
சிம்புவின் நண்பராய் வரும் கேமராமேன். ஒரு மாதிரி உடைந்த தமிழில் பேசி கலகலப்பாக்குகிறார். அதுவும் சிம்பு அடிக்கடி சொல்லும் 'உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது நான் மட்டும் ஏன் சார் ஜெஸ்ஸிய லவ் பண்ணேன்?' டயலாக்கை அவர் சொல்லும்போது அட்டகாசம். அதே டயலாக்கை த்ரிஷாவும் கேட்கிறார் வலியோடு. நமக்கும் வலிக்கிறது. ஆலப்புழா காட்சிகளும், த்ரிஷாவின் திருமணம் நின்ற பிறகு த்ரிஷாவின் வீட்டில் வைத்து சிம்புவும் த்ரிஷாவும் பேசும் காட்சிகளும் கொள்ளை அழகு. கே.எஸ்.ரவிக்குமாரின் வசனங்களோடு அடுத்தடுத்த காட்சிகள் வருவது நன்றாக இருக்கிறது. கேரளாவின் அத்தனை அழகையும் மிக அழகாக சிறை பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். இசை. நத்திங் கேன் பி செட். ஆனால் சில பாடல்களை படமாக்குவதில் கொஞ்சம் சறுக்கினார்போல் தெரிகிறது. எனக்கு ஒமனப் பெண்ணே பாட்டை முதலில் கேட்டதை விட விஷுவலோடு கேட்க நன்றாக இருப்பதுபோல் தோன்றுகிறது. ஹோசான்னா கொஞ்சம் டல்தான் பார்க்க. படத்தில் நடுநடுவே கார்த்திக் விண்ணைத்தாண்டி வருவாயான்னு இழையும்போது அடடா சான்சே இல்ல. கிளைமேக்ஸ் எதிர்பாராத ஆனால் நல்ல முடிவு. டிபிகல் கௌதம் மேனன் க்ளைமாக்ஸ். சிம்பு ஏன் படம் முழுக்க பல்லக் கடிச்சுகிட்டே பேசறார்ன்னு தெரியல. அதுவும் பின் மண்டைய அடிக்கடி தடவறது பார்த்தா இந்நேரம் அவருக்கு பின்மண்டை வழுக்கையாயிருக்கனும். அதே மாதிரி திரும்ப திரும்ப கேரக்டர்களின் பெயரை சொல்லிக்கொண்டேயிருப்பது கடுப்பாக இருக்கிறது. படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஆடை வடிவமைப்பாளர் ஆகியோர் மிக முக்கியமான காரணகர்த்தாக்கள்.
காதலிப்பவர்கள், காதலிக்காதவர்கள், காதலிக்கிறோமா என குழப்பத்திலிருக்கும் அனைவரும்
விண்ணைத்தாண்டி வருவாயா - போகலாமே...
12 comments:
:))
உங்க "டச்" இல்லியே இந்த பதிவுல ...
சப்புன்னு இருக்கு ...
அடிக்கடி எழுதுங்க ... "பார்ம்" போய்கிட்டு இருக்கு ...
//கே.எஸ்.ரவிக்குமாரின் வசனங்களோடு அடுத்தடுத்த காட்சிகள் வருவது நன்றாக இருக்கிறது//
இது என்னங்க புது விஷயமா இருக்கு?!
நன்றி மயில்.
நன்றி கோகுல் (முயற்ச்சிக்கிறேன்).
நன்றி விஜயஷங்கர்.
நன்றி ரகு (அவர் டயலாக்ஸின் பாலோ அஃப்பாக வரும் சீன்களை குறிப்பிட்டேன்).
//காதலிப்பவர்கள், காதலிக்காதவர்கள், காதலிக்கிறோமா என குழப்பத்திலிருக்கும் அனைவரும்
விண்ணைத்தாண்டி வருவாயா - போகலாமே//
அப்போ தமிழ்நாட்டிலே இருக்கிற ஆறு கோடியே தொண்ணுத்தொன்பது லட்சத்து தொள்ளாயிரத்துத் தொண்ணுத்தெட்டு பேரும் பார்க்கலாம்ன்னு சொல்றிங்களா?
கோவில் படத்திலும் சிம்பு அடக்கி தான் வாசிச்சு இருப்பார்.
//உங்க "டச்" இல்லியே இந்த பதிவுல ...//
Me too repeatu..
:0
சிம்பு ஏன் படம் முழுக்க பல்லக் கடிச்சுகிட்டே பேசறார்ன்னு தெரியல. அதுவும் பின் மண்டைய அடிக்கடி தடவறது பார்த்தா இந்நேரம் அவருக்கு பின்மண்டை வழுக்கையாயிருக்கனும். அதே மாதிரி திரும்ப திரும்ப கேரக்டர்களின் பெயரை சொல்லிக்கொண்டேயிருப்பது கடுப்பாக இருக்கிறது.
..........ha,ha,ha,..... Vidhya's punch!
நன்றி கேவிஆர் (விளங்கிரும்).
நன்றி எறும்பு.
நன்றி சிவா.
நன்றி சித்ரா.
/*அப்போ தமிழ்நாட்டிலே இருக்கிற ஆறு கோடியே தொண்ணுத்தொன்பது லட்சத்து தொள்ளாயிரத்துத் தொண்ணுத்தெட்டு பேரும் பார்க்கலாம்ன்னு சொல்றிங்களா?
*/
காதலிக்கற மாதிரி நடிக்கறவங்களை சேர்க்கலையே வித்யா :)-
படம் பார்த்தாச்சா... ரகு கூடத் தானே போனீங்க...
கச்சிதம்.
Post a Comment