May 27, 2009

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தால்?

நாத்தனாருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் சேயும் நலம். தம்பி பாப்பாவை தொடக்கூடாது என் டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள் என மூத்தவன் ஒரே அழுகை. "அது என்ன அவர் பாப்பவா? தொடக்கூடாதுன்னு சொல்ல" என பயங்கர ரகளை. அண்ணா ஆனதுக்கு கங்கிராட்ஸ்டா என்றேன். அதுக்கு அவன் "நான் ஏற்கனவே மூணு தடவை அண்ணா ஆகிட்டேனே. முதல் தடவை புவனேஷ்க்கு, சௌந்தர்யாவுக்கு (சித்தப்பா குழந்தைகள்), சஞ்சய்க்கு அப்புறம் இவனுக்கு" என்றான். அவன் பக்குவத்தையும் பாசத்தையும் பார்த்து அசந்துவிட்டேன்.
********

இரண்டாவது தடவையாக ஜூனியரை பிரிந்திருந்தேன். அவனென்னவோ தாத்தா பாட்டியுடன் செம ஜாலியாக இருந்தாலும் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. 2 மணி நேரத்துக்கு ஒரு முறை போன் பண்ணி அம்மாவிடம் அப்டேட்ஸ் கேட்டுக்கொண்டே இருந்தேன். சென்ற புதன்கிழமை அம்மாவிடம் விட்டுவிட்டு வந்தேன். மீண்டும் சனிக்கிழமை சந்தித்துவிட்டு ஞாயிறு கிளம்பியாச்சு. மறுபடியும் நேற்று மாலை பார்த்தேன். இந்த நொடி வரை ரெண்டு பேரும் பேசிக்கொண்டே இருக்கின்றோம் அவன் மொழியில். பிரிவுத் துயர் வாட்டியெடுத்துவிட்டது. Those days were hell da kutty:(
*********

கடந்த ஒரு வாரமாக பாண்டியில் லவ்லி கிளைமேட். மாலை வேளைகளில் சிலுசிலுவென்று வீசும் காற்றும், அவ்வப்போது எட்டிப்பார்க்கும் மழையும் ஊரே ஏ.சி போட்டால்போல் ஜில்லென்றிருக்கிறது. ஒரு கப் டீயுடன் என் வாழ்வின் மிக இனிய தருணங்களை அசைப்போட்டுக்கொண்டிருந்தேன். I was wandering in my own world:)
*********

சீக்கிரமே கடுப்பை கிளப்பிய 2 ரெஸ்டாரெண்ட் (போய் 2 மாசம் ஆகுது) பத்தி பதிவு போடறேன். அதுவரைக்கும் இந்த choco truffle பார்த்து பசியாத்திக்கோங்க.
*********

கடந்த வாரம் முழுவதும் பயங்கர வேலை. நண்பர்களின் கடைக்கு ரெகுலராக வர முடியவில்லை. பதிவெழுத நேரமுமில்லை. இரண்டுக்கும் சேர்த்து மன்னித்துக்கொள்ளுங்கள்.

27 comments:

முரளிகண்ணன் said...

அத்தையானதற்க்கு வாழ்த்துக்கள்

வித்யா said...

அத்தை இல்லை முரளி. மாமி:)
நன்றி.

Arun Kumar said...

வாழ்த்துக்கள்..
அது என்ன கேக் வித்யாசமாக இருக்கு..அந்த கேக் மேட்டரை கொஞ்சம் சொன்னா புண்ணியமா போவும்

சென்ஷி said...

மாமியானதற்கு வாழ்த்துக்கள்!

அ.மு.செய்யது said...

மாமியானதற்கு வாழ்த்துக்கள்..

கார்னெட்டோ சாப்பிட்டு கொண்டே பின்னூட்டமிடுகிறேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

டைரிப்பக்கங்கள் போல அழகு.!

செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள் வித்யா !

வித்யா said...

நன்றி அருண். இரண்டாம் ஆண்டு பிறந்த நாளுக்காக அந்த கேக்..

நன்றி சென்ஷி.

நன்றி அ.மு.செய்யது. ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை நிறுத்தி 3 ஆண்டுகள் ஆச்சு. எப்பவாவது ஒரு ஸ்பூன் டேஸ்ட் பார்க்கறதோட சரி.

வித்யா said...

நன்றி ஆதி.

நன்றி செந்தில்குமார்.

ILA said...

மாமியானதற்கு வாழ்த்துக்கள்!

விஜய் said...

\\நாத்தனாருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் சேயும் நலம். \\
நல்லது :-)

\\இரண்டாவது தடவையாக ஜூனியரை பிரிந்திருந்தேன். அவனென்னவோ தாத்தா பாட்டியுடன் செம ஜாலியாக இருந்தாலும் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை\\

ஔவையார் இருந்திருந்தால், கொடிது கொடிது, சேயைப் பிரிந்து தாய் இருத்தல் கொடிதுன்னு பாடியிருப்பாங்க.

\\கடந்த ஒரு வாரமாக பாண்டியில் லவ்லி கிளைமேட். மாலை வேளைகளில் சிலுசிலுவென்று வீசும் காற்றும், அவ்வப்போது எட்டிப்பார்க்கும் மழையும் ஊரே ஏ.சி போட்டால்போல் ஜில்லென்றிருக்கிறது. ஒரு கப் டீயுடன் என் வாழ்வின் மிக இனிய தருணங்களை அசைப்போட்டுக்கொண்டிருந்தேன். I was wandering in my own world:)\\

Have a nice time :-)

வித்யா said...

நன்றி இளா.

நன்றி விஜய்.

நாகை சிவா said...

:))

பாண்டியில் அப்படி ஒரு பொழுதில் கடற்கரையில் ஒரு நடை போவதும், அலை மோதும் பாறையில் அமர்வதும் என்ன ஒரு ஆனந்தமான விசயமாக இருக்கும். நான் போன போது வெயில் பொழந்து கட்டியது.

GRT SUN WAY போயாச்சா இல்லை?

Cable Sankar said...

வாழ்த்துக்கள் மாமி..

"அகநாழிகை" said...

நல்ல பதிவு,

கடந்த வாரத்தில் குடும்பத்தினருடன் சில நாட்கள் புதுவையில் இருந்தேன். புதுவை கடற்கரை தனி அழகுதான். அங்கு பூங்காவில் எடுத்த படம்தான் எனது ‘கடவுளைச் சுமந்தவன்‘ பதிவில் உள்ளது.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

கார்க்கி said...

/
கடந்த ஒரு வாரமாக பாண்டியில் லவ்லி கிளைமேட். மாலை வேளைகளில் சிலுசிலுவென்று வீசும் காற்றும், அவ்வப்போது எட்டிப்பார்க்கும் மழையும் ஊரே ஏ.சி போட்டால்போல் ஜில்லென்றிருக்கிறது.//

:((((..

எம்.எம்.அப்துல்லா said...

//கடந்த ஒரு வாரமாக பாண்டியில் லவ்லி கிளைமேட். மாலை வேளைகளில் சிலுசிலுவென்று வீசும் காற்றும், அவ்வப்போது எட்டிப்பார்க்கும் மழையும் ஊரே ஏ.சி போட்டால்போல் ஜில்லென்றிருக்கிறது. ஒரு கப் டீயுடன் என் வாழ்வின் மிக இனிய தருணங்களை அசைப்போட்டுக்கொண்டிருந்தேன். I was wandering in my own world:)

//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

எம்.எம்.அப்துல்லா said...

சீக்கிரம்,சீக்கிரம்

:)

வித்யா said...

வாங்க சிவா. என்னைப் பொறுத்தவரை பாண்டி கடற்கரை ஒன்னும் அவ்வளவு சூப்பர் இல்லை. சுத்தமா காற்றே அடிக்காது. இன்னும் போகல பாஸ்.

நன்றி சங்கர்ஜி.

நன்றி அகநாழிகை. எந்த பார்க்கை சொல்றீங்க? நேரு பார்க்கா?

வித்யா said...

கூல் கார்க்கி.

அண்ணே சீக்கிரம் போட்றலாம்ணே. உங்க ஸ்பான்சர்?

நானானி said...

//ஔவையார் இருந்திருந்தால், கொடிது கொடிது, சேயைப் பிரிந்து தாய் இருத்தல் கொடிதுன்னு பாடியிருப்பாங்க.//
நல்ல சிந்தனை. ஔவையாருக்கு இந்த கொடுமை தெரியாததால் எழுதவில்லை போலும். மன்னித்துக்கொள்ளுங்கள்...ஔவையாரை!!!

மாமியானதுக்கு வாழ்த்துக்கள்!!சீக்கிரம் ஒரு பெண்ணையும் பெற்றுக் கொண்டு 'மாமியாராகவும்' வாழ்த்துக்கள்!!இது எப்படியிருக்கு?
சாக்லேட் கேக் என்னோட ஷேர் எடுத்துக்கொண்டேன். குழந்தைக்கு என் ஆசிகள்.

jothi said...

மாமியானதுக்கு வாழ்த்துக்கள்!!சீக்கிரம் ஒரு பெண்ணையும் பெற்றுக் கொண்டு 'மாமியாராகவும்' வாழ்த்துக்கள்!!இது எப்படியிருக்கு?

ha ha ha பார்த்தேன் ரசித்தேன்

சந்தனமுல்லை said...

கேக்+துணுக்ஸ் சுவை!! :-)

வித்யா said...

நன்றி நானானி அம்மா.

வாங்க ஜோதி.

நன்றி முல்லை:)

ஆகாய நதி said...

சுவாரசியமான செய்திகளும் சுவாரசியமான அமைப்பு கேக்(படமும்)-ம் சூப்பர்! :)

$anjaiGandh! said...

சஞ்சய்க்கு சரியான நேரத்தில் வாழ்த்து சொல்லாமல் விட்டதுக்கு தோப்புக்கரணம் போட்டுக்கிறேன்.


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்டா சின்ன சஞ்சய்.. :)
இபப்டிக்கு
பெரிய சஞ்சய். :)

வித்யா said...

நன்றி ஆகாயநதி.

நன்றி அங்கிள். வாழ்த்துகள் ஜூனியரிடம் சேர்க்கப்பட்டுவிட்டன:)