December 17, 2009

இயந்திரமாய் நட

இரண்டு இரண்டு படிக்கட்டுகளாக தாண்டி கீழே இறங்கும் உற்சாகம்
பால் போடும் பையனின் குட்மார்னிங்
மெல்லிய ஈரத்துடனான தார் ரோடுகள்
தலைக்கு மேலே தொட்டு விடும் தூரத்தில் மினி மேகக்கூட்டமாய் பனிமூட்டம்
மூக்கின் நுனியை அடிக்கடி நீவச் செய்யும் குளிர்
மூங்கில் கழிகளில் கட்டப்பட்ட தென்னந்துடப்பத்தின் இடுக்குகளில் சிக்கிய சருகுகளின் சங்கீதம்
பளிச்செனப் பெருக்கிய கான்க்ரீட் தரையில் வரையப்படும் மெருகு குறையா கோலங்கள்
இன்னமும் சர்வீசில் இருப்பதாய் நினைக்க வைக்கும் ரிடையர்ட் தாத்தாக்களின் கைவீச்சுகள்
காலை டிபன், மதிய லஞ்ச் மெனுக்களினூடே மாமியார் பாட்டு பாட்டும் ஆபிஸ் ஆண்டிகள்
காதிலும் கழுத்திலும் ஆப்பிள் தொங்கவிட்டுக்கொண்டும் ஓடும் யுவதிகள்
அவர்கள் பின்னே ஓட்டமும் நடையுமாக ஜிடிபி பேசும் அரை டிராயர் அங்கிள்கள்
கறிவேப்பிலை தோரணம் கட்டி,
உருளை மூட்டையில் ஊர்வலம் போகும் காய்கறி மாப்பிள்ளைகள்
மணக்க மணக்க சந்தனமும்
பட்டை பட்டையாய் விபூதியும் தீட்டி சவாரிக்கு தயாராகும் ஆட்டோக்காரர்கள்
ஆவி பறக்கும் டீயை சுழற்றி சுழற்றிக் குடிக்கும் தினக்கூலிகள்
ஆராவாரமில்லாத ரோட்டின் நடுவே தைரியமாய் வண்டி ஓட்டிப் பழகும் இளம்பெண்
மாடர்ன் ஆர்டாய் தோன்றும் வியர்வை நனைத்த சட்டை
இடமிருந்து வலமாக சரக்கென்று இழுத்து நெற்றி வியர்வையை உதறும் விரல்கள்
ஒவ்வொருவர் கடக்கும் போதும் கரையும் ஒற்றை வேப்பமரத்துக் காகம்
இவை யாவுமே காணக் கிடைப்பதில்லை
ஏசி அறையில் நின்ற இடத்திலிருந்தே
5 கி.மீ நடக்கும் இயந்திர மனிதர்களுக்கு...

28 comments:

Unknown said...

நல்லா எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்...,

Anonymous said...

சரிதான். பனி பொழியும் நாடுகளில் வெளிநாட்டவர் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்பதற்கு கண்டுபிடித்தார்கள். நம் நாட்டில் அது வெறும் ஸ்டேடஸ்.

க.பாலாசி said...

//மூங்கில் கழிகளில் கட்டப்பட்ட தென்னந்துடப்பத்தின் இடுக்குகளில் சிக்கிய சருகுகளின் சங்கீதம்//

அழகிய பார்வை...

நறுக்குன்னு இருக்கு...(நல்லவேளை நான் இயந்திரமில்லா மனிதன்)

பின்னோக்கி said...

அருமை.
சென்னையில் நடக்கும் போது ஆட்டோ, மோட்டார் சைக்கிள், குப்பை வண்டி, நடக்கும் சிலரை மேலே அனுப்பிவிடுகிறது.

S.A. நவாஸுதீன் said...

வாவ். ஒவ்வொன்றும் கண் முன்னே காட்சியாய். ரொம்ப நல்லா இருக்கு வித்யா. க்ளாஸ்

Vidhya Chandrasekaran said...

நன்றி பேநா மூடி.
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி பாலாசி.
நன்றி பின்னோக்கி.
நன்றி நவாஸுதீன்.

பா.ராஜாராம் said...

வாவ்!

fantastic observation!

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லா இருக்கு வித்யா.
சரியா என்டர் தட்டி எழுதிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.

நர்சிம் said...

படிமங்கள் எப்பொழுதும் அழகு.

butterfly Surya said...

xlent.

படித்தேன். ரசித்தேன். சுவைத்தேன். மகிழ்ந்தேன்.

வாவ்..அருமை.

Vidhya Chandrasekaran said...

நன்றி பா.ரா.
நன்றி விக்னேஷ்வரி.
நன்றி நர்சிம்.
நன்றி சூர்யா.

Vijay said...

உங்க கவிதையைப் படிச்சப்புறம் ஜிம்முக்கே போகக் கூடாதுன்னு தான் தோணுது.
ஆனால் பெங்களூரில் காலையில் எழுந்திருப்பதே பெரும் கஷ்டமா இருக்கே!

இவையனைத்தையும் அனுபவிக்கணும்’னா சீக்கிரமே சென்னைக்கு வந்துடணும் போலிருக்கே

Truth said...

அட நல்லாருக்கே...
ஹாஸ்டல் நாட்கள் அப்படின்னு இன்னொரு மெயில் ஃபார்வார்ட் ஆயிகிட்டு இருந்தது சில வருடங்களுக்கு முன்பு. விழியன் எழுதியதுனு நினைக்கிறேன். அதை படித்த நினைவு வருது, இதை படிக்கும் போது.

வாழ்த்துக்கள், நல்லா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

ரசித்து வாசித்தேன் வித்யா. அருமையா சொல்லியிருக்கீங்க.

க‌ரிச‌ல்கார‌ன் said...

//விக்னேஷ்வரி said...
ரொம்ப நல்லா இருக்கு வித்யா.
சரியா என்டர் தட்டி எழுதிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.//

அதே இன்னொரு க‌விஞ‌ர் ரெடி............

Vidhya Chandrasekaran said...

நன்றி விஜய்.
நன்றி ட்ரூத்.
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி கரிசல்காரன்.

U.P.Tharsan said...

நல்லாயிருக்கு

மணிகண்டன் said...

&&&&&
வாவ்!

fantastic observation!
&&&&&

I too wanted to say the same paaraa. It is very nice vidhya. Probably your first good kavithai :)-

Rajalakshmi Pakkirisamy said...

Good one :)

Tharani Priya mam kitta itho naanum varen nu sonathu ithuku thaana....

Adutha thadavai konjam nalla enter thattunga... .

Raghu said...

ச்சும்மா 'ந‌ச்'னு இருந்த‌து

//சரியா என்டர் தட்டி எழுதிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்//

ரிப்பீட்ட்ட்....

Vidhya Chandrasekaran said...

நன்றி டிவிஆர் சார்.
நன்றி தர்சன்.
நன்றி மணிகண்டன்.
நன்றி ராஜி.
நன்றி குறும்பன்.

"உழவன்" "Uzhavan" said...

வாவ்.. நல்லா அனுபவச்சு எழுதியிருக்கீங்க.

Unknown said...

//கறிவேப்பிலை தோரணம் கட்டி,
உருளை மூட்டையில் ஊர்வலம் போகும் காய்கறி மாப்பிள்ளைகள்//

சூப்பர்

Vidhya Chandrasekaran said...

நன்றி உழவன்.
நன்றி கே.வி.ஆர்

Dr.Rudhran said...

படித்துவிட்டு மீண்டும் ஒரு முறை திரும்பிவந்து படிக்கவைத்த எழுத்து, வாழ்த்துகள்.

Thamira said...

கொஞ்சம் அழகாய் எடிடிங் பண்ணினால் ஒரு பிரமாதமான கவிதை சிக்கியிருக்கும்.

லேபிளுக்காக இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

Vidhya Chandrasekaran said...

நன்றி டாக்டர் சார்.
நன்றி ஆதி.

Sundar சுந்தர் said...

காலை பொழுதின் அழகை கண் முன் நிறுத்திவிட்டீர்கள்!