அப்பா, அம்மா, தம்பி என குடும்பமாக அமர்ந்து மதிய உணவோ, மாலை டீயோ குடிக்கும் வாய்ப்பு அபூர்வமாய் கிடைக்கும். அப்படி கிடைக்கும் தருணங்களின் போது அரசியல், சினிமா, நாட்டு நடப்பு, உலக நிகழ்வுகள் என பலவற்றை அப்பாவுடன் விவாதிப்போம். அப்படி ஒரு தடவை விமானக் கடத்தல் பற்றி பேச்செழுந்தபோது அப்பா விவரித்த ஒரு விமானக் கடத்தலும், அதிரடி மீட்பு நடவடிக்கையும் சுவாரஸ்யமாக பட்டதால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1976 ஆம் வருடம் ஜூன் 27 ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு டெல் அவிவிலிருந்து(இஸ்ரேல்) பாரீஸை நோக்கிச் செல்லும் ஏர் பிரான்ஸ் விமான பயணிகள் என்ன நினைத்து விமானத்தில் ஏறியிருப்பார்கள்? நம்மூர் ஆட்கள் என்றால் ஏர் இந்தியா விமானத்தில் சௌகார் ஜானகி போன்ற ஏர் ஹோஸ்டஸ் கொண்டு வரும் உணவிற்காக காத்திருந்திருப்போம். அப்படியிருக்கையில் ஒரு நாலு தடிமாடுகள் எழுந்து நின்று 'பெரியோர்களே தாய்மார்களே. தடங்கலுக்கு மன்னிக்கவும். தவிர்க்க இயலாத காரணத்தினால் இந்த விமானத்தை நாங்க கடத்தறோம்'னு கைல துப்பாகிய வச்சுகிட்டு சொன்னா எப்படியிருக்கும்? அதுபோன்ற மனநிலையில் தான் ஏர்பஸ்-300 விமான பயணிகளும் இருந்தார்கள். 248 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என மொத்தம் 260 பேர்.
பாலஸ்தீன விடுதலை முன்னணியைச் சேர்ந்த (Popular Front for the Liberation of Palestine) இரு பாலஸ்தீனியர்களும், ஜெர்மனின் புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்த (Revolutionary Cellz) இருவரும் சேர்ந்து விமானத்தைக் கடத்திக் கொண்டுபோவதாக அறிவித்தார்கள். பாரீஸ் நகரிற்கு செல்ல வேண்டிய விமானம், லிபியாவின் பென்சகி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்தக் களேபரங்களால் மயக்கமடைந்து உதிரப்போக்கு ஏற்பட்ட பெண் ஒருவரை லிபியாவில் இறக்கிவிட்டு, விமானத்திற்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு புறப்பட்ட விமானம் தரையிறங்கியது உகாண்டா நாட்டின் எண்டபி விமான நிலையத்தில்.
ஏதன்ஸ்லருந்து கடத்திக்கிட்டு வேற எங்கயும் கொண்டு போகாம ஏன் உகாண்டாவுக்கு வந்தாங்கன்னு ஒரு கேள்வி வருதா? அப்போ உகாண்டாவின் சர்வாதிகாரியா இருந்த இடி அமின் இஸ்ரேலுக்கு பகிரங்கமா எதிர்ப்பு தெரிவிச்சிக்கிட்டிருந்தார். எதிரிக்கு எதிரி நண்பனில்லையா. அதான் அங்கன கொண்டு போனாங்க. எண்டபில தரையிறங்கிய விமானத்தைப் பற்றின செய்தி இடி அமினுக்கு போன உடனே சார்வாள் ரொம்ப குஷியாகிட்டார். ஏன்னு இங்கயும் ஒரு கேள்வி வருதா. அது ஒரு பெரிய கதை. நம்ம கதையின் கருவை மட்டும் பார்த்துட்டு விமானத்துக்கு வருவோம். உகாண்டாவுல இடி அமின் பண்ணாத அட்டகாசமில்ல. அழிச்சாட்டியம் பண்ணவும் டப்பு வேணும்ல? அதான் இஸ்ரேல்கிட்ட இராணுவத்த பலப்படுத்தனும், ஆயுதங்கள் வாங்கனும் காசு கொடுன்னு அவங்க நாட்டுக்குப் போய் கேட்டாரு. மொள்ளமாரி, முடிச்சவுக்கி, கேப்மாரி என பல மாரித்தனங்களின் மொத்த உருவமும் நல்ல காரியம் பண்ணனும் காசு கொடுன்னு கேட்டா தூக்கி கொடுக்க இஸ்ரேலுக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு. 'அதெல்லாம் நயா பைசா பேறாது. போ'ன்னு துரத்தி விட்டுட்டாங்க. வந்ததே அமினுக்கு கோவம். நாட்டுக்கு திரும்பி வந்தவுடனே 'இஸ்ரேல்காரன் ஒருத்தன் என் எல்லைக்குள்ள இருக்கக்கூடாது. கெட் அவுட் ஐ ஸே'ன்னுட்டாரு. அதோட கோவம் அடங்கல. எதாச்சும் பண்ணி இவனுங்களுக்கு ஆட்டம் காட்டனுமேன்னு கருவிட்டிருந்தவருக்கு வயித்துல பால வார்த்த மாதிரி இஸ்ரேலியர்கள் (யூதர்கள்) அதிகமிருந்த விமானத்த தூக்கியாந்து இங்கன நிறுத்தினாங்க தீவிரவாதிங்க.
இப்ப திரும்பவும் எண்டபி விமானநிலையத்திலிருக்கும் கடத்தப்பட்ட விமானத்திற்கு வருவோம். தீவிரவாதிங்கன்னாலே கோரிக்கை இல்லாம கடத்தமாட்டாங்க தானே. அவங்களுக்கும் தொழில் தர்மம்ன்னு ஒன்னு இருக்குல்ல. அவுங்களோட கோரிக்கை என்னன்னா இஸ்ரேல், கென்யா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் சிறை பிடிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்ட சுமார் 53 பாலஸ்தீனியர்களை (பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சார்ந்தவர்கள்) எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்கனும் என்பது தான். அவ்வாறு செய்யத் தவறினால் ஜுலை 1 முதல் ஒவ்வொரு பயணியாக கொல்லப்படுவார்கள் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்கள்.
இஸ்ரேலின் உயர் அதிகாரிகள் ஒன்று கூடி விவாதிக்க ஆரம்பித்தார்கள். '53 பேர விடுவிக்கறது இயலாத காரியம். அதே சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொடுக்கிறது மகா பாவம். என்ன செய்யலாம்?'னு மண்டைய பிச்சிக்கிட்டிருந்தாங்க. கொஞ்சம் கால அவகாசம் கேட்போம். அதுக்குள்ள என்ன பண்ண முடியும்ன்னு யோசிப்போம்ன்னு தீவிரவாதிங்க கிட்ட கெடுவை ஜூலை 4 வரை நீட்டிக்க சொன்னாங்க. இடி அமினும் 'யப்பா நானும் மொரிஷியஸ் வர போவேண்டிய வேலை இருக்கு. நான் இல்லாத போது எதுவும் செய்ய வேணாம். பேசாம கெடுவ ஜூலை 4 வரை எக்ஸ்டண்ட் பண்ணுங்க. நானும் ஒரு எட்டு மொரிஷியஸ் போய்ட்டு வந்துடறேன்'னு சொல்லி தீவிராவதிங்களுக்கு சப்போர்ட்ட தன் ராணுவ வீரர்கள விட்டுட்டு போனாரு.
இஸ்ரேல் என்ன முடிவெடுத்தாங்க? பயணிகளின் கதி? அடுத்த பதிவில்..
March 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
Check you tube videos about plane hijacks.. you can find a lot with visual details..
இந்தப் படத்தைப் பற்றி இட்லி வடையில் சமீபத்தில் எழுதியிருந்தார்கள். நீங்களும் எழுதறீங்க. நீங்க தான் இட்லி வடையா? :)
அடுத்த பதிவு எப்ப ? :)
நல்லா இருக்குங்க. எனக்கு இது போல சம்பவங்களின் தொகுப்பை படிக்க ரொம்ப பிடிக்கும் சீக்கிரம் தொடருங்க.
//இஸ்ரேல் என்ன முடிவெடுத்தாங்க? பயணிகளின் கதி? அடுத்த பதிவில்.. //
ரொம்ப டெர்ரரா மிரட்ரின்களே
சஸ்பென்ஸ் வேறயா? ரைட்டு
இந்தத் தொடருக்கும் கண்ணனின் இடிஅமீன் புத்தகத்துக்கு எதாவது தொடர்பு இருக்கா?
interesting topic.
நன்றி எறும்பு (இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த சில படங்களின் காட்சிகளைப் பார்த்தேன்).
நன்றி விஜய் (ஏன் இந்தக் கொலவெறி??).
நன்றி முத்துலெட்சுமி (வெள்ளிகிழமை அடுத்த ரிலீஸ்).
நன்றி தாரணி பிரியா.
நன்றி அமைச்சர்.
நன்றி ஆண்டாள்.
நன்றி சித்ரா.
நன்றி கேவிஆர் (அப்பா சொன்னபிறகு இடிஅமினைப் பற்றி தெரிந்து கொள்ள படித்தது ச.ந.கண்ணன் அவர்களின் புத்தகம். இது வரலாற்று சம்பவம் தான். தொகுக்க உதவிய புத்தகங்களையும், இணைய தள முகவரிகளையும் கடைசி பாகத்தில் பகிர்ந்துகொள்கிறேன்).
அடடா.. என்னங்க இப்படி சீரியல் மாதிரி தொடரும்.. போட்டுட்டீங்க..
சீரியல் மாதிரி இதுவும் அழுவாச்சி கதையா? :-)
ஹேய், நீங்க ஹிஸ்டரி டீச்சராகியிருக்கலாம் வித்யா. இந்த மாதிரி மேட்டரெல்லாம் தள்ளி நின்னு பாத்துக்கிட்டுருக்குற என்னையே ஆழ்ந்து படிக்க வெச்சுட்டீங்க. நல்லா சொல்லிருக்கீங்க கதை.
அடுத்த பார்ட்டுக்கு ஆவலுடன் வெயிட்டிங்.
நல்லா இருக்குங்க....
தலைப்பு பாத்தவுடனே, காமெடி தொடர்னு நினைச்சுட்டேன்
//ஏர் இந்தியா விமானத்தில் சௌகார் ஜானகி போன்ற ஏர் ஹோஸ்டஸ்//
ஐயைய, அப்போ ஏர் இந்தியால போறது வேஸ்ட்டா?
சஸ்பென்ஸா முடிச்சிருக்கிங்க, வெயிட்டிங் ஃபார் வெள்ளிக்கிழமை:)
நல்லா இருக்கு.
Air Crash Investigations னு இங்க போடுவாங்க . அது மாதிரி நல்லா இருக்கு
நன்றி உழவன் (ஆக்ஷன்ங்க).
நன்றி விக்கி.
நன்றி சங்கவி.
நன்றி ரகு.
நன்றி சின்ன அம்மிணி.
மேடம் நான் சென்னைக்கு இன்னும் 2 weeks ல வரேன்.. ஏன் இப்படி பயமுறுத்துறீங்க?
Post a Comment