நீண்ட நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக ரீலிசான இரண்டாவது நாளே ஒரு படத்தைப் பார்க்கிறேன். இரண்டாவது நீண்ண்ண்ட நாட்களுக்குப் பிறகு அண்ணாக்களுடன் பார்த்த படம். சரி சொந்த கதை போதும். படத்துக்குப் போவோம். பயங்கர எதிர்பார்ப்புடன் போன படம். கேமரூன் ஏமாற்றவில்லை. ஆவென வாய்பிளந்து பார்க்கும் வகையில் விஷுவலைஸ் பண்ணியிருக்கிறார். அல்டிமேட் கிராபிக்ஸ்.
கதை?? எனக்கென்னவோ கேமரூன் நிறைய தமிழ்படங்கள் பார்த்திருப்பார் எனத் தோன்றுகிறது. சத்தியமாக டெக்னிகல் மேட்டரும், பிரமாண்டமும், வசனங்களும் தான் (இதைக் கூட சேர்த்துக்க முடியாது. கௌதம் மேனன் படத்தில் கூட இங்கிலிபீஸ் டயலாக் ஜாஸ்தி)ஆங்கில படம் பார்க்கிறோம் என்ற உணர்வைத் தருகிறது. முழுக்க ழுழுக்க ஒரு பக்கா தமிழ் மசாலா படம். பண்டோரா என்ற ஒரு கிரகம்/நிலவில் இருக்கும் அபரிதமான வளத்தை எடுக்க போகிறது வில்லன் & கோ. அதில் போரில் இடுப்பின் கீழ் செயலிழந்த ஹீரோவும் அடக்கம். மேற்படி மேட்டரை எடுக்கத் தடையாக இருக்கிறார்கள் அந்தக் காட்டின் பூர்வகுடிகளான நவி பழங்குடியினர். நீல வண்ணத்தில் அண்ணாந்து பார்க்கும் உசரத்தில் கூர்மையான காதுகள், மின்னும் கண்கள், நீண்ட ஜடை (Bonding பண்ண என்ற லாஜிக்) என மனிதர்களும், டைனோசருடன் கிராஸ் செய்த மாதிரி இருக்கும் யானை (யானைதானே??), சிங்கம், பறவைகள் என சூப்பர் கிராபிக்ஸ். டி.என்.ஏ மாற்றம் & சயின்ஸ் தில்லாலங்கடி வேலைகள் மூலம் ஹீரோ நவியாக மாற்றப்பட்டு காட்டினுள் விடப்படுகிறார்.அவனுக்கு இடப்படும் கட்டளை உள்ளார புகுந்து ஊட்டை கலைக்க வேண்டிய வேலை. சிங்கம்/புலி/ஓநாய்/ ஏதோ ஒரு எழவு மிருகத்திடமிருந்து ஹீரோவை காப்பாற்றுகிறார் நாட்டாமையின் பெண். அப்பாலிக்கா ரெண்டு பேருக்கும் லவ்ஸ். ஹீரோ கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறி நவிக்களைக் காப்பாற்ற நினைக்க அதற்கு வில்லன் கும்பல் தடைபோட, சயிண்டிஸ்ட் மற்றும் நவிக்களின் உதவியுடன் ஹீரோ வில்லன்களை அழிக்கிறார். எப்படி? நீங்களே பார்த்துக்கங்ப்பா.
என் உச்சி மண்டைல கிர்ர்ருங்குது மாதிரி நாலு பாட்டு மட்டும் தான் சேர்க்கல. மத்தபடி ஒரு டிபிக்கல் விஜய் மூவி. இன்பாஃக்ட் விஜய் நடிச்சிருக்க வேண்டிய படம். ரணகளத்திலயும் கிஸ்ஸடிக்கிற கிளுகிளுப்பாகட்டும், மேலேஏஏருந்து அருவில ஜம்ப் செய்யறதாகட்டும், ப்ளேனிலிருந்து பறவை/டிராகன் மேல லேண்ட் ஆகறது (குருவில அந்த ட்ரெய்ன் ஜம்ப் சீன் இன்னும் என் கண்ணுலயே நிக்குது) என விஜய்க்கான அத்தனை அம்சங்களும் படத்தில். மேக்கப் செலவும் மிச்சமாயிருக்கும். ப்ச். டாக்டர். ஒண்டிப்புலி மிஸ் பண்ணிட்டார். கிளைமேக்ஸில் விலங்குகள் வந்து சண்டை போடும்போது கேமரூன் ராமநாராயணன் கிட்ட அசிஸ்டெண்ட வேலை பார்த்தாரோன்னு ஒரு சந்தேகம் வந்திடுச்சு. ஆனாலும் காட்டில் அந்த தாவரங்களும், அந்த சேக்ரட் மரமும் சிம்ப்ளி வாவ். இரண்டே முக்கால் மணிநேரம் அட்டகாசமான டெக்னிகல் விருந்து. கேமரூனின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலிம் தெரிகிறது.
அவதார் - டெக்னிகல் விஸ்வரூபம்
December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
நீங்க சொன்ன மாதிரி வியட்நாம் காலனி படக்கதை தான். ஆனா டெக்னிக்கல் மேட்டர் அருமையா இருக்கும் போல. நீங்க பார்த்தது 3டியா ? அதப் பத்தி ஒண்ணும் சொல்லலையே ?
நான் நேத்துதான் பார்த்தேன். ஏகப்பட்ட தமிழ் மசாலா கலந்திருந்தாலும், இட்ஸ் டெஃபனட்லி எ விஷுவல் ட்ரீட்
//சிங்கம்/புலி/ஓநாய்/ ஏதோ ஒரு எழவு மிருகத்திடமிருந்து ஹீரோவை காப்பாற்றுகிறார்//
நானும் நெட்ல வந்து தேடி பார்த்தேன். இதுக்கு ஏதாவது பேர் வெச்சிருக்காங்களான்னு. ஒண்ணும் விளங்கல.
//டாக்டர். ஒண்டிப்புலி மிஸ் பண்ணிட்டார்//
வேட்டைக்காரனை பாக்கறதுக்கு முன்னாடியே வேட்டையாட ஆரம்பிச்சுட்டீங்க:)
:) அவதார் னு பட டைட்டில் நீலக்கலர்ன்னு இண்டியன் டச் நிறையவே இருக்கும் போல. பார்க்கலாம் சொல்லிட்டிங்கதானே பார்த்திடறேன்
விஜய் படமா... ஜேம்ஸ் கேமரூன் படித்தால் தற்கொலை செய்து கொள்வர்.., போலீஸ் உங்கள தான் புடிக்கும்..,நல்ல வேல அவருக்கு தமிழ் தெரியாது...
//விஜய் நடிச்சிருக்க வேண்டிய படம்.//
உள்குத்து ஏதும் இல்லியே :)
நன்றி பின்னோக்கி (3டியில் பார்க்கவில்லை)
நன்றி குறும்பன்.
நன்றி தாரணிபிரியா (கண்டிப்பா பாருங்க)
நன்றி பேநாமூடி
நன்றி சின்ன அம்மிணி (உள்குத்தெல்லாம் இல்லீங்கோ. ஸ்ட்ரெய்ட் குத்து தான்:))
முப்பரிமாணத்தில் இன்னும் சிறப்பாக இருப்பதாக கேள்வி
அடுத்தமாசம் ஊருக்கு வரும்போது தியேட்டர்ல இருக்குமான்னு தெரியலையே. டிவிடியில் பார்க்க பிடிக்கவில்லை.
///மத்தபடி ஒரு டிபிக்கல் விஜய் மூவி. இன்பாஃக்ட் விஜய் நடிச்சிருக்க வேண்டிய படம். ////
வேட்டைக்காரனுக்கு போட்டியோ.
//விஜய் நடிச்சிருக்க வேண்டிய படம்.//
ha ha ha
Inga ellorum 3D la parthutu en vaitherichala kottitu irukanga.
Neenga sonna apporam parkamala.. parthuduvom.....
நன்றி முரளிகண்ணன் (அதையும் பார்க்கனும்).
நன்றி நவாஸுதீன்.
நன்றி ராஜி.
கலக்கல், :-)
நன்றி ஆதி.
தமிழ்ஹிந்து தளத்தில் இதற்கு ஒரு விமர்சனம் எழுதியிருக்கிறார்கள் வித்யாசமான கோணத்தில் முடிந்தால் படியுங்கள்.
நானும் ஆர்கானிக்குக்கு மாறிக்கொண்டே இருப்பதால் அந்த விமர்சனம் மிகவும் பிடித்துப்போனது.
விமர்சனம் கலக்கல்
Post a Comment