March 13, 2009

கீதம் சங்கீதம்

இப்போதெல்லாம் டிவியில் எந்த சேனலைத் திருப்பினாலும் ரியாலிட்டி ஷோ என்கிற பெயரில் சூப்பர் சிங்கர், ஸ்டார் சிங்கர் என ஒரே பாட்டு போட்டிதான். ரொம்பவே திகட்டுகிறது. நான் இந்த மாதிரியான ரியாலிட்டி ஷோக்களைப் பார்ப்பதேயில்லை. ஒரே டிராமா. கண்ணீர்விட்டு அழுவது, நடுவர்கள் போட்டியாளர்களை திட்டுவது, பின்னர் அது ச்சும்மா லுலுலாயிக்குன்னு சொல்லி பிறந்தநாள் வாழ்த்து சொல்வது போங்டாங்க நீங்களும் உங்க (ட)ரியாலிட்டி ஷோவும் என கத்தனும் போல தோணுது. இப்பல்லாம் வீட்டில டி.வி பார்க்குற நேரம் தடாலடியா குறைஞ்சுடுச்சு. முழுநேரமும் பாட்டு இல்லன்னா ஜூனியருக்காக ரைம்ஸ்ன்னு mp3 ப்ளேயர் தான் ஓடிக்கிட்டிருக்கு:)

போன வாரம் மாமியார் வீட்டுக்கு வந்திருந்தபோது விஜய் டிவியில் வரும் சூப்பர் சிங்கர் பற்றி ரொம்பவே சிலாகித்துப் பேசினார். அந்த 4 நாட்கள் அவர்கள் அடித்த கூத்தைக் காண கண்கோடி வேண்டும். நான் பார்த்த மட்டில் என் சங்கீத சிற்றறிவிற்க்கு (இது பத்தி தனி பதிவு அப்புறமா) எட்டிய வகையில் நடுவர்கள் பாராட்டும் அளவிற்க்கு இவர்களுக்கு தகுதியிருக்கிறதா என்பதென் கேள்வி. ஒரே ஒரு போட்டியாளர் பட்டையைக் கிளப்பினார். இத்தனைக்கும் அவர் கர்நாடக சங்கீதம் கற்றிருக்கவில்லை. எனக்குத் தெரிந்து கர்நாடக சங்கீதம் கற்றுத்தேர்ந்தவர்களுக்கு/ ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு செகண்ட் கிரேட் பாடல்கள் பிடிப்பதேயில்லை. அதேபோல் குரலும் ரொம்பவே இனிமையாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் இப்போதிருக்கும் இசைக் கலைஞர்கள் / பாடகர்கள் நிறைய பேருக்கு செகண்ட் கிரேட் பாடலகளும், குத்துப்பாட்டுகளும் தியாகராஜ கீர்த்தனைகளை விட நன்றாக சூட் ஆகின்றன. நிறைய பேர் குத்துப்பாட்டுகளை உள்ளுக்குள் ரசித்தாலும் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள். SPB, ஜேசுதாஸ் இன்னும் பலருக்கு அப்பால் சில வித்தியாசமான குரல்களும் இருக்கின்றன. பாடகிகளில் சித்ராவிற்குப் பிறகு எனக்கு ரொம்பவும் பிடித்தவர் ஸ்வர்ணலதா. ஹை பிட்சில் அலட்டாமல் பாடுவார்.










Get this widget Track details eSnips Social DNA

இளா அருணின் இந்தப் பாட்டு தூளாக இருக்கும்.
Get this widget Track details eSnips Social DNA

அதே போல் வித்தியாசமான குரல் கொண்ட சாகுல் ஹமீதின் பாடல்கள் எல்லாமே சூப்பராக இருக்கும். ப்ச்ச் உயிரோடு இருந்திருந்தால் சிகரம் தொட்டிருப்பார்.
Get this widget Track details eSnips Social DNA

இப்போதெல்லாம் குத்துப்பாட்டு/fast numbers என்றால் அனுராதா ஸ்ரீராமைத்தான் கூப்பிடுகிறார்கள். ஒரே மாதிரியான டோனில் அவர் பாடுவது ரொம்ப போர். எனக்கு அனுராதா ஸ்ரீராமை பிடிக்காதென்பது வேறு விஷயம்:)
ஆகக்கூடி நான் என்ன சொல்றேன்னா கர்நாடக சங்கீதம் மட்டுமே நல்ல இசையென்று கிடையாது. இசை அவரவர் ரசனைக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். குத்துப்பாட்டு (சிலவற்றைத் தவிர) கேட்பதெல்லாம் கேவலமில்லை.

29 comments:

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

ஸ்வர்ணலதாவின் குரல் நல்ல குரலதான்.

ஆனால் ராஜாவின் ரம்மியமான இசை இந்த பாட்டை வருடிக் கொண்டே வ்ரும்.
பாடலில் முதலில் வரும் அந்த இசைச் சிதறல் இசையின்(பியானோ?) உச்சம்.காதல் உணர்வின் உச்சம்.

அதற்கு பிறகு தபேலாவில் செல்லமாகத தட்டியபடி பாடல் முழுவதும் . oh.awesome!

இந்த பாடலை சிறக்க வைப்பது ராஜா.
March 13, 2009 9:38 PM

Vee said...

//இந்த பாடலை சிறக்க வைப்பது ராஜா.

நான் வழிமொழிகிறேன்.

நட்புடன் ஜமால் said...

கீதம் சங்கீதம்

நீதானே என் காதல் வேதம்

இந்த பாடல்ன்னு நினைத்து வந்தேன்

‘மாலையில் நான் மலரோடு’ கேட்குது

இதுவும் அருமையான பாடல் தான்.

குப்பன்.யாஹூ said...

That airtel super singer is for time pass. Dont watch Relaity shows with seriousness.

I watch these programes for fun only.

Already in 2006 or 2005, Vijay TV has selected 1 male singer as Airtel super singer (to sing in Vidyasagar or Harris jayaraj). I dont know whether he sung or yet to sing.


Just watch the programmes as cmedy shows.

முரளிகண்ணன் said...

இன்னும் அதிகமா எதிர்பார்த்தேன்

எம்.எம்.அப்துல்லா said...

உன்னோடு 101% ஒத்துப் போகிறேன்.

யார் சொன்னா குத்துப் பாட்டெல்லாம் சும்மான்னு??? அது நம்மள மாதிரி கேள்வி ஞான கிராக்கி மக்களோட இசை :)

அப்புறம் நேரம் கிடைத்த இங்க போய்ப் பாரு.

https://www.blogger.com/comment.g?blogID=35738787&postID=1259024453046775434

எம்.எம்.அப்துல்லா said...

// முரளிகண்ணன் said...
இன்னும் அதிகமா எதிர்பார்த்தேன்

//


அண்ணா வலை உலக பிலிம்நியூஸ் ஆனந்தனான உங்களோட போட்டி போட எங்களால முடியுமா??

:)))

rooto said...

go here and read e truth abt our honorable(???) ilavu raja

http://charuonline.com/March09/IllayarajaDiscussion.html

rooto said...

go here and read e truth abt our honorable(???) ilavu raja

http://charuonline.com/March09/IllayarajaDiscussion.html

நாகை சிவா said...

//நான் இந்த மாதிரியான ரியாலிட்டி ஷோக்களைப் பார்ப்பதேயில்லை. //

ரொம்பவே நல்ல விசயம் அதை அப்படியே மெயின்டன் பண்ணுங்க :)

சாகுல் ஹமீது ரொம்ப நல்ல பாடகர். அதிலும் அவர் பாடிய திருடா திருடா வில் வரும் ராசாத்தி பாடல் செம சூப்பர். கொடுத்து வைக்கவில்லை அவருக்கு.

குத்து பாடல்கள் நல்லா தான் இருக்கும். ஆனால் தற்சமயன் வரும் துதி பாடல்களை தான் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அதிலும் பேரரசு, வீரத் தளபதி னு ஒரு பெரும் கூட்டமே கிளம்பி இருக்கு. அதை காமெடி னு மைண்ட் செட் பண்ணிட்டு தான் பாக்கவோ கேட்கவோ வேண்டி இருக்கு

மணிகண்டன் said...

அப்துல்லா அண்ணேன் , நீங்க கொடுத்த லிங்க் பாத்தேன். அங்கேயும் போயி அதே தான் சொல்லி இருக்கீங்க. (முதல் முறை இல்ல, அடிக்கடி வந்து இருக்கேன்னு !) ஏதாவது template வச்சி இருக்கீங்களா ?

வித்யா, மியூசிக் எல்லாம் மூட் பொறுத்து தாங்க இருக்கு ! நானும் பலகாலமா பாடிகிட்டே இருக்கேன். யாரும் கேக்கவே மாட்டேன்கறாங்க ! பாட்ட ரெகார்ட் பண்ணி ப்ளாக்ல போடலாம்ன்னு இருக்கேன்.

இந்த குட்டி பொண்ணு பாடினத கேளுங்க. இதுவும் reality show தான்.

http://www.youtube.com/watch?v=GOP_n6H5Uw4&feature=channel

அரட்டை அகிலன் said...

ஹலோ வித்யா ......
மாலையில் யாரோ .... என்ற பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ....ஸ்வர்ணலதா வின் குரல் இனிமையா இருக்கும் ........
அதே போல சாகுல் ஹமீதின் பாடல்ன்னா சூப்பரா இருக்கும் ..... மூன்றும் முத்து போல ...... வாழ்த்துக்கள் ....

நீங்க ஒரு ஆல்பம் வெளியிடுங்களேன் ......

அரட்டை அகிலன்

அரட்டை அகிலன் said...

ஹலோ வித்யா ......

சங்கீதம்ன்னா ரொம்ப பிடிக்குமா ?? ஓகே ஓகே ...
இன்னைக்கு இருக்கிற காலகட்டத்துல எப்படி இந்த மாதிரி பாட்டெல்லாம் செலக்ட் பண்ணிங்க ......

அரட்டை அகிலன் ...

ஷைலஜா said...

மாலையில் யாரோ பாட்டை காலை எழுந்ததுமுதல் ஒருதடவையாவது ஹம் செய்யாம இருக்கறதில்ல! ஸ்வர்ணலதா குரல் ரொம்பவே இனிமை, நோ டவுட் வித்யா!

Deepa said...

சரியாகச் சொன்னீர்கள். இந்த ரியாலிட்டி ஷோக்களின் தொல்லை உண்மையில் தாங்க முடியவில்லை. நானும் பார்ப்பதை விட்டு விட்டேன்.

குத்துப் பாட‌ல்க‌ள் ர‌சிக்க‌த் த‌க்க‌வை தான். ஆனால் அவற்றின் பாடல் வரிகள் ஆபாசமில்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். அதுவும் குழ‌ந்தைக‌ளை அவை வெகுவாக‌ ஈர்ப்ப‌தைப் பார்க்கும் போது இந்த‌ எண்ண‌ம் ரொம்ப‌த் தோன்றுகிற‌து. காது கூசும் வார்த்தைக‌ளை ந‌ம் வீட்டுக் குழ‌ந்தைக‌ள் அர்த்த‌ம் புரியாம‌ல் ம‌ழ‌லையில் பாடுவ‌து என்ன‌ கொடுமை.

அதனாலேயே என‌க்கு மிக‌வும் பிடித்த‌ குத்துப் பாட‌ல் "வாள‌ மீனு" தான். :-)

Vidhya Chandrasekaran said...

வருகைக்கு நன்றி ரவிஷங்கர்.

வாங்க வீ.

வாங்க ஜமால் அண்ணாத்தே.

Vidhya Chandrasekaran said...

குப்பன் சார் காமெடின்னு நினைச்சுக் கூட இந்த கருமத்த பார்க்க முடியல:( வருகைக்கு நன்றி.

அடுத்த தடவை சரியா எழுத முயற்ச்சிக்கிறேன் முரளிகண்ணன். பதிவு ரொம்ப பெரிசா போனதால எடிட்டிங்கல நிறைய போயிடுச்சு:)

Vidhya Chandrasekaran said...

வாங்க அண்ணாத்தே. ஆமாம் கேள்விஞானம் தான் காப்பாத்துது.

படிச்சிட்டு கருத்து சொல்றேன் rooto.

நன்றி நாகை சிவா.

ஆமாம் மணிகண்டன். மூடைப் பொறுத்து தான் மியுசிக். அப்புறம் பாட்ட போட்டுட்டு சொல்லுங்க:)

Vidhya Chandrasekaran said...

நன்றி அரட்டை அகிலன். டிவி பார்க்க பிடிக்காததால் மியுசிக் தான் எனக்கு பொழுதுபோக்கு:)

வருகைக்கு நன்றி ஷைலஜா.

வாங்க தீபா. ஆமாம் குத்துப்பாட்டின் வரிகளும் கவனிக்கப்பட வேண்டியவை தான்.

Arun Kumar said...

நல்ல அனுபவம்.
போனவாரம் ராஜ் டிவியில் ஏதோ இதை போல ஒரு இசை போட்டி.

நடுவர் இவரும் ஒரு சினிமா பாடகர் தான்..ஏதோ டப்பாங்குத்து பாட்டு எல்லாம் கேவலமாக பாடி இருக்க்காரு.

நிகழ்ச்சியில் ஒரு சின்ன பெண் பாடி முடித்ததும்..அந்த பெண்ணின் அம்மாவை கூப்பிட்டார். அம்மாவிடம் அந்த பெண்ணை திட்ட அனுமதி வாங்கி கொண்டார்..பின் ஒரு ஐந்து நிமிட instant அண்ணனாக மாறி அந்த பெண்ணை திட்ட ஆரம்பித்து விட்டார்.
பின் அந்த பெண் அழ ஆரம்பிக்க இவர் சமாதானம் செய்ய.. ஒரே பாசமலர் தான்..


பார்க்கவே படு கேவலமாக இருந்தது..


தமிழில் முன்னர் சன் மியுசிக் சானல் நன்றாக இருந்தது.
இப்போ அதுவும் வேஸ்ட்.. மொக்கை பாட்டு எல்லாம் போட்டு உசிரை எடுக்கிறாங்க..


இசைஅருவி தேவலாம்.. ஆனாலும் சூப்பர் இல்லை..

☀நான் ஆதவன்☀ said...

//யார் சொன்னா குத்துப் பாட்டெல்லாம் சும்மான்னு??? அது நம்மள மாதிரி கேள்வி ஞான கிராக்கி மக்களோட இசை :)//

ரீப்பீட்டுடுடுடு.....

ஆபிஸ்ல இருக்கிறேன் பாட்டு கேட்க முடியாது. ரூமுக்கு போய் கேட்கிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஸ்வர்ணலதா. ஹை பிட்சில் அலட்டாமல் பாடுவார்.

exactly...

அது ச்சும்மா லுலுலாயிக்குன்னு சொல்லி பிறந்தநாள் வாழ்த்து சொல்வது போங்டாங்க நீங்களும் உங்க (ட)ரியாலிட்டி ஷோவும் என கத்தனும் போல தோணுது.
ரொம்ப கொடுமைங்க இதெல்லாம்...

இசை அவரவர் ரசனைக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். குத்துப்பாட்டு (சிலவற்றைத் தவிர) கேட்பதெல்லாம் கேவலமில்லை..
:)-

narsim said...

//இசை அவரவர் ரசனைக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும்.//

ஆம் அம்மா.. கூடவே..மூடைப்பொறுத்தும் மாறிக்கொண்டே இருக்கும்..

வித்யா.. பதிவு சுவாரஸ்யம்

Vidhya Chandrasekaran said...

ஆமாம் அருண். எந்த மியுசிக் சேனலையும் பார்க்கமுடியல. இந்த vjக்களின் தொல்லை தாங்கமுடியல.

வாங்க ஆதவன். கேட்டுட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க:)

Vidhya Chandrasekaran said...

வருகைக்கு நன்றி அமித்து அம்மா.

நன்றி நர்சிம்.

கார்க்கிபவா said...

சுவர்ணலதா... வாவ்

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி..

எவனோ ஒருவன் வாசிக்கிறான்..

ஆட்டமா.. தேரோட்டமா..

ஆனா அனுராதவை குறை சொல்ல மாட்டேன்..

மின்சார கனவில் வரும் அன்பென்ற மழையிலே பாடலைக் கேட்டுப் பாருங்க..

கார்க்கிபவா said...

/Already in 2006 or 2005, Vijay TV has selected 1 male singer as Airtel super singer (to sing in Vidyasagar or Harris jayaraj). I dont know whether he sung or yet to sing.
//

அதில் வென்ற் நிகில் பரத்வாஜ் பீமா படத்தில் இரு பாடல் பாடியிருக்கிறார்

Vidhya Chandrasekaran said...

அனுராதா ஸ்ரீராம் வெரைட்டியாகப் பாட மாட்டேங்கிறார் என்பது தான் என் கருத்து கார்க்கி:)