May 14, 2009

ஏப்ரல் மேயிலே..

ஏப்ரல் தொடங்கிய வெளியூர் பயணங்கள் விடாது இன்றுவரை தொடர்கிறது. மே மாதம் முழுவதும் இப்படித்தான் என நினைக்கும் போது எரிச்சலாகயிருக்கிறது. ஆனால் கொளுத்தும் வெயிலையும் தாண்டி அழகான என்றென்றும் நினைவில் நீங்கா இடம்பெறும் நிகழ்வுகள் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன.
*************

ஏப்ரல் முதல் வாரத்தில் அப்பா பிறந்த ஊருக்கு சென்றிருந்தேன். கல்யாணத்திற்க்கு முன் சென்றது. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து சென்றது பழைய நினைவுகளை எக்கச்சக்கமாக கிளறிவிட்டது. விரைவில் தனி பதிவாய்:) அதே போல் ஏப்ரலில் இன்னொரு மறக்க முடியாத நிகழ்வு நீண்டநாள் கழித்து கிடைத்த தொலைத்த நட்பு. அடிக்கடி செல்போனை சார்ஜ் செய்யுமளவிற்க்கு அரட்டை கச்சேரி நடந்துகொண்டிருக்கிறது.
***********

மே 10 நிகழ்வினைப் பற்றி பலரும் விரிவாக பதிவு போட்டுவிட்டார்கள். ஒலிக்கோப்பையும் வலையேற்றப்பட்டுள்ளது. அருமையான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்த நண்பர்களுக்கு நன்றிகள் பல. நண்பர்களை நேரில் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அவசரமாக விடைபெற நேர்ந்ததில் வருத்தமே:(
*************

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் காப்பகத்திற்க்கு மதிய உணவளிப்பதாக ஒப்புக்கொண்டோம். நாற்பது குழந்தைகளை பராமரிக்கும் அந்த இல்லத்தின் நிர்வாகிகள் அனைவருக்கும் 25 வயது. அன்றைய தினம் நான் கற்றுக்கொண்ட பெரிய விஷயம் எப்படி பொறுமையாகயிருப்பது என்பதுதான். ஜூனியர் சாப்பிட 1 மணிநேரம் ஆக்குவார். அவன் சாப்பிட்டு முடிப்பதற்குள் அவ்வளவு சலிப்பாக இருக்கும். அந்த இல்லத்தில் 12 வயது சிறுவனுக்கு 7 வயது சிறுமி சாப்பாடு ஊட்டிவிட்டாள். எப்படி? ஒரு கையால் அவன் வாயைப் பிரித்து இன்னொரு கையால் சாப்பாட்டை ஊட்டி, அவன் முழுங்கும் வர தடவிக்கொடுத்து என அவ்வளவு பொறுமை. கொஞ்சம்கூட முகசுளிப்போ சலிப்போ இல்லை. மனதை கனக்க செய்த தினம்:(
****************

மே முதல் வாரத்தில் ரகுவின் நெருங்கிய நண்பரின் உறவினர் திருமணத்திற்க்கு சென்றோம். வாங்கி வைத்திருந்த பரிசு பொருளை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டோம். போகிற வழியில் வண்டி வேற பஞ்சர். ஒரு வழியாய் மண்டபத்திற்க்கு போன பின் தான் நினைவு வந்தது. ரகுவிடம் கிப்ட்டைப் பற்றி நினைவுபடுத்த அவர் நண்பரிடம்
"கிப்ட் எதுவும் கொண்டு வரலடா மச்சி. எலக்ஷன் கமிஷன் வேற காசோ பொருளோ கொடுத்தா நடவடிக்கை என சொல்லிருக்காங்க. நீங்க வேற வீடியோல்லாம் எடுக்கறீங்க. எதுக்கு வம்பு?"
"டேய் நீ கிப்ட் வாங்கிட்டு வராதது கூட பெருசா தெரியலடா. ஆனா அதுக்கு விளக்கம் கொடுத்தியே. எப்படிம்மா இவன சமாளிக்கற?"
**********

நானும் என் ஜனநாயக கடமையை ஆத்திட்டேன். தூங்கிட்டிருந்தவளை எழுப்பி காபிகூட குடிக்க விடாம பூத்துக்கு கூட்டிட்டு போய்ட்டார். கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரிசையில நின்னு 49O படிவம் கேட்டா அப்படின்னா என்னன்னு கேட்டார் presiding officer. அவருக்கு விளக்கினதுக்கப்புறம் "அடுத்த எலக்ஷன்ல வாங்கி வைக்கிறேன்மா" என்றார். இப்படி நடக்கும்ன்னு தெரிஞ்சு முன்கூட்டியே மாமனாரின் வேட்பாளர் அலசல்படி சுயச்சேக்கு போட்டாச்சு.
*********

இப்போ வாழ்த்து மழை நேரம்.
அமிர்தவர்ஷினி அம்மாக்கு (இன்று)பிறந்தநாள் வாழ்த்துகள்.
பரிசல் சாருக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் படைப்பு விகடனில் வந்ததற்கும் வாழ்த்துகள்.
கேபிள் சங்கரின் படைப்பும் விகடனில் வந்திருக்கிறது. வாழ்த்துகள் சங்கர்ஜி.
*********

இந்த மாதம் முழுக்க நண்பர்களின் கடைக்கு ரெகுலரா வர முடியுமா தெரியல. அடுத்த வாரம் முழுக்க நான் இணையப் பக்கமே வரமுடியாது. வந்தாலும் பதிவுகளுக்கு பின்னூட்டமிட முடியுமா என சந்தேகமே. யாரும் கோச்சுக்காதீங்கப்பா:)

27 comments:

கார்க்கி said...

mm..நடக்கட்டும்..

அமித்து அம்மாவுக்கு வாழ்த்துகள்..

என்னை பார்த்தப்பா நான் தான் ஆட்டோ ராணி..ச்சே வித்யானு சொல்லக் கூடாதா கொ.ப.செ?

Cable Sankar said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி வித்யா.. பரிசலுக்கும், அமிர்தவர்ஷினி அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்.

mayil said...

நல்ல இருக்கு.. வித்யா.

வித்யா said...

\\என்னை பார்த்தப்பா நான் தான் ஆட்டோ ராணி..\\

அய்யோ எல்லாம் ஒரு குரூப்பாத்தான் அலையறீங்க. நான் நல்லவ நல்லவ நல்லவ:)

சங்கர்ஜி வெறும் நன்றிக்கா உங்களையெல்லாம் வாழ்த்தி பதிவுபோடறோம். என்னமோ போங்க எல்லாரும் இப்படிதான் இருக்கீங்க.

நன்றி மயில்.

Truth said...

நான் எப்போ கேட்டாலும் 49O பத்தி யாருக்குமே தெரியல. வோட்டு போடுற மிஷன்லியே 49O க்கு ஒரு பட்டன் வெக்கலாம். ஆனா வெக்க மாட்டானுங்க :-)

சந்தனமுல்லை said...

சஞ்சய்-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - கொஞ்சம் தாமதமானாலும்!!

துணுக்ஸ் - நல்ல தொகுப்பு! :-)

Arun Kumar said...

என்னடா ரொம்ப நாளாக ஆளையே காணோம்ன்னு நினைச்சேன்..:)

@நானும் என் ஜனநாயக கடமையை ஆத்திட்டேன். தூங்கிட்டிருந்தவளை எழுப்பி காபிகூட குடிக்க விடாம பூத்துக்கு கூட்டிட்டு போய்ட்டார். கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரிசையில நின்னு 49O படிவம் கேட்டா அப்படின்னா என்னன்னு கேட்டார் presiding officer. அவருக்கு விளக்கினதுக்கப்புறம் "அடுத்த எலக்ஷன்ல வாங்கி வைக்கிறேன்மா" என்றார். இப்படி நடக்கும்ன்னு தெரிஞ்சு முன்கூட்டியே மாமனாரின் வேட்பாளர் அலசல்படி சுயச்சேக்கு போட்டாச்சு.@
:))))))))
இதை தான் நான் ரொம்ப நாளா சொல்லி வருகிறேன்

வெயிலில் சுத்தும் போது சூடா ஒரு டீ குடுச்சிட்டு continue செய்தால் வெயில் தெரியாதாம் try செய்து பாருங்க.

Arun Kumar said...

இப்பதான் கவனிச்சேன்..
sankayக்கு சற்று காலம் தவறிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வித்யா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ட்ரூத்.

நன்றி முல்லை.

நன்றி அருண். பெரும்பாலான சமயங்களில் டீ மட்டுமே உணவாகிறது எனக்கு. அவ்ளோ பிஸி.

மணிகண்டன் said...

thunuks super.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இல்லத்தில் 12 வயது சிறுவனுக்கு 7 வயது சிறுமி சாப்பாடு ஊட்டிவிட்டாள். எப்படி? ஒரு கையால் அவன் வாயைப் பிரித்து இன்னொரு கையால் சாப்பாட்டை ஊட்டி, அவன் முழுங்கும் வர தடவிக்கொடுத்து என அவ்வளவு பொறுமை. கொஞ்சம்கூட முகசுளிப்போ சலிப்போ இல்லை. மனதை கனக்க செய்த தினம்:(

ம்ம்ம்ம்ம்ம், படிக்கும் போதே கனக்கி
றது.

டேய் நீ கிப்ட் வாங்கிட்டு வராதது கூட பெருசா தெரியலடா. ஆனா அதுக்கு விளக்கம் கொடுத்தியே. எப்படிம்மா இவன சமாளிக்கற?" //

மாப்பிள்ளை சார் மாத்தி கேட்டுட்டாருன்னு நெனைக்கிறேன். உங்க பதிவு லிங்க்க கொடுத்துட்டு வரதுதானே கொஞ்சம்......

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கு நன்றி வித்யா.

பரிசல் சாருக்கும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சங்கர் சார், விகடனில் படைப்பு வெளிவந்ததிற்கு வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

கார்க்கி said...
mm..நடக்கட்டும்..

அமித்து அம்மாவுக்கு வாழ்த்துகள்

நன்றி கார்க்கி, அப்புறம் நீங்க வேற வெளிநடப்பு செஞ்சிடுவீங்களே

என்ன ஒரு வெட்கம் பய புள்ளைக்கு......

ஆதிமூலகிருஷ்ணன் said...

அழகழகான பகுதிகள்.. அமித்துஅம்மாவுக்கு வாழ்த்துகள்.!

வித்யா said...

நன்றி மணிகண்டன்.

\\
நன்றி கார்க்கி, அப்புறம் நீங்க வேற வெளிநடப்பு செஞ்சிடுவீங்களே

என்ன ஒரு வெட்கம் பய புள்ளைக்கு......\\

ஹா ஹா ரிப்பீட்டேய்..

நன்றி ஆதி.

கார்க்கி said...

//நன்றி கார்க்கி, அப்புறம் நீங்க வேற வெளிநடப்பு செஞ்சிடுவீங்களே

என்ன ஒரு வெட்கம் பய புள்ளைக்கு.//

ஹிஹி.. எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவங்க.. :)))

அக்னி பார்வை said...

///ஆனால் கொளுத்தும் வெயிலையும் தாண்டி அழகான என்றென்றும் நினைவில் நீங்கா இடம்பெறும் நிகழ்வுகள் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன.
///
வாழ்க்கயே 50 -50.. இன்பத்தில் துன்பம்; துன்பத்தில் இன்பம்.

நர்சிம் said...

ஏப்ரல் மேயிலே பசுமை இருக்கா இல்லையான்னு சொல்லலயே?

வித்யா said...

\\கார்க்கி said...
//நன்றி கார்க்கி, அப்புறம் நீங்க வேற வெளிநடப்பு செஞ்சிடுவீங்களே

என்ன ஒரு வெட்கம் பய புள்ளைக்கு.//

ஹிஹி.. எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவங்க.. :)))\\

ரைட்டு. நான் எதுவும் சொல்லல:)

வருகைக்கு நன்றி அக்னிப்பார்வை.

வாங்க நர்சிம். பதிவ பார்த்தா எப்படி தெரியுது?

SK said...

என்சாய் பண்றீங்கன்னு மட்டும் தெரியுது :)

நல்ல இருந்கோவ்

ஸ்ரீமதி said...

எனக்கு தெரிஞ்சவரைக்கும் 49Oக்கு தனி படிவம் எதுவும் கிடையாது... கையில் மை வெச்சதும் 49Oன்னு சொன்னீங்கன்னா நீங்க கையெழுத்து போட்ட இடத்துக்கு பக்கத்துலையே 49Oன்னு எழுதி மறுபடியும் கையெழுத்து போட சொல்வாங்க அவ்ளோ தான்...

SK said...

ஸ்ரீமதி, நீங்க வந்த அப்பறம் .. நீங்க போட்ட கை எழுத்த எச்சி தொட்டு அழிச்சிட்டு .. வேற யாருக்காவது அந்த வாக்கை குத்திடுவாங்க :) :)

வித்யா said...

ஸ்ரீமதி நான் ஒரே தடவை 490 போட்ட்டிருக்கேன். ஐந்து வருடம் இருக்குமென நினைக்கிறேன். பார்ம் தந்தார்கள். பெயர், கையெழுத்து, வாக்காளர் எண் எல்லாவற்றையும் பூர்த்தி செய்தூ தந்தேன்.

நன்றி SK.

மணிகண்டன் said...

***
நீங்க வந்த அப்பறம் .. நீங்க போட்ட கை எழுத்த எச்சி தொட்டு அழிச்சிட்டு .. வேற யாருக்காவது அந்த வாக்கை குத்திடுவாங்க :) :)
***

இல்ல SK. ரப்பர் வச்சி தான் அழிப்பாங்க :)-

அதை தவிர, நேத்திக்கு தான் ஷாலினி / ருத்ரன் நிகழ்ச்சி கேட்டேன் ரொம்ப நல்லா இருந்தது. நன்றி SK

jothi said...

// மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் காப்பகத்திற்க்கு //

can you please give me the contact details,..

வித்யா said...

ஜோதி
பேபி சாரா என்ற அந்த இல்லம் பாண்டிச்சேரியில் உள்ளது. முகவரி பெற்றுத்தருகிறேன். வடை, பாயாசம் அடங்கிய மதிய உணவுக்கு 1500 ரூபாய் ஆனது. நாங்கள் தனியாக ஐஸ்கீரிம் வாங்கி சென்றோம்.

jothi said...

நன்றி. முடிந்தால் அனுப்பி வையுங்கள்.(mjkannan14@gmail.com)