டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.
டிஸ்கி 2 : இடுகை முழுக்க முழுக்க பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸை பேஸ் பண்ணி எழுதப்பட்டது. உங்களுக்கு மாற்று அனுபவம் ஏற்படுமெனில் அதற்கும் கம்பேனி பொறுப்பாகாது:)
கலிங்கா
எங்கள் வீட்டில் எல்லாரையும் விட நான் அதிகம் காரம் சேர்த்துக்கொள்வேன். அது ஏனென்று தெரியவில்லை. ஆனால் ரகுவிற்கு காரம் மிதமாய் இருக்கனும். ஜூனியர் கிட்டத்தட்ட என்னை மாதிரி. மிளகு அப்பளத்தை ரவுண்டு கட்டுகிறான். ஆந்திரா சமையலில் மட்டும்தான் காரம் தூக்கலாக இருக்கிறது. காலேஜ் நாட்களில் மதனப்பள்ளியிலுள்ள நண்பர்கள் வீட்டிற்கு மூன்று நாள் சுற்றுலா சென்றிருந்தோம். அப்போது ஹர்ஷா வீட்டில் போட்ட புளியோதரை காரசாரமாக நன்றாக இருந்தது. சாப்பிட்டுக்கொண்டிருந்த சௌராஷ்ட்ரிய நண்பன் ஒருவனுக்கு முகம் சிவந்து மூக்கில் எல்லாம் தண்ணி கொட்டியது. இதைப் பார்த்து ஆண்ட்டி சொன்னது "நீங்கள்ல்லாம் கஷ்டப்படுவீங்கன்னு தான் காரம் ரொம்ப கம்மியா போட்டேன்". சரி ஹோட்டலுக்கு வருவோம். ரொம்ப எதிர்பார்த்து போன இடம் கலிங்கா. தி ரியல் டேஸ்ட் ஆஃப் ஆந்திரா என்கிறார்கள். அப்படித் தெரியவில்லை. முருங்கைக்கீரை சூப்பும், வெங்காய பக்கோடாவும், உருளை ரோஸ்ட்டும் ஆர்டர் செய்தோம். சூப் நன்றாக இருந்தது. ஸ்டார்டர் இரண்டுமே பிலோ ஆவரேஜ் தான். மெயின் கோர்ஸிற்கு ஹைதரபாத் முட்டை பிரியாணியும், கல்தோசையும், கொத்தி வங்காய கூர்ரா (கத்திரிக்காய் மசாலா) ஆர்டர் செய்தோம். கத்திரிக்காய் மசாலா சுடச்சுட புளிப்பும் காரமுமாய் நன்றாக இருந்தது. மற்றவை எல்லாம் ஒ.கே. சாப்பாட்டைவிட இண்டீரியரும் சர்வீசும் நன்றாக இருந்தது.
கெபாப் கோர்ட்
வேளச்சேரியில் இந்த பேரைப் பார்த்தவுடனே போகனும்ன்னு நினைச்சது. கெபாப்ஸ் என்றுமே என் பேவரைட். ரெஸ்டாரெண்ட் நல்ல ஸ்பேஷியசாகவும், கம்ப்ஃர்டபிள் சீட்டிங்குடன் நன்றாக இருக்கிறது. கூடவே மெனுவும். ஒரே ஒரு நெருடல் "Exotic Indian delicacy" மெனுவில் சைனாவுக்கு என்ன வேலை என தெரியவில்லை. Strictly stay away from the chinese menu:)
மெனுவின் இன்னொரு ஸ்பெஷல் அம்சம் லக்னோவி உணவுகள். மிக்ஸ்ட் வெஜிடிபிள் ஷோர்பாவும் (சூப் மாதிரி), வெஜிடபிள் கெபாப் ப்ளாட்டரும் ஆர்டர் செய்தோம். சூப் நன்றாக இருந்தது. அஸார்டட் கெபாபில் 75% பனீர் கெபாப்ஸ். ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாத சுவையில். நன்றாகவே இருந்தது விலையைப் போல் (350 ரூபாய். கெபாப் மட்டும். டூ மச்).
அடுத்து மெயின்கோர்சிற்கு லக்னோவி உல்டா தவா பரோட்டாவும், Dhania Naan, மலாய் கோஃப்தாவும் ஆர்டர் செய்தோம். மூன்றும் தனித்தனியே நன்றாக இருந்தது. கோஃப்தா சரியான காம்பினேஷனாக அமையவில்லை. ஆனால் டேஸ்ட் - ரிச் & க்ரீமி:) Dhania Naan என எதிர்பார்த்ததை புஸ்ஸென்றாக்கும் விதமாக கொத்தமல்லி தூவிய பட்டர் naan. கிர்ர்ர்ர்ர். ஆனால் முதலுக்கு மோசமில்லை.
கடைசியாக உள்ளே தள்ளிய கேரட் ஹல்வாவும், ரப்டியும்(இதுவும் லக்னோ ஸ்பெஷல்) சூப்பர்.
மேலதிக தகவல்கள்
உணவகம் - கலிங்கா; கெபாப் கோர்ட்
இடம் - 100 Feet Bye Pass Road, வேளச்சேரி. கீழே கலிங்காவும் முதல் மாடியில் கெபாப் கோர்ட்டும் உள்ளது
டப்பு - கலிங்கா நினைவில்லை. கெபாப் கோர்ட் 1200 ரூபாய் இருவருக்கு (கெபாப்ஸே 300 ரூபாய் என்பதை கவனத்தில் கொள்க).
பரிந்துரை - கலிங்கா - வேண்டாம்; கெபாப் கோர்ட் - ஒரு தடவை வொர்த் ட்ரையிங்
January 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
படங்கள் அனைத்தும் சாப்பிடத் தூண்டுகின்றன...
இப்படியெல்லாம் சாப்பிட ஆசையாத்தான் இருக்கு. ஆனா....
அடிக்கடி இப்படி ரவுண்ட் அப் நடத்தி பதிவு போடுங்க
4 நாள் சாப்பிட வேண்டாம் போலயிருக்கு. இவ்வளவு ஐயிட்டங்களையும் நீங்கள் ஒருவராக எப்படி சாப்டீங்க ? :)
:(
நன்றி சங்கவி.
நன்றி சின்ன அம்மிணி (இழுக்காதீங்க. ஒரு தடவ தான்).
நன்றி கலா அக்கா (மாசத்துக்கு ஒன்னு இல்ல ரெண்டு தடவ போறது).
நன்றி பின்னோக்கி (ஷப்ப்பா. ஒவ்வொரு முறையும் விளக்க ஆயாசமாக இருக்கிறது. ஒரு சூப், ஸ்டார்டர் மெயின்கோர்ஸ், டெசர்ட் சாப்பிட குழந்தைகளாலும் முடியும். எங்கேயுமே அன்லிமிட்டட் என போடவில்லை. மேலும்.. சரி வேணாம் விடுங்க)
நன்றி ராஜி (ரொம்ப அழாதீங்க. உங்க வாக்கு ஞாபகம் இருக்கு தானே).
சென்னைக்கு வீட்டை மாத்திடலாமான்னு யோசிக்கறேன் :))
வித்யா ராஜஸ்தானி ஃபுட் சாப்பிட்டிருக்கீங்களா.... கண்ணுல இருந்து தண்ணி வரும். காதுல இருந்து புகை வரும். அவ்ளோ காரம், ஆனா வெரி டேஸ்டி.
ரப்டி நார்த் முழுக்க ஃபேமசுங்க.
ரொம்ப நாளைக்கப்புறம் நல்லா கொட்டிக்கிட்டீங்க போல. :)
சர்தாங்க........ இதுக்குனே சென்னையில் ரவுண்டு கட்டி வரணும் போல.
நல்லா எழுது இருக்கீங்க.
இட்லிய சாப்பிட்டு வந்து உங்க பதிவ படிச்சா......நல்லாருங்கப்பு!
ஹ்ம்ம். சென்னைவாசிகள் எஞ்சா....ய்
//என்னை மாதிரி. மிளகு அப்பளத்தை ரவுண்டு கட்டுகிறான்.//
அப்பளம் ஏற்கனவே ரௌண்டாதன் இருக்கும்... மறுபடியும் ஏன் ரௌண்டாக்கணும்..
:))
//டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.//
naan வயிற்றெரிச்சல் pattuten
சின்ன அம்மிணி சொல்வதை போல், இதையெல்லாம் சாப்பிட ஆசையாத்தான் இருக்கு... ஆனா...
ரெண்டு பேருக்கு 1200 ஆ!!??? இப்படி எல்லாரும் கேக்கறாங்க...
பரவாயில்ல.... எங்க எல்லார் சார்பிலும் சாப்பிட்டு வந்து, அதை அழகாக வர்ணித்து, போட்டோஸ் எல்லாம் புடிச்சு போட்டு... அட போங்க... என்னத்த சாப்பிட்டு, அதை எழுதி...என்னத்த படிச்சு...
அனைவருக்கும் நன்றி.
சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேங்க. டென்ஷன் ஆகிட்டீங்களே. புரியுதுங்க. நன்றி.
ரெண்டு பேருக்கு 1200-ன்னு சொல்லிட்டு, கேபாப் போகலாம்குறீங்க; உடனடியா ரு.1800 அனுப்பி வைக்கவும் (நாங்க பொண்ணும் சேர்த்து மூணு பேராக்கும்):))
Post a Comment