திருச்சியைச் சேர்ந்த நண்பனொருவன் வேலைக்கு சேர்ந்தவுடனே ஐசிஐசிஐ வங்கியில் லோன் போட்டு ஆசை ஆசையாய் ஒரு ஹுண்டாய் சாண்ட்ரோ வாங்கினான் (எல்லோரும் ட்ரீட் என அவன் பர்ஸ் பழுக்க வைத்தது வேறு நடந்தது). திருச்சியில் கார் ஒட்டி பழக்கமாதலால் தைரியமாய் ட்ரைவர் இல்லாமலே சென்னையில் வண்டி ஓட்ட ஆரம்பித்தான். சரியாய் ஆறாவது நாளிலேயே வண்டியின் வலது பக்கம் கோடு போட்டிருந்தது. நண்பர்கள் துக்கம் விசாரிக்கையில் 'தப்பு என் மேல இல்ல மாமா. பஸ் ட்ரைவர் தான் விடாம ரப்சர் பண்ணி கோட்ட போட்டான்' என புலம்பினான். சென்னையிலேயே பிறந்து வளர்ந்த மற்றொரு நண்பன் சொன்னது 'மாமா மெட்ராஸ்ல எவன்கிட்ட வேணாலும் வம்புக்கு போ. முதல் சவுண்ட் நீ கொடுத்துட்ட கேம் நம்ள்து. தைரியமா இறங்கி ஆடலாம். ஆனா MTC கிட்ட மட்டும் சரண்டர் ஆய்டு. என்ன வண்டி எதுன்னு பார்க்கவே மாட்டான். கோட்டப் போட்டுட்டு போய்ட்டே இருப்பான். அவனுக்கு சைக்கிளும் ஒன்னுதான் சாண்ட்ரோவும் ஒன்னுதான்' என்றான். அப்போது எனக்கும் சென்னை புதிது. ரொம்ப எக்ஸாஜிரேட் பண்ணி சொல்ற நீ என்றேன். சிரித்துக்கொண்டே இங்கதான இருப்ப தெரிஞ்சுக்குவ என்றான். ஐந்து வருட சென்னை வாழ்க்கையில் அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை என சுத்தமாகப் புரிந்தது.
இன்றைய தேதிகளில் சென்னை போக்குவரத்து ஒழுங்கில் சீர்கேட்டு கிடப்பதன் பெரும்பங்கு MTCயைச் சேரும். இரண்டு சம்பவங்களைச் சொல்கிறேன். ஒன்று எனக்கு நேர்ந்தது. மற்றொன்று நான் கண்ணால் பார்த்தது. சென்ற வருட தொடக்கத்தில் தோழியோடு டூ வீலரில் சென்றுகொண்டிருந்தேன். வலது பக்கம் திரும்ப வேண்டும். சிகப்பிலிருந்து பச்சைக்கு மாற காத்துக்கொண்டிருந்தோம் முதல் ஆளாய். நேராக செல்ல வேண்டிய வண்டிகளும் சிக்னலுக்காக காத்துக்கொண்டிருந்தன. பெரும் சத்தத்துடன் பின்னால் இடிப்பதுபோல் வந்து நின்றது MTC பேருந்து ஒன்று. கொஞ்சம் தடுமாறிய தோழி வண்டியைக் கொஞ்சம் முன்னால் நகர்த்தி நிறுத்தினாள். நேராக செல்ல வேண்டிய வண்டிகளுக்கு சிக்னல் விழுந்தது. ஆனால் ரைட் சைட் க்ளியர் ஆகவில்லை. ஆனால் அந்த ட்ரைவர் விடாமல் ஹாரன் அடிக்க ஆரம்பித்தார். பொறுத்துப் பார்த்த நாங்கள் திரும்பி அவரிடம் சிக்னல் ரெட்டில் இருப்பதை காமித்து வெயிட் செய்ய சொன்னோம். அவரோ கேட்காமல் நேராக கையை காட்டி ஹாரன் அடித்துக்கொண்டே இருந்தார். என்ன நடந்தாலும் சிக்னல் போடாம நகரக்கூடாதென முடிவெடுத்து வெயிட் செய்தோம். ட்ரைவர் துளியும் யோசிக்காமல் லெப்டில் வளைத்து எங்கள் வண்டியின் பின்புறம் இடித்து சென்றுவிட்டார். இந்த லட்சணத்தில் பக்கத்திலேயே ட்ராபிக் போலீஸ் வேறு. அவரிடம் கம்ப்ளையெண்ட் செய்ததற்கு வழக்கமான சினிமா டயலாக்கை விட்டார்.
இரண்டாவது சம்பவம் சென்ற வாரம் பார்த்தது. வழக்கம்போல் சிக்னலில் நிற்காமல் அவசரமாய் கடக்க முயன்ற MTC பேருந்து ஒன்று குறுக்கில் வந்த (சரியாய் சிக்னலை பாஃலோ செய்து வந்த வண்டி) காரில் இடித்ததில் முன்னால் அமர்ந்திருந்த சிறுமிக்கு காலில் காயம். வருத்தமாவது தெரிவிக்க வேண்டுமே அந்த ட்ரைவர். "பார்த்து வாடா ********" என கார் ஓட்டியவரை தகாத வார்த்தைகளால் அர்ச்சித்துப் பறந்தார். காரில் வந்தவர் பஸ் நம்பரைக் குறித்துக்கொண்டார். கம்ப்ளெய்ண்ட் தந்தாரா, பெற்றார்களா எனத் தெரியாது.
இப்போதெல்லாம் சாலைகளில் MTC பேருந்தைப் பார்த்தாலே எமனின் எருமையைப் பார்ப்பதுபோலிருக்கிறது. ஒரு சிக்னலையும் மதிப்பதில்லை. லெப்ஃட்டோ ரைட்டோ திரும்ப இண்டிகேட்டர் போடுவதில்லை. சாலையின் இடது பக்கத்திலிருந்து வலதுபக்கத்திற்கு ஒரு ஹாரன் கூட கொடுக்காமல் போவது என அத்தனை அடாவடித்தனம். காது கிழியுமளவிற்கு விடாமல் ஹாரன் அடித்து எரிச்சல் செய்வது, வழி தர மறுக்கும் வண்டிகளை இடிப்பது, உராய்ந்து சேதாரமேற்படுத்துவது என அத்தனை அட்டூழியம். ஒரு நிமிடம் அருகிலிருக்கும் MTC பேருந்தை கூர்ந்து பார்த்தீர்களானால் வண்டியின் இருபுறமும் வரிக்குதிரை போல் கோடுகளிருக்கும். காயலான் கடை செல்லவேண்டிய பழைய பச்சை கலர் வண்டியாகட்டும். அல்லது லேட்டஸ்ட் மாடல் வோல்வோ ஏசி பஸ்ஸாகட்டும். கோடு சர்வ நிச்சயம். சர்வ சாதாரணம். ஸ்டாப்பிங் வரும் வரை ஆக்ஸிலரேட்டரிலிருந்து கால் நகரவே நகராது. ஸ்டாப்பிங் வந்தவுடன் அடிக்கும் சடன் ப்ரேக்கினால் பல் பெயர்ந்தவர்கள் ஏராளம். ரத்தம் சொட்ட சொட்ட கர்ச்சீப்பை பொத்திக்கொண்டு இறங்கி ஆட்டோ நோக்கியும், பின்னர் ஆஸ்பத்திரி நோக்கியும் விரையும் நபர்களை நான் பார்த்திருக்கிறேன்.
ஏன் இந்த ஒழுங்கீனம்? போக்குவரத்துக் காவல் துறையினரும் இவர்களை கண்டுக்கொள்வதுபோல் தெரியவில்லையே ஏன்?
MTC பேருந்துகளின் விதிமீறல்களை போக்குவரத்து காவல்துறையினர் கேட்காததற்கு பெரிய காரணமாய் சொல்லப்படுவது யூனியன். ஒரு முறை காவலர் ஒருவர் சொன்னார். 'ரெட் போட்டும் போறான். பிடிச்சா யூனியன் வச்சு முதல்வன் படத்துல வர்ற மாதிரி பெரிய பிரச்சனை பண்ணுவாங்க' என புலம்பினார். யூனியன் என்பது எதற்கு? தொழிலாளர்களின் நலன் பேணத்தான். அதே யூனியனால் சேவை பெறும் மக்கள் பிரச்சனைக்குள்ளாவது கேலிக்கூத்தாகவே இருக்கிறது. கலர்கலராய் வித விதமாய் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், தாழ்தள பேருந்து, தங்கரதம் என வண்டிக்கு பெயர் வைத்தால் மட்டும் போதுமா? ட்ரைவர்கள் சாலை விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என கண்காணிக்க வேண்டாமா? எல்லா தொழிலிலும் ப்ரோபேஷன் பீரியட் இருக்குமல்லவா? முறையான பயிற்சி, சாலை விதிகள், ரூட்டுகள் என அனைத்திலும் தேர்ச்சி பெற்ற ட்ரைவர்களை நியமிக்கும் கடமை அரசாங்கத்துக்கு/சார்ந்த துறைக்கு இருக்கிறதல்லவா? சில தனியார் ட்ராவல் நிறுவனங்களில் ஓவர் ஸ்பீட் கம்ப்ளெய்ன் செய்ய செல் நம்பர் ஒன்று எல்லா வண்டிகளிலும் இருக்கும். அப்படி ஒரு கம்ப்ளைய்ண்ட் நம்பரை உருவாக்கி தாறுமாறாக ஓட்டும் ட்ரைவர்களை கண்காணிக்கலாமே.
குற்றமென வரும்போது கை தவறு செய்த/செய்யும் அனைவரையும் நோக்கி நீள வேண்டும். மதிப்பிற்குரிய மகாகணம் பொருந்திய காமன் மேன்களான நாம் எந்தளவு ஒழுக்கத்துடன் செயல்படுகிறோம். ஒரே ஒரு பிரயாணி பேருந்து நிறுத்ததிலிருக்கும் நிழற்குடையில் நின்று பேருந்து ஏற வேண்டுமே. ஊஹூம். அத்தனை பேரும் சாலையில் தான் நிற்பார்கள். ட்ரைவரும் நடுரோட்டில் வண்டியை நிறுத்தி ஆட்களை ஏற்றி இறக்குகிறார். அதேபோல் பஸ்சில் ஏறி இடம்பிடிக்க நடக்கும் யுத்தம். கையில் குழந்தை வைத்திருக்கிறார்களா. கர்ப்பிணிகளா. முதியோர்களா? ஊனமுற்றவர்களா. எந்தக் கவலையும் இல்லை. தானுண்டு தன் சீட்டுண்டு என கர்ச்சீப், ஹாண்ட்பேக், சில சமயங்களில் செருப்பு கூட போட்டு இடம்பிடிக்கும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வரிசைப் பின்பற்றுதல், பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் சர்வ் போன்றவை இங்கு கடைபிடிக்கப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
மக்களின் ஒத்துழைப்போடு அரசாங்கமும் கவனம் செலுத்துமாயின் நன்றாக இருக்கும். இல்லேயேல் MTC மார்ச்சுவரி ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.
April 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
எல்லா ஊர்களிலும் பேரூந்து ஓட்டுபவர்கள் இப்படித்தான். அரசாங்க ஊழியன் என்ற திமிர். அவர்களை இறங்கிப் போய் திட்டினால், பிற பஸ் ஓட்டுநர்களையும் சேர்த்துக் கொண்டு மறியலில் இறங்கி விடுவார்கள். இவர்களையெல்லாம், அந்நியன் மாதிரி போட்டுத்தள்ளினால் தான் தகும்.
நெல்லையில் தனியார் பஸ் ஓட்டுனர்களே இப்படித்தான் போவார்கள். குறுகிய ரோட்டில் அவர்களுக்கிடையே ரேஸ் நடக்கும். அவனவனுக்கு மனதில் ஏதோ F1டிராக்கில் ஓட்டுவது போல் நினைப்பு. என்ன செய்ய. நாமெல்லாம் சபிக்கப்பட்ட காலத்தில் வாழ்கிறோம் :)
எப்போதோ ஆகியாச்சு.. :(
unmai.nalla padhivu
//மக்களின் ஒத்துழைப்போடு அரசாங்கமும் கவனம் செலுத்துமாயின் நன்றாக இருக்கும். இல்லேயேல் MTC மார்ச்சுவரி ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.//
அதே தான். நல்லா எழுதி இருக்கீங்க.
உண்மைதான். யாருக்கு திமிரும் தெனாவட்டும் அதிகம் என்பதில் சென்னை ஆட்டோ டிரைவர்களுக்கும், MTC டிரைவர்களுக்கும்தான் செம போட்டி. ரிசல்ட் என்னவோ Tieல்தான் முடியும்!
//MTC மார்ச்சுவரி ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது//
இதற்கு வாய்ப்பில்லை. டிரைவர்கள் என்ன சேட்டை செய்தாலும், அரசு எவ்வளவுதான் டிக்கெட் விலையை ஏற்றினாலும், ஏசி பஸ்ஸிலும் கூட்டம் அம்முகிறது
வரிசைப் பின்பற்றுதல், பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் சர்வ் போன்றவை இங்கு கடைபிடிக்கப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
மக்களின் ஒத்துழைப்போடு அரசாங்கமும் கவனம் செலுத்துமாயின் நன்றாக இருக்கும். இல்லேயேல் MTC மார்ச்சுவரி ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.
.....rightly said! சரியா சொல்லி இருக்கீங்க. மாற்றங்கள் சீக்கிரம் வரட்டும்.
சென்னைப்போக்குவரத்து நினைத்தாலே பயமா இருக்கு. இங்கே பரவாயில்லை. ட்ரெயினில் ஏறத்தான் முட்டி மோதுவோமே தவிர பஸ்ஸில் ஏறணும்ன்னா வரிசையில் நின்னுதான் ஏறுவோம்.
ரொம்ப நல்ல இடுகை வித்யா. முடிஞ்சா எதுவும் பத்திரிக்கைகளுக்கு அனுப்புங்களேன். இது அவசியம் சென்னை வாசிகள் அனைவரையும் சென்றடைய வேண்டியது.
நன்றி விஜய் (F1 இல்ல ஜெட்).
நன்றி விதூஷ்.
நன்றி சங்கரராம்.
நன்றி நர்சிம்.
நன்றி ரகு.
நன்றி சித்ரா.
நன்றி அமைதிச்சாரல்.
நன்றி விக்னேஷ்வரி.
நண்பர்களே பிளாக்கர் ஏதோ சதி செய்து. திடீர் திடீர்ன்னு கமெண்ட் காணாம போகுது. நான் எதுவும் பண்ணல. கமெண்ட் காணோம்ன்னு கோச்சுக்காதீங்க.
நல்ல விதமா ஓட்டும் அரசுப் பேருந்து டிரைவர்களும் இருக்கிறார்கள்!
என்ன! அவர்களை கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுத் தேட வேண்டும்!
//வித்யா said...
நண்பர்களே பிளாக்கர் ஏதோ சதி செய்து. திடீர் திடீர்ன்னு கமெண்ட் காணாம போகுது. நான் எதுவும் பண்ணல. கமெண்ட் காணோம்ன்னு கோச்சுக்காதீங்க//
எனக்கும் அப்படித்தான் ஆகிறது வித்யா
//மக்களின் ஒத்துழைப்போடு அரசாங்கமும் கவனம் செலுத்துமாயின் நன்றாக இருக்கும். இல்லேயேல் MTC மார்ச்சுவரி ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.//
ரொம்ப சரியான வார்த்தைகள்
சாண்ட்ரோ விடுங்க எங்களை மாதிரி சைக்கிள்காரங்க பிரிட்ஜ் மேல ஹாரன் அடிக்காம உரசிட்டு போற பஸ்ன்னால பட்ற அவஸ்தை ம்ம் சரி விடுங்க :(
தினம் அந்த பேருந்தில் செல்பவன் என்ற முறையில் நீங்கள் சொன்ன அனைத்தும் நடக்கின்றன
அதே போல் மரியாதை இல்லாமல் பேசும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
நீங்கள் சொல்வது மிகவும் சரி
தங்கள் கருத்து நன்றாக உள்ளது
என்னோட கமெண்ட் ஏன் டெலீட் பண்ணினீங்க ? :)- அநியாயம், அட்டூழியம்.
எங்க ஊர்ல (திருச்சி) அரசாங்க பேருந்து ஒட்டறவங்க ரொம்ப பொறுமையாவே ஓடறாங்க. பிரைவேட் வண்டி தான் பிரச்சனை பண்றவங்க.
nice post.
கோபம் தெரியுது.. கடந்த ஜனவரியில் Road safety week நிகழ்ச்சிக்காக, எனது கம்பெனிக்கு சென்னை நகர ட்ராபிக் இன்ஸ்பெக்டர் ஒருவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது, சென்னை நகரில் சிக்னலை மதிக்காமல் மீறும் பஸ்களின் எண்களை, அந்த சிகனலில் இருக்கும் போலீஸ் நோட் பண்ணிக்கொள்வார் என்றும், அதற்கான அபராதத்தை போக்குவரத்து அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து, அந்த டிரைவரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறினார். உண்மையா எனத் தெரியவில்லை.
நீங்கள் சொன்னதுபோல, இண்டிகேட்டர் போடாமல் தான் இடதும் வலதுமாகத் திரும்புகிறார்கள். (இருந்தால்தானே போடுறதுக்கு)
MTC விளக்கம் அருமை :-)
நன்றி என்.ஆர்.சி.பி.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி நேசமித்ரன்.
நன்றி பாலாஜி.
நன்றி மணிகண்டன்.
நன்றி சுரேஷ்.
நன்றி உழவன்.
aenga neenga enna Cognizanta?
For any MTC related complaints you can contact
MTC Complaint no : 9383337639, 9445030516
GM South chennai: 9445030505
North chennai : 9445030562
MTC - என்றால் எமனின் வாகனம் சரியாத்தான் சொல்லியிருக்கறீங்க....
இண்டிகேட்டரா ? நல்ல காமெடி பண்றீங்க.
பைக்ல போகும் போது ரெட் போட்டாச்சு, ஆனா பின்னாடி வந்த பஸ் கண்டிப்பா நிக்காதுன்னு தெரிஞ்சு, ரெட்ட கிராஸ் பண்ணுனேன். போலீஸ் என்ன புடிச்சுது. சார் நிறுத்தியிருந்தா அவன் என் மேல ஏத்தியிருப்பான்னு சொன்னதுக்கு, ஏத்தட்டும்யா ! அதப் பாத்துட்டு நாங்க சும்மா இருப்பமான்னு கேட்டாங்க. என்னத்த சொல்ல...
ஹலோ வித்யா ,
நான் ரெம்ப வெறித்தனமா புக்ஸ் (கதை புக், கட்டுரை, பின் முன் மற்றும் சைடு நவீனத்துவம் ) படிக்கற ஆளு,இங்க USA வந்ததுகப்புறமாதன் ப்ளக்ஸ் பத்தி தெரியும்(ஏனா அப்பதான் மொத மொத வாழ்க்கையிலேயே கம்ப்யூட்டர் சொந்தமா வாங்கினேன்!!) .இந்த 10 மாசமா நெறைய பிளாக்ஸ் படிச்சுருக்கேன் நிறைய சிரிச்சுருக்கேன், சிந்திச்ருகேன், மனசு கனத்ருகேன்,) .ஆனா மொத மொத ஒரு பொண்ணு (சாரி இவ்ளோ வயசான உங்கள பொண்ணுன்னு சொல்ல கூச்சமா இருக்கு, பட் வேற சரியான வார்த்தை கிடைக்கவில்லை) இவ்ளோ சுவாரஸ்யமா மொக்கை :-) போடுறத இப்பதான் படிக்றேன்.ரியலி இன்ட்ரஸ்டிங் Convey my regards to your kid and hubby.
Cheers
Shiva
நன்றி சூர்யா (தற்போது இல்லை).
நன்றி எறும்பு.
நன்றி சங்கவி.
நன்றி பின்னோக்கி.
நன்றி சிவா (சீரியஸா பேசிக்கிட்டிருக்கேன். இங்க வந்து சிரிப்பு போலீஸுங்கறீங்களே. இது நியாயமா?)
தண்ணி லாரி வரிசைல பஸ்ஸுமா!!
/கமெண்ட் காணோம்ன்னு கோச்சுக்காதீங்க//
கூகிள்ல என்ன பிரச்னைன்னு தெரியலை.. எனக்கும் ஒருநாள் இப்படி ஆச்சு..
இப்ப ரெண்டு நாளா, நான் யார் ப்ளாக்ல கமெண்ட் போட்டுட்டு இ-மெயில் ஃபாலோ அப் போட்டாலும், என் மெயிலுக்கு வரமாட்டேங்குது.
94450 30516 This is the PTC(MTC) Customer Complint Cell No. Use it they respond very much.
94450 30516. This No. is PTC(MTC) Customer Complaint Cell No. Use it. They respond very well.
Post a Comment