கலா அக்காவும் (புதுகைத் தென்றல்), ரகுவும் விருது கொடுத்து கௌரவப்படுத்தியிருக்காங்க. நெம்ப நன்றி. வாங்கின விருத என் வலைப்பக்கத்தைப் (பதிவு போட்டா மட்டும்) பார்க்கும் சுமார் 180 வாசகர்களுக்கு (எவ்ளோ முட்டினாலும் இந்த ஹிட் கவுண்டர் இதுக்கு மேல போகமாட்டேங்குது. மீட்டர்க்கு சூடு வெக்கனும் போல) இந்த விருதினை கொடுக்கிறேன் (மேடயப் போட்டு என்னை வாழ வைக்கும் தெய்வங்களேன்னு பேசலாமா??!!).
*****************
அதிகாலை 4.30 அல்லது ஐந்து மணிக்கு நெடுஞ்சாலையில் டீக்கடையில் டீ வாங்கிக் குடித்திருக்கிறீர்களா? சென்ற ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை (எனக்கு மிட்நைட்) 3 மணிக்கு ஆரம்பித்த பயணம் இரவு 9.30 மணிவாக்கில் முடிவடைந்தது. 5 மணிக்கு சுடச்சுட டீ (என்னதான் முயற்சி பண்ணாலும் வீட்டில் போடும் டீ அந்தளவுக்கு நன்றாக இருப்பதில்லை). அதுவும் அந்த கண்ணாடி டம்ளரை பிடிக்கமுடியாதளவுக்கு சூடு. துப்பட்டாவில் சுற்றி வாங்கிக் குடித்தது தொண்டைக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது. கூடவே ஒரு பிஸ்கட். டிவைன். விடியற்காலை மெல்லிய குளிர், விர்ரென பறக்கும் வண்டிகளின் சத்தம் என ரம்மியமாய் இருந்தது. ஏதாவது பாட்டுப் போடசொல்லி ட்ரைவரிடம் சொன்னதற்கு வில்லு படம் இருக்கு போடவா என்றார். செட்ட கழட்டி கடாசுங்க என்று சொல்லிவிட்டோம்.
**************
அணைக்கரை பாலத்தில் பழுது காரணமாக போன வருடம் கனரக வாகனப் போக்குவரத்து மூடப்பட்டது. கார்கள் மட்டுமே அனுமதிக்கிறார்கள். ஒரு வருஷமா என்னப் பண்றாங்களோ தெரியல. ஊரெல்லாம் சுத்திகிட்டு சென்னை வரவேண்டியதாய் இருக்கிறது. 11 மணிக்கு கும்பக்கோணத்தில் பேருத்து ஏறினோம். அசோக் பில்லரில் இறங்கியபோது மணி ஆறேமுக்கால். வெரி லாங் டே. ஜுனியர் நன்றாக தூங்கிக்கொண்டுவந்தார். எனக்குதான் தூக்கம் வரவில்லை. பராக்கு பார்த்துக்கொண்டே வந்தேன். பண்ரூட்டியில் நுழைந்ததுமே பலாப் பழ வாசனை மூக்கைத் துளைத்தது. மிதமான நல்லெண்ணைய் வாசனையோடு தேனில் பலாப்பழம் ஊறவைத்து சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. ஹும்ம்.
***************
சுறா பாடல்கள் ரொம்ப சுமார் என நிறைய பேர் சொல்லிக் கேட்டேன். சென்ற வாரம் நானே கேட்டேன். ஒன்னும் மோசமில்லையென்றாலும் எல்லா பாடல்களும் தளபதி புகழ் பாடுவது கொஞ்சம் கடியாக இருக்கிறது. என்னுடைய பேவரிட் 'தஞ்சாவூர் ஜில்லாக்காரி', 'நீ நடந்தால் அதிரடி'. இரண்டும். ஜூனியருக்கு வழக்கம்போல் டமுக்கு டக்கா தான். எல்லாப் பாட்டுக்கும் ஆடுகிறான். சன் டிவியின் பப்ளிசிட்டி பயங்கரமாய் ரீச் ஆகிறது. என் மாமியாருக்கு கூட ரிலீஸ் தேதி கரெக்டாய் தெரிகிறது. சுறா படம் வரட்டும் அப்புறமாய் நான் விஜய்க்கு எழுதிவைத்திருக்கும் கதையை பதிவிடுகிறேன்:))
********************
நண்பர்களோடு கெட் டு கெதர். சமீபத்தில் திருமணமான தோழி கொடுத்த ட்ரீட். அவருடைய கணவர் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு செல்வார் என்றாள். உடனே நாங்கள் எல்லாரும் கோரசாய் அடித்த கமெண்ட் "இருந்து என்ன ப்ரோயஜனம்? கடவுள் அவரக் கைவிட்டதோட இல்லாம கடுமையான பனிஷ்மெண்டும் கொடுத்துட்டாரே". நல்லவேளை அவள் அப்போதுதான் பில் செட்டில் செய்தாள்:)
****************
April 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
சூடா டீ , பிஸ்கோத்து, பலா சொள, யப்பா யப்பா. எங்கிட்டுப் போனாலும் மொதல்ல திங்கிற ஐட்டத்தைத் தான் நோட் பண்ணுவீயளோ? :)
பலாப்பழம் + தேன் சூப்பர் காம்பினேஷன். ஞாபகப்படுத்திட்டீங்களே. உங்க ஃப்ரெண்ட் பத்தி அடிச்ச கமெண்ட் டாப்
ஏதாவது பாட்டுப் போடசொல்லி ட்ரைவரிடம் சொன்னதற்கு வில்லு படம் இருக்கு போடவா என்றார். செட்ட கழட்டி கடாசுங்க என்று சொல்லிவிட்டோம்.
////////////////////////////////
இது தான் டைமிங் காமெடி...சத்தமா சிரிச்சேன்...Superb...அதென்னமோ தெரியல, விஜய நக்கல் பண்ணா மட்டும் எனக்கு குஜாலா இருக்கு...
அப்புறம் சுறா-ல நீங்க சொன்ன ரெண்டு பாட்டுமே தெலுகு "பில்லா" ல சுட்டது... Bommali song Billa, you tube la பாருங்க செமையா இருக்கும்
//அணைக்கரை பாலத்தில் பழுது காரணமாக போன வருடம் கனரக வாகனப் போக்குவரத்து மூடப்பட்டது. கார்கள் மட்டுமே அனுமதிக்கிறார்கள். ஒரு வருஷமா என்னப் பண்றாங்களோ தெரியல.//
அடப்பாவிகளா இன்னமுமா சரி பண்ணலை?? ஆனால் ஒரு சின்ன சந்தோஷம், அந்தப் பழுது காரணமாக எங்கூர் (சிதம்பரம்) வழியாக சென்னை செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகம் ஆகிடுச்சு
நல்லா சாப்பிடுறீங்கன்னு தெரியுது...
//வில்லு படம் இருக்கு போடவா என்றார். செட்ட கழட்டி கடாசுங்க என்று சொல்லிவிட்டோம்//
கேட்டு கேட்டு சலிப்பா ஆயிடுச்சா கொ.ப.செ? :)))
சுறா பாட்ட விடுங்க. வேட்டைக்காரன் வந்தப்ப எல்லாமே வேஸ்னு சொன்னாங்க. இப்ப நீங்க நினைக்கிறீங்க அதை பத்தி?எத்தன பாட்டு தேறுச்சு?
//அப்புறம் சுறா-ல நீங்க சொன்ன ரெண்டு பாட்டுமே தெலுகு "பில்லா" ல சுட்டது//
தலைவரே எல்லா பாட்டுமே தெலுங்குல இருந்து போட்டதுதான். அரேபியா , ஸ்பானிஷ்னு காப்பியடிக்காம தான் போட்ட ட்யூனைதானே போட்டு இருக்கார்?
//அப்புறம் சுறா-ல நீங்க சொன்ன ரெண்டு பாட்டுமே தெலுகு "பில்லா" ல சுட்டது... Bommali song Billa, you tube la பாருங்க செமையா இருக்கும் //
அதே அதே !!
பிச்கட் மேட்டரும் வெள்ளிக்கிழமைக் கிண்டலும் செட்டை கழட்டி வீச சொல்வதும் டைமிங் !!!
Congratulations! (awards)
////நண்பர்களோடு கெட் டு கெதர். சமீபத்தில் திருமணமான தோழி கொடுத்த ட்ரீட். அவருடைய கணவர் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு செல்வார் என்றாள். உடனே நாங்கள் எல்லாரும் கோரசாய் அடித்த கமெண்ட் "இருந்து என்ன ப்ரோயஜனம்? கடவுள் அவரக் கைவிட்டதோட இல்லாம கடுமையான பனிஷ்மெண்டும் கொடுத்துட்டாரே". நல்லவேளை அவள் அப்போதுதான் பில் செட்டில் செய்தாள்:)////
...... ha,ha,ha,ha,.... sema comment!
வாழ்த்துகள்!
//வில்லு படம் இருக்கு போடவா என்றார். செட்ட கழட்டி கடாசுங்க என்று சொல்லிவிட்டோம்.//
ஆஃபிஸ்ல படிச்சுட்டு, சத்தமா வாய்விட்டு சிரிச்சுட்டேங்க :))) பக்கத்து கேபின்ல இருக்கறவன் ஒருமாதிரியா பாக்கறான்!
//கார்க்கி said...
//வில்லு படம் இருக்கு போடவா என்றார். செட்ட கழட்டி கடாசுங்க என்று சொல்லிவிட்டோம்//
கேட்டு கேட்டு சலிப்பா ஆயிடுச்சா கொ.ப.செ? :)))//
மாஸ்டர் ஆஃப் சமாளிஃபிகேஷன் படிச்சிருக்கீங்களா சகா? ;))
\சுறா படம் வரட்டும் அப்புறமாய் நான் விஜய்க்கு எழுதிவைத்திருக்கும் கதையை பதிவிடுகிறேன்:))//
ஏற்கனவே சுறா வந்து யாரை எல்லாம் கடிக்கபோகுதோன்னு பயந்துட்டு இருக்கோம். நீங்க வேற டென்ஷன் பண்ணுரிங்க ..
விருதுக்கு நன்றி :-)
நன்றி விஜய் (டீ பிஸ்கட் கூடவா??)
நன்றி கலா அக்கா.
நன்றி பருப்பு (மணி சர்மாவின் 90% சதவிகித பாடல்கள் அக்கட இருந்து வருவதுதான்).
நன்றி கேவிஆர்.
நன்றி சங்கவி.
நன்றி கார்க்கி (நான் சொன்னது வில்லு படம். பாட்டு இல்ல. வேட்டைக்காரன ஒப்பிடும்போது வில்லுல ரெண்டு பாட்டு ஒகே. வேட்டைக்காரனில் மிஞ்சியது சின்னத் தாமரை மட்டும் தான்).
நன்றி நேசமித்ரன்.
நன்றி சித்ரா.
நன்றி ரகு.
நன்றி ரோமியோ.
நன்றி உழவன்.
வழக்கமான சுவாரசியம்.
http://ananyathinks.blogspot.com/2010/04/blog-post_29.html
உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு :))
//வில்லு படம் இருக்கு போடவா என்றார். செட்ட கழட்டி கடாசுங்க என்று சொல்லிவிட்டோம்//
சத்தியமான உண்மைய சாதாரணமா சொல்லி இருக்கீங்க..
Post a Comment