May 28, 2009

யாருமில்லா கடற்கரையில்

"இந்தமுறை நமது பயணத்தின்போது உனக்கு ஒரு ஆச்சர்யம் காத்துக்கொண்டிருக்கிறது" என்றாய். நீ காரைக் கொண்டுபோய் நிறுத்திய இடம் ஆள் நடமாட்டம் கம்மியான கடற்கரை. "இந்த இடத்தை எப்படிடா கண்டுபிடித்தாய்?" என்றேன். "கண்ணம்மாவுக்காக ஸ்பெஷலாய் தேடியது" என்றாய். இரண்டடி எடுத்து வைத்தால் உருக்கிய வெள்ளி போல் பொங்கி வரும் கடலலையில் காலை நனைத்துவிடலாம். ஏனோ அன்று உன்னுடன் முதன் முதல் கடற்கரை சென்றபோது கால் நனைக்கத் தோணவில்லை. அடிக்கடி பார்க்கும்/பார்த்த கடல் என்றாலும் அன்று உன் அருகாமையினால் ரொம்பவே ரம்மியமாயிருந்தது.


ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளாமல் நீண்ட நேரம் அமைதியாக இருந்தோம். மனதில் நினைப்பதையெல்லாம் வார்த்தைகளாய் வடிக்க முடியாமல் நாம் தவித்ததைப் போன்று தான் அலைகளும் எதையோ திரும்ப திரும்ப சொல்ல தவிப்பது போலிருந்தது. பொது இடங்களில் என் கைவிரலைப் பிடிக்கக்கூட தயங்கும் நீ அன்று என் தோளில் கை வைத்து நின்றாய். உன் தோளில் சாய்ந்து நிற்கவேண்டுமென்ற என் ஆசையை கொஞ்சம் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டேன். ரொம்ப நேரம் கழித்து "என்ன யோசிக்கிறாய்?" என கேட்டாய். "I want to freeze this moment" என்றேன் அமைதியாக. இன்னும் கொஞ்சம் நெருக்கமாய் நின்றாய். போகலாம் என்றேன். "அதுக்குள்ள என்னடி அவசரம்? இன்னும் கொஞ்சம் நேரம் நிற்கலாம்" என்றாய். "இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் இங்கேயே இப்படியே இருக்கனும்னு அடம்பிடிப்பேன். சம்மதமா?" என்றேன். அழகாய் தலைகோதியபடி சிரித்துக்கொண்டே சொன்னாய் "இருந்துட்டாப் போச்சு".

"என்னையே ஏன் பார்த்துகிட்டிருக்கிற?" என கேட்டாய். "நான் உன்னைப் பார்க்கலை. உன்னிள் இருக்கும் என்னைப் பார்க்கிறேன்" என நான் சமாளித்தாலும், உன் கண்ணில் தெரியும் காதலானது கடலை விட பெரிதாக இருக்கிறது. உன்னைத் தவிர வேறெதையும் என் கண்கள் காண மறுக்கின்றன. இளநீர் குடித்தபோது அந்த கடையில் இருந்தவர் நம்மையே பார்த்துக்கொண்டிருந்தார். முதன் முதலாக the perfect ஜோடியைப் பார்க்கிறார் போலும். நான் இதை சொன்னதும் சிரித்தாய். "அழகாய் சிரிக்கிறாய்" என்றேன். மறுபடியும் சிரித்தாய். Infectious Smile. கொஞ்ச நேரம் பேசிவிட்டு திரும்பி நடக்கையில் என்னை அணைத்துக்கொண்டு நடந்தாய். நாம் அங்கு கழித்த 20 நிமிடங்கள் 20 வருடங்கள் வாழ்ந்த வாழ்வின் திருப்தியை மனதுக்கு அளித்தது.

திகட்ட திகட்ட நம்முள் காதல் பொங்கிப் பெருகியதால் கடல் நீர் அன்று கற்கண்டாய் இனித்திருக்கும்.

47 comments:

சென்ஷி said...

:-))

நல்லா இருக்கு!

விழியன் said...

அழகு.

கவிதா | Kavitha said...

//நாம் அங்கு கழித்த 20 நிமிடங்கள் 20 வருடங்கள் வாழ்ந்த வாழ்வின் திருப்தியை மனதுக்கு அளித்தது.//

:)) ம்ம்ம்... நைஸ் !!

வித்யா said...

நன்றி சென்ஷி.
நன்றி விழியன்.
நன்றி கவிதா.

நர்சிம் said...

அற்புதமான வார்த்தை வடிவக் காதல். வாழ்த்துக்கள் உங்கள் புனைவு(?) ஹீரோவுக்கு

ஜோக்ஸ் அப்பார்ட்.. ஏற்கனவே இது போன்ற ஒரு கடிதம் எழுதியதாக நினைவு.. கலக்கல்..

விஜய் said...

Amazingly romantic :-)

எம்.எம்.அப்துல்லா said...

ஃபீலிங்ஸ் ஆப் இந்தியா???!!??!!

அழகு :)

வித்யா said...

நன்றி நர்சிம்.
\\அற்புதமான வார்த்தை வடிவக் காதல்.\\
இதுவும் ஜோக்கா? அந்தக் கடிதம் நினைவில் இருக்கும் அளவுக்கா நல்லாருந்தது?

நன்றி விஜய்.

நன்றி அண்ணாத்தே.

Arun Kumar said...

சினிமாகாரங்களே தமிழ் ப்ளாக்குல ஒரு ஜீனியர் தாமரை உருவாகிட்டாங்க..உடனே கவனியுங

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க

Cable Sankar said...

பெண்கள் தங்கள் காதலை சொல்லும் அழகுக்கு இணை வேறேதுமில்லை.. என்றே தோன்றுகிறது. உங்க கடிதம்.. இதற்கு முன் இதே போல் எழுதிய கடிதமும் அஃதே..

அ.மு.செய்யது said...

சான்ஸே இல்லங்க...

வெரி ரொமான்டிக்...( காக்க ஜோதிகா நடுவுல வந்துட்டு போயிருக்காங்க போல )

வித்யா said...

ஹி ஹி ரொம்ப புகழாதீங்க அருண். கூச்சமா இருக்கு.

நன்றி அமித்து அம்மா. (கோட்டையிலிருந்து வெளில வந்துட்டேன்:))

நன்றி சங்கர்ஜி.

நன்றி செய்யது. யூ மீன் கேர்ள் திங்?

கார்க்கி said...

கிகிகிகி..

ஹிஹிஹிஹி

ஹாஹாஹாஹா

Deepa said...

கடைசி வரி கவிதையாய் அமைந்திருக்கிறது.

மு.இரா said...

வணக்கம், வித்யா அவர்களே, இது காதல் இடுகை என்பதால், என்னால் மன்னிக்க முடிகிறது.
ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்தால் அங்கு காமம் தான் இருக்குமா? அன்பு இருக்காதா? காமம் ஒருவரை, ஒருவர் பார்க்கும் போது வருவது...

அன்புக்கு எதுவும் தேவையில்லை.
கடற்கரையில் கழித்த 20 நிமிடத்தில் என்ன அன்பு வெளிப்பட்டிருக்கும்? அங்கு காமமே எஞ்சி நிற்க்கும்...

இது எப்படி உண்மையான காதலாக இருக்க முடியும்?

நண்பனை கூட ஆபத்தில் கைகொடுப்பவந்தான் உற்ற நண்பன்னு சொல்றோம்.

காதலை கடற்கரை ஓரங்களில் தீர்மானிக்க வேண்டாம்...

வாழ்க்கை பாதையில், உங்களுக்கு ஆபத்தில் கைகொடுப்பவருடன் கைகொடுங்கள்... அதுவே நியாயம்.

கடைசியா... பெண்களுக்கு காதல தவிர வேற வேலையே இல்லையா?

என்னடா இவன் இப்படி பண்றானேனு பாக்காதீங்க... நான் காதலுக்கு எதிரி இல்ல.. நண்பன்...

மற்றபடி உங்கள் சொல்வளம் நன்றாக உள்ளது.
நன்றி.
பார்க்க எனது முகவரி: www.tamizhpadai.blogspot.com

G3 said...

அநியாயத்துக்கு ரொமாண்டிக்கா இருக்கீங்க ;)

Truth said...

hey...
Grand! Romantic

அபுஅஃப்ஸர் said...

ரொமாண்டிக் பதிவு

யாருமில்லா கடற்கரை... காதல் ஜோடி, அவர்களின் உரையாடல்....

அருமையான எழுத்தோட்டம்

நல்லாயிருக்கு

Anonymous said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

jothi said...

//சினிமாகாரங்களே தமிழ் ப்ளாக்குல ஒரு ஜீனியர் தாமரை உருவாகிட்டாங்க..உடனே கவனியுங//

ரிப்பீட்டேய்,..

படிக்க இனிமையாக இருந்தது வித்யா. ம்ம்ம் அது ஒரு அழுகிய கனாக்காலம்,..

jothi said...

//ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்தால் அங்கு காமம் தான் இருக்குமா?//

யதார்த்தமாய் பார்த்தால் காதலையும் காமத்தையும் பிரிக்கமுடியாது. அது ஒரு ஹார்மோன் வினையே. அது இருப்பதால்தானே எல்லோரும் இருக்கிறோம். காமம் அடுத்த தலைமுறையை உருவாக்குகிறது. காதல் அடுத்த தலைமுறை கழட்டிவிட்டாலும் கூட இருந்து காப்பாற்றுகிறது.

வித்யா said...

யேய் கார்க்கி, நல்லாருக்குன்னா நல்லாருக்குன்னு சொல்லு. இல்லைன்னா நல்லால்லன்னு சொல்லு. என்னா இளிப்பி சின்னப்புள்ள மாதிரி.

நன்றி தீபா.

வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி மு.இரா. நான் சொல்ல நினைத்ததை ஜோதி சொல்லிட்டாங்க.

நன்றி G3.

புதுகைத் தென்றல் said...

:)))))))

வித்யா said...

நன்றி ட்ரூத்.

நன்றி அபுஅஃப்ஸர்.

நன்றி ஜோதி.

முரளிகண்ணன் said...

படிக்க சுவராசியமாய் இருக்கிறது வித்யா

நாகை சிவா said...

:) ஜுப்பர்...

இடத்தை சொன்னா நாங்களும் நோட் பண்ணி வச்சுபோம் ல... நாள பின்ன உதவும்...

பாண்டியில் ஆரோவில் எதிரில் உள்ள இடமா அல்லது PEC எதிரில் உள்ள இடமா?

அன்புடன் அருணா said...
This comment has been removed by the author.
அன்புடன் அருணா said...

//"யாருமில்லா கடற்கரையில்"//

மயக்கும் தலைப்பு + எழுத்து!
அன்புடன் அருணா

சந்தனமுல்லை said...

ஒரு அழகிய வாழ்த்தட்டையைப் போல இருக்கிறது வித்யா! கலக்கல்!

வித்யா said...

நன்றி தென்றலக்கா.

நன்றி முரளிக்கண்ணன்.

நன்றி சிவா. யோவ் புனைவுன்னு சொன்னா நம்புங்கய்யா.

வித்யா said...

நன்றி அருணா.

நன்றி முல்லை.

ஆகாய நதி said...

சூப்பர் வித்யா... என்ன சொல்றதுனு தெரியல... உணர்வுப் பூர்வமா இருக்கு :)))
சரி இந்த நிகழ்ச்சி உங்க கற்பனையா? அல்லது நிஜமா? இதுல ஒரு ஆச்சரியம் இருக்கு :)))

வித்யா said...

புனைவுதான் ஆகாயநதி. என்ன ஆச்சர்யம் இருக்கு?

ஆகாய நதி said...

//
பெண்களுக்கு காதல தவிர வேற வேலையே இல்லையா?
//

:((((((((((((((((((((((((((((((

மணிநரேன் said...

முதல் கடிதத்திற்கு தொடர்ச்சியா!!!!

//திகட்ட திகட்ட நம்முள் காதல் பொங்கிப் பெருகியதால் கடல் நீர் அன்று கற்கண்டாய் இனித்திருக்கும். //

ஆஹா....கற்பனை குதிரையை பறக்க விட்டிருக்கீங்க......கலக்குங்க.;)

வித்யா said...

லூஸ்ல விடுங்க ஆகாயநதி.

நன்றி மணிநேரன்.

Deepa said...

//jothi said: காமம் அடுத்த தலைமுறையை உருவாக்குகிறது. காதல் அடுத்த தலைமுறை கழட்டிவிட்டாலும் கூட இருந்து காப்பாற்றுகிறது.//

ஆஹா!

பாலாஜி said...

கவித...கவித...கவித...

$anjaiGandh! said...

கலக்கறிங்க மம்மி..

இப்டி வார்த்தைகள்ல விளையாட எங்க தான் கத்துக்கிட்டிங்களோ? :)

வித்யா said...

நன்றி பாலாஜி.

நன்றி சஞ்சய்:)

விக்னேஷ்வரி said...

என்ன வித்யா, வரவர காதல் வரிகள் பொங்குது. நல்லா தானே இருக்கீங்க.

வித்யா said...

வாங்க விக்னேஷ்வரி. இது என்னங்க வம்பா போச்சு? காதல் பத்தி எழுதக்கூடாதா என்ன?

ஆதிமூலகிருஷ்ணன் said...

செமத்தியான பதிவு. மிக ரசித்தேன். பின்னிட்டீங்க..

வித்யா said...

ரொம்ப நன்றி ஆதி.

Deepa said...

Hi vidhya,Felt like readin my own story..i almost experienced the same 4 months back when i was at India(ipo onsitela irukein).just oru 10 min irukalamnuthan beach ponom.But we spent amost 3 hrs.Ipo think panaalum antha neela nira kadaludan avar kaiya pidichitu irunthathu nyabagam varuthu.lighta kannula irunthu oru tear drop ettipaarkuthu. I miss him alot as am not with him.Thanks for givin me a chance to remember that precious moment.

வித்யா said...

நன்றி தீபா.