சில படங்களை பார்க்கும்போது ஏண்டா இந்தப் படத்த பார்த்தோம் என்ற உணர்வு இருவேறு மனநிலைகளில் ஏற்படும். ஒன்று இவ்வளவு மொக்கையானப் படத்துக்கு வந்துட்டோமேன்னு (எனக்கு விஜய் படங்களைப் பார்க்கும்போது ஏற்படும்) தோணுகின்ற நிலை. மற்றொன்று தாங்கமுடியாத மன அழுத்தத்தினை ஏற்படுத்தும்போது. நான் கடவுள் பார்த்தபோது 'அய்யோக் கடவுளே' என்ற உணர்ச்சி மேலோங்கி இருந்தது. அதே உணர்ச்சி அங்காடித் தெருவைப் பார்த்தபோதும் இருந்தது.
இப்படியும் வாழ்க்கை வாய்க்கப்பெற்றவர்கள் இருக்கிறார்களா என்ற ஆச்சர்யம்/அதிர்ச்சி படத்தைப் பார்த்தபோது ஏற்பட்டது. முழுப் படமும் இதே உணர்வுகளை ஏற்படுத்துவதால் சில இடங்களில் மிகைப்படுத்தியிருக்கிறார்களோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது. எதிர்பாராத தருணங்களில் ஏற்படும் விபத்துக்கள்/நிகழ்வுகள் வாழ்க்கையை எவ்வாறெல்லாம் புரட்டிப்போடுகிறது என்பதற்கான சா(கா)ட்சிகள் படம் முழுவதும். லிங்கு, ராணி, கனி கதாபாத்திரங்கள் மனதில் நிற்கிறார்கள். கருங்காலியாக இயக்குனர் வெங்கடேஷ். அலட்டாமல் வில்லத்தனம். வார்த்தைகளாலேயே குத்திக் கிழிக்கிறார் மனுசன்.
ராணியின் ரத்தத்தை கோலத்தோடு சேர்த்து கழுவி அதே இடத்தில் பிறரால் போடப்படும் கோலங்கள், மரணங்களை மற்றொன்றாக எடுத்துக்கொள்ளும் மனோபாவங்கள் வலியைக் கொடுக்கின்றன. நாய்க்கொட்டிலில் இருக்கும் தங்கை, பாலியல் தொழில் செய்தவருக்கு பிறக்கும் குழந்தை, வெரிக்கோஸ் நோய்கண்டு இறக்கும் நபர் என கதாபாத்திரங்கள் இதுவும் வாழ்க்கைதான் என உணர்த்துகிறார்கள்.
வசனங்கள் பளிச். ஜெயமோகனாமே. இதே மாதிரி இவர் கதைகளும் (எனக்கு) புரிந்தால். ஹும்ம். அதிகம் மெனக்கெடாமல், வார்த்தைகளைத் தேடாமல் இயல்பாய் சொல்ல வந்ததை சொல்ல வேண்டியதை புரிவதுபோல் சொல்லிச் செல்லும் வசனங்கள். இசையும் அப்படியே. அவள் அப்படியொன்றும் அழகில்லை பாடல் அழகாய் இருக்கிறது.
படத்தில் எனக்குப்ப் பிடித்த மற்றுமொரு கதாபாத்திரம் பாண்டி. ஹெவியான படத்தை அவ்வப்போது லேசாக்க முயற்சி செய்திருக்கிறார். 'நீருல்ல நேரம் பார்த்திருக்கனும்' என்பதாகட்டும், சவுரியை வைத்துக்கொண்டு சலம்புவதாகட்டும், கடவுள் வாழ்த்தை காதல் கவிதையாக்குவதாகட்டும். கச்சிதமாய் செய்திருக்கிறார்.
அங்காடித் தெரு - கனக்கிறது
பி.கு : இந்தப் படத்தை பின்பற்றி இனி வெறும் யதார்த்தமான கதைகளே படமாக்கப்படும் என்ற சூழ்நிலை உருவாகாமல் இருக்க பிரார்த்திக்கும் சராசரிக்கும் கொஞ்சுண்டு அதிகமாய் எதிர்பார்க்கும் சாதாரண சினிமா ரசிகை. தியேட்டரில் எங்களிடயே ஏற்பட்ட விவாதங்கள் மற்றொரு பதிவில் பகிர்கிறேன்.
April 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
nice
//அங்காடித் தெரு - கனக்கிறது//
அதனாலயே பாக்க பயமா இருக்குங்க.
பி.கு : இந்தப் படத்தை பின்பற்றி இனி வெறும் யதார்த்தமான கதைகளே படமாக்கப்படும் என்ற சூழ்நிலை உருவாகாமல் இருக்க பிரார்த்திக்கும் சராசரிக்கும் கொஞ்சுண்டு அதிகமாய் எதிர்பார்க்கும் சாதாரண சினிமா ரசிகை. தியேட்டரில் எங்களிடயே ஏற்பட்ட விவாதங்கள் மற்றொரு பதிவில் பகிர்கிறேன்.
.........பின் குறிப்பில், பின்னிட்டீங்க. மனதை நெகிழ வைத்த படம் பார்த்து விட்டு வந்து, கூலாக நீங்கள் அடித்திருக்கும் கமென்ட் ரசித்தேன்.
//அங்காடித் தெரு - கனக்கிறது//
நமக்கு இருக்கற பிரச்னையே போதும், இதுல தியேட்டருக்கு வேற போய் இன்னும் வாங்கிட்டு வரணுமா :(
Good
//அங்காடித் தெரு - கனக்கிறது//
ரெம்பவே..
//வசங்கள் //
வசனங்கள்?
//இவர் கதைகளும் (எனக்கு) புரிந்தால்.//
ஆசைப்படலாம், பேராசைப்படக்கூடாது :-))
நன்றி பிரியமுடன் பிரபு.
நன்றி அம்மிணி (ரொம்ப நாள் டபாய்ச்சிட்டுருந்தேன். அன்னிக்கு
மாட்டிக்கிட்டேன்).
நன்றி ரகு (அதே அதே.)
நன்றி சித்ரா.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி எறும்பு.
நன்றி கேவிஆர்.
நல்ல பதிவுங்க
இந்த படம் குறித்த என் கருத்துக்கள் அங்காடி தெரு பணியாளர்களும், அசிஸ்டெண்ட் டைரக்டர்களும், ஜூனியர் லாயர்களும் !!
டிஸ்கி நன்றாக இருந்தாலும்.. நீங்கள் விரும்பியது நடக்க ஆரம்பித்தால் விஜய் படம் தான் வேறு வேறு நடிகர்கள் நடித்து வரும்.:)
ஆமா மேடம் பாத்தா எல்லாருமே நல்லாருக்குன்னு தான் சொல்றாக
ஒரு படம் விடுறதில்ல போல :-)
ஜெமோ வசனங்கள் ரொம்ப நல்லாருக்குனு எல்லோருமே சொல்றாங்க..
ஹெவி சப்ஜெக்ட் படங்கள் எல்லாம் எனக்குக் கொஞ்சம் அலெர்ஜி :) அதுவும் ஹெவி சப்ஜெக்ட் தமிழ்ப் படங்கள். உணர்ச்சிகளை அப்படியே காட்டணும் என்பதற்காக ஓவராகக் காட்டுவார்கள். எரிச்சலாக இருக்கும். அதனாலயே இந்த மாதிரிப் படங்களைப் பார்ப்பதில்லை.
படத்தைப் பற்றி இவ்வளவு சொல்லியிருக்கீங்க. பாடல்கள் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே? அவள் அப்படியொன்றும் அழகில்லை, பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும் :)
நன்றி நர்சிம்.
நன்றி டாக்டர்.
நன்றி அமைச்சர்.
நன்றி கேபிள் (விஜய கிண்டல் பண்ணியாவது படத்தப் பார்த்துடலாம். இந்தப் படம்??)
நன்றி உழவன் (ஏங்க வயித்தெரிச்சல கிளப்பறீங்க)
நன்றி விஜய் (அதே அதே).
கமெண்ட் பேஜுக்கு யாரோ சூன்யம் வச்சிட்டாங்களா? தீடிர்ன்னு வருது போகுது???
//நான் கடவுள் பார்த்தபோது 'அய்யோக் கடவுளே' என்ற உணர்ச்சி மேலோங்கி இருந்தது.//
இதுக்காகவே நான் அந்தப் படத்தைப் பாக்கவேயில்லை!! இந்தப் படமும் அந்த லிஸ்ட்ல சேந்துடுமோ என்னவோ!!
ம், பார்க்கணும்.
நல்ல விமர்சனம். படத்தை சுவாரஸ்யப்படுத்துவதே ஜெயமோகனின் வசனங்கள் தான்.
நன்றி ஹுஸைனம்மா.
நன்றி விக்கி.
நன்றி சரவணக்குமார்.
Post a Comment