May 15, 2009

முதல் கடிதம்

அபி
அதான் தினமும் பார்த்துக்கறோமே. போன்ல பேசறோமே. இப்போ எதுக்கு இந்த கடிதம்ன்னு நீ யோசிக்கலாம். காதலித்தால் கடிதம் எழுதனும்னு எழுதப்படாத விதியிருக்காம். அதுவுமில்லாம உன்னைப் பார்த்தால் நான் பேச நினைக்கும் விஷயங்களை மறந்துவிடுகிறேன். இன்றளவும் நீ எப்படி என்னுள் வந்தாய் என ஆச்சரியமாய் இருக்கிறது. அந்த தினம் எல்லாக் காதலர்களுக்கும் போலவே எனக்கும் மறக்கமுடியாத தினம். சம்பிரதாயமான நம் முதல் சந்திப்பிலேயே நம்மிருவருக்குமான காதல் விதை முளைக்கத் தொடங்கியிருந்தது. ஏனோ தெரியவில்லை எந்த வித தயக்கமுமின்றி என் கண்ணைப் பார்த்து பேசிய உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. I just felt u close to my heart. அடுத்தடுத்து நிகழ்ந்த நம் சந்திப்புகளில் நாம் கொண்டிருந்த காதலை "I Love You" என சொல்லாமல் உறுதிப்படுத்திக்கொண்டோம்.
நீ பேசும் அழகிருக்கிறதே. சிரிப்பும், குறும்பும் கொப்பளிக்கும் உன் கண்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். உன் பெயரைச் சுருக்கி அபி என அழைக்கவா என கேட்டதுக்கு நீ சிரித்துக் கொண்டே "தங்கள் சித்தம் என் பாக்கியம்" என்றாய். அந்த சிரிப்பு என் கண்ணை விட்டு அகலமறுக்கிறது. பேசிக்கொண்டிருக்கும் போதே என் கைகளை உன் கைகளில் எடுத்துக் கொண்டு விரல்களில் நீ சொடுக்கெடுக்கும் சுகம் அலாதியானது. இதழ்கள் வலிக்க ஒரு முத்தம் பின்னர் அந்த வலிக்கு மருந்தாக மற்றொரு முத்தம் என நித்தம் என்னை திக்குமுக்காட வைக்கிறாய்.

என்னை ஏன் பிடித்திருக்கிறது என்ற உன் கேள்விக்கு என்னிடம் எப்போதுமே பதிலில்லை. என்னை எனக்கே புதிதாகக் காட்டியவன் நீ. "I'm Struck at your eyes" என நீ சொன்னபோது நான் எங்கோ பறந்துக்கொண்டிருந்தேன். நான் வெட்கப்படுகிறேன் என எனக்கு உணர்த்தியவனும் நீதான். கன்னங்கள் சிவந்து சிரித்தால் அது 100% வெட்கம் தான் என்றாய். உன்னால் வாழ்க்கையை அனுபவிக்கக் கற்றுக்கொண்டுள்ளேன். என்னை சுற்றி இருப்பவை அனைத்துமே அழகாய்த் தெரிகிறது எனக்கு. எப்போதுமே ஒரு சின்னப் புன்னைகை இதழோரத்தில் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது.

உன்னைப் பார்க்க முடியாத நாட்களில் நான் என் நிலை மறக்கிறேன். தேவையில்லாத கோபங்களும், அழுகைகளுமே அந்த நாட்களை ஆக்கிரமிக்கின்றன. பிரிவுகள் நம் காதலை வலுப்படுத்தினாலும் என்னை ரொம்பவே பலவீனப்படுத்துகின்றன. எவ்வளவோ எழுதனும் என தான் பேனாவை எடுத்தேன். உன் நினைவுகள் கூட என் வார்த்தைகளை களவாடுகின்றன. கடிதத்தை முடிக்க மனமில்லாமல் தொடர வார்த்தைகளுமில்லாமல் அவஸ்தையாக இருக்கிறது.

வற்றாத ஜீவநதிபோல் தான் உன் மீதான என் காதலும்.

கயல்

35 comments:

Cable சங்கர் said...

மிக அருமையான முதல் கடிதம்..

நட்புடன் ஜமால் said...

அருமையான கடிதம்
அதுவும் முதலே இப்படியா

கார்க்கிபவா said...

அட்றா சக்கை.. அட்றா சக்கை..

Vidhya Chandrasekaran said...

நன்றி சங்கர்ஜி.

நன்றி ஜமால்.

நன்றி கார்க்கி.

தமிழன்-கறுப்பி... said...

எழுதியாச்சா?!
ஏதோ நல்லாருந்தா சரி :)

Anonymous said...

என்னமோ போங்க.. நல்ல இருந்தா சரி...

Vidhya Chandrasekaran said...

நன்றி தமிழன் -கறுப்பி.

நன்றி மயில். என்னங்க எல்லாரும் ஏதோ கொலைக்குத்தம் பண்ணா மாதிரி ரியாக்ஷன் கொடுக்கறீங்க.

மணிகண்டன் said...

:)-

G3 said...

//உன் நினைவுகள் கூட என் வார்த்தைகளை களவாடுகின்றன. கடிதத்தை முடிக்க மனமில்லாமல் தொடர வார்த்தைகளுமில்லாமல் அவஸ்தையாக இருக்கிறது.

வற்றாத ஜீவநதிபோல் தான் உன் மீதான என் காதலும்.//

அழகா ஆரம்பிச்சு அதைவிட அழகா முடிச்சிருக்கீங்க :)))

எப்பவும் கூகிள் ரீடர்ல் உங்க பதிவ படிச்சிட்டு அப்படியே விட்ருவேன். ஆனா இன்னிக்கு பாராட்டாம போக மனசு வரலை :)) கலக்கியிருக்கீங்க :D

நர்சிம் said...

//பிரிவுகள் நம் காதலை வலுப்படுத்தினாலும் என்னை ரொம்பவே பலவீனப்படுத்துகின்றன.//

//என்னை எனக்கே புதிதாகக் காட்டியவன் நீ//

இப்படி நிறைய அருமையாக எழுதி இருக்கிறீர்கள்

Vidhya Chandrasekaran said...

மணிகண்டன் என்னாதிது இளிப்பு?

ரொம்ப நன்றி G3:)

நன்றி நர்சிம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லாத்தானே போய்க்கிட்டிருந்தது வண்டி

திடீர்னு ??????????

அமிர்தவர்ஷினி அம்மா said...

போஜனம் - என்ன செஞ்சீங்க, சைட்ல காணோம்
கடைய காலி பண்ணீட்டீங்களா?

அதுக்கு இருந்த ஒரே ஒரு ரசிகை நான்

என்ன செஞ்சாலும் எங்கிட்ட ஒரு வார்த்த சொல்லிடுங்க ப்ளீஸ்

சந்தனமுல்லை said...

அழகா இருக்கு முதல் காதல் கடிதம்! :-)

SUBBU said...

ஒன்னும் புரியல எனக்கு :((((((((((

Anonymous said...

போஜனத்துக்கு நானும் ரசிகை, நேத்து கூட உங்க போஜனத்தை பற்றி சொல்லி அதுபோல் கோவையில் உள்ள உணவகங்களை பற்றி எழுத தீர்மானம் பண்ணி இப்பத்தான் ஆரம்பிச்சேன்.

Vidhya Chandrasekaran said...

இல்ல அமித்து அம்மா. நமக்கு இப்படி வருமான்னு ட்ரை பண்ணிப் பார்த்தேன்.மத்தபடி வேற ஒன்னுமில்லீங்கோ. போஜனம்கடைய கொஞ்ச நாளைக்கு மூடி வச்சிருக்கேன். ரகு நான் நல்லா சமைக்கிறேன்னு??!! பப்ளிக்கா சர்டிப்பிக்கேட் கொடுத்துட்டதால ப்ரூஃபுக்கு வச்சிருந்த போஜனம் கடை டெம்பரரியா மூடப்பட்டிருக்கு.

Vidhya Chandrasekaran said...

நன்றி முல்லை.

வாங்க சுப்பு. புரியாத வரைக்கும் நல்லது தான்:)

மயில் அமித்து அம்மா சொன்னது என் சமையல் பத்தின பதிவ. நீங்க சொல்றது கொட்டிக்கலாம் வாங்க செக்ஷன். கூடிய சீக்கிரம் ஒரு பதிவ போடனும்:)

Thamira said...

அடாடா.. காதல் ரசத்தை புழிஞ்சிருக்கீங்களே..

அ.மு.செய்யது said...

//உன்னைப் பார்க்க முடியாத நாட்களில் நான் என் நிலை மறக்கிறேன். தேவையில்லாத கோபங்களும், அழுகைகளுமே அந்த நாட்களை ஆக்கிரமிக்கின்றன.//

அழகா எழுதியிருக்கீங்க...உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.

எம்.எம்.அப்துல்லா said...

what a feeling...what a feeling!!!

:)

Arun Kumar said...

copy right problem இல்லை தானே.நம்மால முடிஞ்சது எல்லா ஜனத்துக்கும் இதை காப்பி பேஸ்ட் செய்து அனுப்பறது..

Vidhya Chandrasekaran said...

நன்றி ஆதி.

நன்றி அ.மு.செய்யது. உங்கள் அக்கா வந்தார்களா மே 10 நிகழ்ச்சிக்கு?

டேங்க்யூ அண்ணா டேங்க்யூ:)

அருண் எங்கனாச்சும் தர்ம அடி வாங்காம இருந்தா சரிதான்:)

jothi said...

கல்யாணம் ஆனவர்களிடம்தான் காதல் வழிகிறது.

jothi said...

super madam,..

முதன் முதலில் எழுதுற கடிதத்தில் நான் உன்ன காதலிக்கிறேன் அப்படின்னுதான் எழுதுவாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன்,. இப்படி கூட எழுதுவாங்களா?? ஆனால் இது super,..

Deepa said...

நானே கொசுவத்தி எல்லாம் சுத்தி இனிமே வீட்டைப் புகைமண்டலம் ஆக்கக் கூடாதேன்னு இருக்கேன். விட மாட்டேங்கறீங்களே!

எப்ப்டீங்க கல்யாணம் ஆகியும் இப்படி ஃபீல் பண்ணிக் காதல் கடிதம் எழுதறீங்க??

சான்ஸே இல்ல போங்க!
:-))

விக்னேஷ்வரி said...

ரகுவோட இன்னொரு பேரு அபியா வித்யா....

செந்தில்குமார் said...

வித்யா,

//இதழ்கள் வலிக்க ஒரு முத்தம் பின்னர் அந்த வலிக்கு மருந்தாக மற்றொரு முத்தம் என நித்தம் என்னை திக்குமுக்காட வைக்கிறாய்.//

//பிரிவுகள் நம் காதலை வலுப்படுத்தினாலும் என்னை ரொம்பவே பலவீனப்படுத்துகின்றன. //

பட்டய கெளப்பி இருக்கீங்க !! கலக்குங்க !!

Vidhya Chandrasekaran said...

நன்றி ஜோதி. நானும் இப்பதான் முதல் தடவையா எழுதினேன்:)

நன்றி தீபா.

விக்னேஷ்வரி பதிவ படிச்சமா பின்னூட்டம் போட்டமான்னு இருக்கனும். ஆராயக் கூடாது.

நன்றி செந்தில்குமார்.

jothi said...
This comment has been removed by the author.
Anonymous said...

சாரி வித்யா, உங்க பதிவுகளை பின்தொடர்வராக இருப்பதால், உங்கள் லேபிள்களை ஒழுங்கா படிக்கலை. ஹி ஹி இனிமேல் ஒழுங்கா படிக்கறேன்.

அ.மு.செய்யது said...

//நன்றி அ.மு.செய்யது. உங்கள் அக்கா வந்தார்களா மே 10 நிகழ்ச்சிக்கு?//

சனிக்கிழமை என்னுடைய இரண்டாவது அக்காவுக்கு பெண்குழந்தை பிறந்ததால்,வர முடியவில்லை.

சனி,ஞாயிறுகளில் எனக்கு இணைய வசதிகள் இல்லாததால் மின்னஞ்சலிலும் உங்களுக்கு தெரிவிக்க முடியவில்லை.

Vidhya Chandrasekaran said...

மயில் நீங்க பதிவ படிக்கறதே எனக்கு பெரும் சந்தோஷம்ங்க:)

அக்காவிற்க்கும் குட்டிப் பெண்ணிற்க்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

ச.ஜெ.ரவி said...

///பிரிவுகள் நம் காதலை வலுப்படுத்தினாலும் என்னை ரொம்பவே பலவீனப்படுத்துகின்றன.///

நல்லாதான் இருக்கு. அதென்னங்க முதல் கடிதத்திலேயே பிரிவு வரைக்குமா? ஆங்கில வார்த்தைகள் கலப்பு; பெயர் பிரயோகம் இதெல்லாம் பார்த்தா கற்பனை மாதிரி தெரியலையே. கற்பனையில்லைனா கடிதம் அழகு. கற்பனையா இருந்திருந்தா, இன்னும் அழகா இருந்திருக்கணும்.

Vidhya Chandrasekaran said...

நன்றி ரவி. கற்பனைதாங்க. நம்புங்க:)