களே அருமைத் தாய்மார்களே, இதுவரைக்கும் என் மொக்கைகளையெல்லாம் பொறுத்துக்கொண்டு எனக்கு ஆதரவளித்த உங்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். உங்கள் ஆதரவுக்கு என் அன்பு பரிசாக 2011ல் சரத்குமார் அமைச்சரவையில் எல்லாருக்கும் மந்திரி சீட் உண்டுங்கோ:)

34 comments:

தாரணி பிரியா said...

வாழ்த்துக்கள் வித்யா

தாரணி பிரியா said...

எப்பவுமே பொண்ணுங்க அப்பா பக்கம் இருந்தாலும் அடிமனசுல அம்மா மேலத்தான் பாசம் அதிகமா இருக்கும். அதுவும் கல்யாணமாகி போன பிறகு அவங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவோம். இந்த லாஜிக் அம்மாக்களுக்கும் தெரியுமின்றதால அவங்க எல்லாம் ஃபீல் பண்ண மாட்டாங்க.

Vidhya Chandrasekaran said...

வாங்க தாரணி பிரியா. முதல் வருகைக்கு நன்றி. ஆமாம் கல்யாணத்துக்கு அப்புறம் அம்மான்னா சும்மா இல்லைடான்னு பாட ஆரம்பிச்சேன்:))

பிரியமுடன்... said...

வணக்கம்! இது என்ன சின்னப்புள்ள தனமா பீல் பண்ணுகிறீர்கள்! குழந்தையும் தெய்வமும் ஒன்று! என்னதான் பூசாரி கூடவே இருந்தாலும், எப்பொழுதாவது வரும் பக்தர்களுக்குத்தான் அவருடைய அருள் கிடைக்கிறது! பூசாரிக்கு கிடைப்பது என்னவோ தேங்காய் மூடி மட்டும்தான்!! கவலைப்படாதீர்கள் உங்கள் குழந்தை வளர்ந்த பிறகு இருவரையும் இரு கண்களாக பார்த்துக்கொள்ளும்! காலையிலிருந்து அந்த ஒரே முகத்தை பார்த்து பார்த்து போர் அடித்திருக்கும், அதுதான் அப்பாவை பார்ததும் குழந்தை ஓடியிருக்கும், சில அப்பாக்களுக்கே அப்படியிருக்கும்போது, குழந்தைகளுக்கு இது சகஜந்தான்.....ஹ..ஹாஅ....ஹா.

Vidhya Chandrasekaran said...

வாங்க பிரியமுடன் பிரேம்குமார். முதல் வருகைக்கு நன்றி.

\\என்னதான் பூசாரி கூடவே இருந்தாலும், எப்பொழுதாவது வரும் பக்தர்களுக்குத்தான் அவருடைய அருள் கிடைக்கிறது! பூசாரிக்கு கிடைப்பது என்னவோ தேங்காய் மூடி மட்டும்தான்!! \\

எப்படி இப்படி ஒரு உவமை.. முடியலைங்க:)

Arun Kumar said...

வாழ்க வெள்ளி விழா கொண்டாடியதற்க்காக :) !!

நீஙக நிஜமாகவே ரொம்ப அருமையாக எழுதுறீங்க..

அப்புறம் இந்த பதிவிற்க்கு

எப்போதும் ஆண் குழந்தைகள் அம்மாவிடம் பெண் குழந்தைகள் அப்பாவிடம் செல்லமாக இருக்கும்.

இதற்க்கு மரபணு ரீதியாக நிறைய காரணம் இருக்கு. நீங்க ராமராஜன் படத்துல வர அம்மாக்கள் போலவே ரொம்ப பீல் பண்றீங்க..:)))

மம்மி செல்லமா டாடி செல்லமான்னு சிபிராஜ் ஏற்கனவே அப்பா காசில் பிலிம் வாங்கி பாடி இருக்காரு. அந்த பாட்டை கேட்டு feel பண்ணுங்க :))

Vidhya Chandrasekaran said...

வாங்க அருண். வாழ்த்துக்களுக்கு நன்றி.

\\நீஙக நிஜமாகவே ரொம்ப அருமையாக எழுதுறீங்க.. \\

இதுதானே வேண்டாங்கறது.

\\நீங்க ராமராஜன் படத்துல வர அம்மாக்கள் போலவே ரொம்ப பீல் பண்றீங்க..:)))\\

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுக்கு நீங்க வருத்தம் தெரிவிச்சே ஆகனும்:(

\\மம்மி செல்லமா டாடி செல்லமான்னு சிபிராஜ் ஏற்கனவே அப்பா காசில் பிலிம் வாங்கி பாடி இருக்காரு. அந்த பாட்டை கேட்டு feel பண்ணுங்க :))\\
சொந்த செலவுல சூனியம் வெச்சுக்க சொல்றீங்களே அண்ணாத்தே:))

அமிர்தவர்ஷினி அம்மா said...

ம். நல்லா சொன்னீங்க. இந்த லாஜிக் எனக்கு ரொம்ப சூட் ஆகும். ஆமாம் என் பொண்னும் இப்படிதான்.

அப்புறம் அந்த மாமேதை யாருங்க,

நீங்களா, உங்க பையனா.

ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க.

சொல்லாட்டாலும் பரவால்ல

எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கார்க்கிபவா said...

நீங்க டிராவிட் ஃபேன்னாங்க? ரெண்டு வருஷமா ஆடி இப்பத்தான் 25 அடிக்கறீங்க..

எனிவே, வாழ்த்துகள்.. எனக்கு மின்துறை தவிர வேற எந்த துறைன்னாலும் ஓக்கே..

Vidhya Chandrasekaran said...

வாங்க அமித்து அம்மா. ஹி ஹி அந்த மாமேதை நாந்தான்:))

Vidhya Chandrasekaran said...

வாங்க கார்த்தி. முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

\\ கார்க்கி said...
நீங்க டிராவிட் ஃபேன்னாங்க? ரெண்டு வருஷமா ஆடி இப்பத்தான் 25 அடிக்கறீங்க..\\

அவ்வ்வ்வ். எழுத ஆரம்பிச்சது பிரசவத்துக்கு முன். இப்போ ஜீனியர் கொஞ்சம் வளர்ந்துட்டதால திரும்பவும் மொக்கைய கண்டினியூ பண்ரேன்.

\\எனிவே, வாழ்த்துகள்.. எனக்கு மின்துறை தவிர வேற எந்த துறைன்னாலும் ஓக்கே..\\

ரைட்டு:)

தமிழ் அமுதன் said...

இன்று பிறந்த நாள் காணும் மாமேதைக்கு
என் வாழ்த்துக்கள்!


நேத்து ஒரு ஞானிக்கு பிறந்த நாள்!

Sanjai Gandhi said...

இப்போ நான் என்ன செய்ய....?

இப்போ நான் என்ன செய்யா....?

இந்த பதிவை படிச்சிட்டு அழனுமா? அதெல்லாம் முடியாது.. நீங்க அப்பா கையவே பிடிச்சிட்டு சுத்தினதுக்கு அம்மா சந்தோஷப் பட்டிருப்பாங்க.. அபபாடா இவள மேய்க்கிற வேலை மிச்சம்னு.. :))

கோட்டர் அடிச்சதுக்கு வாழ்த்து சொல்வதோடு கோட்டர் கோய்ந்தம்மா என்ற பட்டத்தையும் அளிக்கிறேன்..

சஞ்சயோட அம்மா ஃபீலிங்க்ஸ் ஆஃப் இந்தியாவா இருக்கப் படாது.. :)

Sanjai Gandhi said...

// உங்கள் ஆதரவுக்கு என் அன்பு பரிசாக 2011ல் சரத்குமார் அமைச்சரவையில் எல்லாருக்கும் மந்திரி சீட் உண்டுங்கோ:)//

இந்த சீன் எந்த படத்துல வருது.. :)

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ஜீவன்:)

உங்களுக்கு belated wishes:)

Vidhya Chandrasekaran said...

\\பொடியன்-|-SanJai said...
இப்போ நான் என்ன செய்ய....?

இப்போ நான் என்ன செய்யா....?\\

அந்த போட்டோவா மாத்து அண்த்தே. ஊட்டாண்ட வர சொல்ல ரெம்ப பயமா கீது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒரு குழந்தைக்கு அம்மா ஆனாத்த்தான் அம்மாவைப்பற்றி புரியும்ன்னு சொல்வாங்க சரிதான்.. :)

Sanjai Gandhi said...

ஓ.. இன்னிக்கு மம்மிக்கு பொறந்த நாளா..?
இனிய பொறந்த நாளு வாழ்த்துக்கள் மம்மி..

பாசமுடன்
உங்கள் மகன் சஞ்சய் :)

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள் வித்யா! தாரணி சொல்லியிருக்கறது மிகவும் உண்மை! ஒருகாலத்தில(டீன்ஏஜ்-ல) எனக்கு எதிரியா இருந்தவங்க இப்போ உற்றதோழியா தெரியறாங்க!

:-) உங்கள் ஜூனியருக்கு வாழ்த்துக்கள்!

Vidhya Chandrasekaran said...

\\முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஒரு குழந்தைக்கு அம்மா ஆனாத்த்தான் அம்மாவைப்பற்றி புரியும்ன்னு சொல்வாங்க சரிதான்.. :)\\

நூற்றுக்கு நூறு உண்மை தான் சிஸ்டர்.

Vidhya Chandrasekaran said...

வாழ்த்தினதுக்கு ரெம்ப டேங்ஸ் அண்தே:)

Vidhya Chandrasekaran said...

வாங்க பப்பு அம்மா. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

\\ சந்தனமுல்லை said...
வாழ்த்துக்கள் வித்யா! தாரணி சொல்லியிருக்கறது மிகவும் உண்மை! ஒருகாலத்தில(டீன்ஏஜ்-ல) எனக்கு எதிரியா இருந்தவங்க இப்போ உற்றதோழியா தெரியறாங்க!\\

:))))

rapp said...

super:):):)நல்ல விஷயம், நீங்க மன்னிப்பு கேக்குறது, சரி உங்க அம்மா உங்க பிளாக் படிக்கிறாங்களா இல்லையா?:):):)

rapp said...

\\நீங்க ராமராஜன் படத்துல வர அம்மாக்கள் போலவே ரொம்ப பீல் பண்றீங்க..:)))\\

super:):):)ஹே டண்டனக்கா, ஏ டணக்குனக்கா:):):)

rapp said...

//எப்பவுமே பொண்ணுங்க அப்பா பக்கம் இருந்தாலும் அடிமனசுல அம்மா மேலத்தான் பாசம் அதிகமா இருக்கும். அதுவும் கல்யாணமாகி போன பிறகு அவங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவோம். இந்த லாஜிக் அம்மாக்களுக்கும் தெரியுமின்றதால அவங்க எல்லாம் ஃபீல் பண்ண மாட்டாங்க.//

வழிமொழிகிறேன்:):):)

rapp said...

me the 25TH?

Vidhya Chandrasekaran said...

\\rapp said...
super:):):)நல்ல விஷயம், நீங்க மன்னிப்பு கேக்குறது, சரி உங்க அம்மா உங்க பிளாக் படிக்கிறாங்களா இல்லையா?:):):)\\

ஹி ஹி படிச்சா செருப்பால அடிப்பாங்க. என் தலையை ஏண்டி உருட்ரேன்னு:)

Vidhya Chandrasekaran said...

மீ த 25 போட்ட தானைத் தலைவி ராப் வாழ்க. அடிக்கடி வந்துப் போங்க யக்கோவ்:)))

கபீஷ் said...

Hi Vidya,
I repeat priyamudan premkumar and
arunkumar's
நீங்க ராமராஜன் படத்துல வர அம்மாக்கள் போலவே ரொம்ப பீல் பண்றீங்க..:)))

(PS: Sorry for unable to type in tamil, pls excuse this time)

கபீஷ் said...

Happy birthday to you Vidya!!!

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கபீஷ்:))

புதுகை.அப்துல்லா said...

வாழ்த்துகள். சீக்கிரம் 250 அடிங்க :)

Vidhya Chandrasekaran said...

அப்துல்லா அண்ணா என்னை வச்சு நீங்க காமெடி கீமெடி பண்ணலயே. மாசத்துக்கு நாலஞ்சு தேத்தறத்துக்கே தாவு தீருது. இதுல 250ஆ.

பாலராஜன்கீதா said...

//பொதுவாகவே பெண் குழந்தைகள் அப்பாவிடமும், ஆண் குழந்தைகள் அம்மாவிடமும் அட்டாச்டாக இருக்கும் என்று சொல்வார்கள்.//

எங்கள் மகள்களிடம் அப்பா பிடிக்குமா அம்மா பிடிக்குமா என்று எப்போது கேட்டாலும் அவர்களின் பதில்
"கிகிகி"