August 18, 2010

அரியர்’ஸ் பையன்

லைப்ரரிக்கு போனியா?

ஆமாண்ணே.

மினி ஜெராக்ஸ் எடுத்தாதான் பாஸ் பண்ண முடியும்ன்னு சொன்னியே. இப்ப இந்தக் காலேஜோட நெலம முழுசா புரிஞ்சுதா.

நல்லாவே புரிஞ்சுது. நான் செஞ்ச தப்புக்கு தண்டனையா இந்தக் காலேஜ விட்டே போய்டலாம்னு இருக்கேன்.

காலேஜ விட்டே போறீயா? பெயிலான பேப்பர அரியர் எழுதி க்ளியர் பண்ணாம போறேங்கறது எந்த ஊர் நியாயம்?

அதுக்காக திரும்பவும் அதே சப்ஜெக்ட்ட படிக்கறது ரிவிஷன்ங்கற பேர்ல நடக்கற மொக்கத்தனம்.

மொக்கப் போடுற கூட்டத்துல இந்த சீனியரும் ஒருத்தங்கறத மறந்துராத.

அப்படிப் பார்த்தா நானும் அந்த மொக்க கூட்டத்துல ஒருத்தன் தான் அண்ணே. இரண்டு வருஷமா அரியர் க்ளியர் பண்ண முடியாம தவிக்கிற இந்தப் பசங்களுக்கு மத்தில பாஸ் பண்ண நான் கத்துக்கிட்ட அட்வான்ஸ்ட் டெக்னிக்கெல்லாம் வீணாப் போய்டுமோன்னும் பயமாருக்கு அண்ணே.

இரண்டு வருஷமா அரியர் க்ளியர் பண்ணாம இருக்காங்கறத ஒத்துக்கறேன். இருவது வருஷமா, புக்கையும், புக்கிலருந்து கிழிச்ச பக்கத்தையும் வச்சிகிட்டு பாஸ் பண்ணிகிட்டிருந்த பயக. ஜூனியர் பசங்க பாஸ் பண்ண கஷ்டப்பட்டப்போ ஓடிப்போய் மொத ஆளா பிட் பாஸ் பண்ண பயக நம்ம பயக தான். திடீர்ன்னு அவன பிட்டத் தூக்கிப் போட்டுட்டு மினி ஜெராக்ஸ்
யூஸ் பண்ணுடான்னா எப்படி பண்ணுவான்? நீ மினி ஜெராக்ஸ் யூஸ் பண்ண பயதான? நீ சொல்லிக்கொடு. எப்படி உபயோக்கிக்கனும்னு சொல்லிக்கொடு. ஆனா அவன் மெதுவாத்தான் பாஸ் பண்ணுவான். மெதுவாத்தான் பாஸ் பண்ணுவான்.

மெதுவான்னா எம்புட்டு மெதுவாண்ணே? அதுக்குள்ள நான் பாஸாயிடுவேன் போலருக்கே.

போ. பாஸ் பண்ணிட்டு போ. நான் தடுக்க முடியுமா? எல்லாப் பய புள்ளையும் ஒரு நாளைக்கு பாஸாக வேண்டியதுதான். மார்க்கெடுக்கறது முக்கியந்தான். இல்லன்னும் சொல்லல. ஆனா மத்தவங்களுக்கு பேப்பர காமிச்சு பாஸ் பண்றல்ல. அதான் நீ மார்க் வாங்கினதுக்கே அழகு. எக்ஸாம் ஹால் உட்கார்ந்தவுடனே பாஸ் பண்ணிட முடியுமோ? இன்னிக்கு நீ பிட் அடிப்ப. நாளைக்கு உம்மவன் அடிப்பான். அப்புறம் அவன் மவன் அடிப்பான். அதெல்லாம் பார்க்கிறதுக்கு நான் இருக்கமாட்டேன். ஆனா பிட் நான் எழுதினது. இதெல்லாம் எனக்கு பெருமையா? பிட் அடிக்கறது கடமை.

ஆனா இந்த மரமண்டைங்களுக்கு பிட்டத் தவிர எது கொடுத்தாலும் புரியாதுண்ணே. என்ன விட்றுங்க நான் போறேன்.

பிகரையும், வேலையையும் கரெக்ட் பண்ணிட்டு சீனியர எதுத்துப் பேசற நேரமில்ல.

அப்படில்லங்கண்ணே.

வேறெப்படி? வேறெப்படின்னு கேக்குறேன். ஒரே டிபார்ட்மெண்ட் ஜுனியர்ன்னு ராகிங் பண்ணாம விட்டேன்ல. இது வரைக்கும் ஒரு தடவ ராகிங் பண்ணிருப்பேனா? நான் என் ஜூனியருக்கு பிட் போட்டேன். நீ போட்டியா? நீ அரியர்ஸ் க்ளியர் பண்ண கொஸ்டின் பேப்பர்லாம் லவட்டிட்டு வந்து கொடுத்தானுங்களே? அந்த ஜூனியர் பசங்களுக்கு என்ன பண்ண நீ? ஏதாவது பண்ணு. அப்புறம் காலேஜ விட்டுப் போ. CTSல சேரு. TCSல சேரு. அந்த HRயே கல்யாணம் பண்ணிக்கோ. என்ன இப்ப?

பிட் போட காலேஜ்ல இருக்கனும்னு அவசியமில்லண்ணே. வெளில இருந்து வந்தும் போடலாம். நான் போறேண்ணே.

போய்ட்டு வர்றேன்னு சொல்லு. எங்க அந்த ப்ளேஸ்மெண்ட் இன்சார்ஜ்? தம்பி கேம்பஸ்ல ப்ளேசாயி வேலைக்குப் போகப்போது. சீக்கிரம் ப்ளேஸ்மெண்ட் ஆர்டர கொடு. அடுத்த செமஸ்டர் வரைக்கும் இருக்கக் கூடாதா? நீங்க நாலஞ்சு கம்பெனி மாறிட்டு வர்றதுக்குள்ள நான் பாஸாகி போய்ட்டா என்ன பண்ணுவீக?

அண்ணே நான் போய் கம்பெனில ஜாய்ன் பண்ணி கொஞ்ச நாள்ல உங்களையும் ரெக்ரூட் பண்ணிக்கிறேண்ணே.

என்னையா? ஊஹூம். நான் இங்கயே இருந்து அரியர் மேல அரியர் வைப்பனே தவிர வேலைல சேர மாட்டேன். என்னை வேலைக்கு மட்டும் எடுத்திராதடா. புரியுதா?

அண்ணே. நான் கண்டிப்பா இந்தக் காலேஜ் பசங்கள ரெக்ரூட் பண்ணுவேண்ணே. நம்புங்க.

உன்னையத்தானே நம்பனும். உன்னையவிட்டா ஜஸ்ட் பாஸ் பண்ணவன் வேற யாரிருக்கா இந்தக் காலேஜ்ல? போ போ. லேடீஸ் ஹாஸ்டல் பக்கம் போகாம லைப்ரரிக்குப் போ.

ஹி ஹி சும்மானா சிரிக்கறதுக்கு எழுதினது. இந்த வீடியோவ ம்யூட் பண்ணிட்டு மேல இருக்கறதப் படிச்சி பாருங்க:))

26 comments:

Vijay said...

Hats off to you. ஒரு லொள்ளு சபா எபிசோடுக்கு கான்செப்ட் கொடுத்திருக்கீங்க.

\\மொக்கப் போடுற கூட்டத்துல இந்த சீனியரும் ஒருத்தங்கறத மறந்துராத.\\
இந்த வரியைப் படிச்ச்வுடனேயே, கண்டுபிடிச்சுட்டேன் இது தேவர் மகன் டயலாகை உட்டாலகடி பண்ணினதுன்னு :)

pudugaithendral said...

:)

shrek said...

semma...excellently written.
well tailered concept.

அமுதா கிருஷ்ணா said...

கமலை??? கண்டனங்கள்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

super vidhya

சிவகுமார் said...

Just for Jolly .
Super Kallakal .

வல்லிசிம்ஹன் said...

படிக்கப் படிக்க கமலும் சிவாஜியும் முன்னால் வந்துவிட்டார்கள்.சிம்ப்லி சூஊஊஊஊஊஊப்பர் ஸ்

ஹுஸைனம்மா said...

யக்கா, ”மொக்கைத் திலகம்” நீங்க!!

Karthik's Thought Applied said...

chanceae illaaaa.......toooo gud...
pinnitinga.......

Chitra said...

Hilarious!

Vidhya Chandrasekaran said...

நன்றி விஜய்.
நன்றி கலா அக்கா.
நன்றி shrek.

நன்றி அமுதா கிருஷ்ணா (அவ்வ்வ்வ்வ். ஏன்???).

நன்றி டிவிஆர் சார்.

Vidhya Chandrasekaran said...

நன்றி சிவகுமார்.
நன்றி வல்லிசிம்ஹன்.
நன்றி ஹுஸைனம்மா.
நன்றி கார்த்திக்.
நன்றி சித்ரா.

ஜெய்லானி said...

சூப்பர் சீன இப்பிடி மொக்க சீனா மாத்திட்டீங்களே..அவ்வ்வ்வ்

Gokul R said...

Bayangaram Vidya ...

Rolled like hell in laughter !

Ungalukkulla oru screenwriter olinju kedakkan paathu edhavadhu pannungappu ...

sujatha said...

superb!!!
semma karpanai thiran

"உழவன்" "Uzhavan" said...

"அரியர்ஸ் மகன்" இப்படி டைட்டில் வச்சிருக்கலாம் :-))))

Raghu said...

//இன்னிக்கு நீ பிட் அடிப்ப. நாளைக்கு உம்மவன் அடிப்பான். அப்புறம் அவன் மவன் அடிப்பான். அதெல்லாம் பார்க்கிறதுக்கு நான் இருக்கமாட்டேன். ஆனா பிட் நான் எழுதினது.//

ஆஃபிஸ்ல‌ வீடியோ பாக்க‌முடிய‌ல‌. ஆனா இந்த‌ இந்த‌ வ‌ரியை ப‌டிச்ச‌ப்போ...:))))))))

சிவாஜி, க‌ம‌லைக் கூட‌...:((

Vidhya Chandrasekaran said...

நன்றி ஜெய்லானி.
நன்றி கோகுல்.
நன்றி சுஜாதா.
நன்றி உழவன்.
நன்றி ரகு.

Rajalakshmi Pakkirisamy said...

akkaov..... mokkai :) :) :)

//கமலை??? கண்டனங்கள்..//

athe athe

R. Gopi said...

நெறையா அரியர் வெச்சிருப்பீங்க போலருக்கே. ஆனா இந்தப் பதிவுக்கு distinction கெடுக்கலாம்.

எக்ஸாம் பூதம் இன்னமும் என்னை விடலை. நேரமிருக்கும்போது இதைப் பாருங்கள்.

http://ramamoorthygopi.blogspot.com/2010/08/blog-post_13.html

'பரிவை' சே.குமார் said...

நினைச்சேன் என்னடா தேவர்மகன் வசனம் போல வருதே கதை அப்படி இருக்குமோன்னு பார்த்தா... கடைசியில தேவர்மகன் வீடியோ... சரி நடத்துங்க.
சும்மா சொல்லக்கூடாது மினிஜெராக்ஸ் எடுக்கிறதை நல்லா சொல்லியிருக்கீங்க. காலேசு வாழ்க்கையில நீங்கதான் வாத்தியாரமாவா?

ராமுடு said...

Superb.. Initially I was not able to understand the flow.. Then read final lines and started from the beginning.. Excellent work.. Join in Lolllu saba

Unknown said...

தேவர்மகன் வீடியோவெல்லாம் போட்டு விளக்கணுமா என்ன??

பின்னோக்கி said...

ரகளை :)

Vidhya Chandrasekaran said...

நன்றி ராஜி.
நன்றி கோபி.
நன்றி குமார்.
நன்றி ராமுடு.
நன்றி கேவிஆர்.
நன்றி பின்னோக்கி.

விக்னேஷ்வரி said...

அடிப்பாவி. சூப்பர் மொக்கை.