ஆறு வயது குழந்தை தன் தாயிடம் "அம்மா செக்ஸ்னா என்ன?" என கேட்கிறது. பதற்றமடையும் தாய் தன் கணவனிடம் கலந்து பேசி, இரண்டு மணி நேரம் பொறுமையாக செக்ஸைப் பற்றி விளக்குகிறாள். எல்லாவற்றையும் கேட்டு முடித்த குழந்தை "ஆனா அம்மா இவ்ளூண்டு இடத்துல நீ சொன்ன எல்லாத்தையும் எப்படிம்மா எழுதறது" என கேட்டுக்கொண்டே அப்ளிகேஷன் பார்மை காட்டுகிறது.
SEX : ------------
இது எப்போதோ ஏதோ ஒரு பத்திரிக்கையில் படித்தது. இன்று பெரும்பாலான பெற்றோரின் நிலை இதுதான். குழந்தையை ஆரோக்கியமான வளர்ச்சிப் பாதையில் தான் அழைத்துச் செல்கிறோமா? அவசியமானவற்றைப் பற்றிதான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோமா? ஆயிரம் கேள்விகள். நம் மனதிற்க்கு சரியென படுபவையே சரியான விடையெனக் கருதப்படுகிறது. தீபாவின் குட் டச் பேட் டச் பற்றிய பதிவு சரியான நேரத்தில் எழுதப்பட்டது. சரி குழந்தைக்கு இதை எப்படி தெளிவுபடுத்துவது?
டாக்டர் ஷாலினி, டாக்டர் ருத்ரன் ஆகியோரோடு இதைப் பற்றி கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 10 மாலை நடைபெறவிருக்கிறது இந்த சந்திப்பு. தீபாவின் எழுத்துக்களுக்கு வடிவம் கொடுக்கலாமென முனைந்த அமித்து அம்மாவிற்க்கும், அதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நர்சிம், SK ஆகியோருக்கும் அம்மாக்களின் சார்பாக நன்றிகள்.
மேலதிக தகவல்களுக்கு
நர்சிம்
லக்கி லுக்
கார்க்கி
கேபிள் சங்கர்
தங்கள் வருகையை உறுதி செய்ய weshoulddosomething@googlemail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிவிடுங்கள்.
May 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
Raittu..!
//அவசியமானவற்றைப் பற்றிதான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோமா? ஆயிரம் கேள்விகள். நம் மனதிற்க்கு சரியென படுபவையே சரியான விடையெனக் கருதப்படுகிறது.//
நல்லா எழுதியிருக்கீங்க
//ஆறு வயது குழந்தை தன் தாயிடம் "அம்மா செக்ஸ்னா என்ன?" என கேட்கிறது. பதற்றமடையும் தாய் தன் கணவனிடம் கலந்து பேசி, இரண்டு மணி நேரம் பொறுமையாக செக்ஸைப் பற்றி விளக்குகிறாள். எல்லாவற்றையும் கேட்டு முடித்த குழந்தை "ஆனா அம்மா இவ்ளூண்டு இடத்துல நீ சொன்ன எல்லாத்தையும் எப்படிம்மா எழுதறது" என கேட்டுக்கொண்டே அப்ளிகேஷன் பார்மை காட்டுகிறது.
SEX : ------------//
நான் கூட சமீபத்தில் இது போல ஒன்றைப் படித்தேன்
குழந்தை: படுக்கையில் ஒண்ணு மேல ஒன்னு கிடந்தா அது என்ன மம்மி?
அம்மா: (சிறிது நேரம் யோசித்து விட்டு), எங்கம்மா பார்த்தே?
குழந்தை: ஆர்த்தி வீட்டிலதான்
அம்மா: (கொஞ்சம் சொல்லித்தான் வைப்போம். நல்லதுதானே என நினைத்து) அது சாதாரணமானதுதானம்மா. அதை sexual intercourse அப்படிம்பாங்க.
[கேட்டு விட்டு வெளியில் விளையாட போன குழந்தை, சிறிது நேரத்தில் திரும்பி வந்து]
குழந்தை: மம்மி. உனக்குத் தெரியல. தப்பா சொல்லிட்டே. அது பெயர் Bunk Bed மம்மி. ஆர்த்தியுடைய மம்மி உன்னிடம் பேசனுமாம்.
//அமித்து அம்மாவிற்க்கும், அதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நர்சிம், SK ஆகியோருக்கும் அம்மாக்களின் சார்பாக நன்றிகள்.//
நல்ல முயற்சி. எல்லா அப்பாக்களின் சார்பாகவும் நன்றிகள்.
இந்த சந்திப்பு அனைவருக்கும் பயனுள்ள்தாகவே அமையும்.
நீங்க சந்திப்புக்கு போய் வந்தால் மறக்காமல் பதிவில் update செய்யவும்
முயற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
டக்ளஸ்.
நர்சிம்.
சுல்தான்.
அருண்.
கார்க்கி.
ammakalin valaipoovilum itharkaga prathyega pathivu potirunthathu parthirunthen.
valthukkal
இதற்கு கண்டிப்பாக ஒரு professional approach தேவைப்படுகிறது. ஒரு நல்ல விஷயத்தை எடுத்து இருக்கீர்கள். எல்லாருக்கும் பயனுள்ளதாய் அமையும். சிறப்பாய் கலந்தாய்வு செய்ய வாழ்த்துக்கள்.
அன்று என்னவெல்லாம் பேசுவது என்பதை நிர்ணயித்து விட்டால், அரட்டைகள் குறையலாம்.
நன்றி வித்யா.
டாக்டர் சார், நிச்சயமாக அதற்கான அறிவுப்புகளும் நடந்த வண்ணமே இருக்கு சார். நேரம் விரயம் ஆகாமல் ஒரு நல்ல கலந்துரையாடலாக அமையும் என்று உறுதி கூறலாம் சார். உங்கள் பதிலுக்கு நன்றி.
நிகழ்ச்சிக்கு என் அக்காவும் அக்கா கணவரும் வருவார்கள்.உங்களோடு சேர்த்து அமித்து அம்மாவையும் அறிமுகப் படுத்தி வையுங்களேன்..ப்ளீஸ்..
டாக்டர் சார் SK சொன்ன மாதிரி அதற்குண்டான ஆயத்த வேலைகளை செய்து கொண்டிருக்கிறோம்.
அ.மு.செய்யது கண்டிப்பாக உங்கள் அக்காவை சந்திக்கிறேன்.
நல்ல ஆரோக்கியமான முயற்சி. நன்றிகளும் வாழ்த்துக்களும்!
It's a very good initiative taken by the organizers. I am really glad that I too had something to do with it. Thanks Vidhya, for your very kind acknowledgement.
System problem... no tamil fonts...sorry :-(
முயற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்
தீபா நீங்கள் பெருமையா சொல்லிக்கலாம். இப்படியொரு கலந்துரையாடலுக்கு நான் காரணமென:)
வித்யா! நீ வித்யாசமான பொண்ணுப்பா! சரி அந்த சந்திபுல கலந்துகிட்டு நல்ல பதிவா போடுப்பா!
ஹி ஹி ஹி. அபி அப்பா நீங்க ரொம்ப நல்லவருங்கோ:)
வித்யா said...
தீபா நீங்கள் பெருமையா சொல்லிக்கலாம். இப்படியொரு கலந்துரையாடலுக்கு நான் காரணமென:)
வழிமொழிகிறேன்.
அ.மு.செய்யது said...
நிகழ்ச்சிக்கு என் அக்காவும் அக்கா கணவரும் வருவார்கள்.உங்களோடு சேர்த்து அமித்து அம்மாவையும் அறிமுகப் படுத்தி வையுங்களேன்..ப்ளீஸ்..
சரிங்க செய்யது, பேசிட்டா போச்சு.
என்னால் வர முடியாது. நான் ஊரில் அன்று இல்லை. எனினும் என் சார்பாக ஒரு கேள்வி கேட்க முடியுமா?
1. எனக்கு சின்ன வயதில் சில வேண்டாத touch கள்...இப்ப வயது 47 என்றாலும் அந்த குழப்பம் இப்ப கோபமாக உள்ளே கனன்று கொண்டிருக்கிறது.
2. அப்ப நான் என்ன செய்திருக்க வேண்டும் என் இன்னமும் யோசிப்பது ஏன்?
3.ஒரு வகையில் இன்று இந்த meeting MISS செய்தது நல்லதாக படுகிறது சரியா?
கண்டிப்பாக கேட்கிறேன் மேடம்.
Post a Comment