March 5, 2009

மூக்க பாத்தியா?

ரோல் நம்பர் 1 - பெரஸண்ட் சார்.
நம்பர் 2 - யெஸ் சார்.
நம்பர் 3 - ஹியர் சார்.

இது ஸ்கூலில் வகுப்பு ஆரம்பிக்கும்போது கேட்கும் சத்தம். பின்னாளில் எங்கள் பள்ளியில் கண்டிப்பாக பெயரைழைத்துதான் அட்டெண்டன்ஸ் எடுக்கனும் என்ற விதிமுறையை அமலுக்கு கொண்டுவந்தார்கள். It just gave us a great feeling.

காலேஜ் போனதுக்கப்புறம் ஒவ்வொரு வகுப்பிற்க்கு முன்னும் அட்டெண்டன்ஸ் எடுப்பது முதலில் வித்தியாசமாய் இருந்தது. இரண்டே வாரத்தில் ஏன் என அனுபவத்தில் தெரிந்தது:) ஏற்கனவே சொன்ன மாதிரி எங்க காலேஜில் வடமாநிலத்தவர் அதிகம். என் டிபார்ட்மெண்டில் 43 பேரில் 9 பெண்களில் மூன்று பேர் பெங்காளிகள். அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது செம காமெடியா இருக்கும். சில விரிவுரையாளர்கள் நான்கு வருஷமும் பெயர்களை (எவ்வளவோ எடுத்து சொல்லியும்) உச்சரிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள முயற்சி கூட செய்யவில்லை.

எங்கள் வகுப்பில் இருந்த பெங்காளி பெண் ஒருத்தியின் பெயர் ரிம் முக்கோப்பத்யாய் (Rim Mukopadhyay). Loveking அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது கூப்பிட்டது "ரிம் மூக்க பாத்தியா". மொத்த வகுப்பும் சிரித்துவிட இவளோ ஏன் சிரிக்கிறார்கள் என தெரியாமல் பக்கத்திலிருந்தவளிடம் கேக்க அவளும் விளக்க, அடுத்த தடவை அவள் நம்பர் வரும்பொழுது இவளே எழுந்து "ரிம் பிரசெண்ட் சார்" என்பாள். கொஞ்சம் அசந்தாலும் சார் மூக்க பாத்தியா நாக்க பாத்தியான்னு ஆரம்பிச்சிடுவாரு:) ஆனால் டிபார்ட்மெண்டில் முதல் வருடத்திலேயே (கல்லூரியின் 2ஆம் ஆண்டு) நிர்வாகம் அவள் சீட்டைக் கிழித்து அனுப்பிச்சிட்டாங்க. அம்மணி அதுக்கப்புறம் சத்யபாமாவில் குப்பை கொட்டினார் என்ற ஆச்சர்யமான தகவல் சமீபத்தில் நண்பனின் கல்யாணத்தில் கிடைக்கப்பெற்றது.

அடுத்த மாட்டிக்கிட்டு முழிக்கற பேர் ஷ்ரேயேஷி சாட்டர்ஜி (Shreyashi Chatterjee). Thermal's வகுப்பெடுத்த மெக்கானிக்கல் துறையைச் சேர்ந்த ஆசிரியர் கூப்பிடுவது "சிரியாசி". அவளும் சளைக்காமல் அந்த செமஸ்டர் முழுவதும் சொல்லுவாள் "Sir, i'm shreyashi". ஜிக்மே வாங்சூ (Jigme Wangchu) என்றழைக்கப்பட்ட நேபாளத்தைச் சார்ந்த பையனை almost எல்லாருமே "ஜிம்மி" எனதான் கூப்பிடுவார்கள். கடைசி ரோல் நம்பர் என்பதால் கூப்பிடுவதற்கு முன்னமே i'm here என்பான். ததாகத் கோஷ் (Thathagat Gosh) கொஞ்சம் கஷ்டமான பெயர்தானென்றாலும் அவனே விரிவுரையாளர்களிடம் என்னை கோஷ் என்றே அழையுங்களென சொல்லியிருந்தான். ஆனா Loveking மட்டும் அதை கேக்கமாட்டார். "தட்டகட்ட கோஷ்" ஒருகையால் தலையிலடித்துக்கொண்டு மறுகையைத் தூக்கி பிரசெண்ட் சொல்லுவான்.

வடஇந்திய பெயர்கள் தான் வாயில் நுழையாது. சில சமயம் சுலபமான பெயர்களைக்கூட ஸ்டைலாகக் கூப்பிடுகிறேன் பேர்வழி என இம்சையைக் கூட்டுவார்கள். உதாரணத்திற்க்கு சந்தீப் ரெட்டி (Sandeep Reddy) என்ற பெயர் "சாண்டீப்" என அழைக்கப்படும். எங்கள் HOD பெங்காளி. அவருக்கு(ம்) 'ச' வராது. சங்கீதா என்பதை "ஷொங்கீதா" என்றே அழைப்பார். ரமா என்ற பெண்ணை எல்லா விரிவுரையாளர்களும் default "ராமா" என்று தான் அழைப்பார்கள். ஒரு நாள் ரொம்ப நொந்துபோய் அவள் சொன்னது "தேடிப் பிடிச்ச பேர் வைச்ச எங்கப்பாவை ஒரு நாள் நல்லா குமுறனும்டி".

35 comments:

narsim said...

//கொஞ்சம் அசந்தாலும் சார் மூக்க பாத்தியா நாக்க பாத்தியான்னு ஆரம்பிச்சிடுவாரு//

கலக்கல்!

நட்புடன் ஜமால் said...

உள்ளேன் ஐயா!

சந்தனமுல்லை said...

LOL!

narsim said...

//சில சமயம் சுலபமான பெயர்களைக்கூட ஸ்டைலாகக் கூப்பிடுகிறேன் பேர்வழி என இம்சையைக் கூட்டுவார்கள்//

ஷோபனா ரவி செய்தி வாசிப்பது மாதிரி.. மெனோன்.. கஷ்ஷ்மீமீர் என.. அதை விட கொடுமை.. ஆங்கில செய்திகள் வாசிக்கும் தமிழக்கத்தை சேர்ந்தவர்களே.. ”ப்பன்னொர் சுல்வம்”.. என NDTV ரேஞ்சில் பன்னீர் செல்வத்தை சொல்வதுதான்..

நட்புடன் ஜமால் said...

\\எங்கள் வகுப்பில் இருந்த பெங்காளி பெண் ஒருத்தியின் பெயர் ரிம் முக்கோப்பத்யாய் \\

நாலு நாள் நெட்ரு பன்னனும் போல

நையாண்டி நைனா said...

இது இங்கே நான் வேலை பார்க்கிற கம்பனிலே ரொம்ப.

அதனாலே இங்கே நம்ம தமிழ் ஆளுங்க பேரை சுருக்கி நாங்களே இனிதியால்ஸ் வச்சு கூப்பிட சொல்லிடோம்.

நட்புடன் ஜமால் said...

\\சில சமயம் சுலபமான பெயர்களைக்கூட ஸ்டைலாகக் கூப்பிடுகிறேன் பேர்வழி என இம்சையைக் கூட்டுவார்கள். \\

என்னையும் சில பேர்

jammy அப்படின்னு கூப்பிடுவாங்க

யாருன்னு சொல்ல மாட்டேன்

ஹி ஹி

இராகவன் நைஜிரியா said...

எல்லா ஊர்லேயும் இந்த பிரச்சினை இருக்கு.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நண்பர் ஒருவர் பெயர்.. ஹெரேரா ரோக்கி... சைனாவில் அவரை சைனீஸ் அனைவரும் ஹெலேலா லோக்கி...

என்னை கூப்பிடுவது லாங்கவன்

இங்கு இன்னும் நிறைய பேருக்கு ராகவன் சொல்ல வரவில்லை ... என்ன செய்வது.. ராங்கவன் என்று அழைக்கின்றார்கள். சொல்லி பார்த்தாச்சு.. கேட்கமாட்டேன் என்கின்றார்கள்.

ஆங்கில செய்திகள் வாசிப்பவர்கள் ரொம்ப கொலை செய்வது, நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு பெயர்களையும் தான்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

காமெடியில கலக்கறீங்க அம்மணி

வாழ்த்துக்கள்

வித்யா said...

வாங்க நர்சிம். ஆமாம் பாத்திமா பாபுக்கூட இம்சையக் கூட்டுவார்:)

நன்றி முல்லை:)

வித்யா said...

ஜமால் அண்ணே அது யாருன்னு எனக்கும் தெரியும். அவங்கதானே. ஹி ஹி ஹி:)

அட ஆபிஸ்ல இதெல்லாம் சகஜம் நைனா. ஆனா கல்லூரில ரொம்ப புதுசாகவும் காமெடியாகவும் இருக்கும்தானே.

வித்யா said...

வாங்க இராகவன் சார். சேம் ப்ளட் போல:)

நன்றி அமித்து அம்மா:)

ச்சின்னப் பையன் said...

//"தேடிப் பிடிச்ச பேர் வைச்ச எங்கப்பாவை ஒரு நாள் நல்லா குமுறனும்டி". //

:-))))))))))))))

எம்.எம்.அப்துல்லா said...

jammy அப்படின்னு கூப்பிடுவாங்க //

அப்பிடி கூப்பிடாம ஜிம்மின்னு கூப்ப்பிடுமான்னு சொல்லிக்குடுத்தேனே!!!!

ஹி...ஹி...ஹி...

எம்.எம்.அப்துல்லா said...

இயல்பான நகைச்சுவை உனக்கு இயற்கையாவே கை வருது வித்யா.
பாராட்டுகள்.

:)

வித்யா said...

ஸ்மைலிக்கு நன்றி ச்சின்னப்பையன்:)

அண்ணாத்தே ரெம்ப டேங்க்ஸ் பாராட்டுக்கு:)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:))) என் பெயரில் இருக்கும் Z இங்க ஒருத்தருக்கும் வரதில்ல..(நார்த்ல)

Truth said...

இதெல்லாம் ரொம்ப கஷ்டமான பேருங்க. ரேவதி-ய ராவதின்னு எங்க வாத்தி கூப்டுவாரு :-)

நல்லா எழுதுறீங்க :-)

Arun Kumar said...

என்னோட பெங்காலி மேனேஜர் எப்போதுமே என்னை அடுண்ன்னு தான் கூப்பிடுவார்..சரியா சொல்லுங்கன்னு 1008 தடவை மேல சொல்லி இருப்பேன்.,, மாறவே இல்லை..

மேலும் சில
விஜய் சக்கரவர்த்ததி - விஜோய் சக்கரபோர்த்தி
வர்ஷா - வர்சோ
issues - இஷ்சூஸ்

வித்யா said...

வருகைக்கு நன்றி முத்துக்கா:)

நன்றி truth.

ஐயோ அருண் பெங்காளிகள் இங்கிலீஷைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவங்க கிட்ட பேசறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்:)

Cable Sankar said...

நல்ல இண்ட்ரஸ்டான பதிவு.. வித்யா..

Cable Sankar said...

நானும் ஷோபனா ரவியின் உச்சரிப்பை சொல்லலாமென பார்த்தால் நர்சிம் முந்திவிட்டார்.

ஆளவந்தான் said...

//
"தேடிப் பிடிச்ச பேர் வைச்ச எங்கப்பாவை ஒரு நாள் நல்லா குமுறனும்டி".
//
பேர் சொ(கொ)ல்ல பிள்ளை :)))

மணிகண்டன் said...

என்னோட பேர சுருக்கி சொல்லிடுவேன். அதுனால இது வரைக்கும் ஒரு பிரச்னையும் வந்தது இல்ல. ஏங்க உங்க காலேஜ்ல இவ்வளவு பெங்காலி ? தெரிஞ்சி இருந்தா கஷ்டப்பட்டு படிச்சி நானும் சேர்ந்து இருப்பேனே ! ரொம்ப ரொம்ப லேட்டா தெரியுது. சை !

புதுகைத் தென்றல் said...

:)) கலக்கல்

புதுகைத் தென்றல் said...

ஷோபனா ரவி செய்தி வாசிப்பது மாதிரி.. //

அவரோட செய்தி வாசிப்பு பத்தி நிறைய கமெண்ட்ஸ் இருந்துச்சு. பல வார்த்தைகளை நாம் சரியா உச்சரிக்கறதில்லை. அதை முறையா உச்சரிக்கறவங்களைப் பார்க்கும்போது ஏதோ அவங்க தப்பு செய்ய்ற மாதிரி இருக்கும்.

புதுகைத் தென்றல் said...

ஆங்கில இலக்கியத்தில் பொனடிக்ஸ்க்கு தனி பாடமே உண்டு. அது படிக்கும்பொழுதுதான் எவ்வளவு தப்புத்தப்பா உச்சரிக்கிறோம்னு தெரியும்.

பைனான்ஸ் - பினான்ஸ்

டைரக்டர் - டிரக்டர்.

டூர்- டுவர்

இப்படி நிறைய்ய.

சரி அடுத்த வாரம் இத வெச்சு ஒரு பதிவு வரும்.

:))

வித்யா said...

நன்றி சங்கர்ஜி:)

வாங்க ஆளவந்தான்.

மணிகண்டன் நீங்க ட்ரை பண்ணினாலும் வேஸ்ட்டா தான் போய்ருக்கும். டிபார்ட்மெண்ட் வரும்போதே எல்லாம் well settled:)

வித்யா said...

தென்றல் சிஸ்டர் நான் கூட பொனடிக்ஸ் படி உச்சரிக்கும்போது எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க. அமெரிக்கன் ஆக்ஸண்ட்ன்னு.

எம்.எம்.அப்துல்லா said...

see my comments here

https://www.blogger.com/comment.g?blogID=8369569858390503964&postID=3352570724491928601&page=1

முரளிகண்ணன் said...

:-))))))))))))))

வித்யா said...

அண்ணே ரெம்ப நன்றிண்ணே.

வாங்க முரளிக்கண்ணன்:)

மணிகண்டன் said...

****
தென்றல் சிஸ்டர் நான் கூட பொனடிக்ஸ் படி உச்சரிக்கும்போது எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க.
****

ஓஹோ ! நீங்க பீட்டரா ?

வித்யா said...

மணிகண்டன் இந்த சமுதாயம் அப்படித்தான் சொல்கிறது. அவசியம்னா மட்டும் தான் ஆங்கிலம் உபயோகிப்பேன்:)

தக்குடுபாண்டி said...

nice post..:)