November 17, 2008
உஷார் மேன் ஹை
மளிகைப் பொருட்கள் வாங்க சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தேன். பாதி நாள் ஊரிலிருக்கப்போவதில்லை என்பதால் கொஞ்சம் குறைவாகவே வாங்கினேன். ஆனாலும் பில் கூட வந்திருப்பதாக சின்ன உறுத்தல். செக் பண்ணிப்பார்க்கையில் கிட்டத்தட்ட 150 ரூபாய்க்கு நான் வாங்காத பொருட்களையும் சேர்த்திருந்தார்கள். நான் சுட்டிக்காட்டியபோது அசடு வழிந்துக்கொண்டே ஸாரி என்றார்கள். இதில் காரில் உபயோகப்படுத்தப்படும் டிஷ்யூவும் அடக்கம். இதில் கொடுமை என்னன்னா என்கிட்டே காரே இல்லை. அப்புறம் கேஷ் திருப்பித்தரயிலாது. அந்தக் காசுக்கு ஈடா வேறெதாவது வாங்கிக்கோங்களேன் என்றார்கள். எனக்குத் தேவையானவை எல்லாவற்றையும் வாங்கிட்டேன். எனக்கு காச குடுங்க போதும் என்றேன். பெரிய வாக்குவாதத்திற்க்குப் பின் 150 ரூபாய் திருப்பித்தரப்பட்டது. எப்படியெல்லாம் பிளான் பண்றாங்கய்யா. ஆதலால் மக்களே என்னதான் தல போற காரியமாயிருந்தாலும் பில்லை செக் பண்ணுங்கோ.
Labels:
என்ன கொடுமை சார் இது
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நல்ல உஷார் பதிவு.
ஜுனியரின் பெயரேன்ன.
சார் இப்ப பண்ணிக்கிட்டு இருக்காரு.
நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா.
ஜீனியர் பெயர் சஞ்சய். ஒன்றரை வயசுக்கு என்னென்ன குறும்புகளெல்லாம் பண்ண முடியுமோ அதை விட பத்து மடங்கு அதிகமாக செய்துக்கொண்டிருக்கிறார்:)
எந்த இடத்துல இப்படி ஏமாத்தாற்ங்க.. சொன்னா எங்களுக்கும் உபயோகமாக இருக்குமே !
வாங்க அருண். Spencers daily-ன் தாம்பரம் கிளை.
என்ன வித்யா மேடம் வலைபதிவுக்கு விடுமுறையா??
//அமிர்தவர்ஷினி அம்மா said...
நல்ல உஷார் பதிவு.
//
ரிப்பீட்டிக்கறேன்.
என்ன மாதிரி வாழப்பழ சோம்பேறிங்களுக்குத் தேவையான பதிவு.
வாங்க அருண். ஜூனியர்க்கு உடம்பு சரியில்ல. அதான் பதிவு எழுதல. இல்லைன்னா மட்டும் அப்படியே எழுதிக் கிழிச்சிடுவேன்னு நீங்க சொல்றது கேக்குது:)
நன்றி கபீஷ்.
கபீஷுக்கே வாழைப்பழமா:))
நானும் என் அம்மாவும் அதே போல் ஒரு பேமஸ் ஆன கடைக்கு போனபோது,சோப் -14(item) என்று போட்டு,கிட்டத்தட்ட 300 ரூபாய் லவட்ட பார்த்தார்கள்...
நல்ல வேலை பில்லை சரி பார்த்ததால் கண்டு பிடித்தோம்....
நல்ல வேளை தப்பீச்சிங்க கார்த்தி:)
Post a Comment