March 18, 2009

வ்ரூம் வ்ர்ரூம் - ஜூனியர் டைம்ஸ்

தென்றலக்காவின் ஆஷிஷ் பற்றிய இந்தப் பதிவை படித்ததிலிருந்து எனக்கும் ஜூனியரின் வண்டிகள் மீதான காதலை வலையேற்றனும்னு ஆசை. அம்மா வீட்டுக்கு போகும்போதெல்லாம் இஸ்மாயில் அங்கிளோ ராஜாமணி அங்கிளோ வந்து ஜூனியரை தூக்கிக்கொண்டு போய் ஜீப்பில் உட்காரவைத்துவிடுவார்கள். ஸ்டியரிங்கை திருப்புவதும் கியர் மாற்றுவதுமாக அவன் செய்கைகள் கொள்ளை அழகு. வீடியோகூட எடுத்தேன். ஜூனியர் பிற்காலத்தில் embarass ஆகக்கூடாதுன்னு அதப் போடல:)அப்புறமா சிட்டி செண்டர் போகும்போது அங்கிருக்கும் ப்ளே ஏரியாவில் வைக்கப்பட்டிருக்கும் கார், ட்ரைன், போன்றவற்றில் ஏறினால் கீழே இறங்கவே மாட்டான்.
அவனுக்கு வாங்கின விளையாட்டுப் பொருட்களில் அவன் உபயோகிப்பது இவற்றை மட்டும்தான். மத்தபடி அவனுக்குன்னு வாங்கின விளையாட்டு பொம்மைகள் எல்லாம் சீந்த ஆளில்லாமல் தான் இருக்கின்றன. இவை போரடித்தால் ரிமோட், செல்போன் என எலக்ட்ரானிக் சாதனங்கள் மாட்டிக்கொண்டு அல்லல்படும்.

போன முறை சிட்டி செண்டர் போயிருந்தபோது அந்த காரை விட்டு கீழே இறங்கமாட்டேன்னு ஒரே அழுகை. கீழே விழுந்து புரண்டு தேம்பி தேம்பி அழுகை. பையன் அழுததும் ரகுவுக்கு என்னவோ போலாகிவிட்டது. ரிமோட்டில் இயங்கக்கூடிய கார் வாங்கலாமென்றார்ர். மார்க்கெட்டில் விலை விசாரித்தபோது 5000 என்றார்கள். நான் வேண்டவே வேண்டாமென்றேன். ரொம்ப நாளாக மைக்ரோவேவ் ஓவன் வாங்கலாமென்ற பிளானை காருக்கு மாற்றியாச்சு. "இப்ப அவனுக்கு இவ்வளவு காஸ்ட்லியா வாங்குறது வேஸ்ட் ரகு" என்றதுக்கு கொஞ்சமும் யோசிக்காமல் "அவனுக்கு கார் வாங்குவதும், உனக்கு ஓவன் வாங்குவதும் ஒன்னுதான். அவனாவது futureல யூஸ் பண்ணுவான்" என சொல்லி என் வாயை அடைத்தாகிவிட்டது. போதாக்குறைக்கு மாமன் வேற மருமகனுக்கு கண்டிப்பா வாங்கனும்னு சப்போர்ட்.
வண்டில உக்காந்தவுடனே ஒரே சந்தோசம்தான்.
Ready for a ride.

டிஸ்கி : இன்னும் இரண்டு பதிவு ஜூனியரைப் பற்றி. விரைவில் எதிர்பாருங்கள்:)

26 comments:

தமிழ் அமுதன் said...

//"அவனுக்கு கார் வாங்குவதும், உனக்கு ஓவன் வாங்குவதும் ஒன்னுதான். அவனாவது futureல யூஸ் பண்ணுவான்"//

இப்போ இதான் கண்ணுல பட்டது!
முழுசா படிச்சுட்டுவறேன்

மணிகண்டன் said...

Very Nice.

narsim said...
This comment has been removed by the author.
narsim said...

போன கமெண்ட்ல நீங்க இன்னும் வாங்கலயோன்னு(கடைசி போட்டோவ பார்க்காம) நான் வாங்கிய கடையையும் விலையையும் சொல்லிட்டு பதிவ பார்த்தா.. வாங்கியாச்சு போல..

லைசென்ஸ் எடுத்து குடுங்க.. வ்வ்ரூம்..

சந்தனமுல்லை said...

hei..i like the auto!!


//"அவனுக்கு கார் வாங்குவதும், உனக்கு ஓவன் வாங்குவதும் ஒன்னுதான். அவனாவது futureல யூஸ் பண்ணுவான்" என சொல்லி என் வாயை அடைத்தாகிவிட்டது.//

LOL!

Vidhya Chandrasekaran said...

வாங்க ஜீவன். இதெல்லாம் தான் கண்ணுல படுமே:) சொச்சத்தையும் படிச்சிட்டு வந்திடுங்க:)

நன்றி மணிகண்டன்.

நன்றி நர்சிம். வாங்கிக் கொடுத்திடலாம்:)

Vidhya Chandrasekaran said...

நன்றி முல்லை. என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது.

pudugaithendral said...

"அவனுக்கு கார் வாங்குவதும், உனக்கு ஓவன் வாங்குவதும் ஒன்னுதான். அவனாவது futureல யூஸ் பண்ணுவான்"//

வடிவேலு ஸ்டைல்ல நாங்களும் ஓவன யூஸ் செய்வோம். எங்களுக்கும் எப்படி யூச் செய்யணும்னு தெரியும் அப்படின்னு சொல்லுஙக.

(அதான் நம்ம சாப்பிடவாங்க வலைப்பூவில் மைக்ரோவேவ் சமையல் சொல்லிக்கொடுக்கறோம்ல)
:))

எம்.எம்.அப்துல்லா said...

//"அவனுக்கு கார் வாங்குவதும், உனக்கு ஓவன் வாங்குவதும் ஒன்னுதான். அவனாவது futureல யூஸ் பண்ணுவான்"//


இஃகிஃகிஃஇஃகிகிகி

சந்தோஷமாகீது :)

pudugaithendral said...

என் பதிவின் சுட்டிக்கு நன்றி.

பசங்களுக்கு கார்தான் ஃபேவரிட்.

ஆஷிஷுக்கு ஒரு தோஸ்த் உங்க ஜூனியர்.

நட்புடன் ஜமால் said...

"அவனுக்கு கார் வாங்குவதும், உனக்கு ஓவன் வாங்குவதும் ஒன்னுதான். அவனாவது futureல யூஸ் பண்ணுவான்"\\

ஹா ஹா ஹா

பைக்-தான் எனக்கு பிடிச்சிறுக்கு ...

அ.மு.செய்யது said...

//நான் வேண்டவே வேண்டாமென்றேன். ரொம்ப நாளாக மைக்ரோவேவ் ஓவன் வாங்கலாமென்ற பிளானை காருக்கு மாற்றியாச்சு.//

இந்த மாதிரி பேரண்ட்ஸ் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்ல..

அ.மு.செய்யது said...

//"அவனுக்கு கார் வாங்குவதும், உனக்கு ஓவன் வாங்குவதும் ஒன்னுதான். அவனாவது futureல யூஸ் பண்ணுவான்"\\//

இது தான் தொலைநோக்கு பார்வையா ?

விக்னேஷ்வரி said...

Hey, Junior is very cute and naughty. திருஷ்டி சுத்தி போடுங்க வித்யா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

//"அவனுக்கு கார் வாங்குவதும், உனக்கு ஓவன் வாங்குவதும் ஒன்னுதான். அவனாவது futureல யூஸ் பண்ணுவான்"//

ஹ ஹ ஹா

செம க்யூட் எக்ஸ்ப்ரஷன்ஸ் கொடுத்துருக்காரு ஜீனியர்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

புதுகைத் தென்றல் said...
"அவனுக்கு கார் வாங்குவதும், உனக்கு ஓவன் வாங்குவதும் ஒன்னுதான். அவனாவது futureல யூஸ் பண்ணுவான்"//

வடிவேலு ஸ்டைல்ல நாங்களும் ஓவன யூஸ் செய்வோம். எங்களுக்கும் எப்படி யூச் செய்யணும்னு தெரியும் அப்படின்னு சொல்லுஙக.

(அதான் நம்ம சாப்பிடவாங்க வலைப்பூவில் மைக்ரோவேவ் சமையல் சொல்லிக்கொடுக்கறோம்ல)
:))

அவங்களே நொந்து நூடுல்ஸாகி இத சொல்லியிருக்காங்க, நீங்க வேற அவங்கள இன்னும் டென்ஷன் செய்யறீங்களே தென்றல்.

LOL

Vidhya Chandrasekaran said...

தென்றலக்கா சொல்லிப் பார்த்தேன். வேலைக்காவல:)

அப்துல்லா அண்ணே என்னாதிது? சின்னப்புள்ள மாதிரி சிரிச்சுகிட்டு?

வருகைக்கு நன்றி ஜமால்.

Vidhya Chandrasekaran said...

வருகைக்கு நன்றி அ.மு.செய்யது.

வாங்க விக்னேஎஷ்வரி. சுத்திப் போட்டுடறேன்.

வாங்க அமித்து அம்மா. நீங்களாவது சப்போர்ட் பண்றீங்களே.

நாகை சிவா said...

சூப்பர். இந்த காலத்து பசங்களுக்கு கார், பைக், செல்போன், லேப்டாப் தான் பிடிக்குது.

என் மாப்ஸ் - பைக், கார் னு விடவே மாட்டான். 3 1/2 வயது தான். அவனை வைத்து நானே ஒரு பதிவு போடலாம் போல இருக்கே. போடுறேன் நானும் ஒரு பதிவு.

அடுத்த வருசம் உங்க பையனுக்கு பேட்டரி பைக் வாங்கி கொடுங்க, சூப்பரா இருக்கு...

அந்த ஒவன் - வாஸ்தவமான பேச்சு தான், எங்க அம்மா என்ன பண்ணுறாங்க என்று பாத்துட்டு தானே இருக்கோம். ;)

Arun Kumar said...

ஜீனியர் போட்டோ சூப்பர்.
குழந்தை enjoy செய்வது இஸ்கூலுக்கு சேருவதற்க்கு முன்னர் வரை தான்

அது வரைக்கும் enjoy maddy :)

பார்த்துகிட்டே இருங்க pre KG போக பென்ஸ் கார் கேட்க்க போறாராரு

Vidhya Chandrasekaran said...

நன்றி நாகைசிவா.

வாங்க அருண். இன்னாது பென்ஸ் காரா??

நானானி said...

குழந்தை முகத்தில்தான் எத்தனை சந்தோஷம்! பாட்டரி காரில் உக்கார்ந்ததும். குழந்தைகளுக்கு அந்தந்த வயதில் அந்தந்த ஆசைகளை அந்தந்த நேரத்தில் நிறைவேற்றிவிடவேண்டும். நாம் ஆசைகள் காத்திருக்கலாம்.

நானானி said...

என் பேரனும் சிட்டி செண்டர் போனால் வரவே மாட்டான்.

நானானி said...
This comment has been removed by a blog administrator.
நானானி said...

தயவு செய்து முந்தைய கமெண்டை டெலிட் செய்யவும். நன்றி.

Vidhya Chandrasekaran said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நானானி.