February 15, 2010

பாராட்டு விழா - I'm Lovin it..

ஷங்கர் - எஹ்ஸான் - லாய் கூட்டணியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. Karthik calling karthik படத்தில் Uff teri ada பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது. படத்தையும் பார்க்கவேண்டும். இரண்டு காரணங்கள். ஒன்று ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது. இரண்டாவது பஃர்ஹான் அக்தர் மற்றும் தீபிகா படுகோன். ரெண்டு பேரையும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். பார்க்கணும். பார்ப்போம்:)
*********

நாணயம் படத்தில் எஸ்.பி.பி சித்ரா காம்பினேஷனில் "நான் போகிறேன் மேலே" நிஜமாகவே மேலே போக வைக்கிறது. சித்ரா மேடம் மறுபடியும் கலக்கியிருக்கிறார்கள். அதே போல் விண்ணைத் தாண்டி வருவாயாவில் ஆரோமலே பாடல் சூப்பர். வித்தியாசமான பீலிங் தருகிறது. உயிரேவில் வரும் நெஞ்சினிலே பாட்டில் வரும் மலையாள வரிகள் பிடித்திருந்தது போலவே இதுவும். கௌதம் வி ஆர் வெயிட்டிங் பாஃர் அ விசுவல் ட்ரீட். சொதப்பிடாதீங்க சாமி.
***********

தம்பியிடம் பேசலாமென போன் போட்டேன். தியேட்டரில் இருக்கிறேன் என துண்டித்தான்.
மறுநாள் அவனே பேசினான். வழக்கமான குசலம் விசாரித்தப்பின்

என்ன படம்டா?

அசல்

எப்படி இருக்கு?

ம்ம்ம். ஒரு தடவை கஷ்டப்பட்டு பார்க்கலாம்.

கிர்ர்ர். எப்படியெல்லாம் ரிவ்யூ கொடுக்கிறாங்க
**********

டி.நகரில் பிரமாண்ட சரவணா ஸ்டோர்ஸ் பக்கத்தில் இருக்கும் இரண்டு மூன்று கடைகளை இடித்துவிட்டு அந்த இடத்தை நடிகர் சங்கத்திற்கு எழுதித்தரலாமென்றிருக்கிறேன். எனக்கும் பாராட்டு விழா எடுப்பார்களா? நன்றி சொல்லி விளம்பரம் கொடுத்தோமா, சால்வையப் போத்துனோமான்னு இல்லாமா. ஹுக்கும். விரைவில் முற்றும் துறந்த??!! ஸ்ரீஸ்ரீ ரகசியானந்தமையின் பரவச நடனம் கலைஞர் டிவியிலோ, இசையருவியிலோ காணக் கிடைக்கும் பாக்கியம் கிட்டும். ஜெய் ரகசியானந்தமையி. இந்த விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டே வள்ளுவர் கோட்டம் பக்கம் போனால் ஒரே காக்கி மயம். என்னவென்று விசாரித்தால் ஜெகத்ரட்சகன் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிச்சதற்காக முதல்வருக்கு பாராட்டு விழா எடுக்கிறாராம். ஆணியே புடுங்க வேணாம் போ!!!
*************

இடத்தைப் பத்தி பேசியதும் போன மாதம் நடந்தது நினைவுக்கு வருகிறது. வேளச்சேரி சதர்லேண்ட் எதிரே இருக்கும் செல்போன் டவரில் ஒரு ஆள் ஏறிக்கொண்டு குதிக்கப் போவதாக அழிச்சாட்டியம் செய்துக்கொண்டிருந்தார். தீ அணைப்பு வண்டி, போலீஸ் என ஒரே அல்லோல்கலப்பட்டது ஏற்கனவே அப்படி இருக்கும் சாலை. மாலை ஆட்டோக்காரரிடம் ஆளை இறக்கிட்டாங்களான்னு கேட்டேன். இறக்கிட்டாங்க. நீலாங்கரையாம். ஸ்ரீபெரும்புதூரில் அவருடைய நிலத்தை ஆளுங்கட்சி ஆளுங்க புடுங்கிக்கிட்டாங்களாம் என்றார். பாவமாய் இருந்தது. ஆங். மேலே இருக்கிற பிட்டுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ:)
**************

ஓப்பனிங் ஷார்ட்லி என்ற அறிவிப்போடு வீட்டுப் பக்கத்தில் மெக்டொனால்ட்ச் மராமத்து வேலைகள் நடக்குது. டில்லிக்கு காலேஜ் டூர் போயிருந்தபோது அங்கிருந்து மெக்டொனால்ட்ஸில் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு அஞ்சு ரூவா குடுத்தபோது எரிக்கிற மாதிரி பார்த்தது இன்னும் ஞாபகமிருக்கு. மெக்டோனால்ட்சின் தீவிர ரசிகையில்லை என்றாலும் அவர்களின் மெக் ஆலு டிக்கி ரொம்ப பிடிக்கும். Its raining food in Velachery. வேளச்சேரியைப் பிடிக்க ஆரம்பித்திருப்பதற்கு ஒரே காரணம் எண்ணிலடங்கா விதவிதமான உணவகங்கள். எத்தனை மாதம் இங்கேன்னு பார்ப்போம்.

12 comments:

Chitra said...

பதிவு தொகுப்பு நல்லா இருந்தது, வித்யா. நகைச்சுவைக்கும் குறைவு இல்லை.


மெக் ஆலு tikki ???? ஊருக்கு ஏத்த மாதிரி மெக் மாறுது போல. என்ஜாய்..........

ஹுஸைனம்மா said...

மொத ரெண்டு பேராவும் நம்ம ஏரியா இல்ல - ஸோ, நோ கமெண்ட்ஸ்.

மீதி நாலும் ரசிச்சேன். அதுவும் இடம் மேட்டர் - இலவசங்கள் பெறுவதற்காகவாவது தமிழ்நாட்டில் பிறக்கணுன்னு மற்ற மாநில மக்கள் ஏங்குறாங்களாம்!!

R.Gopi said...

//என்னவென்று விசாரித்தால் ஜெகத்ரட்சகன் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிச்சதற்காக முதல்வருக்கு பாராட்டு விழா எடுக்கிறாராம். ஆணியே புடுங்க வேணாம் போ!!!//

முழு பதிவிற்கு முத்தாய்ப்பே இந்த வரிகள் தாம்...

ஹா...ஹா...ஹா... சிரிப்பு தாங்கல... குட் ஃப்ரைடே இதுவரை வெள்ளிக்கிழமை தான் வந்தது... இது கலைஞர் ஆட்சியின் சாதனைன்னு ஏதாவது விழா பெண்டிங் இருக்கோ என்னவோ?? ஜெகத் அடிக்கற ஜல்லிக்கு ஒரு அளவே இல்லையா??

Raghu said...

வேள‌ச்சேரி விஜ‌ய‌ ந‌க‌ர்ல‌ருந்து த‌ர‌ம‌ணி போற‌ ரோட்ல‌ ஹாட் சிப்ஸ் திற‌ந்திருக்காங்க‌. ஹாட் சிப்ஸ்லாம் நிறைய‌ த‌ட‌வை போயிருப்பீங்க‌தான், ப‌ட் இங்க‌ இட‌ம் தாராள‌மா இருக்கு, பேமிலியோட‌ பொறுமையா உட்கார்ந்து சாப்பிட‌லாம், ஒரு த‌ட‌வை ட்ரை ப‌ண்ணி பாருங்க‌:)

//ஜெகத்ரட்சகன் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிச்சதற்காக முதல்வருக்கு பாராட்டு விழா எடுக்கிறாராம்//

ஜெக‌த்ர‌ட்ச‌க‌ன்கிட்ட‌, க‌லைஞர் "இன்னைக்கு எங்க‌ வீட்டு‌ சாம்பார்ல‌ ப‌ல்லி இருந்த‌துய்யா"ன்னு சொன்னாகூட‌, அத‌ க‌ண்டுபுடிச்ச‌துக்காக‌ ஒரு பாராட்டு விழா எடுப்பார். ப்ரீயா விடுங்க‌:))

"ஆரோம‌லே" - அதெல்லாம் கெள‌த‌ம் நியூயார்க்ல‌ சுத்தி சுத்தி எடுத்திருப்பாரு. யாரு வூட்டு காசு:))

Anonymous said...

சீக்கிரம் மை நேம் இஸ் கான் பாத்துட்டு விமர்சனம் போடுங்க

pudugaithendral said...

சிம்பு படமாச்சேன்னு உள்ளுக்குள் ஒரு உதறல் இருந்தாலும் விண்ணைத்தாண்டி வருவாயா பாக்கணும்னு நினைக்கறேன். விதி எப்படி இருக்கப்போவுதோ.

மெக்டொனால்டின் ஐஸ்கிரீம் ரொம்ப பிடிக்கும். எஞ்சாய் வித்யா

Vidhya Chandrasekaran said...

நன்றி சித்ரா.
நன்றி ஹுஸைனம்மா.
நன்றி கோபி.
நன்றி ரகு.
நன்றி கலா அக்கா.
நன்றி அம்மிணி (இப்போதாங்க தமிழ்ப்படமே பார்த்திருக்கேன்)

விக்னேஷ்வரி said...

Mc Aloo Tikki - My favorite too.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//என்னவென்று விசாரித்தால் ஜெகத்ரட்சகன் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிச்சதற்காக முதல்வருக்கு பாராட்டு விழா எடுக்கிறாராம். ஆணியே புடுங்க வேணாம் போ!!!//


:))))

Rajalakshmi Pakkirisamy said...

Hot Chips in Velachery? Oh nice... Seekiram varen...

In OMR, there s one Nalas right... How s it mam? Have u tried?

Unknown said...

// அவர்களின் மெக் ஆலு டிக்கி ரொம்ப பிடிக்கும். //

எதும் பிரேசில் நாட்டு படமா ???

Vidhya Chandrasekaran said...

நன்றி விக்கி.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி ராஜி.
நன்றி பேநாமூடி.