April 21, 2010

சென்னையின் மழைக்காலங்களில்...

கிட்டத்தட்ட 12 வருடங்களை வேலூர் வெயிலில் கரைத்த எனக்கு சென்னையின் வெயிலும் சரி மழையும் சரி எரிச்சல் தரும் விஷயமாகவே இருந்தன. வேலூரில் என்ன தான் கொளுத்தியெடுத்தாலும் கசகசப்பு இருக்காது. சென்னை நேரெதிர். கொஞ்சமே வெயிலடித்தாலும் கசகசவென எரிச்சல் படுத்திவிடும். என்றைக்குமே மழையில் நனைவதென்பது எனக்கு அறவே பிடிக்காது. டிரெஸ் நனைந்து, முடியெல்லாம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு i hate it. மழையில் நனைய ரொம்பப் பிடிக்கும் என்று சொல்பவர்களை நினைத்து மனதிற்குள் சிரித்துக்கொள்வேன் (யாரையோ இம்ப்ரெஸ் செய்யவே இந்த டயலாக் வரும். Or to show that u r very romantic).

இது சென்னையில் எனக்கு ஐந்தாவது வருடம். 2005இல் வேலை சேர்ந்து கதீட்ரல் ரோடில் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்தோம். அந்த வருட மழை என்னை நிஜமாகவே மிரட்டி விட்டது. பெசண்ட் நகரிலிருந்து 29C பிடித்து ஆபிஸ் போகனும். எந்த முன்னறிவிப்புமின்றி அடித்து ஆட ஆரம்பித்திருந்தது மழை. அதற்கு முன் தினம் தான் ரூமுக்கு வெட்டிவேர் தட்டி போடுவது பற்றி நானும் ஹேமாவும் டிஸ்கஸ் செய்தோம். மறுநாள் பஸ்ஸில் போனால் அதிர்ச்சி. சாந்தோம் சிக்னலிலிருந்து ஐ.ஜி ஆபிஸ் வரை வெள்ளம் தான் ரோட்டில். நானும் ஹேமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ஸ்டாப்பிங்கில் இறங்கி ரோட் கிராஸ் செய்து ஆபிஸ் நுழைவதற்குள் (மேட்டர் ஆஃப் 3 மினிட்ஸ்) ரெண்டு பேரும் நன்றாக நனைந்திருந்தோம். ஆபிசே வெறிச்சோடியிருந்தது. Adminல் கேட்டால் "மேட்டர் தெரியாதா. ஹெவி டவுன் போர் (மழைங்கறத எப்படியெல்லாம் சொல்லுது பாரு பயபுள்ள). அதனால நிறைய பேர் ஆபிஸ் வரல. அநேகமாக இன்னிக்கு லீவு வுட்றுவாங்கன்னே நினைக்கிறேன்" என வயிற்றில் புளியைக் கரைத்தனர். பின்னே. முக்கால்வாசி நாட்கள் வெறும் பாலும், ஆப்பிளும் முழுங்கிட்டு ஆபிஸ் லஞ்சை நம்பி வரும் எங்களுக்கு அந்த செய்தி பேரிடியாகவே இருந்தது. ஆபிஸை விட்டு வெளியே போகமுடியவில்லை. எல்லாத்தையும் விட பேரதிர்ச்சியாக பில்டர் காபி/டீ மெஷினை ஆபரேட் செய்பவர்கள் எவரும் வரவில்லை. எனக்கு அந்த பவுடர் பால் டீ உள்ளவே இறங்காது. ஆட்டோ பஸ் என எதுவும் கிடைக்கல. இன்னிக்கு ஆபிஸ்லேயே தான் தங்கவேண்டிவரும்போல என நொந்துக்கொண்டோம். இதற்குள் தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி வரும்படி போன் செய்தார்கள். ரூமுக்கு போகவே வக்கத்துப் போய் ஆபிஸ்ல உட்கார்ந்திருக்கோம். ஸ்டேஷன் போக வண்டி கிடைக்கவேயில்லை. அப்புறம் அப்பா உறவினர்களிடம் பேசி வண்டி ஏற்பாடு செய்து ஊர் போய் சேர்ந்தோம்.



அதே ஆண்டு இறுதியில் கதீட்ரலிலிருந்து பெருங்குடி மாற்றிவிட்டார்கள். சுத்தம். ஆபிஸ் தனியாய் மிதக்கிறது. அன்னிக்கின்னு ஆபிஸ்ல முக்கியமா ஒரு கிளையெண்ட் கால். முந்தின நாள் பேசிட்டு படுக்கவே 2 ஆகிவிட்டதால் வழக்கம்போல எல்லாமே லேட். கரெக்டாய் பஸ் மிஸ் பண்ணிட்டோம். ஆட்டோ பிடித்து போனால் SRP tools தாண்டியதும் ஆட்டோக்குள்ள தண்ணி வர ஆரம்பிச்சிடுச்சு. ஆட்டோகாரர் கொஞ்சம் இரக்கப்பட்டு ரோட்டோரமா கொஞ்சூண்டு மேடா இருந்த இடத்துல இறக்கிவிட்டுட்டு போய்ட்டார். அப்புறம் கம்பெனி பஸ்ஸ நிறுத்தி ட்ரைவர் காலில் விழாத குறையா கெஞ்சி ஆபிஸ் இருக்கும் ரூட்டில் போய் எங்களிருவரையும் இறக்கிவிட்டு போகும்படி வேண்டினோம். போனாபோகுதுன்னு அவரும் பெரிய மனசு பண்ணதால கரெக்டா மீட்டிங் ஆரம்பிக்கும்போது உள்ள போயி, வழக்கம்போல இங்கிலீஷ் பட டயலாக் மாதிரி அவங்க பேசினதுக்கெல்லாம் "Yes" "No" "Sure" "Ok" "Fine" போட்டுட்டு வந்தேன். புதுசாய் ஒரு PL வேறு வந்திருந்தார். லைட்டா தூறல் போட்டாலே அவர் ஆபிஸ் வரமாட்டார். மழை பெய்த மறுநாள் சரியாக பத்து மணிக்கு அவரிடமிருந்து போன் வரும். "Hey i'm struck @ home due to this rain. I think i'll not b able to make it to office today. If u guys need anything call me". ஹூக்கும். இந்த மழைக்கு சூடா மசால் வடையும் டீயும் தான் வேணும். அத அவர்ட்ட கேக்க முடியுமா என அருகிலிருப்பவன் உதிர்க்கும் மொக்கைக்கு சிரிப்பதா வேண்டாமா என யோசிப்பதில் கொஞ்ச நேரம் செலவிடப்படும். 2006 ஆம் ஆண்டு என் கல்யாணத்திற்கு 1 மாதத்திற்கு முன்பு மறுபடியும் பிராஜெக்ட் மூவ் பண்ணாங்க. இந்தமுறை இன்னும் டெரராய் OMR பிராஞ்ச். அங்கனயிருந்து வூடு போய் சேர நல்ல நாளிலேயே குறைஞ்சது ஒன்றரை மணி நேரம் ஆகும். இதுல மழைன்னா கேக்கவே வேணாம். எங்க பள்ளமிருக்குன்னு தெரியவே தெரியாது. ஞாயிறுகளில் பெசண்ட் நகரில் நிறைய பேர் வீலிங் பழகுவார்கள். நல்ல ஸ்பீடில் வந்து சரக்கென்று பிரேக் அடித்து பின் வீலை ஆகாசத்தில் சுழற்றுவார்கள். அந்த மாதிரி பண்ணாமலேயே நிறைய பைக்குகள் இந்த பள்ளத்தில் கிடக்கும். கார்கள் கூட ஒரு பத்து பேர் "ஏலேலோ ஐலசா" பாட ஒருக்களித்துப் படுத்திருப்பதுபோல் பள்ளத்தில் சிக்கியிருக்கும். ஒழுங்கா வீடு போய் சேரனும்டா சாமீ என ஆன் த ஸ்பாட் வேண்டுதல்கள் பிறக்கும்.

ஓ.எம்.ஆரோடு என் கேரியர் ஓரியண்டட் வாழ்க்கைக்கு தொடரும் போட்டாச்சு. 2007ல் ஜூனியர் பிறந்தபின் மதுராந்தகத்தில் கொஞ்ச காலமும், பாண்டிச்சேரியில் கொஞ்ச காலமும் இருந்துவிட்டு எண்ட் ஆஃப் சீசன் போது மறுபடியும் சென்னை. இந்தமுறையும் மழை கொஞ்சம் டெரராய் இருந்தது. ஜூனியரின் உடல்நிலையில் மாற்றம், குழந்தை துணிகள் காய்வது போன்ற பிரச்சனைகளோடு வீட்டுக்குள் வந்துவிடும் குட்டி குட்டி தவளைகள் கிலியேற்படுத்திக்கொண்டிருந்தன:( 2008 தாம்பரத்தில். பெரிய கஷ்டமேதும் தெரியவில்லை. குழந்தை தான் மாற்றத்தை அடாப்ட் செய்ய திணறினான். இப்போ மறுபடியும் சென்னையில். இந்த தடவை எப்படி ஆட்டுவிக்கிறதென பார்க்கனும். "உஸ்ஸ் அப்பா" என புலம்பிக்கொண்டே வெயிலை சமாளித்துவிட முடிகிறது. மழைதான் ரெகுலர் ரொட்டினையே புரட்டிப் போட்டுவிடுகிறது. தண்ணீர் தேங்கி வழுக்கும் தரைகள், எவ்வளவு பெருக்கி துடைத்தாலும் சேறாகும் வீடு, சரிவர காயாமல் கிடக்கும் துணி, அடிக்கடி எட்டிப் பார்க்கும் ஜல்பு, இவற்றிர்கெல்லாம் மேலாக தூங்கிட்டே இருந்தா நல்லாருக்கும் என தோன்றும் எண்ணம் என மழையினால் ஏற்படும் அசௌகரியங்கள் ஜாஸ்தி தான். இருந்தாலும் மழையில் நனைந்து ஒட்டிக்கொண்டுவிட்ட சிறகுகளை பிரிக்க உடலை உதறும் புறாவை ஆறாவது மாடியிலிருந்து சூடாக ஆவி பறக்கும் இஞ்சி டீயோடு ரசிப்பதிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது.

பி.கு : போன வருடம் மழை சீசன் போது எழுதியது. அப்படியே கொஞ்சம் வெளியூர் போக வேண்டியிருப்பதால் ட்ராப்டிலிருந்து தூசி தட்டி எடுத்து போட்டிருக்கிறேன். வெயிலுக்கு காண்ட்ரவர்சியலா மழைப் பதிவு:)

22 comments:

Chitra said...

இருந்தாலும் மழையில் நனைந்து ஒட்டிக்கொண்டுவிட்ட சிறகுகளை பிரிக்க உடலை உதறும் புறாவை ஆறாவது மாடியிலிருந்து சூடாக ஆவி பறக்கும் இஞ்சி டீயோடு ரசிப்பதிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது.


..... வேர்வை மழையில் நனைந்து கொண்டு இருக்கும் சென்னை வாசிகளுக்கு, மழையை நினைவுப் படுத்தும் பதிவு... :-)

ஜெய்லானி said...

//சென்னையின் வெயிலும் சரி மழையும் சரி எரிச்சல் தரும் விஷயமாகவே இருந்தன. //
கடல் பக்கத்தில் இருக்கும் ஊர்களில் வெயிலின் கொடுமை இருக்கும்,ஹியூமிடிட்டி அதிகம். உங்களை 4 மாசம் துபாயில் போட்டால் அப்புறம் இது மாதிரி எல்லாம் சொல்ல மாட்டீங்க. வெயில் குறஞ்சது 40 டிகிரி இருக்கும்.

தமிழ் அமுதன் said...

பசி நேரத்துல சாப்பாடு பத்தியும் ...!வெய்யில் நேரத்துல மழை பத்தியும்...!! ம்ம்ம் ரைட்டு...!

நர்சிம் said...

ஹுக்கும்...

.

நல்ல பதிவுங்க.

Thamira said...

Veyil kalaththula ippaidi oru Pathivu.? Huum.!

By the way.. 2005 malaila oru naal Chennaiyin Pathala logam Paris'la maattinathu ninaivukku varuthu. :-)

Raghu said...

அடைம‌ழையில் ந‌னைய‌ற‌த‌விட‌ சிறுதூற‌லில் ந‌னைய‌ற‌து உண்மையாவே ம‌ன‌சுக்கு ஏதோ ஒரு ச‌ந்தோஷ‌த்தை கொடுக்கும்....கொஞ்ச‌ நேர‌ம் க‌ழிச்சு ஜ‌ல‌தோஷ‌த்தையும் கொடுக்கும்...;)

சென்னை சாலைக‌ளில் வ‌டிகால் வ‌ச‌தி ச‌ரியில்லாத‌துதான் நீங்க‌ ம‌ழையை வெறுக்க‌ கார‌ண‌ம். ம‌ழையால‌ அவ‌ஸ்தை ப‌டும்போதுலாம் "என்ன‌ ப‌ண்ற‌து, ச‌ம்ம‌ர்ல‌ எந்த‌ பிர‌ச்னையும் இல்லாம‌ இருக்க‌ணும்னா, பொறுத்துகிட்டுதான் ஆக‌ணும்"னு நினைச்சுப்பேன்.

Anonymous said...

மழை காலத்தில் குளிக்கரது :)) ???

Anonymous said...

நேத்து இங்க சரியான மழை. எனக்காக போட்ட மாதிரி இருக்கு :)

Rajalakshmi Pakkirisamy said...

//மழை காலத்தில் குளிக்கரது :)) ???//

i wanna tell something.. but no comments :) :)

அமுதா கிருஷ்ணா said...

சக்கை போடு போடும் வெயில்லெ மழை பதிவு தூள்...

Vijay said...

சென்னை வந்து மூன்று மாதங்களில் ஒரேயொரு நாள் தான் மழை பெய்திருக்கிறது. மேகங்களைக் கூட இன்னும் பார்க்க வில்லை. சென்னையில் மெய்யாலுமே மழை பெய்யும் என்று உங்கள் பதிவைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது.

"உழவன்" "Uzhavan" said...

படத்துல மழை வர்றமாதிரி சீன் வந்தாக்கூட பயந்துருப்பீங்க போல :-)

Vidhya Chandrasekaran said...

நன்றி சித்ரா.
நன்றி ஜெய்லானி.
நன்றி ஜீவன்.
நன்றி நர்சிம்.
நன்றி ஆதி.
நன்றி ர‌கு.

Vidhya Chandrasekaran said...

நன்றி மயில்.
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி ராஜி.
நன்றி அமுதா கிருஷ்ணா.
நன்றி விஜய்.
நன்றி உழவன்.

Anonymous said...

//மழையில் நனைய ரொம்பப் பிடிக்கும் என்று சொல்பவர்களை நினைத்து மனதிற்குள் சிரித்துக்கொள்வேன் (யாரையோ இம்ப்ரெஸ் செய்யவே இந்த டயலாக் வரும். Or to show that u r very romantic)//


என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. எங்க வீட்டில எல்லோருமே மழையில் கெட்ட ஆட்டம் போடுவோம். தலைகுளிச்சிட்டு வர அம்மா சூடா டீ கொடுத்தா, சில்லுனு சேபத் (சர்பத்) வேணும்னு வெறுப்பேற்றுவோம். அது ஒரு சுகம். ஒழுங்கான நகர அமைப்பு இல்லைன்னா நீங்க சொன்ன தொல்லை எல்லாம் இருக்கும். அதுக்கு அரசாங்கத்த திட்டுங்க. எதுக்குங்க மழையை திட்டுறீங்க. =((

மழையில் கெட்ட ஆட்டம் போடுவோர் சங்கம், ஆஸ்ரேலியா கிளை.

sathishsangkavi.blogspot.com said...

:))))

Anonymous said...

mali pidikathu..

malai varum munney varum kulirntha katrum man vasanium

pidikum..padivu maliyil nanainthen.

nandri
valga valamudan.

belated wises to junior.

happy birthday.

varuthapadatha vaasippor sangam
Complan surya

தாரணி பிரியா said...

எனக்கு மழை ரொம்பவே பிடிச்ச விஷயம் இன்னும் மழை வந்தா முடிஞ்ச வரைக்கும் நனையத்தான் பார்ப்பேன் :)

ஹுஸைனம்மா said...

//மழையில் நனைய ரொம்பப் பிடிக்கும் என்று சொல்பவர்களை நினைத்து மனதிற்குள் சிரித்துக்கொள்வேன் //

நான்கூட “சே, நான் மட்டும் ஏன் இப்படி மழையைக் கண்டா ஓடுறேன்? அடுத்த தரம் நனையணுன்”னு நினைச்சாலும், மழை வந்தா, அப்பவும் ஜூட்..தான்!! தப்பித்தவறி தெரியாம நனைஞ்சுட்டா வர்ற எரிச்சல்....!!

Vidhya Chandrasekaran said...

நன்றி அனாமிகா (கோச்சுக்காதீங்க).
நன்றி சங்கவி.
நன்றி சூர்யா (மேல தான் வருது).
நன்றி தாரணி.
நன்றி ஹுஸைனம்மா.

பின்னோக்கி said...

கசகசப்புதான் பெரிய பிரச்சினை. பெங்களூர் க்ளைமேட் மட்டும் சென்னையில இருந்தா எப்படி இருக்கும்னு அடிக்கடி நினைச்சுப்பேன்..

Vidhya Chandrasekaran said...

நன்றி பின்னோக்கி.