March 9, 2009

ஜூனியருக்கு பிடித்தமானவர்கள்

ஜூனியருக்கு பிடித்தமானவர்களின் லிஸ்ட் பற்றி எழுத சொல்லியிருந்தார் சந்தனமுல்லை. ஜூனியரின் லிஸ்ட் ரெம்ம்ம்ம்ப பெருசு என்பதால் யோசித்து சிலரைப் பற்றி மட்டும் எழுதுகிறேன். வழக்கம்போல் தாத்தா'ஸ், பாட்டி, மாமாக்கு அப்புறம் அவன் ரொம்ப க்ளோசாக இருப்பது இவர்களிடம் தான்.

வசந்தி - அம்மா வீட்டில் வீட்டு வேலை செய்பவர். இவருக்கு இருக்கும் சுறுசுறுப்பு என்னை இன்றும் ஆச்சரியப்படுத்தும். குழந்தை பிறந்ததிலிருந்து இன்றுவரை அவன் வளர்ச்சியைப் பார்த்து பரவசப்படுபவர். சம்பளத்துக்காகத் தானே வேலை செய்கிறோமென்றில்லாமல் ஆதமார்த்தமான அன்பு கொண்டவர். அம்மா வீட்டுக்கு போனவுடன் ஜூனியர் முதலில் தேடுவது இவரைத்தான். தோட்டத்தில் தான் போய் பார்ப்பான். சாப்பாட்டு கிண்ணத்தை என்னிடமிருந்து பிடுங்கிக்கொண்டு ஜூனியரையும் தூக்கிக்கொண்டு வேடிக்கைக் காட்டியே சாப்பிட வைத்துவிடுவார். மொட்டை அடிக்க கோயிலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தோம். அவரால் வர முடியாத நிலையில் தயங்கியபடியே வந்து 100 ரூபாயை கையில் கொடுத்து குழந்தைக்கு எதுனா வாங்கிக்கொடு என்றார். எதுக்கு இதெல்லாம் வசந்தி. நீங்க இதெல்லாம் செஞ்சு தான் ஆகனுமா என்றதுக்கு கிட்டத்தட்ட அழுதேவிட்டார். தொடர்ந்து 2 வாரம் ஊருக்கு போகவில்லையென்றால் அம்மாவிடம் சொல்லி போன் செய்து கடிந்துகொள்வார் ஏன் இன்னும் வரவில்லையென்று. அப்புனு என்றவர் குரலைக் கேட்டவுடனே ஜூனியரின் முகத்தில் தோன்றும் பிரகாசமே போதும் இவர்களின் உறவினை விளக்க:)

இஸ்மாயில் அங்கிள் - அப்பாவின் ட்ரைவர். அங்கிள் தான் ஜூனியருக்கு கார்களின் மீதான ஆர்வத்தை தூண்டியது. வேண்டாமென்றாலும் ஜுனியரை மடியில் வைத்துக்கொண்டு சின்னதாய் ரவுண்ட் அடிப்பார் ஜீப்பில். இப்போதும் இவர் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டு கிளம்புகையில் அழுது அடம்பிடிப்பார் ஜூனியர்.

ராஜாமணி அங்கிள் - என் வாழ்நாளில் மறக்கமுடியாத மனிதர். ஜூனியரை நாங்கள் இழக்காமல் இருப்பதிற்க்கு முக்கியமானவர்களில் ஒருவர். 4 மாதக் குழந்தையாக இருந்தபோது கடும் வயிற்றுப்போக்கோடு ஜூரமும் சேர்ந்துக்கொள்ள இரவு 3 மணிக்கு மருத்தவரின் வீட்டு வாசலில் நின்றோம். அவர் ரொம்ப சீரியசாக இருக்கிறான். உடனடியாக நுங்கம்பாக்கம் சைல்ட் ட்ரஸ்ட்டில் அனுமதிக்க வேண்டும். இதற்கு மேல் டெம்பரேச்சர் ஏறினால் குழந்தைக்கு ஃபிட்ஸ் வந்து உயிருக்கு ஆபத்தாக முடியும் என எச்சரித்தார். செங்கல்பட்டிலிருந்து 25 நிமிடங்களில் நுங்கம்பாக்கம் கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் அங்கிருந்து சேத்துப்பட்டு சென்று அட்மிட் செய்தபோது மருத்துவர் சொன்னது "Heavy dehydration. கொஞ்சம் டிலே ஆகியிருந்தாலும் குழந்தையை காப்பாற்றியிருக்க முடியாது" என்றார். அங்கிள் அந்த வேகத்தில் வந்திருக்காவிட்டால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு முறை அம்மா வீட்டுக்குப் போகும்போது ஜூனியரை தூக்கிக்கொண்டு போய்டுவார். நாங்கள் அங்குபோய் இறங்கும்போது அவனுக்கெண்று மலை வாழைப்பழம் ரெடியாக வாங்கிவைத்திருப்பார்.

சரவணன் அங்கிள் - சமீபத்தில் தான் இவர் ஜூனியருக்கு அறிமுகமானார் என்றாலும் அவனுக்கு சமமாக உட்கார்ந்து விளையாடுவார். அவனோடு கண்ணாமூச்சி ஆடுவது, சாரின் விஷமங்களை பொறுத்தாள்வது என அங்கிள் ரொம்ப ஸ்போர்டிவ்.

இன்னும் எத்தனையோ பேரை ஜூனியருக்கு ரொம்ப பிடிக்கும். Infact அவனுக்கு பிடிக்காதுன்னு நான் ஒருத்தரைக் கூட கைகாட்ட முடியாது. அப்பாவுக்கு இப்போ மாற்றலாகிவிட்டதால் மேற்சொன்ன நால்வரும் ஜூனியரை ரொம்பவே மிஸ் பண்ணப்போகிறார்கள். இல்லை ஜூனியர் தான் ரொம்ப மிஸ் பண்ணப்போகிறான் இவர்களை.

டிஸ்கி : ஜூனியரைப் பற்றிய பதிவொன்று அரைகுறையாய் draft-ல் இருக்கிறது. விரைவில் போட்டோ செஷனோடு ஜூனியரின் தரிசனம் கிடைக்கப்பெறும். அதுவரை போன ஜூன் மாதம் எடுத்தது:)

24 comments:

நட்புடன் ஜமால் said...

\\ஜூனியரைப் பற்றிய பதிவொன்று அரைகுறையாய் draft-ல் இருக்கிறது. விரைவில் போட்டோ செஷனோடு ஜூனியரின் தரிசனம் கிடைக்கப்பெறும். அதுவரை போன ஜூன் மாதம் எடுத்தது:\\

சீக்கிரம்ங்கோ ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

Vidhya Chandrasekaran said...

சீக்கிரம் போட முயற்ச்சிக்கிறேன் ஜமால்.

வாங்க அமித்து அம்மா:)

SK said...

gut :-)

narsim said...

கலக்கல் நடையுடனான விவரிப்பு..

ஆயில்யன் said...

பிரிவு மொழி அறியா குழந்தையின் அன்பு வட்டங்களை பற்றி அழகாய் சொல்லியிருக்கீங்க!

முடிந்தால் போட்டோ மூலம் பிற காலத்தில் மறு அறிமுகம் செய்து வையுங்கள் இந்த அன்பு உள்ளங்களை உங்களின் ஜூனியருக்கு :))

ஆயில்யன் said...

பைதிவே 1 சொல்லிக்க ஆசைப்படறேன் :)

ஆயில்யன் said...

//ஜூனியருக்கு பிடித்தமானவர்களின் லிஸ்ட் பற்றி எழுத சொல்லியிருந்தார் முல்லை.//

எங்க அக்கா 1ம் வெறும் முல்லை இல்லை..!

சந்தன முல்லையாக்கும்....!

ரிடர்ன் பேச்சு வராம மாத்திடுங்க பர்ஸ்ட்டூ..! (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

Cable சங்கர் said...

:):):)-

Vidhya Chandrasekaran said...

நன்றி SK:)

நன்றி நர்சிம்.

கண்டிப்பா செய்றேன் ஆயில்யன். அப்புறம் நீங்க சொன்னா மறுபேச்சேது. மாத்தியாச்சு:)

வாங்க சங்கர்ஜி:)

அ.மு.செய்யது said...

//ஜூனியரைப் பற்றிய பதிவொன்று அரைகுறையாய் draft-ல் இருக்கிறது. விரைவில் போட்டோ செஷனோடு ஜூனியரின் தரிசனம் கிடைக்கப்பெறும். அதுவரை போன ஜூன் மாதம் எடுத்தது:)
//

சீக்கிரம் போடுங்க...

குழந்தைகள் பற்றிய பதிவென்றால் நாங்க இண்ட்ரஸ்டா படிப்பம்ல..

Arun Kumar said...

நல்லா எழுதி இருக்கீங்க..
சீக்கிரமே ஜீனியரின் அடுத்த பதிவை போடுங்க..எல்லாரும் ரொம்ப மிஸ் பண்றோம்.

முரளிகண்ணன் said...

நல்ல நடையுடன் நெகிழ்வான பதிவு

சந்தனமுல்லை said...

ஆகா..சுவாரசியம்.அண்ட் டச்சிங்! இந்த போஸ் ரொம்ப அழகா இருக்கே!



//எங்க அக்கா 1ம் வெறும் முல்லை இல்லை..!

சந்தன முல்லையாக்கும்....!//

ஆயில்ஸ்..ஏன்..ஏன் இந்த கொல வெறி?! (அவ்வ்வ்)

எம்.எம்.அப்துல்லா said...

மாப்ள விட்டா பிளைட்டே ஓட்டுவாரு போல!!!

என்னால அவ்வளவு எல்லாம் செய்ய முடியாது. ஓ.கேவான்னு கேளு மாப்ளைகிட்ட :)

இராகவன் நைஜிரியா said...

// ஜூனியரைப் பற்றிய பதிவொன்று அரைகுறையாய் draft-ல் இருக்கிறது. விரைவில் போட்டோ செஷனோடு ஜூனியரின் தரிசனம் கிடைக்கப்பெறும். அதுவரை போன ஜூன் மாதம் எடுத்தது:) //

எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// இன்னும் எத்தனையோ பேரை ஜூனியருக்கு ரொம்ப பிடிக்கும். Infact அவனுக்கு பிடிக்காதுன்னு நான் ஒருத்தரைக் கூட கைகாட்ட முடியாது. //

ரொம்ப சமத்து குழந்தை...

குடுகுடுப்பை said...

வித்யா said...

என் அப்பாவுக்கு கூட உண்டு. ஆனால் இப்போது நல்லா குறைந்துவிட்டது. அதிகாலையில் 5.30 மணிக்கு மேல் வாக்கிங் போய் பாருங்கள். பலன் தெரிவதாக அப்பா சொன்னார். எனக்கு சைனஸ் தொல்லை. நீங்கள் சொன்ன பூசணிக்காய் ப்ராப்ளம் வரும். செட்ரிசன் தான் கைக்கொடுக்கும். ஆனா அந்த மாத்திரை சாப்பிட்டா தூக்கம் கண்ண கட்டும். இப்போ ஜூனியருக்கும் விசிங் ப்ராப்ளம் இருக்கு. சித்தா மெடிசின் குடுத்திட்ருக்கேன். 2 மாசமா ஒரு பிரச்சனையுமில்ல. பார்ப்போம்.
//

சித்த மருந்தில் ஸ்டீராய்ட் அடல்ட்ரெசன் அதிகம், ஜாக்கிரதை.

Vidhya Chandrasekaran said...

வாங்க அ.மு.செய்யது. அதுசரி வயசானவங்களுக்கு குழந்தை பிடிக்கும்கறதூ தெரிஞ்ச விஷயம் தானே:)

நன்றி அருண். சீக்கிரமே:)

நன்றி முரளி:)

Vidhya Chandrasekaran said...

நன்றி முல்லை.

அண்ணே நீ பொண்ண மட்டும் குடுண்ணே. அது போதும்.

நன்றி இராகவன் சார்.

தகவலுக்கு நன்றி குடுகுடுப்பை. தெளிவாக கேட்டுத் தெரிந்த பின்னே கோடுக்கிறேன்:)

தமிழ் அமுதன் said...

கார் ஓட்டுற ஜுனியருக்கு ஒரு ஜட்டி போட்டு விட்டு இருக்கலாம் .
இந்த அங்கிள் வீட்டு பாப்பா எல்லாம் பார்த்தா சேம்! சேம்! பப்பி சேம் சொல்ல போறாங்க! ;;)))

ஊர்சுற்றி said...

குழந்தைகள் உலகம் பற்றி நான் படிக்கும் முதல் இடுகை என நினைக்கிறேன். படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. :)

pudugaithendral said...

அழகா சொல்லியிருந்தீங்க.

மிக ரசித்தேன்.

Vidhya Chandrasekaran said...

வாங்க ஜீவன். அச்சசோ குட்டீஸ்கிட்ட்ட போட்டோ காமிச்சுடாதீங்க.

நன்றி ஊர்சுற்றி.

நன்றி தென்றலக்கா.