தோழி விக்னேஷ்வரி நம்மளையும் ரவுடியா மதிச்சு ஒரு தொடர்பதிவுக்கு கூப்டனுப்பிருக்காங்க. எவ்வளவோ பணிசுமைகளுக்கு மத்தியிலே (சரி சரி) கிடைச்ச நேரத்த பயன்படுத்தி நான் எப்படி எழுத வந்தேன் (ஏன் எழுத வந்தேன் நீங்க நறநறக்கறது கேக்குது) அப்படிங்கற எஸ்.டி.டீயை விளக்குறேன் (பாத்திரம் மாதிரி கடையையும் பளிச்சுன்னு காலியா வெச்சிருக்காதீங்கப்பா).
ஆக்சுவலா இந்த மேட்டர் தான் என்னோட முதல் பதிவா எழுதியிருந்தேன் (என்னா ஒரு தொலைநோக்கு பார்வை). டெலிவரிக்காக அம்மா வீட்டிற்கு வந்திருந்தபோது தம்பி அறிமுகப்படுத்தியது தான் இந்த பதிவுலகம். ரொம்ப நாளைக்கு சும்மா படிச்சிகிட்டேயிருந்த என்னை நீயும் ஒன்னு ஆரம்பிச்சு எழுதுன்னு சொன்னதே அவன் தான். பதிவு தொடங்கினவுடனே என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கோங்கன்னு தமிழ்மணத்துல கேட்டேன். ச்சீப் போன்னு தொறத்திவிட்டுட்டாங்க. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு திரும்பவும் கேட்டபோது 25 பதிவு எழுதியிருந்தேன். தமிழ்மணத்துல சேர்ந்ததுக்கப்புறம், நம்மளையும் எழுத்தாளர்ன்னு (இதப் பார்றா) மதிச்சு கொஞ்சம் பேர் ரெகுலரா ஊக்கமளிக்கிறாங்க. இதுக்கு நடுவுல வரலாற்றுல பொன்னெழுத்தூகளால் பொறிக்கப்பட வேண்டிய சம்பவம் நடந்தது. என் தீவிர பற்றின் காரணமாய் சங்கத்தில் கொ.ப.செ பதவி கொடுத்து கவுரவித்தார்கள் போர்படை தளபதியும், பொருளாளரும். இந்த மூன்றரை வருஷத்துலா 113 followers (நான் கிழிக்கறதுக்கு இது பெரிய விஷயம்). அதே மாதிரி அதிகப்படியா ஒரு பதிவுக்கு 168 கமெண்ட் வந்தது (என்னாது கும்மியலாம் கணக்குல வராதா?). சக பதிவர்களான ச்சின்னப்பையன், நர்சிம் மற்றும் அ.மு.செய்யது ஆகியோரு என்னோட சில பதிவுகளை நல்லாருக்குன்னு சொல்லி வலைச்சரத்துல அறிமுகப்படுத்தியிருக்காங்க. ஓரே ஒரு பதிவு (எனக்குத் தெரிஞ்சு) யூத் விகடன்ல வந்திருக்கு. அப்புறம் மூணு பதிவு தமிழ்மணம் வாசகர் பரிந்துரைல வந்திருக்கு (ஸப்பா கேப்டன் ரேஞ்சுக்கு புள்ளிவிவரம் கொடுத்தாச்சு).
இதுவரைக்கும் உருப்படியா ஒன்னும் எழுதலன்னாலும் (அதுக்கு தான் நிறைய பேர் இருக்காங்களே. நானும் அப்படியே ஆரம்பிச்சுட்டா மொக்கை யார் போடறது) still i enjoy scribbling (அப்பாடி பிளாக் பேர் வர்ற மாதிரி பார்த்துகிட்டாச்சு). இது மட்டும் தான் எழுதனும்ன்னு ஒரு எல்லை இல்லாம, நான் கேட்ட, பார்த்த, என்னை பாதித்த, எனக்குப் பிடித்த, எனக்கு தோன்றிய அனைத்தையும் பகிர்ந்துகொள்ள நல்லதொரு இடமா இது இருக்கு. அடுத்த வருஷத்தோட நான்கு வருடங்களாகிறது பதிவெழுத வந்து. இன்னதான்னு இல்லாம எல்லா விஷயங்களையும் அலசி காயப்போடுகிற பதிவுலகம் நிறைய சுவாரசியங்களை எனக்கு கொடுத்துகிட்டே இருக்கு.
உங்களோடு ஆதரவும் தொடரும்கிற நம்பிக்கையோடு...
December 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
அதுக்கு தான் நிறைய பேர் இருக்காங்களே. நானும் அப்படியே ஆரம்பிச்சுட்டா மொக்கை யார் போடறது]]
அட நம்ம கட்சி
இன்னதான்னு இல்லாம எல்லா விஷயங்களையும் அலசி காயப்போடுகிற பதிவுலகம் நிறைய சுவாரசியங்களை எனக்கு கொடுத்துகிட்டே இருக்கு.]]
உண்மைதான்.
சொல்றதை சுவாரசியமா சொல்றது உங்க ஸ்பெஷாலிட்டி. இன்னும் நிறைய எழுதுங்க. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ஐ.எஸ்.டி. வேற எழுதனும் வித்யா
ஹா ஹா... தொடர்ந்து மொக்க போட வாழ்த்துக்கள்...
உங்க பதிவுலக வரலாற்றில் மிக மிக முக்கியமான மைல்கல்லான, கொ.ப.செ பதவி பற்றி எதுவும் சொல்லாததால் நான் வெளிநடப்பு செய்கிறேன்
உங்கள் எல்லா பதிவுகளிலும் ஒரு இயல்பான நேரில் பேசும் தொனியிருக்கும். நகைச்சுவையாக நீங்கள் எழுதும் பாணி அருமை. ஹோட்டல்கள் பற்றி எழுதும் பதிவுகளைத்தவிர மற்ற அனைத்தும் 2ஆம் தடவை படிக்க தூண்டும். வாழ்த்துக்கள்.
எஸ்.டி.டீ Super o super..
treat??????????
தொடர்ந்து எழுதுங்க வித்யா. மொக்கைகளுக்கு நடுவிலே கொஞ்சம் ஸ்டைலிஷான ”நான் மேகா” மாதிரியான கதைகளும் போடுங்க. வாழ்த்துகள்.
அடுத்த வருட முடிவில் மூன்றரை வருஷம் தான் ஆகுது. புள்ளிவிவரங்கள் கரீட்டா இருக்கணும் அமைச்சரே...
நன்றி ஜமால்.
நன்றி நவாஸுதீன்.
நன்றி பேநாமூடி.
நன்றி கார்க்கி (பதிவ ஒழுங்கா படிங்க. எப்பூடி?)
நன்றி பின்னோக்கி.
நன்றி ராஜி.
நன்றி கேவீஆர் (நீங்க இங்லீஷ்ல சொல்றீங்க. நான் தமிழ்ல சொல்றேன். அதானே?)
தொடர்ந்து எழுதுங்க
நிறைய எழுதுங்க
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் :)
நன்றி நர்சிம்.
நன்றி டி.வி.ஆர் சார்.
நன்றி விஜய்.
வாழ்த்துக்கள்
நானும் உங்களுக்கு போட்டியாக......
http://nvnkmr.blogspot.com/2009/12/blog-post.html
( இது முடிவல்ல ஆரம்பம் )
வாழ்த்துக்கள்.
உங்க வரலாறு நல்லாயிருக்குங்க, தொடர்ந்து கலக்குங்க..
வாழ்த்துக்கள்.
தொடர்ந்து அடிக்கடி எழுதுங்க. முன்னாடி பையனை பத்தி அப்பப்ப எழுதுவீங்க. அதையும் மறுபடியும் ஆரம்பிங்க.
//S.A. நவாஸுதீன் said...
சொல்றதை சுவாரசியமா சொல்றது உங்க ஸ்பெஷாலிட்டி. இன்னும் நிறைய எழுதுங்க. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ஐ.எஸ்.டி. வேற எழுதனும் வித்யா//
Repeating
//அதிகப்படியா ஒரு பதிவுக்கு 168 கமெண்ட் வந்தது//
என்னது ஒரு பதிவுக்கா????
இதுவரைக்கும் நான் எழுதின எல்லா பதிவுகளோட கமெண்ட்ஸ் எண்ணிக்கையை கூட்டினாலே 168 வரலை:(
என்னோட ஃபேவரைட் "கொட்டிக்கலாம் வாங்க"தான், தொடர்ந்து எழுதுங்க, வாழ்த்துக்கள்!
தொடர்ந்து நிறைய எழுதுங்க.
நன்றி நவீன்குமார்.
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி சரவணக்குமார்.
நன்றி மணிகண்டன் (அவனப் பத்தி மட்டும் தான் எழுதனும்ங்கற அளவுக்கு இருக்கு சேட்டை)
நன்றி நேசமித்ரன்.
நன்றி குறும்பன் (அது ஒரு கனாக்காலம். இப்போ 10லயே முக்க ஆரம்பிக்குது)
நன்றி சின்ன அம்மிணி.
I like your sense of humour the most ... keep up the good work ..
ஆமா .. உங்க பையன் ஸ்கூல் க்கு போகும் போது "காவேரியை ரிலீஸ் செய்கிறான்" ன்னு சொன்னீங்களே ... பயபுள்ள ஒழுங்கா ஸ்கூல் க்கு போறானா இப்பவெல்லாம் ??
நிச்சயம் நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க. சந்தேகமே வேண்டாம். வெரைட்டியா எழுதுறீங்க. அதான் சிறப்பா இருக்கு. வாழ்த்துக்கள்.
விக்கி இதே தொடர் பதிவுக்கு என்னையும் கூப்பிட்டு நானும் எழுதியாச்சு
ஆதரவு தொடரும் தொடரும் முன்ன எழுதியது போல நிறைய எழுதுங்க வித்யா
//அதே மாதிரி அதிகப்படியா ஒரு பதிவுக்கு 168 கமெண்ட் வந்தது (என்னாது கும்மியலாம் கணக்குல வராதா?).//
எந்த பதிவுன்னு தேடி பார்த்தா ஆஹா நாம போட்ட கும்மி :). திரும்ப அந்த நாள் ஞாபகம் வந்து போச்சு நன்றி வித்யா
நன்றி கோகுல்.
நன்றி மோகன்குமார்.
நன்றி தாரணி பிரியா (செமா கும்மியில்ல)
//அடுத்த வருஷத்தோட நான்கு வருடங்களாகிறது பதிவெழுத வந்து//
மேலும் மேலும் தொடரட்டும்.... வாழ்த்துக்கள்
Hi Vidhya, I have given a prestigious award to you in my blog. Please see.
neenga nala comedyah eluthiringa
இவ்வளவு சின்ன பதிவிலும், அதுவும் நினைவு கூறுதலில் கூட சில இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்துவிட்டீர்கள். அதுவே உங்கள் எழுத்தின் சிறப்பு. பயணம் தொடரட்டும்.!
நன்றி உழவன்.
நன்றி மோகன்குமார்.
நன்றி ஏஞ்சல்.
நன்றி ஆதி.
Post a Comment