December 15, 2009

தெலுங்கானா... ஆனா??

தெலுங்கானா என தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு இசைந்தது என்ற செய்தி வெளியானவுடன், கூர்க்காலேண்ட் என ஒரு கோஷமும், காரைக்கால் என ஒரு கோஷமும், கூர்க் என கர்நாடகாவிலிருந்து குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இதன் உச்சமாக உ.பி மாநிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமென அம்மாநில முதல்வர் மாயாவதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று வீட்டில் நடந்த விவாதங்களின் விளைவே இப்பதிவு.

ஆந்திராவை விட்டு தெலுங்கானாவை பிரிப்பது அவசியமா எனக் கேட்டால் இல்லை என்பதே என் கருத்தாகும். முதலில் இம்மாதிரி மாநிலங்களை பிரிப்பதால் நிர்வாக செலவு கூடுதலாகும். முதலமைச்சர் முதற்கொண்டு முனிசிபாலிட்டி ஆபிசர் வரை சம்பளம், இத்யாதி இத்யாதி. மத்திய அரசு துறைகளின் பணிச்சுமை கூடுதலாகும் (இருக்குற வேலையையே எவனும் ஒழுங்கா பாக்க மாட்டேங்கறாங்க). மாநில வாரியான இடஒதுக்கீடுகள், நிதி ஒதுக்கீடுகள் என பல பிரச்சனைகள் எழும். இதை விட அதிமுக்கியமானது. ஒரு பிள்ளை அழுதால் சுத்தியுள்ள அத்தனையும் அழும். அது மாதிரி ஆளாளுக்கு கூவினால்? தமிழ்நாடு தனி நாடாகலாம் (பெரிய குடும்பமெனில் கண்டிப்பாக ஜனாதிபதி பதவி உண்டு. பெரியவர் பதவியில்லாமல் கஷ்டப்படுவார்). வடக்கு தெற்கு என இரு மாநிலங்களாய் பிரிக்கப்படலாம். இரு பிள்ளைகளோ, உடன்பிறவா சகோதரிகளோ, தந்தையும் மகனுமோ ஆளுக்கொரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆகலாம். நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறது. இப்படி மொழி/ஜாதி/ வாரியாக பிரிக்கும்போது, மக்களிடையே மேன்மேலும் துவேஷம் ஏற்படுவதற்கான அபாயமும் இருக்கிறது. ஏற்கனவே மும்பை மராத்தியர்களுக்கே என்ற பிரச்சனைப் போல் தெலுங்கானாவில் வேறு யாரும் இருக்கக்கூடாது என்றால்? (சந்திரசேகர் ராவ் இப்பொழுதே ஹைதராபாத்தை விட்டுத் தர மாட்டோம் என்கிறார். வடிவேலு ஒரு படத்துல சொல்ற மாதிரி மூக்கு விடைப்பா இருக்கறதால இப்படியெல்லாம் பண்றாரோ??!!). இம்மாதிரியே வெளியாட்களை தடுத்தால், பெருகிவரும் ஜனத்தொகையில் வேலைவாய்ப்புகள் பெருமளவில் குறையாதா? எத்தனை நாளுக்குத் தான் குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்ட முடியும்?

சரி பிரிக்கவேயில்லையென்றாலும் அதே குண்டு சட்டி தானே? பீஹாரிலிருந்து 2000ஆம் ஆண்டு தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது ஜார்கண்ட். பிரிக்கப்பட்டதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று பழங்குடி மக்களின் முன்னேற்றம். அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டுமென்பதே. மற்றொன்று அபரிதமான கனிம வளங்களை (இந்தியாவில் கனிம வள உற்பத்தியில் முண்ணனி வகிக்கும் மாநிலமிது) பெற்ற இப்பகுதியை பிரிப்பதால் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பங்களிப்பதோடு அம்மக்களின் வாழ்விலும் மாற்றம் கொண்டுவரலாம் என்பதாலும். அதற்கேற்றார் போல் 2000 ஆம் ஆண்டிலிருந்து அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 14.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது (தகவல் - http://www.ibef.org). ஆனாலும் இது எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி அல்ல என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. மதுகோடா (4000 கோடி. சொக்கா சொக்கா எத்தனி சைபர். ஹூம்ம்ம்ம்), சிபு சோரன் என மோசமான அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கியும் ஒரளவுக்குத் தடுமாறி முன்னேறியிருப்பதற்கான ஒரே காரணம் இயற்கை வளங்கள். இந்த வளர்ச்சி தெலுங்கானாவில் சாத்தியப்படாதா எனக் கேட்டால் கஷ்டம் தான் என்பது என் எண்ணம். ஏற்கனவே ஓரளவுக்கு முன்னேறிய இடத்தில் இண்வெஸ்ட் பண்ணும்போது ரிடர்ன்ஸ் ரொம்ப ஸ்லோவாக இருக்கும் தானே. நம் நாடு இப்போது இருக்கும் நிலையில் இப்படிப்பட்ட இண்வெஸ்ட்மெண்டுகள் கொஞ்சம் தேவையில்லாதது தானே?

பிரிக்காமலே/கண்டுக்கொள்ளாமலே இருந்தால் வளர்ச்சி என்னாகும்? அது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். நாங்கள் சவலைப் பிள்ளை போலாகி வருகிறோம் என புலம்பல்கள். சவலைப் பிள்ளைகளை ஆரோக்கியமாக்குவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சொந்த மாநிலத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று வருத்தங்கள். ஏன் என யாரேனும் யோசிக்கிறார்களா? திறமைசாலிகளை வெளியிலிருந்து வரவழைக்க காரணம் உள்ளூர்வாசிகளுக்கு மேல் மாடியில் சரக்கு பத்தவில்லை என்பது தானே. அனைவருக்கும் அடிப்படைத் தேவையான கல்வியை பாகுபாடில்லாமல் வழங்குவதன் மூலம் மட்டுமே பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சரி செய்ய முடியும். தனித் தெலுங்கானா கேட்டு போராடுபவர்கள் எங்கள் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்கிறார்கள். புறக்கணிப்பிற்கு முக்கிய/அடிப்படை காரணமான போதிய கல்வி அறிவு இல்லாததற்கு என்ன செய்ய போகிறார்கள். போராடுபவர்கள் தெலுங்கானாவில் இருக்கும் பள்ளி/கல்லூரிகளில் எங்களுக்கு முன்னுரிமை (தகுதி அடிப்படையில் மட்டுமே) வழங்க வேண்டும் என போராடினால் ஒரு நியாயம் இருக்கிறது. நமக்கு முந்தைய தலைமுறைகள் சொத்து சேர்ப்பதில் காட்டிய ஆர்வத்தை கல்வி கொடுப்பதில் காட்டத் தவறிவிட்டார்கள் (மிகச் சிலரே என்றாலும் தாக்கம் பெரிது). நாமும் அத்தவறை செய்யாமலிருப்போம். சரியான கல்வி மட்டுமே மக்களையும் நாட்டையும் வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும்.

டிஸ்கி : இந்த இடுகை முழுவதும் என் சொந்தக் கருத்து மட்டுமே.

21 comments:

நர்சிம் said...

இது போன்ற பதிவுகளை எழுதுங்கள் வித்யா.

விக்னேஷ்வரி said...

நல்ல பதிவு வித்யா. நல்லா வந்திருக்கு.

க‌ரிச‌ல்கார‌ன் said...

லிப‌ரான் க‌மிஷ‌ன் வ‌ந்தது ஸ்பெக்ட்ர‌மை ம‌ற‌ந்தார்க‌ள்
தெலுங்கானா வ‌ந்தது லிப‌ரான் க‌மிஷ‌னை ம‌ற‌ந்தார்க‌ள்
வேறு ஏதாவ‌து வ‌ந்தால் தெலுங்கானாவை ம‌ற‌ந்து விடுவார்க‌ள்
பாவ‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள் இவ‌ர்க‌ளை நம்பி மோச‌ம் போகிறார்க‌ள்

S.A. நவாஸுதீன் said...

கூர்க்காலேண்ட் இப்போது இந்த போராட்டத்தை கைவிட்டு விட்டார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க வும் அ.தி.மு.க வும் இந்த விஷயதில் ஒரே கருத்தைக் கொண்டிருப்பது சந்தோசமே. ராமதாஸ் மீடியாவில் வருவதற்கு வேறு காரணங்கள் இல்லாததால் இதை கையில் எடுத்திருப்பதாக்த் தெரிகிறது.

நல்ல இடுகை விதயா.

வித்யா said...

நன்றி நர்சிம்.
நன்றி விக்னேஷ்வரி.
நன்றி கரிசல்காரன்.
நன்றி நவாஸுதீன்.

☀நான் ஆதவன்☀ said...

குட் போஸ்ட் :)

Vijay said...

நீங்கள் உங்கள் கருத்தை உங்கள் கோணத்திலிருந்து மட்டுமே ஆராய்கிறீர்கள்! அதனால் உண்மை நிலவரம் என்னவென்று உங்களுக்கோ எனக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். இந்தியா இன்னமும் பல துண்டுகளாக ஆகக்கூடாது என்று நாம் நினைத்தாலும், ஒன்றில் மனதில் கொள்ள வேண்டும். சிறிய மாநிலமாக இருந்தால் நிர்வாகம் மிக சுலபமாக நடைபெறலாம். செலவுகள் முதலில் அதிகமாக இருக்கும். ஆனால் அதை ஒரு முதலீட்டாக எடுத்துக் கொண்டு செயல்பட்டால் நல்லதொரு ஆட்சியை வழங்கலாம். இப்போது தமிழகத்திற்கு நிறைய வெளிநாட்டு முதலீடுகள் வருகிறது. மத்திய அரசும் சில பல கோடிகளை தமிழகத்துக்கென்று ஒதுக்குகிறார்கள். ஆனால் தொழில் வளர்ர்சியென்னவோ சென்னையும் அதன் சுற்றுப் புறங்களில் மட்டுமே நடைபெறுகின்றன. இதனால் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுறம், காரைக்குடி போன்ற மாவட்டங்களில் பெரிதாக வளர்ர்ச்சி ஏதும் ஏற்படுவதில்லை. (வளர்ர்சி என்று நான் சொல்வது தொழில் வளர்ச்சி). இங்குள்ள மக்களெல்லாம் சென்னை போன்ற பெரிய நகரங்கள் நோக்கி படையெடுக்கிறார்கள். முடிவு, சென்னையில் இடத்தட்டுப்பாடு. சிறிய நகரம் / நாடாக இருந்தால் சுலபமாக வளர்ர்ச்சி காட்டலாம் என்பதற்கு சிங்கப்பூர் ஒரு நல்ல உதாரணம். ஆனால் அப்படியொரு வளர்ச்சி ஏற்பட தந்நலமற்ற தலைவர்கள் தேவை.

கே.சி.ஆர் / ராமதாஸ் மாதிரி ஆட்கள் ஊரை ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்களே, அப்படிப்பட்டவர்கள் தான். தன் சுயநலத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

KVR said...

அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பரவலாக்கப்பட்டால் இது போன்ற தனிமாநில கோரிக்கைகள் எழுவது குறையும். நல்ல இடுகை வித்யா.

வித்யா said...

நன்றி ஆதவன்.

நன்றி கேவிஆர் (அடிப்படை வசதிகளை நான் குறிப்பிட தவறிவிட்டேன். நினைவூட்டியமைக்கு நன்றி).

நன்றி விஜய். (சென்னை மட்டுமே வளர காரணம் அங்கு எல்லா வசதிகளும் கிடைக்கிறது என்பதால் தான். நீங்களே சொல்வதுபோல் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வளர்ச்சி தடைப்பட்டால்?? அந்த இடத்தில் இண்வெஸ்ட்மெண்ட் என்பது ரிஸ்கியர் தானே. கேவிஆர் சொல்வதைப் போல் அடிப்படை வசதிகள் வேண்டும். மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட/குறைந்தபட்சம் அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள கல்வி அவசியமாகிறது. இது என் கருத்து தவறெனில் மன்னிக்கவும்).

" உழவன் " " Uzhavan " said...

 
நல்ல கருத்து.
ஏற்கனவே இந்தியா துண்டுதுண்டா கெடக்கு. ஒவ்வொரு மாநிலமும் ஒரு தனி நாடு போலதான் அதிகாரம் பண்ணுது. இந்த லட்சணத்துல் இவங்க வேற இதப் பிரி அதை பிரின்னு.. எங்க போய் முடியப்போகுதோ..

புதுகைத் தென்றல் said...

இது போன்ற பதிவுகளை எழுதுங்கள் வித்யா.//

கன்னா பின்னான்னு மறுக்கா கூவிக்கிறேன். ரொம்ப விரிவா எழுதியிருக்கீங்க

குறும்ப‌ன் said...

//இருக்குற வேலையையே எவனும் ஒழுங்கா பாக்க மாட்டேங்கறாங்க//

200% க‌ரெக்ட்

ம‌க்க‌ளுக்காக‌ பாடுப‌டும் உண்மையான‌ த‌லைவ‌ர்க‌ள் கிடைத்தால் எந்த‌ ஒரு மாநில‌த்தையும் அவ‌ர்க‌ளால் முன்னேற்ற‌ முடியும். ஆனால் அப்படி ஒரு த‌லைவ‌ர் கூட‌ இந்தியாவில் இல்லை என்ப‌துதான் வேத‌னையான‌ விஷ‌ய‌ம்.

இன்னும் எத்த‌னை நாளைக்குத்தான், "சிங்கப்பூருக்கு ஒரு லீ க்வான் யூ" போல் என்று உதார‌ண‌ம் சொல்லிகொண்டிருக்க‌ப்போகிறோமோ, தெரிய‌வில்லை.

ந‌ல்ல‌ ப‌திவு

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இப்போதும் சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு ஏரிக்குள் தலைக்கு மேலே புத்தகங்களைத் தூக்கிப் பிடித்தபடியே பள்ளிக்குச் செல்வதற்காக வருகிறார்கள் மாணவ, மாணவிகளும்.. பொதுமக்களும்..!

இதை என்னன்னு சொல்றது வித்யா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தெலுங்கானா உருவாகக் காரணமே அப்பகுதி மக்களுக்குக் கிடைக்காத வசதிகள் மற்ற பகுதி மக்களுக்குக் கிடைத்ததுதான்..

இதற்கு அரசியல்வியாதிகள்தான் காரணமே ஒழிய பொதுமக்கள் அல்ல..!

Rajalakshmi Pakkirisamy said...

Good Post mam. It came out very well ...

Rajalakshmi Pakkirisamy said...

Good Post mam. It came out very well ...

வித்யா said...

நன்றி உழவன்.

நன்றி அக்கா (நோஓஒ நெவர். அமாவாசை சோறு தினம் கிடைக்காது)

நன்றி குறும்பன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உண்மை தமிழன்.

நன்றி ராஜி.

nvnkmr said...

நான் தமிழ் நாட்டையே 4-5 நாடுகளாக பிரிக்கலாம் என்று நினைக்கிறன்
நம்ம அய்யாவுடைய பேரன் பேத்திக்கு பங்கு கொடுகனுமுள்ள:-):-):-):-)

என்னுடைய கருத்தும் உங்கள் கருத்துதான் அக்கா..........

வித்யா said...

நன்றி நவீன்குமார்.

Senthil Durai T said...

துளுநாடு பத்தி எழுத மறந்து போச்சா ??

வித்யா said...

வருகைக்கு நன்றி செந்தில்குமார். நீங்கள் குறிப்பிடும் விஷயம் பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை.