August 11, 2010

ஈடன் - Eden

பொதுவாகவே சைவம் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு ஒரு சின்ன குறை இருக்கும். வெரைட்டி என்பது சைவ உணவகங்களில் குறைவு. சரவணபவன், ஹாட் சிப்ஸ், சங்கீதா வரை எல்லாமே சுத்தி சுத்தி அதே இட்லி, தோசை, கொஞ்சம் நார்த் இண்டியன் தருகிறார்கள். இதில் ஹாட் சிப்ஸ் டேஸ்ட் ஆவரேஜ். சரவணபவன் குவாலிட்டி/சர்வீசில் கீழேயும் விலையில் விர்ர்ரென மேலயும் போய்க்கொண்டிருக்கிறது. ஒரு சுத்த சைவ உணவகம் காண்டினெண்டல் உணவுகளை கொஞ்சம் ரீசனபிள் விலையில் (நட்சித்திர உணவகங்களுடன் ஒப்பிடுகையில்), நல்ல சுவையில் தர முடியுமா? முடியும் என்கிறார்கள் ஈடனில் (Eden).

ரொம்பவே சிம்பிளான மெனு. எல்லாமே 3 பக்கங்களில் அடங்கிவிடுகிறது. ஆனால் வித்யாசமான அதே சமயம் நல்ல சுவையோடு இருப்பது ப்ளஸ் பாயிண்ட். Chef's choice. இதுதான் சூப் தலைப்பின் கீழ் பார்ப்பது. தினமும் இரண்டு வகை சூப்கள் இருக்கிறது. Thin soup & Creamy soup. நாங்கள் ஒரு நாள் tomato corrainder clear சூப்பும், மற்றொரு முறை cream of vegetable சூப்பும் குடித்தோம். இரண்டுமே நன்றாக இருந்தன. ஸ்டார்டர்ஸாக ஃப்ரெஞ் ப்ரைஸ், ஸ்பைசி க்ரன்ச்சீஸ் (ரஸ்க்கில் சில்லி பேஸ்ட் தடவி நன்றாக இருந்தது), கத்தி ரோல், ஃப்ரைட் காலிபிளவர், பனீர் டிக்கா ஆர்டர் செய்திருந்தோம். பனீர் டிக்கா தவிர மற்ற அனைத்தும் நன்றாக இருந்தது. பனீர் டிக்காவில் marination பத்தவில்லை. ஆனால் உடன் பரிமாறப்பட்ட சாஸ் சூப்பர்.



மெயின் கோர்சில் காண்டினெண்டலில் நாங்கள் உண்டது Garden style vegetable bake, Spaghetti supreme மற்றும் Lasagne. இதில் ஸ்பகட்டி டாப். தக்காளி பேஸில் கரெக்டான பதத்தில் வேகவைக்கப்பட்ட ஸ்பகட்டியோடு சீஸ் பால்ஸ். ம்ம்ம்ம். Tangy and juicy. மற்ற இரண்டும் ஒகே ரகங்கள் (சீஸும் க்ரீமுன் நிறைய இருந்ததால் நியூட்ரல் டேஸ்ட்). நார்த் இண்டியன் சப்ஜிகளில் வெஜிடபிள் ஜால் ஃப்ரைஸ், பனீர் மேத்தி கோஃப்தா, கோபி ஷப்னமி மற்றும் காஷ்மீரி ஆலு அனைத்துமே நன்று. பத்து அல்லது பதினைந்து சப்ஜிகள் தான் இருக்கும். ஆனால் யூனிக் ஐட்டம்ஸ். மஷ்ரூம் புலவ் ஆவரேஜாக இருந்தது. புலவில் வேறொன்றும் பெரிசாய் செய்துவிட முடியாதென்பதாலும் இருக்கலாம். ரேஷ்மி பராத்தா மற்றும் நான் வகைகள் நன்றாக இருந்தன. சவுத் இண்டியனில் இட்லி, தோசை, ஊத்தப்பம் மட்டுமிருக்கிறது. நாங்கள் ட்ரை செய்யவில்லை.

பெரிய அட்ராக்‌ஷன் ஐஸ்க்ரீம்ஸ் தான். பேரெல்லாம் பெரிது பெரிதாய், வாக்கியம்போலிருக்கிறது. டேஸ்ட் அட்டகாசம். சாக்லேட் பேஸ் ஐஸ்க்ரீம்கள் தூள். Plain flavour ஐஸ்க்ரீம்களும் இருக்கின்றது. சீசனல் பழச்சாறுகளோடு லைம் சோடாவும் உண்டு.

மேலதிக தகவல்கள்

உணவகம் - Eden
உணவு - Continental/North Indian - Pure Veg
இடம் - அண்ணாநகர் K4 காவல் நிலையம் எதிரில், பெசண்ட் நகர் 2nd அவென்யூவில் (ஐசிஐசிஐ வங்கிக்கு அருகில் மாடியில்), நுங்கம்பாக்கம் ஹேரிசன்ஸ் ஹோட்டலில் (வள்ளுவர் கோட்டம் ரோடு)
டப்பு - ஆவரேஜை விட கொஞ்சம் அதிகம். ஆனால் உணவின் சுவை, அளவு, சர்வீஸ் எல்லாவற்றிர்கும் விலை ஒகேவாக தெரிகிறது. (A complete 4 course meal for 2 costs around 700).


Spoilers : வாரயிருதியில் ரொம்பக் கூட்டம். அரை மணிநேரம் வரை வெயிட் செய்ய வேண்டியிருக்கும். காரம் விரும்புவர்கள் stay away from continental.

பரிந்துரை - Heavenly food. கண்டிப்பாக சைவப் பிரியர்கள் செல்ல வேண்டிய இடம்.

21 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

கொட்டிண்டுடுவோம் :))

துளசி கோபால் said...

பெஸண்ட் நகர் கிளையில் ரெண்டு வருசத்துக்கு முன்னே ஒரு முறையும். இப்போ சில மாதங்களுக்கு ஒரு முறையும் போனோம்.

ரெண்டுதடவையும் போனது மாமா மாமியுடன். மாமிக்கு இந்தக் கிளை ஓனர் ரொம்பவும் தெரிஞ்சவங்க.

முதல்முறை பரவாயில்லாமல் இருந்துச்சு. ரெண்டாம் முறை ரொம்பவே சுமார்தான்.

இனிமேல் ஒருமுறைதான் ஒரு ரெஸ்டாரண்டுக்குப் போகணும்:-))))

CS. Mohan Kumar said...

நேத்து வேளச்சேரி ஹாட் சிப்ஸ் ஹோட்டல் சென்றோம். உங்க profile -ல் உள்ள மாதிரி குட்டி பையனும் அவங்க அம்மாவும் பார்த்தேன். நீங்களோன்னு நினைச்சேன்.. கேட்கலை.. :))

நீங்க அதிகம் வேளச்சேரி பக்க ஹோட்டலா எழுதுவீங்க.. அண்ணா நகர் .. வெளியூராச்சே? நாங்க எப்படி போறது?

Vijay said...

ஈடனுக்குப் போய் பன்னீர் டிக்காவும் கோபி மன்சூரியனும் சாப்பிடுவது ஒரு colossal waste. அதைச் சாப்பிடுவதற்கு வேறேதாவது ஹோட்டல் போகலாம். அங்கே ஸ்பெஷாலிடியே காண்டினெண்டல் ஃபுட் தான். நான் இரு முறை போயிருக்கேன். ரொம்ப நல்லா இருக்கும். அசைவம் கலந்திருக்குமோ என்ற பயம் இல்லாமல் தாராளமாகச் சாப்பிடலாம். நான் சாப்பிட்ட ஐஸ்க்ரீமின் பெயர், The last time you ever saw your hip :)

முக்கியமான மேட்டர், இந்த ஹோட்டலின் முதலாளி, முன்னாள் கிரிக்கெட்டரும், இன்னாள் செலக்டருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீக்காந்த்.

விக்னேஷ்வரி said...

சூப்பர். அடுத்த முறை சென்னை வரும் போது மிஸ் பண்ண மாட்டேன்.
கத்தி ரோல் //
இது காட்டி ரோல்.

Anonymous said...

ட்ரை பண்றேன், இந்த முறை வரும்போது :))

Vidhya Chandrasekaran said...

நன்றி டிவிஆர் சார்.

நன்றி டீச்சர் (நீங்க போகும்போது நல்லால்லயா இல்ல நாம் போனன்னிக்கு சூப்பரா இருந்ததா தெரியலயே).

நன்றி மோகன் (நான் அவங்க இல்ல. வேளச்சேரில இருந்து இப்போ ஜாகை மாறியாச்சு. பெற்றோர்கள் அண்ணா நகர்ல இருக்கறதால இங்கயும் ரவுண்ட் அடிக்க முடியுது. நல்ல சாப்பாடு சாப்பிடனும்னா எவ்ளோ தூரம் வேணும்னாலும் போலாம்.)

நன்றி விஜய் (அதே அதே).

Vidhya Chandrasekaran said...

நன்றி ஆதி.

நன்றி விக்கி (இதேயே சொல்லுங்க. ஆனா வராதீங்க).

நன்றி மயில்.

"உழவன்" "Uzhavan" said...

படத்தையெல்லாம் பார்க்கும்போது சாப்பிடனும்போலதான் இருக்கு. ஆனா பணத்தைப் பார்க்கும்போது.. :-)

Raghu said...

ஹும்ம்ம்ம்ம்!

Rajalakshmi Pakkirisamy said...

Almost two days once Velachery "Hot Chips" poren.. Nalla thaan irukku.. but enakku costly nu thonum :)

அமுதா கிருஷ்ணா said...

இங்க என்ன நடக்குது???

செ.சரவணக்குமார் said...

ம்ம்ம்......

பெருமூச்சுதாங்க விடமுடியுது.. குப்பூஸ் தான் நம்ம சாப்புடுற வெஜ் அயிட்டம்.

ராம்ஜி_யாஹூ said...

நானும் என் நண்பரும் பெசன்ட் நகர் கிளைக்கு சென்றோம், மூன்று மாதம் மும்ன்பு இருக்கும், மிகவும் சுமார். ஒருவேளை அன்று மட்டும் அப்படியோ, அது தெரிய வில்லை.

பகிர்ந்தமைக்கு நன்றிகள். நுங்கை யில் அடுத்த முறை முயற்சி/விஜயம் செய்கிறோம்.

ராம்ஜி_யாஹூ said...

velachery hot chips is total waste

Vidhya Chandrasekaran said...

நன்றி உழவன்.
நன்றி ர‌கு.

நன்றி ராஜி (ஏன் உடுப்பிய விட்டுட்டியா??).

நன்றி அமுதா கிருஷ்ணா.

நன்றி செ.சரவணக்குமார் (குப்பூஸ்னா?).

நன்றி ராம்ஜி_யாஹூ.

மங்குனி அமைச்சர் said...

போயிடுவோம்

Cable சங்கர் said...

நான் இன்னும் அங்குபோகவில்லை. போய்ட்டு சொல்கிறேன். நன்றி

'பரிவை' சே.குமார் said...

படத்தையெல்லாம் பார்க்கும்போது சாப்பிடனும்போலதான் இருக்கு. ஆனா பணத்தைப் பார்க்கும்போது....?????

Vidhya Chandrasekaran said...

நன்றி மங்குனி அமைச்சர்.
நன்றி கேபிள் சங்கர்.
நன்றி குமார்.

Vijiskitchencreations said...

Nice information. I will try next time.