'மேடம் 149 இடுகை போட்டுட்டீங்க. 150பதிவை கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணுங்க. நான் வேணா உங்கள ஒரு பேட்டி எடுக்கவா?' எனக் கேட்டார் ஒரு பதிவர்.
'இல்லீங்க எனக்கு இந்த விளம்பரமெல்லாம் பிடிக்காதுங்க. நான் ரொம்ப சாதாரண ஆளுங்க' என மறுத்தும் பிடிவாதமாய் நிற்கவே சரியென ஒத்துக்கொண்டேன். நான் அவருக்கு அளித்த பேட்டி கீழே. அந்தப் பதிவர் யாரென்ற விவரம் பதிவின் இறுதியில்.
வணக்கம் மேடம்.
மேடமெல்லாம் வேணாமே. வித்யான்னே கூப்பிடுங்க.
சரிங்க வித்யான்னே.
ஆரம்பமே அசத்தலா இருக்கே. என் பேரு வித்யா. பேர் சொல்லியே கூப்பிடுங்க.
நீங்க பதிவுலகத்துக்கு எப்படி வந்தீங்க?
நடந்துதான்.
அது இல்லீங்க. நீங்க பதிவெழுத வந்த கதைய கொஞ்சம் சொல்லுங்க.
அத ஏற்கனவே ரெண்டு தடவ எழுதியாச்சு. திரும்ப திரும்ப ஒரு துக்க சம்பவத்தை மக்களை நினைக்க வைக்க வேண்டாம்னு பார்க்கிறேன்.
பதிவெத வந்து மூணு வருஷம் ஆகுது. இப்போதான் 150ஆவது பதிவு போடறீங்க. ஏன் இந்த நிதானம்?
நான் என்ன எழுதமாட்டேன்னு அடமா பிடிக்கிறேன்? மேட்டர் கிடைக்க மாட்டேங்குது. என்ன பண்ணச் சொல்றீங்க?
அடிக்கடி ப்ரேக் எடுக்கறீங்களே ஏன்?
பதிவுகளைத் தாண்டி என் உலகம் ரொம்ப பெரிசுங்க. இது மட்டுமே வாழ்க்கையில்லயே.
149 பதிவுல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பதிவு எது?
அத்தனையுமே நான் பிடிச்சு எழுதினது தான். நம்ம குழந்தைகள்கிட்ட நாம வித்தியாசம் காட்ட முடியுமா?
எப்பவாச்சும் அரசியல்வாதிகளை கிண்டல் பண்றீங்களே? பயம்மா இல்லயா?
பயம்மா? எனக்கா? ஹே ஹே. அதுக்கெல்லாம் பயந்தா உயிர் வாழ முடியுமா?
நீங்க அதிகமா உங்களின் நினைவுகளைப் பற்றியும், மொக்கைகளையுமே எழுதறீங்களே ஏன்?
பதிவுங்கறத நான் ஒரு சேமிப்பு கிடங்காதான் பார்க்கிறேன். என் நினைவுகளை சேமிச்சு வைக்கிறேன். மொக்கை எழுதறதுங்கறது என்னோட விருப்பம். இன்னும் கொஞ்சம் பெட்டரா சொல்லனும்னா அதான் வருது.
இல்லயே நீங்க சில சீரியஸ் பதிவுகளையும் நல்லா எழுதியிருக்கீங்களே?
அப்படியா சொல்லவே இல்ல. அது எப்பவாச்சும் வரும்ங்க. அமாவாசை சோறுக்கு தினம் ஆசைப்பட முடியுமா? Moreover நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன். முடியலன்னு தான் மொக்கைப் போடறேன்.
சரி. பெண்ணியம், சுதந்திரம், பற்றி எழுதுவீங்களா?
எந்த ஈயம் பித்தாளைப் பத்தியும் எழுதற ஐடியா இல்லைங்க. சும்மா கூவறதால ஒன்னும் ஆகிடாது.
அப்ப பதிவு எழுதற மாதிரியே எல்லாரும் இல்லைன்னு சொல்றீங்களா?
உங்க கேள்வி எனக்குப் புரியலை.
இல்லைங்க. பதிவுல சண்முகத்தை சாரி சமூகத்தை திருத்தனும்ங்கிற மாதிரி எழுதறவங்கெல்லாம் நிஜமாவே அப்படி இல்லைன்னு சொல்ல வர்றீங்களா?
இதைப் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.
சரி வேணாம் விடுங்க. முன்னாடி அடிக்கடி ஜுனியர் அப்டேட்ஸ் கொடுத்திட்டிருந்தீங்க. சமீப காலமா அது இல்லயே ஏன்?
கொடுக்கக்கூடாதுன்னு எதுவுமில்ல. அவர் சேட்டைய பதியறதுக்கு நான் தனியா பிளாக் ஆரம்பிக்கனும். கூடிய சீக்கிரம் பதிவிடறேன்.
அதே போல முன்னெல்லாம் நிறைய பட விமர்சனம் எழுதீனிங்க. ஒரே நாள்ல ரெண்டு விமர்சனப் பதிவு போட்டீங்க. இப்போ அவ்வளவா வர்றதில்லயே ஏன்?
முன்னாடி நிறைய படம் பார்க்க முடிஞ்சுது. இப்போ ஜூனியருக்கு டிமிக்கி கொடுத்துட்டு போக முடியறதில்ல:( அதில்லாம நான் தோணித் துலங்கி படம் பார்க்கறதுக்குள்ள ஒரு படத்துக்கு நூறு விமர்சனம் எழுதிடறாங்க. என் பங்குக்கு கிழிக்க வாய்ப்பே கிடைக்க மாட்டேங்குது. ஹும்ம்ம்.
உங்கப் பதிவு எதுவும் தமிழ்மண பரிந்துரைக்கு வருவதில்லயே ஏன்?
பரிந்துரைக்கு வர நான் என்ன...
நீங்க என்ன?
இருங்க. ஏன் அவசரப்படறீங்க? நான் என்ன சிறப்பாவா எழுதறேன்னு சொல்ல வந்தேன். எழுதறது மொக்கை. மொக்கையையும் மொக்கையா எழுதறேன். பரிந்துரைக்கெல்லாம் வரணும்ன்னு ஆசைப்பட முடியுமா?
ம்ம்ம்
ஷப்பாடி எதுவும் புரியல இல்ல?
உங்க எதிர்கால திட்டமென்ன வித்யா?
பேட்டின்ன உடனே புத்திய காமிக்கறீங்க பார்த்தீங்களா. திட்டம் பட்டமெல்லாம் வெச்சுக்க நானென்ன அரசியல்வாதியா?
நான் கேக்க வந்தது என்னன்னா ஏதாவது புதுமையா பண்ற எண்ணம் இருக்கா?
புதுமையா? வேணாம் போய்டு.
பதிவுலகத்துல உங்களுக்கு பிடிச்ச விஷயம் பிடிக்காத விஷயம் எது?
ரெண்டுமே கருத்து சுதந்திரம் தான்.
ஒரு பதிவரா சக பதிவர்களுக்கு என்ன கருத்து சொல்ல விரும்பறீங்க?
என்னை சக பதிவரா அவங்க மதிக்கறதே பெரிய விஷயம் தான்.
பேட்டிய முடிச்சுக்கலாம். ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?
தொடர்ந்து உற்சாகமும் ஊக்கமும் அளித்து வரும் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு என்றும் உண்டு என்ற நம்பிக்கையில் என் மொக்கைகள் தொடரும்..
அந்த பிரபல பதிவர் இவர்தான்
March 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
தன்கையே தனக்குதவியா :)
:)) அருமையான பேட்டி பிரபல பதிவரே...
//சண்முகத்தை சாரி சமூகத்தை திருத்தனும்ங்கிற///
ROFL
//நன்றி/// நன்றிகள்-அப்டீன்னு பன்மையில் சொல்லாததால், பேட்டி கண்ட இன்னொரு பிரபல பதிவரே அந்த நன்றியை வாங்கிட்டு போயிட்டாரு. எங்களுக்கு ?? :(
சொந்தமா ஓட்டி ச்சே பேட்டியிருக்கீங்க
நல்ல ஐடியா
மேலும் உங்க நேர்மை ;) நிறைய வெளிப்பட்டிறுக்கு
149க்கும் வாழ்த்துகள்.
தமிழ்மணத்துல சிறந்த மொக்கை பதிவுன்னு ஒரு வகை வைக்க சொல்லனும்
எப்பதான் நானெல்லாம் பரிசு வாங்குறது
டம டம டம டம டம டம .............
இதனால் தெரிவிப்பது என்னவென்றால் இந்த பேட்டியை எடுத்த பதிவரை புடித்து கொடுப்பவர்கள்ளுக் 1000 பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும். பரிசை நம்ம scribblings தருவாக. (யோவ் அந்த ஆளு கிடச்சுடனே சொல்லுங்கப்பா எனைய ஒரு பேட்டி எடுக்க சொல்லனும் )
This post, I guess, is a compilation of various comments and questions received by you, across many of your posts. You were probably trying to answer them all, in one shot, at one place.
Nicely written ...
150 பதிவுகள் எழுதியதற்கு வாழ்த்துக்கள் :)
வாழ்த்துகள்..பாண்டிச்சேரி வெள்ள நிவாரண கட்டுரை நீங்கள் எழுதியதில் பிடித்த ஒன்று.. அது போன்ற கட்டுரைகள் எழுதுங்கள்.
பேட்டி என்றால் ஒரு கேள்வியை, 'இது நல்ல கேள்வி' என்று சொல்லிட்டு பதில் சொல்லணும்.
//பதிவுலகத்துல உங்களுக்கு பிடிச்ச விஷயம் பிடிக்காத விஷயம் எது?//
இந்த உங்கள் கேள்வியும்
//ரெண்டுமே கருத்து சுதந்திரம் தான்//என்ற உங்கள் பதிலும் அருமை.
பதிவுலகத்துல உங்களுக்கு பிடிச்ச விஷயம் பிடிக்காத விஷயம் எது?
ரெண்டுமே கருத்து சுதந்திரம் தான்.
............ :-) கரெக்டா சொல்ல வேண்டியதை சொல்லிட்டு, மொக்கைனு..... ha,ha,ha,ha......
150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
நல்ல பேட்டி..! 150 - க்கு வாழ்த்துக்கள்..!
அந்தப் பிரபல பதிவர் யார்ன்னு நீங்க சுட்டி கொடுக்காமலேயே தெரிஞ்சிடுது. 150க்கு வாழ்த்துகள்.
//பதிவுகளைத் தாண்டி என் உலகம் ரொம்ப பெரிசுங்க. இது மட்டுமே வாழ்க்கையில்லயே.//
nice
150-க்கு வாழ்த்துக்கள்!
பேட்டி அருமை:)!
நன்றி அம்மிணி.
நன்றி விதூஷ் (நான் பிரபலமா...சிவாஜி ரியாக்ஷன்ஸ்)
நன்றி ஜமால்.
நன்றி அமைச்சர்.
நன்றி விஜய்.
நன்றி கோகுல்.
நன்றி நர்சிம் (அமாவாசை சோறு மேட்டர் இதுக்குதான்)
நன்றி சித்ரா.
நன்றி சகாதேவன்.
நன்றி ஜீவன்.
நன்றி கேவிஆர்.
நன்றி ராமலக்ஷ்மி.
150க்கு வாழ்த்துக்கள்.
பயம்மா? எனக்கா? ஹே ஹே. அதுக்கெல்லாம் பயந்தா உயிர் வாழ முடியுமா? //
இதை நீங்க வடிவேலு ஸ்டைல்ல சொல்ற மாதிரி நினைச்சுப் பார்த்தேன். ஹிஹிஹி...
மொக்கை எழுதறதுங்கறது என்னோட விருப்பம். இன்னும் கொஞ்சம் பெட்டரா சொல்லனும்னா அதான் வருது. //
நீங்க ரொம்ப நல்லவங்க.
எந்த ஈயம் பித்தாளைப் பத்தியும் எழுதற ஐடியா இல்லைங்க. சும்மா கூவறதால ஒன்னும் ஆகிடாது. //
ம், ரொம்ப சரி.
இதைப் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. //
ஹிஹிஹி... பிரபமெல்லாம் இப்படித் தான் பதில் சொல்வாங்களாம்.
பரிந்துரைக்கு வர நான் என்ன... //
இதுல என்ன அரசியல் ;)
பேட்டியெடுத்தவர் நான் நினைச்சவர் தான். :)
150-க்கு வாழ்த்துக்கள்!
:)
அடிச்சு ஆடுங்க அம்மணி. வாழ்த்துக்கள். நல்ல இருந்தது. சில பல உள்குத்துகளுடன் .. வாழ்க கருத்து சுதந்திரம்
நல்ல பேட்டி :):)
ஒரு பிரபல பதிவரே
ஒரு பிரபலத்தை
பேட்டி எடுக்கின்றாறே...
அடடே
ஆச்சர்யகுறி...
வாழ்த்துக்கள்..
அன்புடன் ஜாக்கி
150கு வாழ்த்துப் பூங்கொத்து!
Excellent...
Comedy Queen :)
//மொக்கை எழுதறதுங்கறது என்னோட விருப்பம். இன்னும் கொஞ்சம் பெட்டரா சொல்லனும்னா அதான் வருது.//
//Moreover நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன். முடியலன்னு தான் மொக்கைப் போடறேன்//
ரொம்பவே ரசிச்சு படிச்சேன், உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு:))
//கருத்து கூற விரும்பவில்லை//
இந்த ஒரு பதில்லேயே ஒளிவட்டம், சதுரம், செவ்வகம்லாம் தெரியுது, நீங்க ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? யோசிச்சு சொல்லுங்க், "2011 நம்ம கையில":)
150kku வாழ்த்துக்கள் பேட்டி நல்லா இருந்துச்சு.
நகைச்சுவை பதிவு எப்படி எழுதுறதுனு ஒரு பட்டறை நடத்துங்க வித்யா :-))
அருமை.. பேட்டி எடுத்தவருக்கும், பேட்டி கொடுத்தவருக்கும் வாழ்த்துகள்!
நன்றி விக்கி (ஆஹா அம்மிணி கிளப்பிவிட்டு போய்டாதீங்க).
நன்றி எறும்பு.
நன்றி SK (உள்குத்தா அப்படீன்னா??!!)
நன்றி இராமசாமி.
நன்றி ஜாக்கி சேகர்.
நன்றி அருணா.
நன்றி ராஜி (நீ வேறயா)
நன்றி ரகு.
நன்றி உழவன் (காமெடிதான)
Your blogs are really good!! Keep it up!!
ஒன்னரைச்சதம்!
இனிய பாராட்டுகள்.
பேட்டி அசத்தல்:-)
நன்றி பார்த்தா.
நன்றி தங்கராஜ்.
நன்றி துளசி கோபால்.
சுவாரசியம். 150க்கு வாழ்த்துகள்.
150ஆவதும் இப்படி ஒரு மொக்கையா? மொக்கைகள் மேலும் வளர வாழ்த்துக்கள்
//நர்சிம் said...
வாழ்த்துகள்..பாண்டிச்சேரி வெள்ள நிவாரண கட்டுரை நீங்கள் எழுதியதில் பிடித்த ஒன்று.. அது போன்ற கட்டுரைகள் எழுதுங்கள்.//
நான் படிக்கனும். லிங்க் கொடுங்களேன். தேடுவதற்கு நேரமில்லை
நன்றி ஆதி.
நன்றி வரதராஜலு. லிங்க் இது தான் http://vidhyascribbles.blogspot.com/2009/04/blog-post.html
Post a Comment