ஆகாயநதி தொடர்பதிவுக்கு (சங்கிலிப்பதிவு என்பதே சரி என்று யாரோ எழுதிப் படித்த ஞாபகம்) அழைத்திருக்கிறார். என்னையும் மதிச்சு??!! கூப்பிட்டதால இதோ நானும் வத்தி சுத்தறேன்.
என்னுடைய பள்ளிப்பருவங்கள் ரெண்டு ஊர்களில் கழிந்தது. ஆறாம் வகுப்பு வரை காஞ்சிபுரம். அதற்குப் பின் முழுவதும் வாலாஜாப்பேட்டை. இரண்டு இடங்களிலும் எனக்கு அருமையான நண்பர்கள். காஞ்சிபுரத்தில் சரியாக கலெக்டர் ஆபிஸ் பின்னால் இருக்கும் ஹவுசிங் போர்ட் குடியிருப்பு. சித்திரை வருடப் பிறப்புக்கு முன்னமே முழுஆண்டுத் தேர்வை முடித்துவிடுவார்கள். 3 சக்கர சைக்கிளில் இருந்து இரண்டு சக்கர சைக்கிளுக்கு பிரமோட் ஆனது மே மாதத்தில் தான். என் மாமா பொண்ணு தான் ட்ரெய்னர். ஒரளவுக்கு கற்றுக்கொண்டதும் தனியே ரொம்ப தூரம் போய் திருப்பத் தெரியாமல் புதிதாய் போட்ட தார் ரோட்டில் விழுந்து வாரியது இன்னும் நினைவிலிருக்கிறது. கை கால் முட்டிகள் பேந்து சரியான அடி. கலெக்டர் ஆபிஸ் அருகிலிருக்கும் ஆயுதப் படை போலீஸ் பயிற்சி நிலையத்திலிருந்த அங்கிள் ஒருவர் வீட்டில் விட்டுவிட்டுப் போனார்.
எல்லா ஆண்டுவிடுமுறைகளிலும் எரிச்சலூட்டும் விஷயம் கேள்வித்தாள்களுக்கு விடை எழுதிக் கொண்ண்டு வர வேண்டும். காலாண்டு, அரையாண்டு என்றாலும் பரவாயில்லை. முழு ஆண்டுத் தேர்வுக்கு பயிற்சியென எடுத்துக்கொள்ளலாம். அடுத்த வகுப்பு போகும்போது இது எதற்கு. லீவு விட்டவுடன் கர்ம சிரத்தையாக இரண்டே நாட்களில் இதை எழுதி முடித்துவிட்டு மூலையில் போட்டால், பள்ளி திறப்பதற்கு முதல் நாள் தான் கவனிக்கப்படும். விடுமுறை தினங்களில் பாட்டு கிளாஸ், ஹிந்தி டியூஷன் ஆகியவை கொஞ்சம் டிலே செய்யப்படும். வழக்கமாக விடியற்காலையில் ஆரம்பிக்கப்படும் வகுப்புகள் விடுமுறை தினங்களில் மாலைக்கு ஷிப்ட் செய்யப்படும். 2 மணியிலிருந்து 5 மணி வரை வகுப்புகள். அதற்குப்பிறகு ஆரம்பிக்கும் ஆட்டம் படுசுவாரசியம். அழகான நாட்கள் அவை.
வாலாஜாப்பேட்டை வந்தபிறகு மெல்ல மெல்ல விளையாட்டுகள் குறைந்தது (Bloody Society??!!). கேரம் போர்ட்டே கதியென கிடந்த நாட்களும், த்ரோ பால் பிராக்டிஸ் செய்த நாட்களும் இன்றும் நினைவிருக்கின்றன. விளையாடுவது குறைந்ததும் கொஞ்சமே கொஞ்சமாய் புத்தகங்கள் அறிமுகமாகின. அதற்குள் அடுத்த கட்டமான பொதுத்தேர்வு, எண்டரன்ஸ் கோச்சிங்க என விளையாட்டு என்பதே மறந்துவிட்டது. கல்லூரி நாட்களில் மே மாதங்கள் நண்பர்கள் வீட்டில் அரட்டைக் கச்சேரி, சினிமா, சீட்டுக்கட்டு, எப்பவாச்சும் படிப்பு என தான் கழிந்தது. வேலையில் சேர்ந்த பின் கேக்கவே வேண்டாம். ஞாயிற்றுக்கிழமைக்கூட அலுவலகம் வரவழைத்த டேமஜர் கிட்ட சம்மர் வெகேஷன் என வாயத் தொறக்கமுடியுமா? அதையும் மீறி ஒரு மே மாதத்தில் ஊட்டி ட்ரிப் போனோம். லவ்லி டேஸ்:)
இப்போ ஜூனியரால எல்லா நாளும் விடுமுறை நாள் போல சந்தோஷமாகக் கழித்துக்கொண்டிருக்கிறேன். இருபத்தி நான்கு மணி நேரமும் எனக்கு வேலை வைக்கிறான். வளர வளர சேட்டைகளும் ஜாஸ்தியாகிறது (ஆஹா பதிவுக்கு மேட்டர் சிக்கிடுச்சு:))
இனி வரும் வருடங்களும் சந்தோஷமாகவே இருக்குமென்ற நம்பிக்கையில்:)

24 comments:
//இனி வரும் வருடங்களும் சந்தோஷமாகவே இருக்குமென்ற நம்பிக்கையில்:)
//
ஆகுக. அந்த கேள்வித்தாளுக்கு பதில் எழுதிட்டு வர்ற மேட்டர் ஞாபகப் படுத்தியது சூப்பர்ங்க..
//கேள்வித் தாள்களுக்கு பதில் எழுதிக் கொண்ண்டு வரவேண்டும்.//
இதே தண்டனை(?!) எங்க பள்ளியிலும் உண்டு.
//கேள்வித் தாள்களுக்கு பதில் எழுதிக் கொண்ண்டு வரவேண்டும்.//
முழாண்டு லீவுல கூடவா! ஐயோ பாவம்!
காலாண்டு, அரையாண்டு சரி.. ஆனால் ஆண்டுவிடுமுறைக்கும் கேள்வித்தாள் பதில் எழுத வேண்டுமா??
அடக்கொடுமையே!!!
//எல்லா ஆண்டுவிடுமுறைகளிலும் எரிச்சலூட்டும் விஷயம் கேள்வித்தாள்களுக்கு விடை எழுதிக் கொண்ண்டு வர வேண்டும்.///
இதாவது பரவயில்லீங்க, நான் படிக்கும் போது “விடுமுறை நாட்களை எப்படி பயனுள்லதாக நான் கழித்தேன்” என்ற தலைப்பில் On Spot கட்டுரை எழுத சொல்லிடுவாங்க..
:-)) நல்லா கொசுவத்தி சுத்தவைச்சுட்டீங்களே மேடம்!
நன்றி நர்சிம்.
நன்றி நானானி.
நன்றி சிபி (பாவப்பட்டதுக்கு)
நன்றி மணிநரேன்.
நன்றி அக்னிப்பார்வை. அந்தக் கொடுமைய சொல்லாம விட்டுட்டேங்க.
நன்றி முல்லை:)
ஹையோ வித்யா, கலெக்டர் ஆபீஸ் பக்கத்துல இருக்கிற பல்லவன் நகர்லதான் நான் கொஞ்ச நாள் குப்பை கொட்டினேன் (முனிசிபல் ஆபிஸ்ல இல்ல பல்லவன் காலேஜ்ல),.. ஆனால் அந்த பாலாறு தண்ணிக்காகவே எத்தனை வருஷம் வேணாலும் இருக்கலாம்,..
// லீவு விட்டவுடன் கர்ம சிரத்தையாக இரண்டே நாட்களில் இதை எழுதி முடித்துவிட்டு //
ரொம்ப படிப்ஸோ???
//ரொம்ப தூரம் போய் திருப்பத் தெரியாமல்
எனக்கும் அப்படித்தான். ஓட்ட சொல்லிக் கொடுக்கிறவங்க, திருப்ப சொல்லித் தரவே மாட்டேங்கிறாங்க,
முழு ஆண்டுக்கு அப்றொம் எதுக்கு கேள்வித் தாள எழுத சொல்றாங்கன்னு இதுவரைக்கும் எனக்கும் தெரியல. :-)
நல்ல பதிவு.
அப்றொம் நம்ம பக்கம் வந்து சிரிச்சுட்டு போனதுக்கு நன்றி :-)
நல்ல பதிவு.
நம்ம ஊர்ப்பக்கம் இருந்திருக்கீங்க.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
வாங்க ஜோதி. நானும் பல்லவன் நகர்ல 1 வருஷம் இருந்தேங்க:)
கொஞ்சூண்டு படிப்ஸ்ங்க:)
நன்றி சங்கர்ஜி.
நன்றி ட்ரூத்.
நன்றி வாசுதேவன் சார். நீங்க எந்த ஏரியாவுல இருந்தீங்க? வாலாஜாவா காஞ்சியா?
நல்ல கொசுவர்த்தி! :)
//எல்லா ஆண்டுவிடுமுறைகளிலும் எரிச்சலூட்டும் விஷயம் கேள்வித்தாள்களுக்கு விடை எழுதிக் கொண்ண்டு வர வேண்டும்.///
இதைச் சொல்ல மறந்துட்டேனே... நானும் முழு ஆண்டு விடுமுறையிலும் இந்தக் கொடுமையை அனுபவிச்சேன் :)
சூ.கொ.வ
நன்றி ஆகாயநதி.
நன்றி ஜமால்.
எல்லாரும் சொல்லிட்டாங்க..நானும் சொல்லிக்கிறேன்.
அந்த கொஸ்டின் பேப்பருக்கு ஆன்ஸ்வர் எழுதுற மேட்டரு கலக்கல்..
புகைப்படமும் ரசித்தேன் வித்யா..
இப்படி கூட பதிவு எழுதலாமா ?
நடத்துங்க நல்லாருக்கு
சுகமான நினைவுகள் பள்ளி விடுமுறைக் காலங்கள்.
நல்ல கொசுவத்தி!
:-)
நன்றி அ.மு.செய்யது.
எனக்கு இப்படிதாங்க எழுத வருது மயாதி.
நன்றி தீபா.
நான் ஒன்றும் தப்பாக சொல்லவில்லை வித்யா...
@ ஆண்டுவிடுமுறைகளிலும் எரிச்சலூட்டும் விஷயம் கேள்வித்தாள்களுக்கு விடை எழுதிக் கொண்ண்டு வர வேண்டும். காலாண்டு, அரையாண்டு என்றாலும் பரவாயில்லை. முழு ஆண்டுத் தேர்வுக்கு பயிற்சியென எடுத்துக்கொள்ளலாம்.@
Same Blood :)
வழக்கம் போலவே சூப்பராக எழுதி இருக்கீங்க
நன்றி அருண்.
வந்துட்டமில்ல... நானும் கிட்டத்தட்ட காலேஜ் முடிச்சு 15 வருஷம் கழிச்சு இந்த leava த்தான் ரொம்ப ஜாலியா என்ஜாய் பண்ணினேன்.
எதோ கொஞ்சம் சுமாரா படிப்பேன் அதுனால நம்மக்கு எப்பவும் நாட்டமை வேலைதான்..ஹி ஹி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மயில்.
Post a Comment