March 19, 2009

விடைப்பெற்றாள் கிருஷ்ணவேணி

ஆனந்த விகடனில் வந்த கிருஷ்ணவேணி என்ற நிஜ திகில் தொடர் இந்த வாரத்தோடு முற்றுப்பெற்றது. 36 வாரங்களாக ஆனந்த விகடனை வாங்குவதற்க்கு நான் சொன்ன காரணம் இந்த தொடர் மட்டும்தான். ராஜேஷ் குமாரின் நாவல்களுக்குப் பிறகு நான் மிகவும் விரும்பிப் படித்த திகில் கதை. அதுவும் நிஜமாகவே நடந்த சம்பவங்கள் என்கிறபோது மயிர் கூச்செரிகிறது. கதையில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் இயல்பாக செதுக்கப்பட்டுள்ளது. கதையின் முதல் பாகத்திலிருந்து கடைசி வரை விறுவிறுப்பு துளிகூட குறையவில்லை. முரளிக்காணியின் அமானுஷ்யமான மரணம், குட்டியின் மரணம் கதை நாயகியான கிருஷ்ணவேணியின் மரணம் எல்லாமே திகிலூட்டின. ஒவ்வொரு வாரமும் கதையை முடிக்கும்போதும் அடுத்த வாரத்தினை ஆவலாய் எதிர்கொள்ள வைத்திருப்பது ஆசிரியரின் சிறப்பு. 36 வாரங்களில் ஒரு முறைகூட சிறு தொய்வு ஏற்படாத நடை அருமை.

இந்த வாரம் நிஜ கிருஷ்ணவேனியின் போட்டோ, அவர் அண்ணன் அண்ணியின் போட்டோவோடு பேட்டி, விக்கிரமன்காணி வள்ளி ஆகியோர்களின் போட்டோ போட்டிருக்கிறார்கள். அப்பழுக்கில்லாத முழுநிலவு போன்ற கிருஷ்ணவேணியின் முகம் அப்படியே மனதில் பதிந்துவிட்டது. தொடர் ஆசிரியர் ராஜநாரயணன்னுக்கு வாழ்த்துக்கள். சீக்கிரமே இன்னொரு வித்தியாசமான கதைகளத்தோடு வாங்க சார்.

11 comments:

narsim said...

தொடரை படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றிய வரிகள்..பதிவாக போட்டுட்டீங்க..

முரளிகண்ணன் said...

நான் போட நினைத்த வரிகள். பின்னூட்டமா நீங்க போட்டுட்டிங்க நர்சிம்

எம்.எம்.அப்துல்லா said...

//அப்பழுக்கில்லாத முழுநிலவு போன்ற கிருஷ்ணவேணியின் முகம் அப்படியே மனதில் பதிந்துவிட்டது //

வெள்ளந்தி உள்ளம் அந்த முகத்தில் அப்படியே பிரதிபலித்து இருக்கும்.
:)

நட்புடன் ஜமால் said...

படிச்சத பதிவா போட்டாங்க

நினைச்சத பின்னூட்டிட்டாங்க

நாம் என்ன செய்யலாம்

இருங்க கிருஷ்ணவேணிய கேட்ப்போம்

ஹையோ! அவங்க விடைப்பெற்றுவிட்டார்களே

கேள்வி யார் கேட்டா>?

வல்லிசிம்ஹன் said...

முடிந்துவிட்டதே என்று தோன்றியது. அருவியும் கிருஷ்ணவேணியும் மனதில் நிற்கிறார்கள்.
ராஜநாரயணனுக்கு வாழ்த்துகள்.

நாஞ்சில் பிரதாப் said...

அமர்க்களம் இல்லாமல் நல்ல த்ரில்லர் கதை. மலையாள கரையோர பாஷையில் பேசும் கதாபாத்திரங்கள் மேலும் டச்சப். நான் புத்தகத்தை வாங்கியவுடன் படிக்கும் கதை.

உங்களுக்கு புத்தகம் கிடைத்திருக்கும். எனக்கு சன்டே வரை காத்திருக்கவேண்டும்.

Vidhya Chandrasekaran said...

நன்றி நர்சிம்.

வாங்க முரளிக்கண்ணன்.

அண்ணே அந்த படத்த பார்த்ததிலிருந்து அந்த பொண்ணுமேல இனம்புரியாத பாசமும் பரிதாப உணர்வுமே விஞ்சி நிக்குது.

Vidhya Chandrasekaran said...

வாங்க ஜமால்.

ஆமாம் வல்லிசின்ஹன். முடிந்துவிட்டதே என்ற வருத்தமிருந்தது. அதையும் தாண்டி இனிமேல் அருவில யாரும் சாவ மாட்டாங்கங்கற திருப்தியும்:)

காத்திருந்து கிருஷ்ணவேணியின் தரிசனம் கிடைக்கப்பெறுங்கள் பிரதாப். வருகைகு நன்றி.

Arun Kumar said...

இது வரை நான் இந்த தொடரை படிக்கவில்லை...
உங்க மேல நம்பிக்கை வைத்து
onlineல் archivesயை தேடி படிக்கிறேன்...

விகடன் ஜீனியர் விகடனில் தற்போது எல்லாம் படிப்பது போல உருப்படியான விழயங்கள் வருகிறதா?

நானானி said...

நானும் விரும்பிப் படித்த ஒரு திகில்..உண்மைக் காவியம். பாத்திரங்களெல்லாம் எவ்வளவு இயல்பாக, உள்ளே போய் எடுப்பதைப் பத்தி பேசுகிறார்கள்.

सुREஷ் कुMAர் said...

என்னது.. இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்சுடுச்சா..
(ஒரு மாசமா விகடன் படிக்காததால உங்க கிருஷ்ணவேணி மேட்டர் எனக்கு இப்டி ஆகிடுச்சு..:))