February 1, 2010

கன்னியாகுமாரியில் ஆயிரத்தில் ஒருத்தி

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக பிளான் செய்த ப்ரோகிராம் தடைகளை மீறி நன்றாக ஒர்க் அவுட் ஆனது. ஜனவரி 27 தோழி கல்யாணத்திற்காக இரண்டு நாட்கள் நாகர்கோவில்/கன்யாகுமாரி சென்று வந்தேன் நண்பர்களுடன். ஜூனியர் சமர்த்தாக பாட்டியிடம் இருந்துகொண்டான். சரியாக ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் காலேஜ் சென்று வந்தது போன்ற உணர்வு. மூன்று பேர் மிஸ்ஸிங் எங்கள் கேங்கில். அந்த குறை அவ்வப்போது தெரிந்தது. திங்கள் மாலையில் இருந்து வியாழன் காலை வரை எந்தக் கவலையுமில்லாமல் (ஜூனியர் என்ன செய்கிறான் என்பதை தவிர) இருந்தேன். சூப்பர் விருந்தோம்பல். தங்குவதற்கு ஏசி அறை, மூன்று வேளை சாப்பாடும் வீட்டில் தான் சாப்பிடவேண்டும் என்ற அன்புக் கட்டளை, ஸ்டேஷனில் இறங்கியதும் ஒதுக்கப்பட்ட இன்னோவா கார் மறுபடி ஸ்டேஷனில் ட்ராப் செய்த வரை எங்களுக்காகவே ஒதுக்கப்பட்டது என அங்கிள் தூள் பண்ணிவிட்டார்.
**********

நாங்கள் சென்ற இடம் சரியில்லையா இல்ல இடமே அப்படித்தானான்னு தெரியல. நாகர்கோவிலில் இருந்து ஒரு மணி நேரம் பயணத்தில் வருகிறது திற்பரப்பு அருவி (அப்படி சொல்லலாம தெரியல). அருவியப் பார்த்தவுடனே பிரெண்ட் சொன்னது "எங்க வீட்டு ஷவர்ல இத விட அதிகமா தண்ணி கொட்டும்". உருப்படியா பார்த்தது குமரியில் சூர்ய அஸ்தமனம். புகைப்படங்கள் அடுத்த பதிவில்.
***********

ஏற்கனவே சொன்னது போல் காலேஜில் இருந்த உணர்வே இருந்தது, ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டு பழங்கதைகள் பேசி என ஜாலியாக போனது. அதிகமாக பேசப்பட்ட மேட்டர் யார்யாருக்கு கல்யாணம். யார் காதல் கல்யாணத்தில் முடிந்தது என்பதுதான். நான்கு வருடங்கள் தெரியாமலே இருந்த பல காதல் கதைகளும் வெளிச்சத்திற்கு வந்தன.
***********

பதிவுலகமே துவைத்து தொங்க விட்ட இரு படங்களை இந்த வாரத்தில் பார்த்தாகிவிட்டது. ஒன்று விரும்பிப் பார்த்தது. நாகர்கோவிலில் ஆயிரத்தில் ஒருவன். படம் என் பார்வையில்.. சரி வேண்டாம் விடுங்க. ஐ லைக்ட் இட். இன்னொன்ன்று டாக்டர் நடித்தது. என்னது படத்த பத்தி ஏதாவது சொல்லனுமா? ப்ளீஸ் வேண்டாம். நான் அழுதுடுவேன்.
**********

ட்ரெய்னில் திரும்பியபோது ஆயிரத்தில் ஒருவன் ஸ்பூஃப் மேட்டரும், இளைய தளபதி டாக்டர் ஒண்டிப்புலிக்கான ஸ்க்ரிப்ட் ஒன்றும் கிடைத்தது. கூடிய விரைவில் பட்டி டிங்கரி பார்த்து வலையேற்றப்படும். ட்ரெய்னில் நாங்கள் போட்ட மொக்கையைத் தாங்கிக் கொண்டிருந்த பக்கத்து சீட்டு அங்கிளுக்கும், எங்களை இறக்கிவிடாமல் பெரிய மனதுடன் நடந்துகொண்ட ரெயில்வே போலீசார் இருவருக்கும், அந்தப் பதிவுகளை டெடிகேட் செய்யலாமென்றிருக்கிறேன்.
**********

21 comments:

எறும்பு said...

//கூடிய விரைவில் பட்டி டிங்கரி பார்த்து வலையேற்றப்படும்.//

நாங்களும் கும்முவதற்கு தயாராக இருக்கிறோம்.
:)

Anonymous said...

//இன்னொன்ன்று டாக்டர் நடித்தது//

உங்க தைரியத்தை பாராட்டறேன். படம் பாத்து இன்னும் தெளிவா வேற இருக்கீங்க :)

S.A. நவாஸுதீன் said...

பயணம் சிறப்பாக சந்தோசமாக அமைந்தது எங்களுக்கும் சந்தோசம்.

(அடுத்து ஒரு கலக்கல் காமெடி பதிவு ஒன்னு வரப்போற சந்தோசம் எங்களுக்கு இப்பவே தொடங்கியாச்சு. சீக்கிறம் டிங்கரிங் வேலை முடிச்சுட்டு ரிலீஸ் பண்ணுங்க.)

Raghu said...

//ஐ லைக்ட் இட்//

த‌மிழ்ல‌ புதுக்க‌ள‌ம், இது ஒண்ணுதான் வித்தியாச‌ம். மத்த‌ப‌டி ஏக‌ப்ப‌ட்ட‌ ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளோட‌ காப்பிங்க‌ ஆ.ஓ. என்ன‌ சொல்ற‌து, opinion differs அவ்ளோதான்!

டாக்ட‌ரை கைப்புள்ள‌ ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்க‌:)))

pudugaithendral said...

ட்ரெய்னில் நாங்கள் போட்ட மொக்கையைத் தாங்கிக் கொண்டிருந்த பக்கத்து சீட்டு அங்கிளுக்கும், எங்களை இறக்கிவிடாமல் பெரிய மனதுடன் நடந்துகொண்ட ரெயில்வே போலீசார் இருவருக்கும், அந்தப் பதிவுகளை டெடிகேட் செய்யலாமென்றிருக்கிறேன்.//

நல்லா ரீசார்ஜ் ஆகி வந்திருக்கீங்க போல இருக்கு. குட்

ஹுஸைனம்மா said...

//நாங்கள் சென்ற இடம் சரியில்லையா இல்ல இடமே அப்படித்தானான்னு தெரியல. //

என்ன இப்படி சொல்லிட்டீங்க? கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாவுக்கு நல்லாருக்கும்; நகரத்தின் வழமையான ஹை-ஃபைக்களிலிருந்து விலகி ஒரு எளிமையான அனுபவமாயிருக்கும்.

ஷவர்ல எவ்வளவு வேணா தண்ணி வரலாம்; இயற்கையா வர்றது மாதிரி ஆகுமா? ஜனவரிங்கிறதால தண்ணி குறைவாயிருந்துதோ என்னவோ? நானும் போனதில்ல அங்க இதுவரை.

தாரணி பிரியா said...

//புகைப்படங்கள் அடுத்த பதிவில் //

ஹை அட்வான்ஸா நான் பார்த்தாச்செ

Vidhya Chandrasekaran said...

நன்றி எறும்பு.
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி நவாஸுதீன்.
நன்றி குறும்பன்.
நன்றி கலா அக்கா.

நன்றி ஹுஸைனம்மா (நீங்க அங்கனவோ?? நான் பார்க்கலைன்னு தாங்க சொன்னேன்)

நன்றி தாரணி பிரியா (நீங்க பார்த்தது ட்ரெலர் தாங்க. மெயின் பிக்சர் இனிமே தான்:)

"உழவன்" "Uzhavan" said...

திற்பரப்புல தண்ணியே வரலயா? பொதுவா அங்க நல்லா இருக்குமே.. உங்க நேரம்.. போட்டிங் போனீங்களா?
சீக்கிரம் குமரி அஸ்தமணம் காட்டுங்க.. பார்த்து ரொம்ப நாளாச்ச்சு

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க மேடம்.

Chitra said...

ட்ரெய்னில் நாங்கள் போட்ட மொக்கையைத் தாங்கிக் கொண்டிருந்த பக்கத்து சீட்டு அங்கிளுக்கும், எங்களை இறக்கிவிடாமல் பெரிய மனதுடன் நடந்துகொண்ட ரெயில்வே போலீசார் இருவருக்கும், அந்தப் பதிவுகளை டெடிகேட் செய்யலாமென்றிருக்கிறேன்.

............... ha,ha,ha,.....

Vidhya Chandrasekaran said...

நன்றி உழவன்.
நன்றி நர்சிம்.
நன்றி சித்ரா.

Rajalakshmi Pakkirisamy said...

//ஐ லைக்ட் இட். //

ok ok...

//கூடிய விரைவில் பட்டி டிங்கரி பார்த்து வலையேற்றப்படும்.//

:))))))))

Sakthi said...

oho

sathishsangkavi.blogspot.com said...

உங்கள் எழுத்து நடை அழகு...

Sara Suresh said...

எங்க மாவட்டத்துக்கு போயிருக்கீங்க.
எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற சொத்தவிளை கடற்கரைக்கு ஏன் போகல?

Vidhya Chandrasekaran said...

நன்றி ராஜி.
நன்றி சக்தி.
நன்றி சங்கவி.
நன்றி சக்தி (இருந்தது ஒரே நாளுங்க. அடுத்த தடவை போனா கவர் பண்ணிடறேன்)

Vidhya Chandrasekaran said...

நன்றி சாரா.

விக்னேஷ்வரி said...

மூன்று வேளை சாப்பாடும் வீட்டில் தான் சாப்பிடவேண்டும் என்ற அன்புக் கட்டளை //
இது போதாதா உங்களுக்கு... ;)

என்னது படத்த பத்தி ஏதாவது சொல்லனுமா? ப்ளீஸ் வேண்டாம். நான் அழுதுடுவேன். //
ஹாஹாஹா... பொறுமைசாலிங்க நீங்க.

எங்களை இறக்கிவிடாமல் பெரிய மனதுடன் நடந்துகொண்ட ரெயில்வே போலீசார் இருவருக்கும், அந்தப் பதிவுகளை டெடிகேட் செய்யலாமென்றிருக்கிறேன். //
தூள். :)

Vidhya Chandrasekaran said...

நன்றி விக்கி.

சாந்தி மாரியப்பன் said...

ஷவரைவிட குறைவா தண்ணி வந்தாலும் வருஷம் முழுக்க அருவி கொட்டுற இடம்ங்க அது. ஜூன், ஜூலையில போய்ப்பாருங்க.. அசந்துடுவீங்க.