December 28, 2009

ராஜா ராஜா தான்

மற்றுமொரு விடுமுறை நாளாகவே கழிய இருந்தது இந்தாண்டு கிறுஸ்துமஸ். சென்றாண்டு ராஜாமணி அங்கிளின் வீட்டிலிருந்து ஸ்பெஷலாய் வந்த ரம் பிளம் கேக்கையும், டக்கரான பால் பாயாசத்தையும் இந்த தடவை ரொம்பவே மிஸ் பண்ணேன். ஜூனியருக்கு டிபன் ஊட்டிக்கொண்டிருக்கையில் அல்லது சிம்பிளாக போராடிக்கொண்டிருக்கையில் அண்ணாவிடமிருந்து போன்.

குட்டி, கலைஞர் டிவி பாரு. டொக்.

அப்பாவிடமிருந்து போராடி ரிமோட் பெற்று நியோவிலிருந்து கலைஞர் மாற்றினால் "பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு" என சின்னக்குயில் இசைத்துக்கொண்டிருந்தது. பக்கத்தில் நம்ம ராஜாதி ராஜா பொட்டியோடு. அட்றா சக்கை என சோபாவில் சம்மணம் போட்டு உட்கார்ந்து ஒரு மணிநேரம் மயங்கிக் கிடந்தேன். கூடவே சுடச்சுட அம்மாவின் சுக்கு டீ. என்னையும் மறந்து வாய்விட்டு கூடவே பாடிக்கொண்டிருந்தேன். ஆயிரம் பேர் அட்வான்ஸ்டு டெக்னாலஜியோடு இசையமைக்க வந்துகொண்டேயிருந்தாலும் ராஜாவின் சில பொக்கிஷங்களுக்கு முன் தே ஆர் நத்திங். துபாயில் நடந்த இன்னிசை கச்சேரியின் ரீ டெலிகாஸ்ட் ப்ரோக்ராம். நான் பார்த்த வரையில் அத்தனையுமே சூப்பர் ஹிட் மற்றும் என்னோட பேவரிட் பாடல்கள்.

சின்னக்குயில் முடித்த கையோடு சாதனா சர்கத்தோடு டூயட் பாட ரெடியானார். ஹே தந்தன தந்தன தந்தன என ஆரம்பிக்கும்போதே விண்ணைமுட்டும் கரவொளி. ராஜா சார் முகத்திலும் பிரகாசமான புன்னகை. "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போலாகுமா" என ஆரம்பித்தவர் சரணத்தில் விளையாட ஆரம்பித்துவிட்டார்.





"மல்லிகையப் போல பிச்சிப்பூவ போல எந்த ஊரு பூ மணக்குது
வள்ளுவரப் போல பாரதியபோல எந்த நாட்டு பாட்டினிக்குது
"

பாலு சாரும் சித்ராவும் இணைந்து "சுந்தரி கண்ணால் ஒரு செய்தி" வாசித்தார்கள். பாலு சாரிடம் உள்ள கெட்ட பழக்கம் மேடையில் பாடும்போது சங்கதிகளை இழு இழுவென இழுப்பது. கமலின் 50 விழாவிலும் இதே மாதிரி பாடி கடுப்பேத்தினார். மேடைப் பாடல்களை ரசிப்பவர்களில் பலர் கர்நாடக சங்கீத அறிவை முழுமையாக பெற்றிராதவர்களாகவே இருப்பர் (என்னைப் போல). அப்படி கண்ணை மூடி இழுத்து இழுத்துப் பாட நிறைய சபாக்கள் இருக்கின்றன சார். உங்கள் கூடவே பாடிக்கொண்டு வரும்போது நீங்கள் இழுக்கையில் நாங்கள் டர்ராகிறோம் ஐயா.

அடுத்து ஆஆஆ வென எவர்க்ரீன் ஹிட்டான பாட்டு






"மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
"

மனோவின் "செண்பகமே செண்பகமே" மிஸ் செய்து விட்டேன் (கொஞ்சம் முன்னாடியே போன் பண்ணிருக்கக்கூடாதா அண்ணா). "அந்தி மழை பொழிகிறது" பாலு சார் அண்ட் சித்ரா. நடுவே மனோ ஆ போட வந்தார். மைக் தகராறு பண்ணவே போடாமலே சென்றார். நிகழ்ச்சியை ஜெயராமும் குஷ்பூவும் தொகுத்து வழங்கினர். ஜெயராம் வழக்கம்போல கலகலவென கலக்கினார். குஷ்பூ செண்டிமெண்ட்டாக (நினைத்துக்கொண்டு??) உங்க பாட்ட கேட்டுகிட்டே செத்துபோய்டனும்னு சொல்ல உடனே ராஜா அவ்ளோ கொடூரமா இருக்குன்னு சொல்ல வர்றீங்களா? என மடக்கினார். "தெண் பாண்டி வீதியிலே"ன்னு அழறா மாதிரி ஆரம்பிச்சு "நிலா அது வானத்து மேல"ன்னு குஷியானார். இந்த பாட்ட கேக்கும்போதெல்லாம் மாமா அடிக்கும் கமெண்ட் "ரமண பக்தன் பாடற பாட்ட பார்". நானும் அவருக்கு சளைக்காமல் தரும் பதில்

"ப்ரொபஷனையும் பர்சனல் லைஃபையும் கம்பேர் பண்ணி குழப்பிக்காதீங்க மாமா".

இது ராஜாவிற்கு மட்டுமில்ல எல்லா பிரஜைகளுக்கும் பொருந்தும் தானே.

19 comments:

கார்க்கிபவா said...

இந்தியாவில் அனேக மாநில மக்களை விட தமிழர்களின் சராசரி வயது சற்று அதிகமாம். பின்ன ராஜா இருக்கிறாரில்ல?

பாலாஜி சங்கர் said...

நானும் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன் மிக அருமை

பகிர்ந்தமைக்கு நன்றி 
நல்ல பதிவு

தர்ஷன் said...

ரசித்து எழுதியிருக்கீர்கள்
காணொளிகளை இனி ஆறுதலாகப் பார்க்கிறேன்

Unknown said...

நானும் ஒரு 5 நிமிடம் பார்த்தேன். இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிவதில்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது.

pudugaithendral said...

ராஜா, ராஜாதி ராஜனிந்த ராஜா பாட்டே அவருக்காத்தான்னு நினைப்பேன். முழு நிகழ்ச்சியையும் பார்க்க முடியாவிட்டாலும் 3 பாட்டுக்கள் பார்த்தேன்.

Vidhya Chandrasekaran said...

நன்றி கார்க்கி.
நன்றி பாலாஜி.
நன்றி தர்ஷன்.
நன்றி கிருஷ்ண பிரபு.
நன்றி கலா அக்கா.

பின்னோக்கி said...

ராஜா மகாராஜா.

எஸ்.பி.பி மேடையில பாடும் போது - இது சினிமால பாடுனது மாதிரியில்லையேன்னு நினைப்பேன். இப்ப தான் அந்த சங்கதி மேட்டர் புரியுது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்ந்தமைக்கு நன்றி

கண்ணா.. said...

ராஜா ராஜாதி ராஜாதான்

எனக்கு மிகவும் பிடித்த பாடல் “சொர்க்கமே என்றாலும்”

அதிலும் குறிப்பாக

//ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கி குளிக்க
அட ஒரு ஓடை இல்லயே
இது ஊரு என்ன ஊரு நம் ஊரு ரொம்ப மேல்
அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு//

இப்ப இந்த பாட்டை கேட்டாலும் உடனே ஊர் ஞாபகம் வந்துரும்

S.A. நவாஸுதீன் said...

முழுவதும் பார்க்கமுடியவில்லை. பகுதிதான் பார்க்கமுடிந்தது.

ராமலக்ஷ்மி said...

நிகழ்ச்சியினை பாதியிலிருந்து பார்த்தேன். அழகாய் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்:)!

தமிழ் அமுதன் said...

பதிவுக்கு நன்றி...!

//இந்தியாவில் அனேக மாநில மக்களை விட தமிழர்களின் சராசரி வயது சற்று அதிகமாம். பின்ன ராஜா இருக்கிறாரில்ல?//
எஸ் கார்க்கி...! ;;)

Vidhya Chandrasekaran said...

நன்றி பின்னோக்கி.
நன்றி டி.வி.ஆர் சார்.
நன்றி கண்ணா.
நன்றி நவாஸுதீன்.
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி ஜீவன்.

Unknown said...

//
"ப்ரொபஷனையும் பர்சனல் லைஃபையும் கம்பேர் பண்ணி குழப்பிக்காதீங்க மாமா".

இது ராஜாவிற்கு மட்டுமில்ல எல்லா பிரஜைகளுக்கும் பொருந்தும் தானே.//

ரீஜண்டு சிச்சிவேஷனுக்குச் சொல்லணும்ன்னா “மாலை போட்டவன் டாஸ்மாக்ல வேலை பார்க்கலாம், தண்ணி தான் அடிக்கக்கூடாது”

Unknown said...

அட!நம்ம ராஜாவப் பத்திபதிவா?சூப்பர்.


பார்க்க நம்ம பதிவை:


http://raviaditya.blogspot.com/2009/12/blog-post_28.html

அதன் உள்ளே லிங்க்(காற்றில் எந்தன் கீதம் மற்றும் காதல் கவிதைகள் எழுதிடும்

நன்றி.

Rajalakshmi Pakkirisamy said...

Super madam:)

Anonymous said...

ராஜா ராஜாதான். எத்தனைதரம் சொல்லியும் வாய் வலிக்கலை

Vidhya Chandrasekaran said...

நன்றி கேவிஆர்.
நன்றி ரவிஷங்கர்.
நன்றி ராஜி.
நன்றி சின்ன அம்மிணி.

R.Gopi said...

//ஹே தந்தன தந்தன தந்தன என ஆரம்பிக்கும்போதே விண்ணைமுட்டும் கரவொளி//

அது கரவொலி வித்யா...

ஆயிரம் பேர் வந்தாலும், ராஜா ராஜா தான்... அந்த கலைஞர்களுக்கே உள்ள குணமான கோபம் கொஞ்சம் குறைந்து இருந்திருந்தால், இன்றும் நாம் அவரின் இசையை ரசிக்க முடிந்திருக்கும்... இப்போது, நாம் கேட்டு ரசிப்பது எல்லாமே அவரின் பழைய இசைதான்... இப்போது அவர் இசையமைப்பது “உளியின் ஓசை” ரக படங்கள் மட்டுமே...

கலக்கல் தொகுப்பு வித்யா... நான் இந்த ப்ரோக்ராமுக்கு போக வேண்டியது... கடைசி நேரத்தில் முடியாமல் போனது. என் நண்பர்கள் போய் வந்தார்கள்...