March 29, 2010

பல்பு வாங்கலயோ பல்பு

சஞ்சு பாட்டிலோட தண்ணி குடிக்காத. தொப்பைல உவ்வா வரும். டம்ளர்ல ஊத்திக்குடி.

(நான் பாட்டிலை வாயில் கவிழ்க்கும்போது) வித்யாம்மா. இந்தா தம்ளர். தொப்பைல உவ்வா வரும்.

பளிச். பளிச்
*****

சின்னு தாத்தாவ கடிக்கக்கூடாது. தாத்தா பாவம். தாத்தாக்கு வலிக்கும்.
சின்னு அப்படியே முழுங்காத. கடிச்சு சாப்பிடு.

ஆணாம். அசம் மம்மு பாவம். அசம் மம்முக்கு அலிக்கும்.

பளிச். பளிச்
*****

தூங்கும்போது பேசக்கூடாது பட்டு. கம்முன்னு தூங்கு.

(படுத்துக்கொண்டு போன் பேசும் என்னருகில் வந்து) ம்மா. கம்முன்னு தூங்கு.

பளிச். பளிச்.
******

ம்மா ச்சிங்க கத.

ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் பட்டு சொல்லுவா. அடிக்கடி சொன்னா வாய் வலிக்கும்.

பட்டு நீ தாத்தாக்கு நரி கத சொல்லேன்.

ஆணாம். ஒன்னுதான். அலிக்கும்.

பளிச். பளிச்
*********

சஞ்சு ஐஸ் வாட்டர் குடிச்சா டாக்டர் நெபுலைசர் வச்சிடுவா.

அப்பா. தண்ணி பாட்டில் எடுத்துக் கொடேன்.

(பிரிட்ஜை திறக்கும் தாத்தாவின் காலை கட்டிக்கொண்டு)

ஆனா தாத்தா. வித்யாம்மா பாவும். தாத்தர் நெபூசர் அச்சுவா.

பளிச். பளிச்.
**********

வாக்கிங் கிளம்பும் தாத்தாவுடன் தானும் செல்வதாக ஒரே அடம்.

சின்னு பெரியவங்கதான் வாக்கிங் போகனும். நீ போனா உனக்கு கால் வலிக்கும்.

சின்னு இறங்கி நடந்து வா. அம்மாக்கு கை வலிக்குது.

ஆணாம். சஞ்சு கால் அலிக்கும். சஞ்சு பாவும்.

பளிச் பளிச்..
***********

வீசிங் வருவதால் சிட்ரஸ் பழங்களை தரவேண்டாமென டாக்டர் கூறியிருக்கிறார். அம்மாவிற்கு சாத்துக்குடி ஜூஸ் குடுத்ததை பார்த்துட்டான். எனக்கு என அழுகை.

பாட்டிக்கு உவ்வா இருக்குல்ல. அதான் மருந்து குடிக்கிறா. ஒகே.

சிறுது நேரம் கழித்து வந்து

ம்மா. சஞ்சுக்கு கால்ல உவ்வா. உவ்வா மருந்து குடு.

பளிச் பளிச்..
***********

ப்ர்ர்ர் என வாயால் வண்டி ஓட்டுவதும், எச்சிலைக்கொண்டு முட்டை விடுவதும் சில நாட்கள் பழக்கத்திலிருந்தன. தப்பு பட்டு. துப்பக்கூடாது ஒகே.

காலையில் பல் தேய்த்ததும் துப்பு என கூற

த்த்துப்ப்பக்கூடாது. த்தப்ப்பு.

பளிச். பளிச்.
***********

24 comments:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஆமாங்க.. நானும் பலமுறை ங்ஙேன்னு முழிச்சிறுக்கேன்..:))

===

சிரித்தாலும்,

ஒரு சுயம்புவை எப்படியெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டவை மூலம் செதுக்குகிறோம்..!!

G3 said...

:)))))))))))))))))))

Chitra said...

:-) உங்களை மாதிரியே அசத்துறான்.

ர‌கு said...

ஹாஹ்ஹா, எல்லாமே சூப்ப‌ர் :))

வெரி ஸ்மார்ட், ஜூனிய‌ர் ந‌ல்லா புத்திசாலியா வ‌ருவார்ங்க‌ :)

KVR said...

//சின்னு இறங்கி நடந்து வா. அம்மாக்கு கை வலிக்குது.

ஆணாம். சஞ்சு கால் அலிக்கும். சஞ்சு பாவும்.
//

பல்புல பெஸ்ட் பல்ப் :-)))))

நர்சிம் said...

;)

Anonymous said...

க்யூட்

Vidhoosh said...

//உவ்வா மருந்து குடு.//

:)) நான் வளர்கிறேனே மம்மி :))

அகல்விளக்கு said...

மனதில் இருத்தி வைக்க வேண்டிய பல்புகள்...

Rangan Kandaswamy said...

:-) very nice kid!

"உழவன்" "Uzhavan" said...

so cute :-)

மங்குனி அமைச்சர் said...

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ?
அப்புறம் அவன் முன்னாடி ரொம்ப பல்ப் வாங்காதிங்க
அப்புறம் அவனும் .....
அளிச், அளிச் சுன்னு அல்பு வாங்கிட போறான்

இராமசாமி கண்ணண் said...

:)

Anonymous said...

ரசித்து நினைவில் எப்போதும் இருக்க வேண்டிய பல்புகள் :))

Rajalakshmi Pakkirisamy said...

Cute :)

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////காலையில் பல் தேய்த்ததும் துப்பு என கூற
த்த்துப்ப்பக்கூடாது. த்தப்ப்பு.////


மாட்டிகிடீங்களா?

மணிநரேன் said...

;)

Sundar சுந்தர் said...

cute!

வித்யா said...

நன்றி ஷங்கர்.
நன்றி G3.
நன்றி சித்ரா.
நன்றி ர‌கு.
நன்றி KVR.
நன்றி நர்சிம்.
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி விதூஷ்.
நன்றி அகல்விளக்கு.

வித்யா said...

நன்றி ரங்கன் கந்தசாமி.
நன்றி உழவன்
நன்றி மங்குனி அமைச்சர்.
நன்றி இராமசாமி கண்ணண்.
நன்றி மயில்.
நன்றி ராஜி.
நன்றி பனித்துளி சங்கர்.
நன்றி மணிநரேன்.
நன்றி சுந்தர்.

செ.சரவணக்குமார் said...

அருமை

ஆதிமூலகிருஷ்ணன் said...

பல்பு கடையே வைக்கலாம் போலிருக்கிறதே.!

வித்யா said...

நன்றி சரவணக்குமார்.
நன்றி ஆதி.

முரளி said...

அனைத்து பல்பும் பளிச் பளிச் .. !
புத்திசாலி குழந்தை !