March 18, 2010

கொன்னு பிச்சுவேன்

பெட்ரோல், டீசல் விலையேறிடுச்சு. சரி. நாலு வருஷத்துக்கு முந்தி விலையேத்தினாங்கன்னு சொல்லியே மாசாமாசம் ரேட்டு ஏத்துவாங்க நம் ஆட்டோகாரங்க. இப்போ கேக்கவே வேணாம். ஆட்டோ ஏர்றதுக்கு முன்னால காதுல கழுத்துல போட்றுக்கறதெயெல்லாம் வித்துட்டு காசு ஏற்பாடு பண்ணிக்கனும். இருக்கப்பட்டவங்க சொத்துப் பத்திரத்தையும் அடமானம் வைக்கலாம். இல்லாதப்பட்டவங்க தலைல துண்டப்போட்டுகிட்டு இன்ன ஊருக்கு மானசீகமா பாதயாத்திரை போறதா நினைச்சிக்கலாம். நடராஜா சர்வீஸ்.
********

5 கோடி ரூபாய் மதிப்புள்ள மாலை. 200 கோடி ரூபாய் செலவில் விழா. ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே. திருவிளையாடலில் நாகேஷ் சொல்வது போல் "அத்தனையும் ஆயிரம் ரூவா நோட்டு. சொக்கா சொக்கா. எனக்கில்ல. எனக்கில்லவே இல்லை"ன்னு பினாத்த வச்சிட்டாங்க மாயாவதி. மணி லாண்டரிங்க பத்தி ஐஐஎம்ல் வகுப்பெடுக்க மாயாவதி போகலாம். தமிழகத்திலிருந்து.. சரி வேணாம் விடுங்க. ஆட்டோ சார்ஜ் ஜாஸ்தியாகிடுச்சுல்ல. எதுக்கு என்னால அடுத்தவங்களுக்கு வீண் செலவு.
**********

அம்மா வீடு மாறியிருக்காங்க. பெரிய ஆச்சர்யமா எழுதிக் கொடுத்த மூணாவது நாளே BSNLலிருந்து லைன்மேன் வந்து கனெக்ஷ்ன் கொடுத்துட்டு போனார். பரவாயில்லயேன்னு ஆச்சர்யப்பட்டோம். சனிக்கிழமை கார்ப்ரேஷன் வேலைக்காக ரோட்டோரம் ஜேசிபி வச்சி தோண்டியபோது மண்ணோடு ஆப்டிகல் கேபிளையும் வாரிட்டாங்க. நல்ல நாள்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணாலே வரமாட்டாங்க. இதுல சனி ஞாயிறு எங்க வரப்போறாங்கன்னு திங்கள் கிழமை சொன்னோம். நோ ரெஸ்பான்ஸ். செவ்வாய் கிழமை லைன்மேனைப் பார்த்தபோது கேட்டதுக்கு நாளைக்கு (புதன்) தான் வரமுடியும். ரெண்டு நாள் யூனியன் மீட்டிங்கு எல்லோரும் போறோம். யூனியன் மீட்டிங்கா என நான் கேட்க. ஆமாங்க பொது மக்களுக்கு சிறப்பா எப்படி சேவை செய்றதுன்னு மீட்டிங்குன்னார். தேவைதான். போய்ட்டு வாங்க. வாழ்க யூனியன். வளர்க BSNL:)
************

BSNLன்ன உடனே ஞாபகம் வந்தது. அந்த நாலாயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் மேட்டர் என்ன ஆச்சு? மீண்டும் தி.நா சொல்வது போல் நாலாயிரம் கோடி. சொக்கா. சொக்கா. எனக்கில்ல. எனக்கில்ல. எனக்கில்லவேயில்ல.
*************

பேருந்தில் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் இன்னொருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

"முப்பது வருஷத்துக்கு முன்னால வாங்கினேன் சார். வேண்டா வெறுப்பா தான். காசு வீணா வீட்ல இருந்தா திருட்டு பயம்ன்னு சொல்லி நிலத்துல கொட்டினேன் சார். இப்போ அண்ணாநகர் வீடு 1.5 கேக்கறாங்க. வில்லிவாக்கமும் அம்பத்தூரும் 50க்கு போவுது. நான் கோயேம்பேடு வீட்லயே தங்கிட்டேன் சார். மத்த மூணுலருந்து வர்ற வருமானம் போதுமா இருக்கு"

எனக்கு இருட்டிக் கொண்டு வந்தது. வெயிலாய் இருக்குமென சமாதானம் சொல்லிக்கொண்டேன்.
**************

சொல்லிவைத்தாற்போல் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு வீட்டிலிருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் விடாமல் கேட்கிறது. அதுவும் மிக அதிகமான சத்தம். தம்பி சொன்னான்.
"அந்த வீட்ல எப்படியும் பத்து நாயாவது இருக்கும்"
"வீட்டு ஓனரையும் சேர்த்தா இல்லையா?" இது அப்பா.
************

கொன்னு பிச்சுவேன்.
ஆர்கிட்ட அவுடி நானு (யார்கிட்ட ரவுடி நானு).

கொஞ்ச நாளாக ஜூனியரை அத்தனை பேரையும் இப்படித்தான் மிரட்டுகிறார். உபயம் மாமா.

நம்ம ரியாக்ஷனாக அவர் எதிர்பார்ப்பது பயமாருக்கேடா. சொல்லாத பட்சத்தில் அதையும் அவரே - பம்மாக்கேடா.

21 comments:

Vidhoosh said...

:) ரெண்டு வீல் இருக்கும் வரை எனக்கு நானே உனக்கு நீயே...

மாயா....க்கா...: என்னை யாரென்று "எண்ணி எண்ணி" நீ பார்க்கிறாய்...

BSNL: நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் பார்த்தால் பார்வைக்கு தெரியா...து....

மனை-விலை: தெய்வம் தந்த வீடு......


woof, woof, woof, woof
woof, woof, woof, woof

We've had bad luck with our kids, they've all grown up.

Chitra said...

கொன்னு பிச்சுவேன்.
ஆர்கிட்ட அவுடி நானு (யார்கிட்ட ரவுடி நானு).


....... கொன்னு பிச்சிட்டான் - so cute!

Rajalakshmi Pakkirisamy said...

//எனக்கு இருட்டிக் கொண்டு வந்தது. வெயிலாய் இருக்குமென சமாதானம் சொல்லிக்கொண்டேன்.//

Veyil thaan :)))

Junior.. ha ha ha

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

நர்சிம் said...

அழுத்தமான இடுகைங்க.

Anonymous said...

//எனக்கு இருட்டிக் கொண்டு வந்தது. வெயிலாய் இருக்குமென சமாதானம் சொல்லிக்கொண்டேன்.//

Buy lottery :)

Vidhya Chandrasekaran said...

நன்றி விதூஷ்.
நன்றி சித்ரா.
நன்றி ராஜி.
நன்றி டிவிஆர் சார்,
நன்றி நர்சிம்.
நன்றி சின்ன அம்மிணி.

நேசமித்ரன் said...

///கொன்னு பிச்சுவேன்.
ஆர்கிட்ட அவுடி நானு (யார்கிட்ட ரவுடி நானு).//

:)

இதுதான் அழைத்து வந்தது

இடுகை : யதார்த்தம் -பெல்ஜியம் கண்ணாடியில் நம்மை நாமெ எடுத்துக் கொள்ளும் போட்டொ போல

விக்னேஷ்வரி said...

முதல் மேட்டர் உங்கள் நகைச்சுவையில் அழகாக வந்திருக்கிறது.

ஆட்டோ சார்ஜ் ஜாஸ்தியாகிடுச்சுல்ல. எதுக்கு என்னால அடுத்தவங்களுக்கு வீண் செலவு. //
ம், இது நல்ல பிள்ளைக்கழகு.

பொது மக்களுக்கு சிறப்பா எப்படி சேவை செய்றதுன்னு மீட்டிங்குன்னார். தேவைதான். போய்ட்டு வாங்க. வாழ்க யூனியன். வளர்க BSNL:) //
ஹாஹாஹா...

எனக்கு இருட்டிக் கொண்டு வந்தது. வெயிலாய் இருக்குமென சமாதானம் சொல்லிக்கொண்டேன். //
டெல்லியில் அதுக்கும் மேல :( தாங்க முடியாத வெயில்ன்னு சொல்லணுமா...

"வீட்டு ஓனரையும் சேர்த்தா இல்லையா?" இது அப்பா. //
இனி ரெகுலரா அப்பா அப்டேட்ஸ் எழுதுங்க வித்யா.

ஹாஹாஹா... நான் வளர்கிறேனே மம்மி. :)

Anonymous said...

"அந்த வீட்ல எப்படியும் பத்து நாயாவது இருக்கும்"
"வீட்டு ஓனரையும் சேர்த்தா இல்லையா?" இது அப்பா.
************

அப்பா சூப்பரப்பா:))

மங்குனி அமைச்சர் said...

யாரங்கே, யாரங்கே .... யாரடா அங்கே , மடபய மக்கா, இங்க பாருங்க ஒரு பொண்ணு என்னவோ புதுசா கண்டுபுடிச்ச மாதிரி ஒரே கேள்வியா கேக்குது , நம்ம கேப்டண்ட கொண்டு பொய் விடுங்கப்பா .( ஆடோ , மாயாவதி , bsnl .... இது எல்லாம் செய்யலைனா தான் ஆச்சரியாமா பதிவு போடணும் .)

Raghu said...

போன‌ வார‌ம் தி. ந‌க‌ர்ல‌ இருந்து வேள‌ச்சேரிக்கு கேட்ட‌துக்கு 140 ரூபான்னார் ஒரு ஆட்டோக்கார‌ர். நான் M7லேயே போயிக்க‌றேங்க‌ன்னுட்டேன்

//கொன்னு பிச்சுவேன்.
ஆர்கிட்ட அவுடி நானு (யார்கிட்ட ரவுடி நானு).//

ச்சோ ச்வீட் :)

Vidhya Chandrasekaran said...

நன்றி நேசமித்ரன்.
நன்றி விக்கி.
நன்றி மயில்.
நன்றி அமைச்சரே.
நன்றி ரகு.

Paleo God said...

நீங்க ரொம்ப நல்லவங்க..:))

போன் ரிப்பேர் ஆச்சுன்னா..
நான் மினிஸ்டர் தவிர்த்து எல்லார்கிட்டயும் பேசி நேரத்த போக்குவேன்..:)) ஹும்ம் அவங்க வரும்போதுதான் வர்றாங்க. போங்கைய்யா எல்லாரும் ப்ரைவேட் கிட்டயேன்னு சொல்லாம சொல்றாங்க போல.. வாழ்க அவர் தொ(தோ)ண்டு.:))

ஜெய்லானி said...

//"அந்த வீட்ல எப்படியும் பத்து நாயாவது இருக்கும்"
"வீட்டு ஓனரையும் சேர்த்தா இல்லையா?" இது அப்பா.//

நல்ல ஜோக் :-)))

எறும்பு said...

கொன்னு பிச்சுவேன்.
ஆர்கிட்ட அவுடி நானு


Cute..

SK said...

நாலாயிரம் தானா அப்போ பாக்கி :)

ஜூனியர் அழகு :)

மாயாவதி :)

*இயற்கை ராஜி* said...

super, cute:-)

ராமுடு said...

Hello Madam

I like kutti's speech and their cute talk. But in this, I dont want to encourage as the same we wont like in the future and we will try to correct the kid in future, whereas they may not be able to differentiate. From their mind, why mom scolding me now? She enjoyed my voice few months ago.. Now she is scolding me, if I do the same.. Here its not the mistake of the kid..

Just my thought. Dont take it in other way....

Your writing is so gud...

Regs
Ramudu

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//நாலாயிரம் கோடி. சொக்கா. சொக்கா. எனக்கில்ல//
இது சூப்பர்
//பொது மக்களுக்கு சிறப்பா எப்படி சேவை செய்றதுன்னு மீட்டிங்குன்னார்//
இன்னிக்கி நெலம அப்படிதாங்க இருக்கு. என்ன பண்றது
//"அந்த வீட்ல எப்படியும் பத்து நாயாவது இருக்கும்"
"வீட்டு ஓனரையும் சேர்த்தா இல்லையா?" இது அப்பா//
இது தான் டாப்பு. குடும்பமே கும்பமேளா தானா

Vidhya Chandrasekaran said...

நன்றி ஷங்கர்.
நன்றி ஜெய்லானி.
நன்றி எறும்பு.
நன்றி SK.
நன்றி இயற்கை.

நன்றி ராமுடு (அவ்வப்போது அடக்கிக்கொண்டுதான் இருக்கேன். பிறர் என்கரேஜ் செய்கிறார்கள்).

நன்றி அப்பாவி தங்கமணி.