December 10, 2009

ராமராஜனின் ஹிப் ஹாப்

டான் பிரவுனின் ஐந்தாவது படைப்பான தி லாஸ்ட் சிம்பலைப் பற்றி. முதல் நான்கு படைப்புகளும் சூப்பர் ஹிட். ட்ரெய்னிங் நாட்களில் கீபோர்ட் வைக்குமிடத்தில் டாவின்சி கோடை சிலாகித்துப் படித்த நாட்கள் நினைவிருக்கிறது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் I hardly find time to breath:( ஏழு பாகம் முடித்துவிட்டதாய் புக்மார்க் சொருகியிருந்த புத்தகத்தை அம்மா வீட்டில் பார்த்ததும் படிக்கணும்னு ஒரு ஆர்வம். ஆனால் மரண மொக்கை என்று நண்பர்கள் கூறியதால் படிக்கனும் என்ற ரிசர்வ்டு லிஸ்டில் இருந்து தூக்கிவிட்டேன். சென்ற மாதம் போயிருந்தபோது வேலை அதிகமாக இருப்பதால் படிக்க டைமில்லை. நீ வேணும்னா எடுத்துகிட்டுப் போ என தம்பி சொன்னதும் லவட்டிகிட்டு வந்துட்டேன்.

ஐந்து வருடத்தின் உழைப்பை ஒரே புத்தகத்தில், 500 பக்கங்களில் அடக்க முயன்றிருக்கிறார் பிரவுன். முடிவு எ லாங் ஹாவ்வ்வ்வ்வ்வ்வ். தன் மெண்டரான பீட்டர் சாலமனை கடத்திய நபர் மூலம் தந்திரமாக வாஷிங்டன் வரவழைக்கப்படுகிறார் ராபர்ட் லாங்டன். வில்லனின் கோரிக்கை என்ன? ராபர்ட்டிடம் என்ன எதிர்பார்க்கிறார்? ராபர்ட் பீட்டரை மீட்டாரா? இதுதான் கதை. ஒரு இரவில் நடக்கும் கதையை எவ்வளவு விறுவிறுப்பாக சொல்லிருக்கவேண்டும். ஊஹூம். லாங்டனின் தொழிலான டீச்சர் வேலையை ஆசிரியரும் செய்கிறார். புத்தகம் முழுவதும். மேசன்ஸ் ஆரம்பித்து, பழங்கால மேனுஸ்க்ரிப்ட்ஸ் வரை லெக்சர். செம போர். அதோடில்லாமல் ஒவ்வொரு கேரக்டரின் லென்த்தியான அறிமுகம் ரொம்பவே போரடிக்கிறது.

தமிழ் படங்களைப் போலவே ரெண்டு மூணு கிளைமேக்ஸ். எனக்கு ஏற்பட்ட ஒரே சுவாரசியம் மல்லாஹ் பற்றின திருப்பம் தான். அதே போல் கேத்தரினின் சில ஆய்வுகள் இண்டரெஸ்டிங். ஏஞ்சல்ஸ் & டீமன்ஸில் கோஹ்லரை வில்லன் போலவே காட்டுவது மாதிரியே இதில் CIA Head சாட்டோவை காட்டுகிறார். இந்த எக்ஸ்ட்ரா பில்டப்பே இவங்க அவுங்க இல்லன்னு கிளியரா சொல்லிடுது.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பிரவுன்.
*****

2 ஸ்டேட்ஸ். சேத்தன் பகத்தின் லேட்டஸ்ட் படைப்பு. பகத்துக்கு சிம்பிள் கதைகளை சுவாரசியமாய் சொல்லும் திறமை நன்றாகவே இருக்கிறது. பஞ்சாப் பையன். தமிழ் பெண். காதல். கல்யாணம் வரை கொண்டுபோக படும் பாடு. இதுதான் கதை. தமிழர்களை நன்றாக வாரியிருக்கிறார். ரொம்ப போரடிக்கும்போது படிக்கலாம். அங்கங்கே ஹார்ட்டி லாப்ஸ் உண்டு. முக்கியமாக கடைசி சில பக்கங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. ஒரு தடவை ட்ரை பண்ணலாம்.
*********

ஜூனியருக்கு ப்ரீ.கேஜி அட்மிஷன் பார்ம் கொடுக்க சென்றிருந்தேன். அவனின் பிறப்புச் சான்றிதழை சரிப்பார்த்த அந்தம்மா "மேடம் உங்க பேர்ல இருக்கிற சந்திரசேகரனை அடிச்சிடுங்க" என்றார். ஞே என நான் முழிக்க குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் என் பெயர் வித்யா என்று இருக்காம். அதனால் வித்யா சந்திரசேகரன் என அப்பா பெயர் சேர்த்து எழுதக்கூடாதாம். வேற எந்த இடமாக இருந்தாலும் சொன்னவர்களை கொஞ்சம் காச்சியிருப்பேன். இங்கு குழந்தை என்றானதால் காம்ப்ரமைஸ் செய்யவேண்டியதை நினைத்து நொந்து போனேன். ஹூம். அதோடில்லாமல் "அட்மிஷன் கிடைக்கும் பட்சத்தில் பர்த் சர்ட்டிபிகேட்டை ஆங்கிலத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். தமிழில் இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்றார். தமிழுக்கும் அமுதென்று பேர்...
**********

ஐ - பாட்

கிராமத்து ராசா டக்கராக டான்ஸ் ஆடும் பாட்டு. இளையராஜாவின் வாய்சில் அந்த ட்ரம்சும் கீபோர்டும் போட்டி போட்டுக் கொண்டு பீட்ஸ் கொடுக்கும். காலேஜில் ஜூனியர்ஸ்க்கு பிரஷெர்ஸ் பார்ட்டி கொடுத்தபோது ஒரு ஜூனியர் (ஆந்திரா) பையனை இந்தப் பாட்டுக்கு ஹிப் ஹாப் ஆடச் சொன்னோம். சூப்பராக ஆடினான். அதோடில்லாமல் "அக்கா செம பீட்ஸ் அக்கா ஈ சாங்கு" என்றான். தமிழ் மக்கள் அனைவரும் மட்டும் அடக்க மாட்டாமல் சிரித்துக் கொண்டிருந்தோம். எங்கள் நண்பர்களுக்கும் நாங்கள் ஏன் சிரிக்கிறோம் என தெரியவில்லை. பின்னர் அனைவருக்கும் இந்த வீடியோவை காட்டியபின் புரிந்தது.

"ஹே அந்த ஜூனியருக்கும் இந்த வீடியோவை காட்டலாமா"
"வேண்டாம். கண்டிப்பா செத்துடுவான்".

அழகா சுதி கேட்டு நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு
படிப்பேன் பல பாட்டு தினம் நடக்கும் காதல் விளையாட்டு
இந்த மானே மரகதமே ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே
பாடும் ஒரு வரமே எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே




டிஸ்கி : வீடியோ பார்த்து கண்ணவிஞ்சா கம்பேனி பொறுப்பேற்காது
**********

வேட்டைக்காரன் ட்ரெய்லரை அடிக்கடி காட்டுகிறது சன் டிவி. எப்படியும் கதை பற்றியோ, நடிப்பு பற்றியோ விஜய் கவலைப்படபோவதில்லை. நம்மளும் அவரை குறை சொல்வதை நிறுத்தப் போவதில்லை. இப்போது விஜய்க்கு ரொம்ப முக்கியமாய் தேவைப்படுவது ஒரு நல்ல காஸ்ட்யூம் டிசைனர். திருமலை தொடங்கி வேட்டைக்காரன் வரை கட் பனியனும், பட்டன் போடாமல் திறந்த சட்டையுமாய் அலைகிறார். இல்லன்னா கண்றாவியாய் சூட். முடியலடா சாமீ. சார் அட்லீஸ்ட் இதையாவது கொஞ்சம் மாத்துங்க சார். பாட்டுகளை இப்பதான் கேட்கிறேன். டூ லேட் என்பது தெரியும். என்னோட பேவரைட் என் உச்சி மண்டைல, புலி உறுமுது, (இவை ரெண்டும் இப்போது ஜூனியரின் ஹிட் லிஸ்டில் டாப்) கரிகாலன் காலை. விஜய் ஆண்டனி கலக்கியிருக்கார். விஜய்யும் பிச்சி உதறுவார் என நம்புவோம்.
**************

டாமினோஸ் பிஸ்ஸாவில் புதியதாய் சாக்கோ லாவா கேக் என ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். டக்கராய் இருக்கிறது. சூடான சாக்லேட் கேக் உள்ளே லிக்விட் சாக்லேட் ஸ்டப்பிங். ஒவ்வொரு பைட்டும் டிவைன். ஆனால் பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. திகட்டுகிறது. ஒன் பை டூவாக சாப்பிடலாம். 40 ரூபாய்க்கு வொர்த் எ ட்ரை:)

20 comments:

Vijay said...

\\டாமினோஸ் பிஸ்ஸாவில் புதியதாய் சாக்கோ லாவா கேக் என ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். டக்கராய் இருக்கிறது. சூடான சாக்லேட் கேக் உள்ளே லிக்விட் சாக்லேட் ஸ்டப்பிங். ஒவ்வொரு பைட்டும் டிவைன். ஆனால் பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. திகட்டுகிறது. ஒன் பை டூவாக சாப்பிடலாம். 40 ரூபாய்க்கு வொர்த் எ ட்ரை:)\\
நாக்கூறுது :)

கார்க்கிபவா said...

டாமினோஸீல் எல்லாமே பக்கா. ஆனா கார்லிக் பிரட் மட்டும் பிஸா ஹட்டுதான்.. :))

அப்பாடி.. வேட்டைக்காரன் சாங் ஹிட்டுன்னு காட்ட ஒரு ஆதாரம் கிடைச்சுடுச்சு. பாட்டு வந்தப்ப எல்லோரும் அப்பீட்டுன்னு கத்துனாங்கக்கா. :))

Rajalakshmi Pakkirisamy said...

\\டாமினோஸ் பிஸ்ஸாவில் புதியதாய் சாக்கோ லாவா கேக் என ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். டக்கராய் இருக்கிறது. சூடான சாக்லேட் கேக் உள்ளே லிக்விட் சாக்லேட் ஸ்டப்பிங். ஒவ்வொரு பைட்டும் டிவைன். ஆனால் பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. திகட்டுகிறது. ஒன் பை டூவாக சாப்பிடலாம். 40 ரூபாய்க்கு வொர்த் எ ட்ரை:)\\

try panniduvom...

Rajalakshmi Pakkirisamy said...

\\டாமினோஸ் பிஸ்ஸாவில் புதியதாய் சாக்கோ லாவா கேக் என ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். டக்கராய் இருக்கிறது. சூடான சாக்லேட் கேக் உள்ளே லிக்விட் சாக்லேட் ஸ்டப்பிங். ஒவ்வொரு பைட்டும் டிவைன். ஆனால் பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. திகட்டுகிறது. ஒன் பை டூவாக சாப்பிடலாம். 40 ரூபாய்க்கு வொர்த் எ ட்ரை:)\\

try panniduvom...

Truth said...

டான் பிரவுனின் லாஸ்ட் சிம்பல் நல்லா இல்லைன்னு நீங்க சொல்லி தாங்க கேட்கிறேன். நான் ரொம்ப எல்லாம் படிக்க மாட்டேன், ஆனா ஏதோ இங்கும் அங்குமா கொஞ்சம் படிச்சு வைப்பேன். ஆனா நிறைய பேரு நல்லா இருக்குன்னு தான் சொன்னாங்க. மே பி, யூ ஹேட் எ ப்ரீ-கன்சீவ்ட் நோஷன். உங்க ஃப்ரெனண்ட்ஸ் சொன்னதால அப்படி தோனியிருக்கலாம். இப்படி தான் என்னோட ஒரு நண்பன் காக்க காக்க படம் நல்லா இல்லேடான்னு சொல்லி என்னை படம் பாக்க வெச்சான், எனக்கு அப்போ படம் புடிக்கவே இல்லை, இப்போ மாஞ்சி மாஞ்சி பாக்கிறேன் அதே படத்தை :-)

2 ஸ்டேட்ஸ் படிக்கணும் போல இருக்கே. ஈ புக் கிடைக்குமா? :P

ரீசெண்டா நான் நடந்தது என்ன ப்ரோகிராமை பாத்தேன். அதுல மக்கள் ராத்திரி எல்லாம் கண்ணு முழிச்சு ஸ்கூலுக்கு முன்னாடி நின்னுகிட்டு இருக்கிறாங்கன்னு காமிச்சானுங்க. நீங்களும் அப்ப்டி தான் நின்னீங்களா? இதுக்கு கண்டிப்பா பதில் சொல்லுங்க ப்ளீஸ்.

நீங்க அவதார் ட்ரைலர் பாத்தீங்களா? அதுவும் டிசெம்பர் 18ஆம் தேதி தான் ரிலீஸ் ஆகுது. வேட்டைக்காரன் படத்துக்கு எதிர்த்து. ஜேம்ஸ் காமெரூனுக்கு எவ்வளவு தைரியம் பாத்தீங்களா?

Truth said...

நான் இங்க எப்பவுமே பீட்சா ஹட் தான். அவனுங்க தான் ஒழுங்க ஹோம் டெலிவெரி பண்றாங்க. :-)

Vidhya Chandrasekaran said...

நன்றி விஜய்.
நன்றி கார்க்கி.
நன்றி ராஜி.

நன்றி ட்ரூத் (மற்ற படைப்புகளை கம்பேர் பண்ணும்போது இது சுவாரசியமாக இல்லையென்பதென் எண்ணம். காலைல பதினோரு மணிக்கு ரெண்டே பேர் மட்டும் தான் இருந்தோம் பார்ம் வாங்கும்போது. சத்தியமா அந்த ஸ்கூல் இல்லீங்க)

pudugaithendral said...

இன்னும் பிட்சா ஹட்டில் வரும் சீஜி பைட்ஸ் சாப்பிடவில்லை போலிருக்கு.

கார்க்கிபவா said...

//நீங்க அவதார் ட்ரைலர் பாத்தீங்களா? அதுவும் டிசெம்பர் 18ஆம் தேதி தான் ரிலீஸ் ஆகுது. வேட்டைக்காரன் படத்துக்கு எதிர்த்து. ஜேம்ஸ் காமெரூனுக்கு எவ்வளவு தைரியம் பாத்தீங்களா//

இந்த ஒரே விஷயத்த எத்தனை இடத்துல சொல்றீங்கன்னு நானும் பார்க்கிறேன் சகா :)))

இருந்தாலும், ஜேம்ஸ் கேம்ரூனுக்கு தைரியம் அதிகம்தான்.. :)))

Cable சங்கர் said...

dominoவில் எனக்கு பிடித்தது.. கார்லிக் பிரட்

Vidhya Chandrasekaran said...

வாங்க அக்கா. எப்பவோ ட்ரை பண்ணியாச்சு. ஊஹும். அதுக்கு டாமினோஸின் சீஸ் பர்ஸ்ட் பிட்சா டாப்பு:)

நன்றி கார்க்கி.

நன்றி கேபிள் சங்கர்.

Raghu said...

//தமிழில் இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்//

அப்போ ஏன் த‌மிழ்நாட்டுல‌ ஸ்கூல் ந‌ட‌த்துறீங்க‌? போய் சிகாகோல‌ ந‌ட‌த்த‌வேண்டிய‌துதானே...

அது எப்ப‌டின்னு தெரிய‌ல, விஜ‌ய் ப‌ட‌த்துல‌ வ‌ர்ற பாட‌ல்க‌ள் குழ‌ந்தைக‌ளுக்கு ரொம்ப‌வே புடிக்குது. இந்த‌ ப‌ட‌த்துக்கு விஜ‌ய் ஆண்ட‌னி பெரிய‌ ப்ள‌ஸ்தான்.

Anonymous said...

டேன் பிரவுனோட இந்தப்புத்தகம் ரொம்ப மோசம்னு சொன்னாங்க. அதனால வாங்கற எண்ணத்தை விட்டாச்சு.

பின்னோக்கி said...

சமரசம் பண்ணிக்கிட்டேன்னு ஒத்துக்கிட்ட நேர்மை புடிச்சுருக்கு.

ராமராஜன் அமைதியா இருக்காரு..ஏங்க உசுப்பேத்துரீங்க. எதாவது படம் நடிச்சுட போறாரு. அந்த பாவம் உங்களை சும்மா விடாது. :)

பிசாவுக்கு எனக்கும் ரொம்ப தூரம்..பை..பை..

Vidhya Chandrasekaran said...

நன்றி குறும்பன்.
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி பின்னோக்கி.

"உழவன்" "Uzhavan" said...

/வேற எந்த இடமாக இருந்தாலும் சொன்னவர்களை கொஞ்சம் காச்சியிருப்பேன். //
 
நீங்க டெரரா? :-)

Thamira said...

அட சாமிகளா? ஹிப்ஹாப் முடியலை. எப்பிடி கஷ்டப்பட்டு மறந்த இதெல்லாம் ஞாபகமா வெச்சிருந்து எடுத்துவிடுறீங்க?

என்ன இவ்வளவு கொடுமையா இருக்குது? ஏதாவது எடிட் பண்ணி சேர்த்தீங்களா?

CS. Mohan Kumar said...

//திருமலை தொடங்கி வேட்டைக்காரன் வரை கட் பனியனும், பட்டன் போடாமல் திறந்த சட்டையுமாய் அலைகிறார்//.

கரெக்ட்டு!!

பசங்களுக்காக நிறைய மாத்திக்க தான் வேணுங்கோ.. ஸ்கூலில் நிறைய வேடிக்கயான அனுபவங்கள் கிடைக்கும்.. Enjoy!!

Vidhya Chandrasekaran said...

நன்றி உழவன் (யெஸ்ஸு).

நன்றி ஆதி (நோ கிம்மிக்ஸ். ஆல் ரியல்).

நன்றி மோகன்குமார்.

விக்னேஷ்வரி said...

நான் இப்போ தான் Dan Brown ஆரம்பிச்சிருக்கேன் வித்யா.

2 States - நடை நல்லாருக்கு தான். ஆனால், சமயங்களில் ஹிந்தி சீரியலும், தமிழ் சீரியலும் கலந்து பார்ப்பது போல் இருந்தது. எனக்கு சேத்தன் பகத் ரசிக்கவில்லை.

தமிழுக்கும் அமுதென்று பேர்...//
ம்.

ஆந்திரா வரை ராமராசு புகழ் பரவலையா...

நானும் விஜயின் காஸ்ட்யூம் பத்தி நினைச்சிட்டிருந்தேன். போரடிக்குது.

சாகலேட் கேக் - சப்பிட்டுடுவோம்.