எழுத வேணாம்னு தான் நினைச்சேன். ஆனா தினகரன்ல அடிப்பட்ட அந்த குழந்தையின் போட்டோவ பார்க்கும்போது ஆத்திரமா வருது. யார் மேலயா. எல்லாம் என் மேல தான்பா. என் இயலாமையை நினைத்து.
மாலேகான் தீவிரவாத பிரச்சனையின் மூலம் நாட்டை துண்டாட பார்க்கிறது பா.ஜ.க என்று சோனியாவும், தீவிரவாதத்தை ஒடுக்க தவறிவிட்டது மன்மோகன் சிங் அரசு என்று பா.ஜ.கவும் ஒருத்தரை ஒருத்தர் வாழ்த்திக்கிறாங்க. நல்லாருங்கப்பு.
93ல நடந்த சம்பவத்துக்கே விசாரணை இன்னும் நடக்குது. இப்ப நடந்ததுக்கு நீங்க காரணகர்த்தாக்களை கண்டுபிடிச்சு, விசாரிச்சு...........நல்லாருங்கப்பு.
கண்டிக்கிறேன். வன்மையாகக் கண்டிக்கிறேன். மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். மிக மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்னு ஒவ்வொரு சம்பவத்தின் போதும் தன் கடமையை சரியாக செய்துகொண்டிருக்கும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஸார் நீங்க மட்டும் ரொம்ப ரொம்ப நல்லாருங்கப்பு.
செத்தவன் மனுசன் இல்ல, சாவடிக்கிறவந்தான் மனுசன்னு தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் பண்ற மனித (??????) உரிமை கமிசன் மெம்பர்களே நீங்களும் நல்லாருங்கப்பு.
எவன் செத்தா எனக்கென்ன? முதல்ல கட்சி அமைச்சர்கள காப்பாத்தனும்னு நினைக்கிற அரசியல்வாதிகளே நீங்களும் நல்லாருங்கப்பு. உங்க போதைக்கு அப்பாவி ஜனங்க சைடு டிஷ்ஷாயிட்டுரூக்காங்க.
சம்பவத்தைப் பார்த்து என்ன செய்யறதுன்னு புரியாம பதிவு எழுதி புலம்பிட்ருக்கற நான் ரொம்பவே நல்லாருப்பேன்:(
November 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
:(((((((((
காலையில 6.30 மணிக்குதான் இந்த நியூஸ் தெரிஞ்சது வித்யா. கொஞ்சம் பயமா நிறைய கோபமா இருக்கு .என்ன செய்ய போறாங்கன்னு ஒண்ணும் புரியலை. எல்லாத்துக்கும் நிவாரண நிதி குடுத்துட்டு இவங்க போயிடுவாங்க. உறவுகளை இழந்தவங்களுக்குதானே அந்த வலி தெரியும்.
இந்த தீவிரவாதிக அப்பாவி மனுசங்க மேல காட்டற கொலைவெறியை கடமையிலிருந்து தவறி போற அரசியல்வாதிகள் மேல காட்டலாம் :(
"இந்த தீவிரவாதிக அப்பாவி மனுசங்க மேல காட்டற கொலைவெறியை கடமையிலிருந்து தவறி போற அரசியல்வாதிகள் மேல காட்டலாம் :("
அப்பாவி பொதுஜனம் எப்போதும் சொல்றது தான்! ஆனா அவங்களுக்கு பூனை படை, யானை படை-நு பலத்த பாதுகாப்பு இருக்கும். நம்மள மாதிரி ஆளுங்களுக்கு எதுவும் கிடையாது, அதுனால அடிபட்டு சாக வேண்டியது தான்!
இராணுவம், உளவுத்துறை, காவல்துறை இதுக்கெல்லாம் பல கோடிகள் இந்தியா அரசாங்கம் செலவு பண்ணுது, ஆனாலும் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்தவே முடியல!
பன்னாட்டு கம்பெனிகள் இந்தியா தான் சரியான இடம், அவுங்க வியாபாரத்தை பெருக்கிரதுக்குனு தெரிஞ்சுகிட்ட மாதிரி, தீவிரவாதிகளின் தலைவர்களும் தெரிஞ்சு வைச்சிருக்காங்க, இந்த நாடு தான் ரொம்ப சுலபமா யாரும் போய் குண்டு வைச்சு பொது ஜனங்களை நூத்துகனக்கில மாசாமாசம் கொள்ளலாம்னு!
வந்தே ஏமாத்துறோம்!
நல்லாயிருங்க...!
தீவிரவாதிகளில் இந்து தீவிரவாதி இஸ்லாமிய தீவிரவாதி ஏன் தமிழ் தீவிரவாதி என்று பிரிவே இல்லை.
துப்பாக்கி எடுத்து அடுத்தவர் உயிரை எடுக்க இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது?
மனசுக்கு ரொம்ப கஷடமாக இருக்கு,மும்பையில் கொலபா இடம் இந்தியா கேட் (தாஜ் விடுதியின் எதிரிபுறம்) எனக்கு மிகவும் பிடித்த இடங்கள். இங்கு எல்லாம் வன்முறை என்று நினைக்கவே மனம் பதறுகிறது.
கார்க்கி, தாரணி பிரியா, ஜோ, பரிசல் மற்றும் அருண் உங்கள் வருகைக்கு நன்றி.
உயிரழிந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.
:(((
இறந்தவர்களுக்கு, உயிர் நீத்த காவல் துறையினருக்கும் ஒன்னும் செய்ய முடியாமல் புலம்பித்தவிக்கும் இன்னொரு இந்தியனின் ஆழ்ந்த இரங்கல்கள்
இந்த நாய்களூக்கு என்னதான் வேண்டுமா???
அப்துல்லா அண்ணா
பொது மக்களின் உயிரையும், நிம்மதியையும் தவிர வேற என்ன பெரிசா எதிர்பார்த்துடப்போறாங்க:((
செத்தவன் மனுசன் இல்ல, சாவடிக்கிறவந்தான் மனுசன்னு தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் பண்ற மனித (??????) உரிமை கமிசன் மெம்பர்களே நீங்களும் நல்லாருங்கப்பு.
//
இவனுங்கள பத்தியெல்லாம் எழுதவே கூடாது.
எழுத வேணாம்னு தான் நினைச்சேன். ஆனா தினகரன்ல அடிப்பட்ட அந்த குழந்தையின் போட்டோவ பார்க்கும்போது ஆத்திரமா வருது. யார் மேலயா. எல்லாம் என் மேல தான்பா. என் இயலாமையை நினைத்து.
ஒவ்வொன்னையும் பார்த்துகிட்டு சும்மாதான் இருக்கமுடியலை! என்ன பன்றது??
Post a Comment