March 4, 2009

துணுக்ஸ் - 4/3/09

சன் டிவியில தீ படத்தோட ட்ரைலர் ஓடிக்கிட்டிருந்தது. ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்க்ல யாருக்கு பெட்ரோல் போடுவாங்கன்னு ஆரம்பிச்சு சுந்தர்.சி சீரியஸா காமெடி டயலாக் பேசிக்கிட்டிருந்தார். "ஓ காமெடி படம் போல" என்றார் ரகு. ஒரே ஒரு சீனக்கூட பார்க்கமுடியலயே படம் எப்படியிருக்கும்?
*************

சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கின சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்துக் கதைகள்" நாவலை போன வாரம் ஆரம்பித்து, நேற்று முந்தினம் தான் முடிக்க முடிந்தது. அடுத்தது வெண்பூ சொன்ன கறுப்புக் குதிரையை எடுத்தேன். wow கீழே வைக்கவே மனதில்லை. கையோடு 12 கதைகளையும் முடித்த பின் தான் கீழே வைத்தேன். பிரிவோம் சந்திப்போம், five point someone, the three mistakes of my life, தூண்டில் கதைகள் என படிக்க வேண்டிய புத்தகங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. நேரம் கிடைப்பது தான் பெரும்பாடாய் இருக்கிறது.
****************

எலக்ஷன் தேதி அறிவிச்சாச்சு. ம்ம்ம் இனிமே இந்த விளம்பரங்களின் தொல்லை தாங்க முடியாது. அந்த சாதனை இந்த சாதனைன்னு ரப்சர் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. இந்த தடவை இப்படிக்கூட விளம்பரம் வரலாம்.
"பூத் கைப்பற்ற யூத் தேவை. முன் அனுபவம் கட்டாயம் தேவை. கைப்பற்றும் பூத்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும். அணுகவும் மானெங்கட்ட அரசியல்வாதி".
**************

ரகுவின் நண்பர் வீட்டுக்கு சாப்பிட அழைத்திருந்தார். கூடவே இன்னொரு நண்பரையும். இன்னொரு நண்பருக்கு பெண் குழந்தை. ஜூனியரை விட ஒரு நாள் பெரியவள். இரண்டு பேரும் வீட்டுக்கு அழைத்த நண்பரிடம் சொன்னார்கள் "டேய் எங்க பசங்கள பத்தி தெரியாம வீட்டுக்கு கூப்பிட்டுட்ட. ஏண்டா கூப்பிட்டோம்னு feel பண்ண வைக்கப் போறாங்க". அதற்கு அவர் "ஏதாவது பிரச்சனைன்னா உங்க ரெண்டு பேரையும் இங்கேயே புடிச்சு வைச்சுடுவேன்". நானும் நண்பரின் மனைவியும் கோரஸாக என்ன சொல்லியிருப்போம் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்:)
************

எங்கள் வீட்டு வாசலில் ஒரு அறிவிப்பு பலகை மாட்டலாம்னு யோசிச்சிக்கிட்டிருக்கோம். "எந்த பொருள் உடைக்கப்பட்டாலும் பெற்றோர்கள் ஜவாப்தாரிகள் இல்லை. Enter @ ur own risk". எல்லாம் ஜூனியர் செய்யற வேலை. வர்றவங்க கிட்ட எவ்வளவோ சொல்லிட்டோம். Dont offer him coolers, mobiles etc. யாரும் கேக்கறதால்ல. உடைஞ்ச அப்புறம் போச்சேன்னு புலம்பி நோ யூஸ். குழந்தைங்க அப்படிதான் இருப்பாங்க. U gotto be careful. என்ன நான் சொல்றது?
*************

பாண்டிச்சேரிய்யில் ஒருவழியாக எல்லாருக்கும் வெள்ள நிவாரண நிதியாக 2000 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டாங்களோ இல்லையோ ரேஷன் கார்ட் வைச்சிருக்க எல்லாருக்கும் 2000 ரூபாய். என் மாமனாருக்கும் உண்டு. ஏம்பா வாங்கினீங்க என்றதுக்கு "நான் வாங்கலைன்னா என் காசு கண்டிப்பா வேற யாருக்காவாது போயிருக்கும். அதான் வாங்கி வீட்டு வேலைக்காரிக்கு, ஆபிஸ் வாட்ச்மேனுக்கு, கொஞ்சம் கோயிலுக்குன்னு பிரிச்சு குடுத்திட்டேன்". ம்ம்ம்ம் இப்படி எல்லாருக்கும் நிவாரண நிதி அள்ளி வழங்கறதுக்கு பதிலா சாக்கடை அடைப்புகள், நீர் வடிகால்கள் ஆகியவற்றை சரிசெய்யலாம்ல.

29 comments:

Cable சங்கர் said...

தல சுஜாதாவின் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தால் தானாகவே நேரம் கிடைத்துவிடும்..
பிரிவோம் சந்திப்போம் நாவல் தான் தமிழில் ஆனந்த தாண்டவம் என்கிற பெயரில் படமாய் வரப்போகிறது விதயா. அதனால் படம் வருவதற்கு முன்பு படித்துவிடவும்.

Arun Kumar said...

Me the second :)

//பிரிவோம் சந்திப்போம், five point someone, the three mistakes of my life, தூண்டில் கதைகள் என படிக்க வேண்டிய புத்தகங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. நேரம் கிடைப்பது தான் பெரும்பாடாய் இருக்கிறது.//
பிரிவோம் சந்திப்போம் எனக்கு மிகவும் பிடித்தது. ஆனந்த தாண்டவம் படத்தில் எப்படி எடுத்து இருக்காங்கன்னு பார்க்கனும்..

தூண்டில் கதைகள் எத்தனை முறை படித்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கனும் போல இருக்கும்..

ம் சுஜாதாவை ரொம்ப தான் miss பண்றோம்..

அப்புறம் ஜீனியர் உடைக்கும் பொருட்களுக்கு payment எப்படி கொடுக்கிறீங்க.. cash or cheque ?

பரிசல்காரன் said...

//சன் டிவியில தீ படத்தோட ட்ரைலர் ஓடிக்கிட்டிருந்தது. ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்க்ல யாருக்கு பெட்ரோல் போடுவாங்கன்னு ஆரம்பிச்சு சுந்தர்.சி சீரியஸா காமெடி டயலாக் பேசிக்கிட்டிருந்தார். "ஓ காமெடி படம் போல" என்றார் ரகு. ஒரே ஒரு சீனக்கூட பார்க்கமுடியலயே படம் எப்படியிருக்கும்?//

எங்கள் தலைவி நமீதா 20 நிமிடம் வரும் இந்தப் படத்தை குறை கூறி எழுதியதால் இந்தப் பதிவை தொடர்ந்து படிக்காமல்...

ஜூனியர்களைப் பற்றியும், சுஜாதா பற்றியும் தாங்கள் எழுதியது சூப்பராக இருந்தது என்று சொல்ல விரும்பினாலும் சொல்லாமல் வெளிநடப்பு செய்கிறேன்!

பரிசல்காரன் said...

இப்படி எல்லாருக்கும் நிவாரண நிதி அள்ளி வழங்கறதுக்கு பதிலா சாக்கடை அடைப்புகள், நீர் வடிகால்கள் ஆகியவற்றை சரிசெய்யலாம்ல.//

ம்ஹூம்... தப்பு வித்யா. அதுல 10%தான் மக்களுக்குப் போகும். இதுல அட்லீஸ்ட் 50%ஆவது பணமா மக்கள் கைல போகும். நல்லா யோசிச்சு, அப்படிப் பண்றதால என்ன நன்மை.. தீமைன்னு பதிவு போடுங்க. வர்றேன்!

ஆமா.. துணுக்ஸ் வெண்பூ ரிசர்வ் பண்ணிவெச்ச தலைப்பாச்சே? அவர்கிட்ட அனுமதி வாங்கினீங்களா?

:-))

எம்.எம்.அப்துல்லா said...

//படிக்க வேண்டிய புத்தகங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. நேரம் கிடைப்பது தான் பெரும்பாடாய் இருக்கிறது.
//

சேம் பிளட். அடிக்கடி டிராவல் பண்ற இந்த பொழப்பு வெறுப்பா இருந்தாலும் ஒரே ஆறுதல் அது போன்ற நேரங்கள்தான் என்னைப் படிக்க வைக்கின்றது.

எம்.எம்.அப்துல்லா said...

//"பூத் கைப்பற்ற யூத் தேவை. //

அர்ஜெண்டாய் வித்யா வீட்டிற்கு அனுப்ப ஆட்டோ தேவை

:))

எம்.எம்.அப்துல்லா said...

//குழந்தைங்க அப்படிதான் இருப்பாங்க. U gotto be careful. என்ன நான் சொல்றது?

//

கரெக்ட்டு...இனிமே அல்லாரும் என்கிட்ட கேர்ஃபுல்லா இருங்க.

எம்.எம்.அப்துல்லா said...

//இப்படி எல்லாருக்கும் நிவாரண நிதி அள்ளி வழங்கறதுக்கு பதிலா சாக்கடை அடைப்புகள், நீர் வடிகால்கள் ஆகியவற்றை சரிசெய்யலாம்ல.
//

பரிசல் கருத்தை வழிமொழிகிறேன்.

முரளிகண்ணன் said...

சுவை

கார்க்கிபவா said...

ஜூனியர் உங்க பொருளெல்லாம் உடைக்க மாட்டாரா?

நட்புடன் ஜமால் said...

\\பிரிவோம் சந்திப்போம்\\

நான் மிகவும் இரசித்த ஒரு புதினம்

pudugaithendral said...

எலக்‌ஷ்ன் கொடுமை இங்க ஆரம்பிச்சிருச்சு. :((

முதல்வர் ராஜசேகரரெட்டி தண்ணீர் இல்லாமல் காஞ்சு போயிருக்கும் ஆந்திராவுக்காக தவம் செஞ்சதுல சிவனின் தலையிலிருந்து கங்கை வந்தாப்ல எல்லாம் விளம்பரம்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நல்ல நாள்லையே டீவி பார்க்க மாட்டேன். எலக்‌ஷ்ன் முடியற வரைக்கும் அடுத்த வீட்டுடீவியைக் (யாரு வீட்டுக்காவ்து போனா) பாக்கக்கூடாதுன்னு பக்கத்துல இருக்கற முருகன் கோவிலில் வெச்சு சத்யம் செஞ்சிட்டேன்.


அப்புறம் தப்பா நினைக்க மாட்டீங்கன்னா ஒரு மேட்டர். ஜூனியர் அடுத்தவங்க பொருளை உடைப்பது பத்தி. நம்ம வீட்டு சாமானை எடுத்து விளையாடு. அடுத்தவங்க யாரு என்ன கொடுத்தாலும் தொடக்கூடாதுன்னு சொல்லலாம்.

வீட்டுக்கு வர்றவங்க குழந்தை கையில் மொபைல் போன்றவற்றைக் கொடுத்தா கட்டாயமா “நோ” சொல்லிப் பாருங்களேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சுஜாதாவ பிடிச்சா விட முடியுமா

பிரிவோம், சந்திப்போம், ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் அலுக்காத புத்தகங்கள்.

ஏற்கனவே படித்திருந்தாலும், பிறகு எப்போது படித்தாலும் இப்போதுதான் படிக்கிறார் போன்ற உணர்வை ஏற்படுத்தும் எழுத்து சுஜாதாவுடையது.

இப்படி எல்லாருக்கும் நிவாரண நிதி அள்ளி வழங்கறதுக்கு பதிலா சாக்கடை அடைப்புகள், நீர் வடிகால்கள் ஆகியவற்றை சரிசெய்யலாம்ல.//
ம், நல்ல யோசனைதான்
யாரு கேட்பது.

குழந்தைங்க அப்படிதான் இருப்பாங்க. U gotto be careful. என்ன நான் சொல்றது?
நீங்க சொன்னா மறுப்பேது?
சரியாத்தான் இருக்கும்
ஏன்னா உடைபட்டது நம்ம வீட்டுப்பொருளா என்ன, சொல்லுங்க.

உங்கள் மாமனாரின் செயல் நெகிழ்ச்சி.
பாராட்டுகள்

www.narsim.in said...

பாண்டிச்சேரிய்யில் ஒருவழியாக எல்லாருக்கும் வெள்ள நிவாரண நிதியாக 2000 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது//

பாண்டிச்சேரின்னாலே தண்ணி, வெள்ளம்னு சுத்துதே..

அந்த அறிவிப்பு பலகை மேட்டர் கலக்கல் மேடம்!

சந்தனமுல்லை said...

சுவாரசியம் வித்யா..

வரவர அமித்து அம்மா குறும்பு அதிகமாயிடுச்சு! :-)

//குழந்தைங்க அப்படிதான் இருப்பாங்க. U gotto be careful. என்ன நான் சொல்றது?
நீங்க சொன்னா மறுப்பேது?
சரியாத்தான் இருக்கும்
ஏன்னா உடைபட்டது நம்ம வீட்டுப்பொருளா என்ன, சொல்லுங்க.//

LOL!

☀நான் ஆதவன்☀ said...

//Dont offer him coolers, mobiles etc. யாரும் கேக்கறதால்ல. உடைஞ்ச அப்புறம் போச்சேன்னு புலம்பி நோ யூஸ்//

இதுல வர்ரவங்க தலையையும் சேர்த்துகணுமா?? இல்ல ஜூனியர் இதுல இரக்கம் காட்டி விட்டடுவாரா?

கறுப்பு குதிரைகள் யார் எழுதியது?. "பிரிவோம் சந்திப்போம்" படம் வருவதற்குள் படிங்க..ரொம்ப பிடிக்கும்

Vidhya Chandrasekaran said...

கண்டிப்பா படிச்சிடறேன் சங்கர்ஜி:)

வாங்க அருண். நீங்க அந்த எச்சரிக்கை போர்டை இன்னொரு தடவ படீங்க:)

Vidhya Chandrasekaran said...

வருகைக்கு நன்றி பரிசல். நீங்க சொல்றதும் ஒருவிதத்துல சரிதான். ஆனா உண்மையான சேதத்தை கணக்கிடும்போது 2000 ரூபாய் யானைப் பசிக்கு சோளப்பொறியாயிருக்கிறது. அய்யயோ இது வெண்பூ ரிசர்வ் பண்ணதா? வேற என்ன பேர் வைக்கலாம்னு ஐடியா குடுங்களேன்:)

Vidhya Chandrasekaran said...

வாங்க அண்ணே. அது சரி ஆட்டோ வந்தா நீங்க வந்து காப்பாத்தமாட்டீங்க??

நன்றி முரளிக்கண்ணன்.

கார்க்கி 1.5 வருடங்களில் 3வது தடவையாக செல்போன் வாங்கியிருக்கேன்:(

Vidhya Chandrasekaran said...

வருகைக்கு நன்றி ஜமால் அண்ணாத்தே:)

தென்றல் சிஸ்டர். நான் எதுவும் தப்பா எடுத்துக்கமாட்டேன். ஜூனியர் அடுத்தவர்கள் எது கொடுத்தாலும் வாங்கமாட்டான் (atleast for sometime). ஆனால் வருபவர்கள் திரும்ப திரும்ப அவனுக்கு offer பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள். அஹ்டிலு இந்த உறவினர்கள் ரொம்ப மோசம்.கொடுக்காதீங்கன்னு சொன்னா நாங்கள்ளாம் புள்ள வளர்க்கலியான்னு கேட்டு டார்ச்சர் பண்றாங்க:(

Vidhya Chandrasekaran said...

வாங்க அமித்து அம்மா. அவனுக்கு எங்க வீட்டுப்பொருட்களை உடைச்சு போரடிச்சிடுச்சு:)

நன்றி நர்சிம்:)

வாங்க முல்லை. ஆமாம். அமித்துக்கிட்ட சொல்லி தட்டிவைக்க சொல்லனும்.

வாங்க ஆடவன். இல்ல அடியெல்லாம் எனக்கு மட்டும்தான் விழும்:(

Truth said...

தீ பட ட்ரைலர நானும் பாத்தேன் :-) எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க :-)

தமிழ் அமுதன் said...

///அவனுக்கு எங்க வீட்டுப்பொருட்களை உடைச்சு போரடிச்சிடுச்சு///

ம்ம் இதும் நல்லாத்தான் இருக்கு;;))

Vidhya Chandrasekaran said...

வாங்க Truth.

நன்றி ஜீவன்:)

சின்னப் பையன் said...

cooooooool....

தாரணி பிரியா said...

சூப்பர் துணுக்ஸ் வித்யா. செல்போனை உடைச்சதக்கு ஜுனியருக்கு தேங்க்ஸ் சொல்லுங்க. புது மாடல் கிடைச்சுகிட்டே இருக்கே இல்லையா.

எல்லாத்தையும் பாசிட்டிவ்வா பாக்கணும் :)

goma said...

துணுக்ஸ் அத்தனையும் கிளுக்ஸ்...அதுவும் சுந்தர் சி.காமெடி சூப்பர்

goma said...

ஸ்கிரிபிளிங்ஸ்ன்னு பேர் வச்சுட்டு அருமையா கலர் கலரா அசத்துறீங்க.
டெம்பிளேட்டே டெம்ப்ட் பண்ணுதே.

Vidhya Chandrasekaran said...

நன்றி ச்சின்னப்பையன்:)

தாரணி நீங்க சொல்றதும் சரிதான். செல்போன் ஓசில கிடைச்சா பரவால்ல. துட்டு மாமே துட்டு:(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமா:)